வியாழன், செப்டம்பர் 27, 2012

உறங்காமலே காத்திருக்கிறேன்....,


என் கனவே! 
நீ என்பதால்தான் 
கலைந்துபோகும் 
உறக்கத்தை வெறுக்கிறேன்...,

நான் உன் விழிக்கு
இமையாக மட்டும் அல்ல...,
உறக்கத்திலும் கூட
உன்னைக் காக்கும்
விழியாவேன்...,

நீ, 
என்னுடன்  வாழ்ந்ததிற்கான 
ஆதாரங்களை உன்னுள்
 நான் காணவும்...

உன்னுடன், 
 நான் வாழ்ந்ததிற்கான??!!
 ஆதாரங்களை
என்னுள் நீ உணரவும்...

நீ வேண்டும்!
விரைந்து வா...
என் உயிரே! உறங்காமலே
உனக்காக காத்திருகிறேன்...
 

19 கருத்துகள்:

 1. நான் உன் விழிக்கு
  இமையாக மட்டும் அல்ல...,
  உறக்கத்திலும் கூட
  உன்னைக் காக்கும்
  விழியாவேன்...,

  இது நல்லாருக்கே

  பதிலளிநீக்கு
 2. ம்ம்ம் ..அருமை சகோ
  வரிகளில் காதல் தவிப்பு

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அருமையான வரிகள்...பகிர்வுக்கு நன்றி...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  பதிலளிநீக்கு
 4. மிக அழகான கவிதை வரிகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி.......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 5. என்ன அவசரம் அதுதான் வந்து விட்டேனே !....
  நீங்க என்னைத்தானே அழைத்தீர்கள் தோழி :)
  அருமை !...காத்திருப்பதிலும் காக்க வைப்பதிலும்
  ஒரு சுகமே .வாழ்த்துக்கள் கவிதை மேலும் மேலும் தொடரட்டும் .

  பதிலளிநீக்கு
 6. //நான் உன் விழிக்கு
  இமையாக மட்டும் அல்ல...,
  உறக்கத்திலும் கூட
  உன்னைக் காக்கும்
  விழியாவேன்...,//

  மனதை அள்ளும் வரிகள்...

  பதிலளிநீக்கு
 7. இதோ விரைந்து வந்து கொண்டே இருக்கிறேன் சகோ.

  பதிலளிநீக்கு
 8. செகண்ட் ஷோ சினிமாவுக்கு புருஷன் பொண்டாட்டி 2 பேரும் போகரதுக்கு ஒரு பதிவு 4 திரட்டி ஹூம்

  பதிலளிநீக்கு
 9. // என் கனவே!
  நீ என்பதால்தான்
  கலைந்துபோகும்
  உறக்கத்தை வெறுக்கிறேன்.//

  வாவ்வ்வ்வ்வ்வ்...

  பதிலளிநீக்கு
 10. உன்னுடன்,
  நான் வாழ்ந்ததிற்கான??!!
  ஆதாரங்களை
  என்னுள் நீ உணரவும்..

  எனக்கு பிடித்த இடம்..

  பதிலளிநீக்கு
 11. ஒவ்வொரு வரிகளும் வார்த்தைகளும் மனதை கவர்கிறது அக்கா! என்னை மீண்டும் மீண்டும் படிக்கவைத்த வரிகள்!
  நீ,
  என்னுடன் வாழ்ந்ததிற்கான
  ஆதாரங்களை உன்னுள்
  நான் காணவும்...

  உன்னுடன்,
  நான் வாழ்ந்ததிற்கான??!!
  ஆதாரங்களை
  என்னுள் நீ உணரவும்...

  பதிலளிநீக்கு
 12. காத்திருப்பது சுகம்தான்!

  பதிலளிநீக்கு
 13. நான் உன் விழிக்கு
  இமையாக மட்டும் அல்ல...,
  உறக்கத்திலும் கூட
  உன்னைக் காக்கும்
  விழியாவேன்...,
  //இரசித்தேன்//
  காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 14. அனைத்து வரிகளும் அருமை

  பதிலளிநீக்கு
 15. காத்திருப்பு அர்த்தமுள்ளது....
  அழகான வரிகள்

  பதிலளிநீக்கு