Thursday, September 06, 2012

பிரியமான தோழி...,


பிரியமான தோழிக்கு...,

எப்படி இருக்கிறாய்?
எங்கே இருக்கிறாய்?
எப்போது வருவாய்?
என் இதயம் துடிக்கும் போதெல்லாம்
உன்னைப்பற்றி எழும் கேள்விகள் இவை...

உன் விரலோடு விரல் கோர்த்து
விளையாடிய வீதிகள்....,
இன்று, வெற்றிடமாய் தெரிகின்றன!!

உன் எச்சில் மருந்தால்
ஆறிப்போன காயங்களின் தழும்புகள்...,
இன்று,  வலியால் துடிக்கின்றன!!

உன்னோடு தோள் சேர்ந்த
என் சுக துக்கங்கள் அனைத்தும்
இன்று தனிமையில் தவிக்கின்றன...

புன்னகை பூ பூத்து
நட்போடு நடைபோட்டோம்
புத்திகெட்ட சமுதாயம் நம்மை
பிரிக்குமென்றா எதிர்பார்த்தோம்?

அண்ணன் தங்கை வந்தாலே
அருவருப்பாக பார்க்கும் சமுதாயம்
நண்பர்களாய் நடைபோடும் நம்மைமட்டும்
ஆசையோடவா பார்க்கப்போகிறது...

வீணர்களின் சொல்லுக்கு வெட்கப்பட்டு
விட்டில் பூச்சிபோல் துடிக்கவேண்டாமென
வெவ்வேறு திசை பிரிந்தோம்
வேரறுத்த நம் நட்போடு...

விவேகத்தோடு எடுத்த நம் முடிவு
நட்பிற்கு நல்லது என்றாலும்
வெவ்வேறு வேளைகளில்
என்னை ரணமாய் கொள்கிறது...

நீ எத்திசையில் இருந்தாலும்
நம் நட்பெனும் சுவாசக்காற்று
எப்போதும் எங்கோ ஓரிடத்தில்
சந்தித்துகொண்டு தான் இருக்கிறது...

கண்ணீர் வருமோ என்ற தயக்கத்தில்தான்
இதை எழுத துடங்கினேன்
துடைக்க உன் விரல் இல்லாதபோது நான் மட்டும் எப்படி?
என்று கண்ணீரும் வரமறுக்கிறது....

உன் நினைவில் நான் எழுதும்
இந்த இனிய வேளையில்
என் நினைவில் நீயும் இருப்பாய்
என்ற நம்பிக்கையோடு....

22 comments:

  1. பிரிவின் வலி....


    அசைபோடுவதும் இன்பம்தான்...

    விரைவில் சந்தியுங்கள்...



    ReplyDelete
  2. சீரிசா எழுதிக்குறீங்க நான் பாட்டுக்கு ஏதாவது ஜோக் அடிக்கிறேன்னு டென்ஷன் பண்ணிட போறேன். மீ ஜூட்

    ReplyDelete
  3. கண்ணீர் வருமோ என்ற தயக்கத்தில்தான் எழுதத் துவங்கினேன். துடைக்க உன் விரல் இல்லாதபோது நான் மட்டும் எப்படி என்று கண்ணீரும் வர மறுக்கிறது, -க்ளாஸிக். பிரிவின் வேதனையை என்னுள்ளும் பதியனிட்டு விட்டது கவிதை. அருமைம்மா.

    ReplyDelete
  4. நீ எத்திசையில் இருந்தாலும்
    நம் நட்பெனும் சுவாசக்காற்று
    எப்போதும் எங்கோ ஓரிடத்தில்
    சந்தித்துகொண்டு தான் இருக்கிறது...

    கண்ணீர் வருமோ என்ற தயக்கத்தில்தான்
    இதை எழுத துடங்கினேன்
    துடைக்க உன் விரல் இல்லாதபோது நான் மட்டும் எப்படி?
    என்று கண்ணீரும் வரமறுக்கிறது....

