Tuesday, February 26, 2013

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?


1. ஸ்கூல் ஆஃபீஸ் டைம் தெரிஞ்சு நேரத்துக்கு எல்லாத்தையும் ரெடி பண்ணிடனும்..., (கிளம்புற நேரத்துலதான் சமைக்கலை, ட்ரெஸ் அயர்ன் பண்ணலைன்னு சொல்லி கடுப்பேத்த கூடாது...,)

2. அதிகாலை 6 மணிக்கு முன் எழுந்துக்கனும்.., (வூட்டுக்காரர் கிளம்பி டாட்டா சொல்லிட்டு போற வரை தூங்க கூடாது.)

3. எப்பவும் சிரிச்ச முகமா இருக்கனும்..,  (அதுக்காக வெளில போகும்போதும் இளிச்சுட்டே வரக்கூடாது)


4. உங்க  மாமியாரை தாயா மதிக்கனும் (உங்க  வீட்டுக்காரோட மாமியாரை இல்ல..,) 

5. தன்னோட வீட்டு ஆளுங்க கிட்ட அனுசரணையா நடந்துக்கனும்..,( ஆனா, இவரு மட்டும் மாமன், மச்சான், மாமனார், மாமியார் வந்தால் ஆஃபீசுல ஓவர் டைம்முன்னு சொல்லி லேட்டா வருவார்.) 

7. எதுக்கெடுத்தாலும்  புருசனை   குறை சொல்லக் கூடாது (இழுத்து போட்டு அடிச்சாலும்..)

8. அதிகாரம் பணணக் கூடாது(திண்ணுட்டு திண்ணுட்டு கிரிக்கெட் பார்த்தாலும் எதும் சொல்லப்படாது...)

9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது (சம்பாத்தியம் மொத்தமும் அவங்களுக்கே கொடுத்து உங்களை பட்டினி போட்டாலும்...)

10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும் (ஆமா, சந்தேகப்பட்டு ஆசிட் ஊத்த வரும்போதும் இதோ பாரு டார்லிங் அதை என் மேல ஊத்துனா லேசா எறியும், தோல் வழண்டிடும்ன்னு அன்ன்ன்பா சொல்லனும்.)

11. கணவனை சந்தேகப்படக் கூடாது (அவன் லேப்டாப்பை போர்வைக்குள்ள வச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே டைப்பிக்கிட்டு இருந்தாலும்..,)
 .
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது (ஆமா, எவ்வளவு சீரழிஞ்சாலும் சாக்கியாரிஸ்டுக்கிட்ட கூட சொல்லி உருப்படுற வழியை பார்க்க கூடாது...)

13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும் (ஆனா, அவங்க மட்டும் ஃபேஸ்புக், ட்விட்டர், ஆர்குட்டுன்னு செவ்வாய் கிரகத்துல இருக்குறவங்ககிட்ட கூட சாட் பண்ணுவாங்க...)

14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது(ம்ம் ஏன்னா சாப்பிடும் போது கூட ஃபேஸ்புக், ட்விட்டர்ல ஸ்டேட்டஸ் போடனுமே!!)

.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும் (ம் ம் ம் அவங்க எத்தனை நாள் வேணும்னாலும்  டேரா போட்டு, ஊரை சுத்தி டெபிட் கார்டை தேச்சு காலி பண்ணாலும்..,) .

16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்(ஆமா, வாங்குற சம்பளத்தை தண்ணி, தம்முன்னு அழிச்சுட்டு வந்து குடும்பம் நடத்துனாலும்...)

17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது (அப்படி ஆசைப்பட்டு சிறுவாடு சேர்த்து நகை, டிவி,ஃப்ரிட்ஜ்ன்னு சேர்த்து எல்லாரையும் போல நல்லபடியா வாழ ஆசைப்பட கூடாது...)

18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் (இவர் மட்டும் ரெண்டாவது பொண்ணு என்ன செக்‌ஷன்ல படிக்குதுன்னு கூட தெரிஞ்சுக்காம இருப்பார்...)

19.. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது (ஏன்னா, தண்டமா ஃப்ரெண்டுக்குலாம் டிரீட் குடுக்கனுமே!)

