வணக்கம் நண்பர்களே நலமா?
என்னடா ராஜி கொஞ்ச நாளா பதிவேதும் போடாம இருக்கே, அப்பாடா இனி நிம்மதியா இருப்போம் னு பெருமூச்சு விட்டுக்கிட்டு ஹாயா இருந்தால் SO SORRY. ஏன்னா ?
HELL WAS FULL SO, I CAME BACK கொஞ்ச நாளா பதிவேதும் போடமுடியாத சூழல் . பிள்ளைகளை தேர்வுக்கு தயார் செய்வதற்கே சரியா இருந்துச்சு.
(பாவம் பசங்க, தானே படிச்சிருந்தாலும் நல்லா மார்க் score பண்ணி இருக்கும்ங்க.)
ஏறத்தாழ 6 மாதங்களாக வலையில் எழுதி இருந்தாலும் சொல்லிக்குற மாதிரி ஏதும் எழுதலை.
(ம்க்கும். அதுக்கே உன்னோட அலம்பல் தாங்க முடியலை. எழுதியிருந்தால் அவ்வளவுதான்.)SO, இனிமேலாவது எதாவது சொல்லிக்குறமாதிரி எழுதமுடியுதானு பார்க்கலாமினுதான் இந்த Re-Entry. யாருப்பா அது, மவுசை குளோஸ் பட்டன்கிட்டக் கொண்டுப் போறது. பிச்சுப்புடுவேன் பிச்சு
பதிவு எழுதி, கமென்ட் போடுறது அவ்வளவு முக்கியமான்னு கேட்கப்படாது (
கேட்டால் பதில் சொல்ல தெரியாது. அப்புறம் அழுதுப்புடுவேன் அழுது. சொல்லிப்புட்டேன் ஆமாம்) இதுவரைக்கும் சைலண்டா இருந்தா என் வலைப்பூ இனி தாரை, தப்பட்டை, சங்குடன் கலக்க வருது
(சனியனே தாரை தப்பட்டைஎல்லாம் கடைசி நேரத்துல வாசிக்கிறது) இனி பொழுது போகாத வேளைகளில் பல மொக்கை பதிவுகளோடு வருவேன். நீங்களும் படிச்சுட்டு கமென்ட் போடணும்
(அது நம்ம தலையெழுத்து). அடிக்கடி வந்து வலைப்பூவை எட்டிப் பார்த்துட்டு போகணும்.