Tuesday, December 27, 2011

இந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு.

      
. டொக்.., டொக்..
ஹாய் ராஜி நல்லா இருக்கியா?
மாலதி! வா, வா பார்த்து ரொம்ப நாளாச்சு.  நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கேப்பா? ஜனவரி 4 ஃப்ரெண்ட் வீட்டு கிரகப்பிரவேசத்துல பார்த்தது.  அப்புறம் நீ பாரீன் போய்ட்டே. பார்க்கத்தான் முடியலை. ஏண்டி நாயே போனும் பண்ணலை.
ஃபைன்ப்பா. அங்க போன ரெண்டாவது நாளே போனை மிஸ் பண்ணிட்டேன். அதுலயே  உன் போன் நம்பர், மெயில் ஐடிலாம் இருந்துச்சு. அதுவும் மிஸ் ஆயிடுச்சு. அதான் உன்னை காண்டாக்ட் பண்ண முடியலை சாரிப்பா.
ஓக்கே, ஓக்கே. உன்னை பத்தி சொல்லு . 2011 எப்படி போச்சு மாலு?
என்னை பத்தி அப்புறம் சொல்றேன்.
முதல்ல உன்னை பத்தி சொல்லு. அப்புறம் என்னை பத்தி சொல்றேன். 
 ம்ம்ம் சரி ஆத்தா. 

உனக்கு இந்த வருடத்தின் மிகப்பெரிய ”சந்தோஷம்” எது?
 என் ஃப்ரெண்டுக்கு பிப்14 ஆண் மகன் பிறந்தான். வெற்றிமாறன்னு பேர். பயபுள்ளைக்கு என்னை பார்த்தால் என்னதான் மனசுல தோணுமோ சேலையை நனைச்சுத்தான் அனுப்புவான்.

 ம் ம் தாங்க முடியாத துக்கத்தை தந்த நாள்  எது?
 என் அப்பா ரொம்ப கம்பீரமானவர். அவர் கண்ணுல கண்ணீரை என் திருமணத்தின் போதுதான் பார்த்தேன். அதற்கு முன்னும் பின்னும் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட என் அப்பா 1 மாதம் தண்டுவட பிரச்சனையால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடந்தார். வலிதாங்காமல்அவர் கண்ணில் வழிந்த கண்ணீரை கண்டு, இறைவனிடம் எனக்கு அப்பாவே இல்லைன்னாலும் பரவாயில்லை. அல்லல்படாமல்  சீக்கிரம் அழைச்சுக்கோன்னு கெஞ்சி கேட்ட  மே 2. 

சரி அழாதே. இப்பதான் அப்பா சரியாகிட்டாரே. விடு. ஆச்சர்யமான நாள் எதுப்பா?
 கணவர் உடல்நிலைக்காக முன்பின் அறிமுகமில்லாத சென்னையில், எழுத்துக்கூட்டி கூட படிக்கத்தெரியாத அம்மா, யார் துணையும் இன்றி தன்னந்தனியாய் நின்று அப்பாவை சரி படுத்திக்கிட்டுதான் வீட்டுக்கு கூட்டி வருவேன்ன்னு அதேப்போல சாதிச்சு அப்பாவை நடக்க வைத்து வீட்டுக்கு கூட்டி வந்த நாள் மே 17.


நீதான் நிறைய புத்தகம் வாசிப்பியே, இந்த வருசம்  படித்ததில் பிடித்த புத்தகம்  எது?
நா.முத்துக்குமார் எழுதிய ”அணிலாடும் முன்றில்!” 

வீட்டுக்கு ஏதும் வாங்கலியா?
ம் ம் கணினி பிரிண்டர் வாங்குனேன். 

லீவுல பிள்ளைகளை எங்கும் வெளியில கூட்டி போறதானே. அவங்களுக்கும் ரிலாக்‌ஷேஷன் வேணும்பா.
இந்த வருசம் அப்பாக்கு முடியாமல் போகவே வேறெங்கும் போகலை. வேண்டுதலுக்காக திருப்பதியும், சென்னை கிஷ்கிந்தாவுக்கு ஒரு நாளும் கூட்டி போய் வந்தேன்.

போன வருசம் நிறைய படங்கள் வந்திருக்கே. எது நல்ல படம் நீ எதை ரசிச்சே?
எனக்கு சினிமாவுக்கு போகும் பழக்கமில்லைன்னு உனக்கு தெரியாதா?