    நட்பின் பிரிவை வார்த்தை கொண்டு செதுக்கிய
    அருமை வரிகள்

    ReplyDelete
  5. நல்ல வரிகள் சகோதரி...

    அங்கங்கே சில வரிகள் உண்மையாக இருந்தாலும் (சமூகம் பார்ப்பது அப்படி) அதை பின் வரும் வரிகள் வேரோடு சாய்த்து விட்டன... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  6. "உன் நினைவில் நான் எழுதும்
    இந்த இனிய வேளையில்
    என் நினைவில் நீயும் இருப்பாய்
    என்ற நம்பிக்கையோடு...." நட்பு மீண்டும் மலரட்டும்.

    ReplyDelete
  7. பிரிவின் வலி உணர்த்தும் அருமையான வரிகள். நல்ல கவிதை.

    ReplyDelete
  8. முத்தான முத்தாய்ப்பு! பின்னறீங்க!

    ReplyDelete
  9. பிரியமான கவிதை!
    த.ம.10

    ReplyDelete
  10. நல்லதொரு நட்பு கவிதை! நட்பு என்றும் அழிவதில்லை! நன்றி சகோதரி!

    இன்று என் தளத்தில்
    வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

    ReplyDelete
  11. கவிதை நன்று. ஒரு பெண் சொல்வது போலவே எழுதியிருக்கலாமே!

    ReplyDelete
  12. கவிதை ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  13. //உன் எச்சில் மருந்தால்
    ஆறிப்போன காயங்களின் தழும்புகள்...,
    இன்று, வலியால் துடிக்கின்றன!!

    உன்னோடு தோள் சேர்ந்த
    என் சுக துக்கங்கள் அனைத்தும்
    இன்று தனிமையில் தவிக்கின்றன.//


    வலி நிறைந்த வரிகள்...அக்கா..

    ReplyDelete
  14. நீ எத்திசையில் இருந்தாலும்
    நம் நட்பெனும் சுவாசக்காற்று
    எப்போதும் எங்கோ ஓரிடத்தில்
    சந்தித்துகொண்டு தான் இருக்கிறது...

    கண்ணீர் வருமோ என்ற தயக்கத்தில்தான்
    இதை எழுத துடங்கினேன்
    துடைக்க உன் விரல் இல்லாதபோது நான் மட்டும் எப்படி?
    என்று கண்ணீரும் வரமறுக்கிறது....

    நட்பின் ஆழத்தை நன்கு உணர்த்திய அருமையான
    கவிதை வரிகள் !..(என் கண்ணில் கண்ணீர் வந்திச்சே
    தோழி !!!...........)தொடர வாழ்த்துக்கள் மேலும்
    மேலும் இன்பக் கவிதை வரிகள் .

    ReplyDelete
  15. பினிஷிங் எண்ட் அருமை!

    ReplyDelete
  16. நல்ல கவிதை.... பிரிவின் வலி கொடுமையானது தான் சகோ....

    ReplyDelete
  17. அருமையான கவிதை அருமையான முடிவு.

    ReplyDelete
  18. >>ஸாதிகா9/07/2012 3:04 pm

    அருமையான கவிதை அருமையான முடிவு.

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.:-)

    ReplyDelete
  19. உன் எச்சில் மருந்தால்
    ஆறிப்போன காயங்களின் தழும்புகள்...,
    இன்று, வலியால் துடிக்கின்றன!!
    ///////////////////////////////////////

    மறந்த பழக்க வழக்கங்கள் ஆனால் அப்பருவத்தில் இதுதான் வாடிக்கை.....
    ரசித்த கவிதை..
    பிரியமான தோழி படத்தையே கண் முன் கொண்டுவந்தது

    ReplyDelete
  20. செம கவிதை.
    ஒரு ஆணும் பெண்ணும் பழகுறத இந்த சமுதாயம் எப்ப தான் நல்ல எண்ணத்தோட பாக்க போகுதோ.

    ReplyDelete