காலை, மதிய உணவினை காலையிலேயே முடித்துவிடுவேன். சமைத்துக்கொண்டே பாத்திரமும் கழுவி 9 மணிக்குலாம் கிச்சன் க்ளீன் ஆகிடும். வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்க போட்டுட்டு 10 மணிக்கு சன் லைஃபில் பாட்டு கேட்டுக்கொண்டே இணையம். மதியம் நேர சாப்பாட்டுக்கு பின் கொஞ்சம் உறக்கம். பிறகு, கிராஃப்ட், மாலை வேளையில் அம்மா வீடு.. விளக்கேத்திட்டு மீண்டும் கொஞ்ச நேரம் இணையம்.. இரவு உணவோடு இட்லி தோசைக்கு மாவரைத்தல், இப்படி மறுநாள் சமையலுக்கான ஆயத்தம், இரவு உணவுக்கு பின் கிச்சன் க்ளீன்... இதான் என் வழக்கம்...
மணிக்கணக்கா இணையம் அல்லது தூக்கம்ன்னு இருந்தாலும் இருப்பேனே தவிர, சும்மா உட்காந்திருக்க பிடிக்காது. டிவி பார்க்கும்போதுகூட பூண்டு உரித்தல், கீரை கிள்ளுதல், கிராஃப்ட்ன்னு எதாவது கைவேலை நடந்துக்கிட்டே இருக்கும். கூடவே, பிளாக்கில் வாரத்துல ஒரு எதாவது கிராஃப்ட் போட்டே ஆகனும்ன்னு முடிவெடுத்ததால் எதாவது செஞ்சுக்கிட்டே இருப்பேன். அதனால், சீரியல், பகல் தூக்கம்ன்னு கெட்ட பழக்கம் சிலது காணாமல் போய் இருக்கு. எது எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்.
இனி, வயர் கூடைகளுக்கு அளவு சொல்லலாம்ன்னு இருக்கேன். யாருக்காவது உதவுமே!
1 1/2 ரோல் லஞ்ச் பேக் வயர் கூடை...
அடி அகலம் 9 வரிசை பின்னிக்கிட்டேன்.
சிலர் 7 வரிசையிலேயே நிறுத்திப்பாங்க. ஆனா, 9 வரிசை பின்னினால் கூடை அகலமா இருக்கும்.
வயலெட்டில் 9 வரிசை, மஞ்சளில் 10 வரிசை என மொத்தம் 19 வரிசை பின்னினேன்.
19 வரிசை பின்னி, அதில் ஒரு வரிசையை மடிச்சு வயரை சொருகிட்டால் கூடையின் உயரம் 20 செ.மீல வரும்.
4 அடில நாலு வயர் உள்ளுக்குள்ளும், 8அடில இரு வயரை வெளியிலும் வச்சு உருட்டு கைப்பிடி பின்னிக்கிட்டேன்.
பத்து கிலோ வரை எடை தாங்கும்.
கூடை நல்லா இருக்கா?!
நன்றியுடன்,
ராஜி
அழகான கூடை.
ReplyDeleteகூடை அழகாக இருக்கிறது சகோ
ReplyDeleteமாமாவுக்கு வருமானம் குறைஞ்சதை ஈடு கட்டியாச்சு போலயே...
சகோதரி ,கூடை நன்றாக இருக்கின்றது . பூண்டு வெங்காயம் உரிக்கின்றது இவை மிக நல்லவை ,கூடை நல்ல முயற்சிதான் ,ஆனால் என் தங்கை இப்படித்தான் நிறைய வயர் கூடைகள் பைகள் , டிசைன்கள் பூ இப்படி பின்னி கொண்டே இருப்பார் . எனக்கு அந்த துணி பெயர் மறந்து விட்டது -தலையணை உறைகள் ,பைகள்,இவற்றில் பூ டிசைன் ,பெயர் தைத்தல் இப்படி நிறைய அழகாக வந்தன,கூடவே கண்ணாடியும் பவர் கூடி விட்டது ! உபயோகமான பொழுது போக்கு ஆனால் கண்ணுக்கு கேடு என்பது உண்மை
ReplyDeleteமிகவும் அழகு... வாழ்த்துகள் சகோதரி...
ReplyDeleteகூடை அழகு
ReplyDeleteவாழ்த்துகள்
சுறுசுறுப்பான ஆள் நீங்க.
ReplyDeleteரொம்ப அழகா செய்யறீங்க ராஜி. நல்லாருக்கு. நேரத்தைப் பயனுள்ளதாகச் செய்யறீங்க..பாராட்டுகள்!
ReplyDeleteகீதா
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் வரை இதுதான் அதிகாரப்பூர்வமான பொதியன் இப்போது கட்டைப் பைகள் பிடித்துக்கொண்டுவிட்டன இதன் இடத்தை
ReplyDeleteஎங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சியளித்தோம்
தற்போது தடை என்பதால் வேறு கைவினைப் பயிற்சிகள் மட்டுமே.