அட, ஆமாம் மறந்துட்டேன். ஆனால், பாட்டுக்களை ரசிப்பியே. 2011 ல பிடிச்ச பாட்டு...
ஆடுகளத்துல வெள்ளாவி வச்சுதான், எங்கேயும் காதல் படத்துல எங்கேயும் காதல், திமு திமுவும் ஏழாம் அறிவுல யம்மா யம்மா, முன் அந்தி சாலையில் பாட்டும் ஒய் திஸ் கொலைவெறி பாட்டும் தான் என் ஃபேவரிட். 

மொக்கை போடத்தான் நான் இல்லையே. ஃபாரீன் போய்ட்டேனே. யார் கூட மொக்கை போடுவே? யார் அந்த புது நண்பர்?
ஹா ஹா நான் ”காணாமல் போன கனவுகள்”ன்னு பிளாக் ஆரம்பிச்சிருக்கேன். அதுல முகம்தெரியாத பல நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. தனியாய் பிறந்த எனக்கு ”சிரிப்பு போலீஸ்” ரமேஷ், ”ராஜபாட்டை” ராஜா, ”பிரியமுடன்” வசந்த், ”வேடந்தாங்கல்” கருன், ”மயிலிறகு”மயிலன் போன்ற தம்பிகளும், ”நாஞ்சில் மனோ”மனோ அண்ணா, ”மின்னல்வரிகள்” கணேஷ் அண்ணாவும், ”கோகுலத்தில் சூரியன்” வெங்கட் சாரும், ”அட்ராசக்க”சிபி சாரும், கவிதைவீதி சௌந்தர் சாரும் தோழர்களாகவும், ” வானம் வெளித்த பின்னும்” ஹேமா, ”மதுரகவி” ராம்வி, ”கோலங்கள்” சுமதி, ”இல்லத்தரசி”சுகுணாவும் தோழிகளாகவும்,  கிடைச்சிருக்காங்க.


  ஓ ஓ.அப்படியா சங்கதி. சரி இந்த வருசம் என்ன பெருசா சாதனை புரிஞ்சுட்டே.
ஹா ஹா தொடர் பதிவுக்கு என்னை அழைச்சிருக்கும்போதே தெரியலையா? நான் பிரபல பதிவராயிட்டேன்னு.  அதுவே பெரிய சாதனைதானே. சரி சரி முறைக்காதே, என்னால இந்த சமூகத்துக்கு கெடுதல் ஏதுமில்லை அதான் சாதனை.அதுமில்லாம தமிழ்மணத்துல 52 இடம்(இதுக்கே பெருமை தாங்கலை) நான் கிறுக்குறதையும் பொறுமையா படிக்க என் பிளாக்கை ஃபாலோ பண்ணும் 95 பேர்,
பெரிய சாதனைதான். இவ்வளவ் நடந்திருக்கா உன் லைஃப்ல.  


டிஸ்கி: தம்பி “ராஜபாட்டை ராஜா” என்னை தொடர் பதிவுக்கு அழைச்சிருந்தார். பிள்ளைகளுக்கு அரையாண்டு பரிட்சை இருந்ததால் என்னால் உடனே பதிவிட முடியலை. கொஞ்ஞ்ஞ்ச லேட்டா போட்டுட்டேன்.


தொடர் பதிவுன்னாலே யாரையாவது நாலு பேரை கோர்த்துவிடனுமாமே. யாரை கோர்த்துவிடலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது
மனோ அண்ணா, தம்பி ரமேஷ்,  ”வானம் வெளித்த பின்னும்”  ஹேமா, தம்பி கருண் 

26 comments:

 1. Super . . Very different writing method

  ReplyDelete
 2. ம்ம்ம் ஓக்கே ரைட்டு

  ReplyDelete
 3. -அழகாய் ஒரு அரட்டை மூலம் சொன்ன விதத்தை மிக ரசித்தேன் தங்கையே... 2012ம் ஆண்டிலும் உங்கள் கலக்கல் தொடர இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. ஓகே.. ஏற்கெனவே ராஜா வும் போட்டு இருக்கார், விரைவில் போட்டுடுவோம்..

  ReplyDelete
 5. ஆஹா மாட்டி விட்டுட்டாங்களே....!!!

  ReplyDelete
 6. என்னாது சினிமா பார்க்குறது வழக்கமில்லையா, ஹி ஹி அதான் வீட்டுலயே டீ வி இருக்கே, அது போதும் எல்லா சினிமாவையும் பார்த்துறலாம்...!!!

