Friday, December 16, 2011

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா... நான்காம் படைவீடான சுவாமிமலை


மூலவர் : சுவாமிநாதர், சுப்பையா
உற்சவர் : -
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : நெல்லிமரம் 
தீர்த்தம் : வஜ்ர தீர்த்தம்,குமாரதாரை,சரவண தீர்த்தம், நேத்திர குளம்,பிரம்ம தீர்த்தம்
புராண பெயர் : திருவேரகம்
ஊர் : சுவாமிமலை
மாவட்டம் : தஞ்சாவூர் 


 தல பெருமை: 
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 4வது படைவீடு.

அப்பனுக்கே பாடம் சொல்லித் தந்த சுப்பையா அருள்பாலிக்கும் அற்புத தலம் இது.

மூலவர் 6 அடி உயரமாக கையில் தண்டத்துடன் தலையில் உச்சிகுடுமியுடனும்,மார்பில் பூணுலுடனும் காணப்படுகிறார்.

முருகப்பெருமான் சுவாமிநாதனாக வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடக்கையை தொடையில் வைத்தபடியும் யோகநிலையிலுள்ள குருவாக நின்ற கோலத்தில் ஆறடி உயரமாக இருக்கிறார்.

பீடம் சிவ பீடம்

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்ற சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற வஜ்ர வேலுடன் காணப்படுகிறார்.

கையில் தாங்கிய வேல்தான் ஆலயத்தின் கீழ் வீதியில் உள்ள நேத்திர தீர்த்தத்தை உண்டாக்கியது.

பூமாதேவி பார்வதியின் சாபத்திற்கு ஆட்பட்டு இத்தலத்திற்கு வந்து தங்கிச் சுவாமிநாதப் பெருமாளை வழிபட்டுச் சாபம் தீர்ந்தாள்.அதன்பின்னும் இத்தலம் விட்டுப்போக விருப்பமின்றி நெல்லி(தலமரம்)மரமாக இத்தலத்தில் இருக்கிறாள்.

இத்தலம் குறித்து அருணகிரி நாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் நிறைய பாடியுள்ளனர்

நான்முகன், பூமகள், இந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம்.

குருவாக இருந்து அருள் தந்தமையால் குருமலை , குருகிரி என்றும் சுவாமி மலைக்கு வேறுபெயர்கள் உள்ளன

கோயிலின் முகப்பு தோற்றம்:  

                                    
                         




பிரார்த்தனை:  திருமண வரம் குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர்.
சுவாமி நாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகுகிறது.


 தல விருட்சமான நெல்லிமரம்: 



                                           


சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார். கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும். 
                                        
       


 தல வரலாறு:
படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது.அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டினார். கீழே விழுமாறு தம் திருவடி கொண்டு உதைத்து பிரம்மனை சிறையில் அடைத்தார். பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார். பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார். சிவபெருமானும் முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்தார். இதை பார்த்து உளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார். இந்நிகழ்ச்சி நடந்த தலமே இந்த சுவாமிமலைத் திருத்தலம் என்று தல வரலாறு கூறுகிறது

   அருகில் உள்ள கோவில்கள்;
அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில் - அவளிவணல்லூர்
அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில்- அழகாபுத்தூர்
அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்-கபிஸ்தலம்
அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்-கண்டியூர்
 அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில்- கோவிலடி  
நன்றி: படங்களுக்கு கூகுளுக்கும், அதிக தகவலுக்கு தினமலர் ஆன்மீக மலருக்கும் .
முதலாம் படைவீட்டை பற்றி  அறிய...,
இரண்டாம் படைவீட்டை பற்றி  அறிய...,
மூன்றாம் படைவீட்டை பற்றி அறிய...,
                           


19 comments:

  1. அப்பா சுப்பா வெள்ளிக்கிழமை கோயில் போகா சினிமா போனா தப்[பா?

    ReplyDelete
  2. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

    Visit Here: http://adf.ly/4FKbj

    ReplyDelete
  3. நல்ல பதிவு ..

    ReplyDelete
  4. நண்பர்களே ..
    மாணவர்களுக்காக ஒரு சிறு முயற்சி இது ..
    உங்கள் கருத்துகளையும் , ஆதரவையும் எதிர்பார்கிறேன் .


    மாணவர்களுக்காக கைகோர்க்கலாம் வாருங்கள்.

    ReplyDelete
  5. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    அப்பா சுப்பா வெள்ளிக்கிழமை கோயில் போகா சினிமா போனா தப்[பா?//

    பிரிக்க முடியாதது...?

    சிபி'யையும் சினிமாவையும்...!!!

    ReplyDelete
  6. தகப்பனுக்கு பாடம் சொன்ன ஸ்வாமிநாதனைப் பற்றிய தகவல்களை உங்களுக்கே உரிய பாணியில் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ராஜிம்மா... மிக ரசித்தேன். இதே சப்ஜெக்டில் நான் எழுதின ஒரு பதிவு: நேரமிருந்தால் பார்க்கவும்...

    http://minnalvarigal.blogspot.com/2011/11/blog-post_21.html

    நன்றி!

    ReplyDelete
  7. அப்பனுக்கே பாடம் சொன்ன முருகக் கடவுளின் 4 ம் படைவீடு பற்றிய பதிவு அருமை.தல புராணத்தை பற்றிய குறிப்பு சிறப்பு.

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சுவாரசியமான பதிவு

    ReplyDelete
  10. வித்தியாசமான பதிவு. இருமுறை படித்தேன்.
    பகிர்விற்கு நன்றி!
    என் வலையில் :
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete
  11. அருமையான தகவலுடன் பதிவு சகோ ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  12. சுவாமி மலை முருகனை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.... நன்றி

    காதல் - காதல் - காதல்

    ReplyDelete
  13. அன்பு சகோதரி,
    முருகு எனும் அழகனின்
    மால்மருகனின் அழகிய
    படைவீட்டைப் பற்றிய
    சிறப்பான பதிவு.

    ReplyDelete
  14. நான்காம் படைவீடு தரிசனம் செய்தோம்
    படமும் விளக்கங்களும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. -திருப்பரங்குன்றம் பத்தி நீங்க எழுதின பதிவை ரொம்பவே ரசிச்சுப் படிச்சவன் நான். நிறைய தகவல்களுடன் தருகிற ராஜியின் பாணியும் நன்றாகவே இருக்கும்மா. தொடர்ந்து மற்ற படை வீடுகளையும் தரிசிக்க காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  16. வணக்கம் ராஜி.கடவுள் நம்பிக்கை குறைவுதான்.ஆனால் வாசிக்க ஒரு சுவாரஸ்யம் !

    ReplyDelete
  17. Thamathathirku mannikkavum Sago. Office la kadumaiyana velai. December mudinjathan Nimmathi.

    ReplyDelete
  18. அறுபடை வீடு பற்றிய அருமையான பகிர்வுக்கு நன்றி ... !

    ReplyDelete