புதன், டிசம்பர் 28, 2011

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

                                
          உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? 

           அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.  

        தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன்னு அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும், கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம். 

             இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து  உண்ணவே அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சியாக சொன்னாராம்.

      வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.
பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். 

              அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். 

           “நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு” என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார்.  நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு


என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா! 

டிஸ்கி: ஒரு மணவிழாவில தந்த புத்தகத்தில் இருந்தது. அதை உங்கள் பார்வைக்கு....           


32 கருத்துகள்:

 1. இதுவல்ல உன்னதமான ஜோடி...

  இதுபோன்று இனி கதையில் கூட ஒரு கணவன் மனைவியை கற்பனை செய்து பார்க்க முடியாது...


  அழகிய பகிர்வு..
  வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

  பதிலளிநீக்கு
 2. ம்..தெரிந்துகொண்டேன்..பதிவைப் பகிர்ந்ததற்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 3. இது எனக்கு எங்க அக்காள் கதையாக சொல்லி கேள்விபட்டு இருக்கிறேன், அதுக்கப்புறம் இப்போ நீங்கதான் சொல்லி இருக்கீங்க வாவ் அருமையான மனைவி....!!!

  ---வாசுகி, பெயரே அட்டகாசமா இருக்கு-----

  பதிலளிநீக்கு
 4. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம், அது அமைய பெற்றவர்கள் பாக்கியவான்கள் இல்லையா...!!!

  பதிலளிநீக்கு
 5. இந்த கதைகள் புதிய தலைமுறைகள் நிறைய பேருக்கு தெரியாது, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தங்கச்சி...!!!

  பதிலளிநீக்கு
 6. புண்ணியம் செய்த மகராசன். ஹ்ம் ... நமக்கு எப்படி வாய்க்கப்போகுதோ.

  பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. ////அடியிற்கினியாளே அன்புடையாளே
  படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
  பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
  இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு////

  அட இந்த விடயத்தை நான் இப்பதான் தெரிந்து கொள்கின்றேன் அறியத்தந்தமைக்கு நன்றி அக்கா

  பதிலளிநீக்கு
 8. பகிர்வு நல்லா இருக்குங்க...அதுவும் 4 அடி அருமை நன்றி!

  பதிலளிநீக்கு
 9. நண்பர்களுக்கு
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  நொடியாய்ப் பிறந்து
  மணித் துளியாய் மறைந்து
  புது ஆண்டாய் மலர்ந்த
  பொழுதே....
  வறண்ட வாழ்வும்
  தளர்ந்த கையும்
  உன் வரவால்
  நிமிர்ந்து எழுதே!
  புது வருடம் பிறந்தால்
  வாழ்வு மாறும்-என
  ஏங்கித் தவிக்கும்
  நெஞ்சம்..
  உன் வரவே
  நெஞ்சின் தஞ்சம்!
  இறந்த காலக்
  கவலை அதனை
  மறந்து வாழ
  பிறந்து வா வா
  என் புதிய வாழ்வே
  விரைந்து வா வா!
  அழுதுவிட்டேன்
  ஆண்டு முழுதும்
  முயன்று பார்த்தேன்
  விழுந்து விட்டேன்
  அழுத நாளும் சேர்த்து
  மகிழ்ந்து வாழ
  எழுந்து நின்று
  இமயம் வெல்ல
  இனிய ஆண்டே
  இன்றே வா வா
  நன்றே வா வா!

  அன்புடன் இனியவன்

  பதிலளிநீக்கு
 10. இதுவரை அறியாத பாடல்
  அருமையான விளக்கம்
  பகிர்வுக்கு நன்றி
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. மிகவும் நேர்த்தியாக ஒரு இடுகை எவரும் தொடாத சுவை பாராட்டுகள் சிறப்பு ....

  பதிலளிநீக்கு
 12. என்னது? வள்ளுவர் சம்சாரம் தான் வாசுகியா? சொல்லவே இல்ல? புது தகவலா இருக்கே? பகிர்வுக்கு நன்றி, என் அறிவுக்கண்ணை திறந்துட்டீங்க

  பதிலளிநீக்கு
 13. நான் பேச நினைப்பதெல்லாம்
  நீ பேச வேண்டும்...
  நான் காணும் பொருளெல்லாம்
  நீயாக வேண்டும்...

  கணவன் மனைவியின் புரிதலுக்கோர்
  கவியரசனின் வரிகள்.
  வள்ளுவன் வாசுகியின் தாம்பத்ய வரலாறு
  எங்கோ படித்த ஞாபகம்.
  அந்த அழகு உறவை இனிமையாக
  தொகுத்தமைக்கு கோடானுகோடி நன்றிகள் சகோதரி.