  ReplyDelete
 7. சரி தங்கச்சி கேட்டா முடியாதுன்னு சொல்ல முடியாது, வியாழன் தொடர்பதிவு, நாஞ்சில்மனோ பிளாக்கில்...!!!

  ReplyDelete
 8. என்னாது சினிமா பார்க்குறது வழக்கமில்லையா, ஹி ஹி அதான் வீட்டுலயே டீ வி இருக்கே, அது போதும் எல்லா சினிமாவையும் பார்த்துறலாம்...!!!

  ReplyDelete
 9. சுவையாய் இருந்தது..

  ReplyDelete
 10. அக்கா... இம்புட்டுத்தான இந்தவருடம்..

  நல்லா சொல்லியிருந்தீங்க...

  அப்பாவை பத்தி கவலைப்படாதீங்க அவருக்கு இனி ஒன்னும் ஆகாது..

  பசங்கள இந்த வருடமாவது நிறைய இடத்துக்கு கூட்டிக்கிட்டு போங்க...

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 11. >>"இந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு."

  ஹி ஹி ஹி ஹி

  ReplyDelete
 12. வணக்கம் அக்கா

  சில விடயங்களை ரசிக்கும் படி சுவாரஸ்யாமாக எழுதியிருக்கீங்க

  உங்கள் அப்பாவின் நிலை என் மனதை மிகவும் பாதித்தது....இந்த உலகில் தாய் தந்தைதானே எமக்கு எல்லாம் அவர்களுக்கு பிறகுதான் மற்றது எல்லாம்.

  இனிய புதுவருட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. அருமைடா பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 14. பிரபல பதிவராகிடீங்க வாழ்த்துகள்!
  அடுத்த வருடமும் தொடரட்டும்.

  ReplyDelete
 15. அழகாய் மிக வித்தியாசமாய் சொல்லிப் போனவிதம்
  அருமை தொடர வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. அன்பு சகோதரி,
  அப்பாவைப் பற்றி நீங்கள் சொன்னது
  மனதுக்கு சிரமமாக இருந்தது.
  நல்லது நடக்கும் நல்லவர்களுக்கு..
  கவலை வேண்டாம் சகோதரி.
  இப்பதிவிலிருந்து தங்கள் மனதை
  ஓரளவுக்கு வெளிச்சத்தில் பார்க்கமுடிந்தது.

  ReplyDelete
 17. Intha varusam niraiya nalla visayangalum sila ketta visayangalum nadanthurukku illaiya? Varukira 2012 ungalukku migavum asirvathamaga amaiya Iraivanidam vendugiren Sago.

  TM 9.

  ReplyDelete
 18. ராஜி...உங்க அன்புக்கு நன்றி தோழி.ஏற்கனவே இந்தத் தொடருக்கான அழைப்பு நிறுத்தத்தில் நிற்கிறது.அதோடு இன்னொரு தொடரும்கூட.எல்லாம் வருடம் தொடங்கத்தான் இனித் தொடரும்.நத்தார் புதுவருடத்தில் வேலை அதிகம்.வீட்டில் அல்ல வேலை இடத்தில்.உங்களுக்கும் அன்பான புதுவருடம் பிறக்கட்டும் இதே சந்தோஷத்தோடு ராஜி !

  ReplyDelete
 19. உரையாடலாக எழுதுவது மிகவும் கஷ்டம். நீங்கள் அழகாக சொன்ன விதம் அருமை! நன்றி சகோ!

  ReplyDelete
 20. ரசிக்கும்படியா எழுதி இருக்கீங்க..!

  அப்பா இனிமே நல்லபடியா இருப்பார்..
  கவலைப்படாதீங்க..!

  2012 மகிழ்ச்ச்கியாய் அமைய வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
 21. அட அடுத்த தொடர் பதிவு!... நல்லா இருந்தது பகிர்வு....

  ReplyDelete
 22. துவக்க படத்தில் இருந்து எல்லாமே அருமை அக்கா... ஆனா தம்பி லிஸ்ட் ல என்னதான் விட்டுட்டீங்க...

  ReplyDelete
 23. ஏற்கனவே இந்த தலத்தில் இணைந்திருந்தும் என் முகம் அந்த பட்டியலில் காணா போயிடுச்சு அக்கா.. திரும்பவும் சேத்திருக்கேன்...

  ReplyDelete