.
20. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும் (ஃப்ரெண்ட்ஸ் கூட அரட்டை அடிச்சுட்டு கூர்க்காவும் கண் அசரும் நேரத்துல வீட்டுக்கு வந்தா எந்த கடை திறந்திருக்கும்...)


21. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும் (யார் எதிர்காலம்ன்னு கேக்கப்படாது...)

.
2.2. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும் (சொல்லி முடிச்சு பார்த்தா குறட்டை விட்டு தூங்கிட்டு இருப்பான்...)

23. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும் (உள்ளதை சொன்னால் விரோதம்தான் வளரும்.. அப்புறம் கோர்ட்டு, கேசுன்னு பொண்ணை பெத்தவங்க சுத்தனும்...)

24. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும் (அவர் மட்டும்ஃபேஷன்ன்ற பேருல கன்றாவியா குட்டையா சட்டை போட்டுக்கிட்டு தொந்தி அசைய வருவார்..,)


25. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது ( ஆஃபிசுல இருக்கும் கோவத்தால் குழந்தையை எவ்வளவு அடிச்சாலும் மூச்ச்ச்ச்..)

26. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும் (ஆனா, ஃப்ரெண்ட்கிட்ட செல்போன்ல அரட்டை அடிச்சுக்கிட்டே  நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம பாய்லர்ல  கறி அள்ளி போடுற மாதிரி சாப்பிட்டு போவார்...)

28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் (அப்போதானே சாக்ஸ், ஃபைல், செல்போன், லேப்டாப்ன்னு கண்ட இடத்துல போட்டு குப்பையாக்க முடியும்!!?) .
29. அதிகம் சினிமா பார்க்க கூடாது (அவர் மட்டும் வாரத்துல ஒரு நாள் ஃப்ரெண்ட்ஸ் கூட போய் பார்த்துட்டு வருவார்..,)


30.தன்னோட ஃப்ரெண்ட்ஸ் வரும்போது  நல்லபடி சமைச்சு கவனிச்சுக்கனும் அதே நேரம் அவங்ககிட்ட எதும் பேசிட கூடாது (நம்ம ஃப்ரெண்ட் வந்தா இவங்க மட்டும் ஜொள்ளு விட்டுக்கிட்டு வந்து பேசுவாங்க...)


18 comments:

 1. அப்பாடி.... லிஸ்ட் ரொம்ப நீளமாத்தான் இருக்கு! :)) சரி சரி நான் இந்த பக்கமே வரல!

  ReplyDelete
 2. அட... 30 தானா...? இன்னும் நிறைய இருக்கே...!

  ReplyDelete
 3. ஒன்னே ஒன்னு தான்...!
  "என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்கவிடேன் என்பது தான் ---- தனிமை பல நேரங்களில் ஆண்களுக்கு தேவை!

  ReplyDelete
 4. தேவையான தகவல்கள் தான் ஹி ஹி

  ReplyDelete
 5. //(நம்ம ஃப்ரெண்ட் வந்தா இவங்க மட்டும் ஜொள்ளு விட்டுக்கிட்டு வந்து பேசுவாங்க...)//

  உங்க கோபம் புரியுது!

  //தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும் (சொல்லி முடிச்சு பார்த்தா குறட்டை விட்டு தூங்கிட்டு இருப்பான்...)//

  அதுக்குன்னு, அவன் இவன் என்ற ஏகவசனம் வேண்டாம்!
  கல்லானாலும் கணவன் ஃபுல் அடிச்சாலும் புருஷன்...!

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. மொத்தத்தில் மனைவி என்பவள் கணவனுக்கு ...., ...., ....,

  புரிகிறது ராஜி மேடம்.

  ReplyDelete
 8. //அருணா செல்வம்2/27/2013 4:17 AM

  மொத்தத்தில் மனைவி என்பவள் கணவனுக்கு ....,

  புரிகிறது ராஜி மேடம்.//

  என்னைப் பொறுத்தவரை,
  மொத்தத்தில் மனைவி என்பவள் கணவனுக்கு கண்கண்ட தெய்வம்...

  புரிகிறது அருணா மேடம்...

  ReplyDelete
 9. ஆக கணவன் என்னச் சொன்னாலும் தலையாட்டனும்..இதுக்கு தான் கிராமத்து பொண்ணுனா ரொம்ப புடிக்கும்னு சொல்றாங்களோ??

