Friday, February 17, 2012

உன் வீட்டு சுவற்றில் புகைப்படமாய்.......

                      
   என் மௌனத்தின்
அர்த்தங்களே உன் பார்வைகளாய்
உன் விழி(கள்) பார்க்கும்
தூரங்களே என் வாழ்க்கைப்
பயணங்களாய்...,

கண்ணீரை என் விழிகள்
அறியும் முன்னே – துடைத்து விட
நீளும் உன் கரங்களே
கானலாய் போனது....,

இத்தனையும் ஓர்
இரவின் மௌனத்தைக் கிழித்து
கொண்டு விசும்பலாய் உன் குரல்
கேட்கும் துடைக்க முடியா....,

தூரத்தில் நான் உயிரில்லா
நிழற்படமாய்
உன் வீட்டு
சுவரில்.

22 comments:

  1. அழகான கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  2. மென்சோகம் தாங்கிய கவிதை அருமை.

    ReplyDelete
  3. கவிதை நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  4. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அருமை அருமை
    சொல்லுக் கடங்கா சோகத்தையும்
    உங்களால் சொற்களுக்குள் அடக்க முடிகிறது
    படிப்பவர்கள் மனத்தினுள்ளும் அதனை
    அமற வைக்க முடிகிறது
    அதுதான் உங்கள் கவித்திறன்
    மனம் கவர்ந பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நிழல் நிஜமாகும் அருமையான பதிவு .

    ReplyDelete
  7. கவிதை சோக கீதம் பாடுதே அருமையாக, என்னம்மா ஆச்சு தங்கச்சி?

    ReplyDelete
  8. இந்த சோகமும் கடந்து போகும் தங்கச்சி.

    ReplyDelete
  9. சோகமான கவிதை.

    //தூரத்தில் நான் உயிரில்லா நிழற்படமாய் உன் வீட்டுசுவரில்//

    வரிகள் மனதை நெகிழ வைத்தது.

    ReplyDelete
  10. மெல்லிய சோகம் கலந்த அழகான கவிதை

    ReplyDelete
  11. கவிதை அருமை.

    ReplyDelete
  12. நாலு சட்டங்களுக்குள் அடங்கிக் கிடக்கும் சோகம்.அதற்குள்ளும் அழகான வரிகள் ராஜி !

    ReplyDelete
  13. மனம் நிறைக்கும் கனமான வரிகள். உறவின் அருமை பிரிந்தபின் புரியும். பாராட்டுகள்.

    ReplyDelete
  14. நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  15. படார் என்று சோகம் அறைந்து விடுகிறது. கடைசி வரியில். அருமைக் கவிதத.

    ReplyDelete
  16. கவிதைஅழகானது... வாழ்த்துகள்

    ReplyDelete
  17. அருமையும் அழகும் சேர்ந்து மிளிர்கின்றது

    ReplyDelete
  18. நல்ல கவிதை.... வாழ்த்துகள்..

    ReplyDelete
  19. இந்த கவிதை மூலம் எனக்கு இன்னா தோணுதுன்னா உங்க லவ்வர் வீட்ல உங்க ஃபோட்டோ இருக்கு.. ஆனா உங்க கிட்டே உங்க லவ்வர் ஃபோட்டோ இல்லை.. அதைத்தானே சுத்தி வளைச்சு. கட்டிங்க் ப்ளையர் வளைச்சு சொல்றீங்க?

    ReplyDelete
  20. kavidhai nalla illanga...

    ReplyDelete
  21. kavidhai nalla illanga.

    ReplyDelete