செவ்வாய், செப்டம்பர் 18, 2012

அஷ்டாவதானி...,


மானத்தை மறைக்கும் உடையாய் ,
மகளுக்கு தாவணியாய்,
அரிசி உலர்த்தியாய்,

குளிருக்கு போர்வையாய்..,
தலையணை உறையாய்...,
அடுப்படியில் கைப்பிடித் துணியாய்,
விளக்குத் திரியாய்,

இப்படி...,
அவளைப் போலவே??!
 பலரூபமெடுக்கும்,
                                                     அம்மா வாங்கித் தந்த "புடவை" 

27 கருத்துகள்:

 1. சில சமயங்களில் தலகாணி உரையாய்!

  நிச்சயம் அஷ்டாவதானி தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான ஒரு வரியை எடுத்து தந்திருக்கீங்க சகோ. சேர்த்துடுறேன். மிக்க நன்றி

   நீக்கு
 2. இறுதி வரிகள் மிக மிக அருமை
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. குழந்தைகள் அம்மாவின் அரவணைப்போடு தூங்க... -> தொட்டில் கட்டி...

  பதிலளிநீக்கு
 4. வரிகள் மிக அருமை தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. ம்ம்ம்... ம் (;
  உண்மையிலேயே அஷ்டாவதானி தான் சகோ

  பதிலளிநீக்கு
 6. மிகச்சிறந்த வரிகள் ...
  நன்று

  பதிலளிநீக்கு
 7. ஹி! ஹி! கணவர்கள் சார்பாக ஒரு கண்டனம்!

  துவைத்து காயவைப்பதற்குள் எங்களுக்கு மூச்சுமுட்டி விடுகிறது!
  அதேமாதிரி, காதலிலும் இல்வாழ்க்கையிலும் தோல்வியடைந்த தமிழச்சிகள் கையில் கிடைக்கக்கூடாதும் புடவை தான்!!

  பதிலளிநீக்கு
 8. ஆகா.. அஷ்டாவதானி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. சேலைய வச்சி கவிதையா யக்கா .......

  பதிலளிநீக்கு
 10. அம்மா அஷ்டாவதானி தான், அம்மாவின் சேலையும் அஷ்டவதானிதான் உண்மை.
  குழந்தை வளர்ந்தவுடன் அம்மாபுடவையை கையில் சுருட்டி வைத்துக் கொண்டு கையை வாயில் போட்டு சப்பும். அதற்கும் அம்மாவின் புடவை தேவைப்படும்.
  நான் என் அம்மாவின் புடவையை பத்திரமாய் வைத்து இருக்கிறேன் அவர்கள் நினைவாய்.
  அருமை அருமை கவிதை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. கவிதை மிக அருமை சகோதரி. உங்கள் கவிதை என் குட்டிகாலத்தை நினைவூட்டுகிறது.

  பதிலளிநீக்கு
 12. இரசிக்கவைத்தன வரிகள்! ஒவ்வொருவரின் நினைவிலும் வலம்வரும் அஷ்டவதானி!

  பதிலளிநீக்கு
 13. சேலைக்கும் கவிதை இங்கு அதை பட்டியலிட்ட விதம் நன்று அதற்கு தலைப்பு மிக பொருத்தம்

  பதிலளிநீக்கு
 14. அருமை அருமை


  கணற்பொறி வாழ்க்கை பதிவு காணப்படவில்லையே.!

  பதிலளிநீக்கு
 15. என்னுடைய வலைப்பக்கத்தில் கழிவிரக்கம், பிறைநிலா, இமைகள் எனும் தலைப்புகளில் கவிதைகள் படைத்துள்ளேன்.நேரம் கிடைக்கையில் படித்து தங்களின் கருத்தினைப் பதிய விழைகிறேன்.நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு