திங்கள், டிசம்பர் 19, 2011

வெற்றிக்கு 20 படிகள்....,

                                       
                      
1.தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாய் உழையுங்கள்..,

2.வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான்...

3.வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்...,

4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற்வேண்டும்...,

5.ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது...,

6.வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது...,

7.பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் மாற்றி கொள்ள வேண்டும்.

8. முடியாது, நடக்காது போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது..,,

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது...,

10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு...,

                       

11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்...,

12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.., 

13. மற்றவர்களை உங்களுக்கு உழைக்க வைப்பதில்தான் உங்கள்  புத்திசாலித்தனம் இருக்கிறது...,

14. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்....,

15. எதையும் நாளை என்று தள்ளி போடக்கூடாது..,

16. கைக்கடிகாரத்தை கொடுத்துவிட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்...,

17. மற்றவர்களை வழிநடத்த வேண்டுமென்று நினைக்கக் கூடாது...,

18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும் கிடைக்காது...,

19. சந்தோஷத்தை கொடுப்பது பணம் மட்டுமல்ல....,

20. கடவுளை நம்புங்கள்.

டிஸ்கி: இதை நான் சொல்லலீங்கோ. Holiday in Founder கெமன்ஸ் வில்லியம்ஸ் சொல்லியிருக்கார்.  


    

24 கருத்துகள்:

 1. இதுல சில விஷயங்களை நான் பயன்படுத்திட்ருக்னேன். நிறைய விஷயங்கள் புதுசு. இன்னும் பல படிகள் நான் ஏற வேண்டிருக்குன்னு தெரிஞ்க்கிட்டேன் தங்கச்சி. ஏணியக் கொடுத்ததுக்கு தாங்க்ஸ்!

  பதிலளிநீக்கு
 2. மூணு மணி நேரம் கழிச்சி இப்போதான் கமெண்ட்ஸ் பாக்ஸ் ஒப்பன் ஆகியிருக்கு...!!!

  பதிலளிநீக்கு
 3. கடிகாரம் விற்று, அலாரம் வாங்குவது சும்மா சூப்பர், உழைப்பின் அவசியத்தை சும்மா நச்சுன்னு சொல்லுது நெற்றியில் அறைந்தாற்போல்...!!!

  பதிலளிநீக்கு
 4. சி.பி.செந்தில்குமார் கூறியது...
  மொத படி//

  நானும் அதையேதான் சொல்றேன் முதல்ல பதிவை படிடா கொய்யால...

  பதிலளிநீக்கு
 5. அனைத்தையும் கடைபிடிக்கிறேன் 20 வதைத் தவிர..:)

  பதிலளிநீக்கு
 6. ராஜி...சிலவற்றைத் தவிர என்றும் என் எண்ணங்களோடு உங்கள் படிகள் ஒத்துப்போகின்றன !

  பதிலளிநீக்கு
 7. இவைகளின் படி பார்த்தால், நீங்கள் எப்போதோ "வெற்றி" பெற்று விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 8. வெற்றிக்கான 20 படிகள் பற்றிய நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 9. நல்ல படிகள்... ஆனா பயன்படுத்தத் தான் முடியுமா தெரியவில்லை... :)

  பதிலளிநீக்கு
 10. பயனுள்ள தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அருமை. பலருக்கும் பயன்படும்

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 13. //வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு...,//
  இது இரண்டு மட்டும் இருந்தால் போதுமா? அதிர்ஷ்டமும் அறிவும் வேண்டும் என்பதையும் தாண்டி, விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருக்க வேண்டுமல்லோ...?

  மற்ற 19-ம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அருமையான வார்த்தைகள்...!

  ”கெமன்ஸ் வில்லியம்ஸ்” உங்க கிட்ட சொன்னதை எங்க கிட்ட சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க.. :)

  பதிலளிநீக்கு
 14. அருமையான பொன்மொழிகள்
  சமைத்தது வேண்டுமானால் கெமென்ஸ்ஸாய் இருக்கலாம்
  அழகான பய்னுள்ள உரைகளை எங்களுக்கு
  விருந்தாகப் பரிமாறியது தாங்கள்தான்
  தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 15. நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. மிகவும் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு