Thursday, May 02, 2019

சின்ன வயர்கூடை - கைவண்ணம்

சின்னதா ஒரு வயர்கூடை பின்ன   5 1/2ல   21 வயர் கட் பண்ணிக்கனும்..
 நமக்கு பிடிச்ச கலர்ல எடுத்துக்கலாம். நான் ரோஸ், ப்ளூன்னு எடுத்துக்கிட்டேன். ரோஸ் வயர் குறைச்சலா இருந்ததால் அதை குறைச்சலா எடுத்துக்கிட்டேன்.  3 ரோஸ் கலர் வயர், 18 ப்ளூ கலர் வயர்ல 5 1/2 கட் பண்ணிக்கிட்டேன்.


 முதலில், நடுவி, கடைசியில் ரோஸ் கலர் வயரும்,  இடையில் 9 ப்ளூ கலர் வயரும்ன்னு கணக்கு பண்ணி  21 வயர்களை ரன்னிங்க் வயர் கொண்டு இணைச்சுட்டேன்..
7 வரிசையில்  கூடையின் அடிப்பாகம் போட்டுக்கிட்டேன். 

 கூடையை தரையில் வைக்கும்போது சாயாம இருக்க தென்னங்குச்சியை சொருகிட்டேன்...
 அடியில் போட்டதுமாதிரியே முதலில், நடுவில், கடைசியில்ன்னு ரோஸ் கலர் வயரும் இடையில் 8 ப்ளூ கலர்  வயரும் பின்னிக்கிட்டேன். 
கைப்பிடியும் ரெண்டு கலர் இருக்கமாதிரி பின்னிக்கிட்டேன்... சின்னதா ஒரு வயர் கூடை ரெடி...
நாய்க்கு வேலை இல்லியாம்!! ஆனா, அது ஓடும் ஓட்டத்துக்கு குறைச்சல் இல்லன்னு பழமொழி சொல்வாங்க., அதுமாதிரி என் பொழப்பு. போன வாரம் முழுக்க புடுங்குன ஆணி இதுதான்.

நன்றியுடன்,
ராஜி.

7 comments:

  1. வாவ், உங்களுக்கு நல்ல ரசனை, அருமையான கைவண்ணம். உங்கள் பழைய பதிவுகளிலும் பார்த்தேன். இந்த வயர் கூடை எல்லாம் சின்ன வயதில பார்த்தது, எங்கள் ஊரில் இன்னும் மீள்ப்ரவேசம் செய்யவில்லை.
    இவ்வளவு திறமை உள்ள நீங்கள் ஏன் அடிக்கடி "ஐயோ நான் சோம்பேறி" என்று அலுத்துக் கொல்றீங்க? கண்ணுறு பட்டுவிடும் என்டோ ?

    ReplyDelete
    Replies
    1. நிஜமாவே நான் கொஞ்சம் சோம்பேறிதான். அப்பப்ப வேலைகளை அப்பப்பவே முடிக்கனும்ன்னு அறிவு கிடையாது. அப்புறம் பார்த்துக்கலாம்ன்னு தள்ளிப்போடுவேன். கடைசி நேரத்தில் முடிப்பதே வழக்கமாகிட்டுது எனக்கு. நானும் இந்த வழக்கத்தை மாத்திக்க நினைச்சு முடில.

      Delete
  2. அருமை... வாழ்த்துகள் சகோதரி...

    பை நிற்பதற்கு பையின் அடியில் வைப்பதெற்கென்றே அட்டையும், நான்கு பிளாஸ்டிக் குமிழ்களும் கடைகளில் கிடைக்கின்றன...

    ReplyDelete
    Replies
    1. வயர் பை அழுக்கானப்பின் கழுவினால் அந்த அட்டை நீரில் ஊறி அட்டை நைஞ்சு போகும். ஆனா தென்னங்குச்சி நாட்பட உழைக்கும்ண்ணே. அதான் இதையே வைப்பது இப்ப வழக்கமாகிட்டுது.

      Delete
  3. கலர் காம்பினேஷன் சூப்பர். உங்கல் கைத்திறன் வியப்பு மற்றும் கூடை அழகாகவும் இருக்கிறது.

    துளசிதரன், கீதா

    ReplyDelete