Tuesday, September 25, 2012

ஒரு கடிதம் அனுப்பினேன்...,

                                               

அன்புள்ள அக்கா தூயாவிற்கு,
      
இனியா எழுதி கொள்(ல்)வது. இங்க நான், அப்பா,அம்மா, தம்பி, பாட்டி, தாத்தா, என் ஃப்ரெண்ட்ஸ்லாம் கூட நல்லா இருக்காங்க. நீ  எப்படி இருக்கே? என் பர்த்டேக்கு நீ அனுப்பிய கிஃப்டும், லெட்டரும் கிடைச்சது.தேங்ஸ்டி

உன்னை அக்கான்னு சொல்றது இதான் ஃபர்ஸ்ட் டைமுன்னு நினைக்குறேன். நான், குட்டி பாப்பாவா இருந்ததிலிருந்தே நீ எங்கூடவே இருக்குறதாலயோ என்னவோ! எப்போ உன் மேல் பாசம் வந்துச்சுன்னு சொல்ல தெரியலை உன்னை போல...,

ஆனா, எதனால் உன்னை பிடிச்சிருக்கலாம்ன்னு வேணும்ன்னா சொல்றேன். உனக்கு ஞாபகமிருக்கோ இல்லையோ?ன்னு தெரியலை! எல்.கே.ஜி ல சேர்ந்த ஃபர்ஸ்ட் டே. அம்மாவும், அப்பாவும் என்னை கிளாசுல விட்டுட்டு போய்ட்டாங்க. நான் மரத்தடியில உக்காந்திருக்கும்போது, யார் நீ? ஏன் இங்க உக்காந்திருக்கேன்னு டீச்சர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, முட்டிக்கிட்டு வந்த கண்ணீர் கீழ சிந்துறதுக்கு முன்னாடி...,

இவ என் சிஸ்டர் டீச்சர், இன்னிக்குதான் ஸ்கூல்ல சேர்ந்திருக்கா. இவளை கூட்டி போக..., அம்மா இன்னும் வரலை போல.., நான் என்னோடு கூட்டி போறேன்னு, பர்மிஷன் வாங்கி..., உன்னோடு உன் கிளாசுல உக்கார வெச்சுக்கிட்டே. என்னை தாங்குறதுக்கு பெத்தவங்க மட்டுமில்லை. அக்கா நீயுமிருக்கேன்னு அன்னிக்கு உணர்ந்தேனே..., அப்ப இருக்குமா உன் மீதான என் பாசம் தோன்றியது? அன்றிலிருந்து ஸ்கூல்ல எதாவது ஒரு பிராப்ளம்ன்னா உன்னைத்தான் தேடி வருவேன். 

                                    

ஜீன்ஸ் படம் வந்த போதுதான் நான் பொறந்தேனாம். அதனால, அம்மா, உனக்கும் எனக்கும் ஒரே மாதிரி டிரெஸ், நகைங்க வாங்கி போட்டு அழகு பார்ப்பாங்க. நீ உன்னோட பொருட்களை பத்திரமா வச்சுக்குவே. ஆனா, நான் என் பொருட்களை ஸ்பாயில் பண்ணிட்டு, அம்மா கேள்விக்கு பதில் சொல்ல திணறும்போது இதோ இருக்கும்மான்னு உன் பொருட்களை கொண்டு வந்து குடுத்து என்னை காப்பாத்துவியே அப்பவா?!

ஸ்கூல் ஹோம் வொர்க் நிறைய இருக்கும்போதும், தாத்தா என் கையெழுத்து அழகாகனும்ன்னும், மனப்பாடம் செய்யனும்ன்னு  தமிழ் எழுத்துக்களையும், வாய்ப்பாடுகளையும் எழுத சொல்லும்போது, எனக்காக நைட் கண் முழிச்சு என் ஸ்கூல் ஹோம் வொர்க் முடிச்சு தாருவியே அப்பவா?!

சமமாய் பங்கிட்டு குடுக்கும் ரவா லட்டை பாட்டிக்கு தெரியாம, எனக்கு பிடிக்கும்ன்னு எனக்காக மறைச்சு வச்சு எடுத்து வந்து தருவியே அப்போவா?

வண்டி ஓட்ட பழகுறேன்னு ஸ்கூட்டியை கொண்டு போய் கீழ தள்ளி, ஹெட்லைட்டை உடைச்சு சத்தமில்லாம கொண்டு வந்து நிறுத்தியதை பார்த்து.., அப்பா கோவப்பட நாந்தான்பா தள்ளிட்டேன்னு பழியை நீ போட்டுக்கிட்டு அடி வாங்குனியே அப்பவா?

                                       

நம்மளை போலவே உள்ளுக்குள்ள நிறைய பாசம் இருந்தாலும்..., வீண் வம்புக்கிழுத்து அடிக்க வரும் அப்புக்கிட்ட இருந்து என்னை காப்பாத்தி சண்டை போட்டு நான் வாங்க வேண்டிய அடியை நீ வாங்கிக்குவியே அப்பவா?