  வள்ளுவன் எழுதிய நான்குவரிப்பாடல்
  அறியாத ஒன்று.
  அறியவைத்தமைக்கு உளமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 14. மேற்கூறிய கதைகளை நான் ஏற்கனேவே கேட்டு உள்ளேன். ஆனால் அந்த 4 வரி பாடல் புதிது. தெரியாத வியசத்தை தெரிந்து கொண்டேன்.. நன்றி..

  இன்று ஆண் பெண் இருவருக்குமே சகிப்புத்தன்மை இல்லை. விட்டு கொடுத்து போகும் மணம் இருந்தால் விரிசல் ஏது?


  இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

  பதிலளிநீக்கு
 15. அட! வள்ளுவரின் இந்த நான்கு வரிப் பாடலை இப்போதுதான் படிக்கிறேன். நல்ல விஷயத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தங்கச்சி!

  பதிலளிநீக்கு
 16. Aha...en Sister arumaiya eluthurangale. Inthanga pudinga POONGOTHU.

  TM 12.

  பதிலளிநீக்கு
 17. Aanal enakkennamo doubta irukku Sago. Tiruvalluvar Touch ithula illaye. Avaruthaan eluthi iruppaara nu santhegamaa irukku.

  பதிலளிநீக்கு
 18. கற்புக்கரசிகளின் பொறுமை நிதானம் விட்டுக்கொடுக்கும் பண்பு இவை அனைத்திற்கும் உதாரணமான வாசுகி அம்மையாரின் வாழ்க்கைச் சரிதம் வள்ளுவரின் கண்களிலேயே கண்ணீரை
  வரவழைத்தன என்று இந்த சிறு குறிப்பை படிக்கும்போதே மனம்
  தெளிவு பெறுகின்றபோது மேலும் இதுபோன்ற தகவலைப் படித்துக்
  கிரகித்தால் நிட்சயம் வாழ்வில் வெற்றிபெறலாம் பெண்கள் .
  அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 19. எப்போதும் மறக்காத அன்புப் பதிவொன்று ராஜி.நன்றி !

  பதிலளிநீக்கு
 20. பாட்டின் பொருளும் நடையும் பிற்கால சிற்றிலக்கிய, தனிப்பாடல்களைப் போல இருக்கின்றது. திருக்குறள் பதிணெண்கீழ்க்கணக்கு நூல். நம்ப மிகவும் கடினமாக இருக்கின்றது.

  போகட்டும். இந்தப்பதிவு 2010 ஜனவரியில் தினமலரில் வெளிவந்ததை வார்த்தைக்கு வார்த்தை காப்பி பேஸ்ட் செய்து வெளியிடப் பட்டிருக்கின்றது. தினமலரின் பெயர் இங்கு எங்கும் குறிப்பிடப்படவில்லை.

  இம்மாதிரி காப்பி பேஸ்ட்டுகளை தவிர்ப்பது நலம். குறைந்தபட்சம் உரிய க்ரெடிட்டாவது கொடுத்திருக்கவேண்டும்.

  என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 22. நாலடியில் வள்ளுவர் எழுதியிருப்பதாக கேள்விப்பட்டிருக்கேன். அந்த வரிகளை தாங்கள் பகிர்ந்தமை மூலம் அறிந்து கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வள்ளுவர் எழுதினதா..? இப்படி
  ஒரு விஷயம் நான் கேள்விப்பட்டதே
  இல்லையே..?

  எதுக்கும் எங்க தமிழ் மிஸ்கிட்ட
  கேட்டுக்கறேன்..!

  பதிலளிநீக்கு
 24. விளக்கத்துக்கு நன்றி! இது திருவள்ளுவர் எழுதிய பாடலாக இருக்க முடியாது என்றும் சொல்லி இருந்தேன். இனி வரும் பதிவுகளில் சரிபார்த்துப் போட வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 25. அறியாத தகவல் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 26. த.ம 16  ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

  ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

  பதிலளிநீக்கு
 27. நானும் திருவள்ளுவரின் மனைவி வாசுகி அம்மையார் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேங்க. நல்ல கதை :))

  பதிலளிநீக்கு
 28. புதிய தகவல், இந்த வரிகள் எந்த நூலில் வள்ளுவர் எழுதி உள்ளார் என்று தெரியுமா? தெரிந்தால் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள், அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்

  பதிலளிநீக்கு
 29. பதிவிற்கு நன்றி, அருமையான பதிவு, அருமையான கருத்து. உலகிற்கு தேவையான கருத்து.

  நீரோடை மகேஷ்...

  பதிலளிநீக்கு
 30. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  பதிலளிநீக்கு