  ReplyDelete
 10. தனக்கு்ன்னு தனித்துவமோ சிந்தனையோ இல்லாம கணவனோடயும் அவன் உறவுகளோடயும் ஐக்கியமாயிடணும். அப்படியாம்மா? நிலைமை இப்படித்தான் இருக்குன்றது வேதனையான நிஜம்!

  ReplyDelete
 11. ம்ம்ம் .....பெண் என்பவளுக்கு சார்ட் போதுமா இன்னும் இருக்கா அகராதியில் இது தான் வாழை பழத்தில் ஊசிஏற்றுவதோ

  ReplyDelete
 12. என்னத்த சொல்ல இப்பவே வயிறு கலக்குது :)))))
  (வாழ்த்துக்கள் பட்டியல இன்னும் கொஞ்சம் நீட்டலாம்..)
  எதுக்கு வம்பு நான் ஒண்டும் சொல்லலப்பா :)

  ReplyDelete
 13. அனுபவஸ்தர்கள் சொல்லுறீங்கோ கேட்டுக்கிறோம்

  ReplyDelete
 14. அக்காவோட அனுபவமே தனிதான்...

  ReplyDelete
 15. நிறைய வீட்டில் இதைப்போலவும் இன்னும் பல வீட்டில் இதற்கு நேர் எதிராகவும் இருக்கிறது. மிகச்சரியான புரிதலுடன் எதையும் அளவாக செய்து இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லும் குடும்பங்கள் மிகவும் அரிதாகத்தான் தென்படுகின்றன.

  செடிக்கு தண்ணி ஊத்தாம காய விடுறது அல்லது லாரி லாரியா தண்ணிய ஊத்தி செடி அழுகி வீணாகும்படி செய்யுறது.- இது ரெண்டுதான் கணவன் மனைவி உறவுக்குள்ளேயும், குழந்தை வளர்ப்பிலேயும் அதிகமா நடக்குது. சரியான விகிதத்தை அனுபவப்பாடமா நமக்கு உணர்த்துன பெரியவங்க இப்போ நம்ம கூட இல்லை. (பெரியவங்க இருந்தாலும் அந்த பக்குவம் இல்லை - முதல் உபயதாரர்:தொல்லைக்காட்சியில் சீரியல் அரக்கன்)

  ReplyDelete
 16. ரொம்ப..பெரிய லிஸ்டா இருக்கே! எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ?

  ReplyDelete
 17. கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன என்று பதிவிட்டால்.. "மனவி சொல்வதற்கெல்லாம் கணவன் தலையாட்ட வேண்டும் " என்ற ஒரே வரியில் முடிஞ்சிடுமேன்னு மாத்தி இவ்வளவு தூரம் ஓட்டிட்டிங்க.. ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..! ஒரே பால்ஸா கொட்டுது பாயிண்ட்ஸ்..ஏன்.. ஏன்.. ஆண்கள் ரொம்ப பாவம்பா.. ரொம்ப நல்லவங்க.. எல்லார் வீட்லயும் பெண்டாட்டி எதை போட்டாலும் தின்னுட்டு குழந்தைகளை குளிப்பாட்டி யூனிபார்ம் போட்டு ஸ்கூலுக்கு அனுப்பறதிலர்ந்து.. துணி மடிச்சி வைக்கறது வரை கணவர்கள்தான்னு வாசல் தாண்டாத உண்மைங்க. சொல்வீங்க.. சொல்வீங்க..!

  // (நம்ம ஃப்ரெண்ட் வந்தா இவங்க மட்டும் ஜொள்ளு விட்டுக்கிட்டு வந்து பேசுவாங்க...)// - பாவம் அவங்க எதோ பெண்டாட்டியோட பிரெண்டாச்சேன்னு சும்மா ஸ்மைல் பண்ணா கூட அவங்க போயிட்ட பிறகு " அவ என்ன என்னை விட அழகா? ன்னு குடையறது யாருப்பா? மெய்யாலுமே சொன்னா கணவர்கள்- "கண்"அவர்கள் ..!

  ReplyDelete
  Replies
  1. இப்படிலாம் சேம் சைட் கோல் போடக்கூடாது உஷா மேம்

   Delete