எவ்வளவு யோசிச்சும் உன்மேல் நான் வெச்சிருக்குற பாசம் எப்போ வந்துச்சுன்னு தெரியலியே அக்கா.பல்பம் முதல் ஃபாரீன் சாக்லேட் வரை நீ எனக்கு விட்டு குடுத்திருக்கே. ஆனா, அம்மாவோட  பாசம் முதற்கொண்டு எல்லாத்துலயும்  உனக்கான பங்கை விட்டு குடுத்ததில்லை.

அது தப்புன்னு இப்போ உணர்றேன். ஐ மிஸ் யூ டி.

எந்த ஜென்மத்திலயும் என் இம்சைகளை தாங்க நீயே அக்காவா பொறக்கனும்??!! உன்னைத் தவிர என் இம்சைகளை யார் பொறுமையா தாங்குவாங்க சொல்லு பார்க்கலாம். எல்லாரும் தூயா போல அடக்கமா இரு, பொறுப்பா நடந்துக்க, உன் திங்க்ஸ்லாம் ஸ்பாயில் பண்ணாதன்னு உன்னை சொல்லி என்னை கண்டிக்கும்போது எனக்கு உன் மேல கோவம் வரும். என் பேரை இனி ரிப்பேர் ஆக்காத. 

அப்புறம், உனக்கு சாப்பாடு போதும்ன்னா அம்மாக்கிட்டயும், பாட்டிக்கிட்டயும் சொல்லிடு. அவங்க போடுறதை பிளேட்ல வாங்கிக்கிட்டு அவங்க கவனிக்காத போது என் தட்டுல போட்டு என்னை சாப்பிட சொல்லாத. முடியலைடி ப்ளீஸ்.

எனக்கு ஹோம் வொர்க் செய்யுற நேரம் வந்துடுச்சு. பை, பை டி சாரி அக்கா.

அன்பு தங்கை
இனியா,

அக்காவோட லெட்டரை படிக்க இங்க போங்க.

17 comments:

 1. என்ன இது...லெட்டர் லாம் எழுதிகிட்டு...எப்படியோ...ஒரு பதிவு..

  ReplyDelete
 2. இப்படிப்பட்ட அக்கா கிடைத்தால் எத்தனை
  ஜென்மம் வேண்டுமானாலும் தங்கையாகவே பிறக்கலாம் தான்....
  அருமையான கடிதம்.
  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 3. இனியாவை LKG ஸ்கூலில் இருந்து நேரத்துக்கு கூட்டி வராம என்ன செஞ்சீங்க? அப்போ ப்ளாக் வேற இல்லியே?

  தூயா மேலே பயங்கரமா இமேஜ் கூடுற மாதிரி எழுதிருக்கா இனியா. வாழ்க சகோதரிகளின் நட்பு !

  ReplyDelete
 4. நானும் சின்ன பையன் தான். என்னையும் தூயா தம்பியா ஏத்துக்க சொல்லுங்க !

  ReplyDelete
 5. உங்கள் குறும்புகளைத் தாங்கவே எல்லா ஜென்மத்திலும்
  இந்த அக்கா வேணுமா :) வாழ்த்துக்கள் சகோ இதைப்
  பார்க்கவே எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில் நீங்கள் இருவரும்
  பிறக்க வேணும் ஓக்கேவா :)))

  ReplyDelete
 6. இப்டி ஒரு அக்கா கிடைக்க மாட்டாளா... பேசாம தூயாக்கு நானும் தம்பியாயிடலாமான்னு ஆசையே வந்திடுச்சு இனியா. அருமை.

  ReplyDelete
 7. இனியா அவர்களே, இனிமையா அசத்திட்டீங்க....

  ReplyDelete
 8. அக்காதங்கை பாசம் வாழ்க வளர்க

  ReplyDelete
 9. தொய்வில்லாத மிரட்டலான எழுத்துநடை...உங்க ப்ளாக்ல எனக்கு பிடிச்சதே இதுதான்!

  மூணு வருஷ ப்ளாக்கிங் எக்ஸ்பீரியன்ஸ்ன்னா சும்மாவா....சும்மா அதிறவேனாம்! கலக்குங்க!

  ReplyDelete
 10. தூயா அந்தளவுக்கு நல்லவளா நீ :-)))

  நம்ப முடியவில்லை... இல்லை...இல்ல்லை :-)))))))

  ReplyDelete
 11. பாசமலர்கள் எழுதிய போட்டி கடிதமா? அருமை

  ReplyDelete
 12. அடடா என்ன அழகா பய புள்ளங்க எழுதியிருக்காங்க. எனக்கும் அக்கானு நீங்க இருக்கிங்களே எங்க இப்படி எழுதுங்க பார்க்கலாம்.

  ReplyDelete
 13. ஆஹா.. பாசமலர்கள்ன்னா இப்படில்லே இருக்கணும் :-)

  ReplyDelete
 14. நல்ல வேளை உங்க குடும்பத்துல 31 பேர் தான் இருக்கீங்க.. ஒரு மாசத்துக்கு 31 போஸ்ட் தான் வரும் கி கி கி

  ReplyDelete
 15. இருவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 16. இது நிஜமாவே நிஜமா....?
  இப்பிடி ஒரு பாசத்தைப் சினிமாவுல பார்த்திருக்கிறேன் உண்மையில் இருக்கா என்னு தெரியல்ல...
  உண்மையாய் இருந்தால் மிக்க சந்தோஷம்

  ReplyDelete