Tuesday, February 05, 2013

முப்பதே நாளில் காதலில் ஜெயிப்பது எப்படி??!!

                                                
ரெண்டு ஆண்கள் சந்திச்சுக்கிட்டாலே,   மச்சி! நான் என்ன செஞ்சாலும் உன் தங்கச்சிக்கிட்ட  நல்ல பேரு வாங்க முடியலைடா . எப்ப பாரு எங்களுக்குள்ள ஒரே சண்டை.., என்ன பண்றதுன்னே புரியலைடான்னு சொல்லி புலம்புவாங்க.   இந்த பிரச்சனை தீர்க்க சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு கொடுக்க போறேன். யூஸ் ஆச்சுன்னா என்னை வாழ்த்துங்க!! இல்லாட்டி, எழுதி மூஞ்சிபுத்தகத்துல போட்ட முகம்றியா நட்பை திட்டுங்க....

ரெடியா?! போலாமா?!

1.காலையில் எழுந்தவுடன் பல்லு கூட வெளக்காம ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து வுடணும் (ஒரு ரூபாய் செலவுதான். பூஸ்டர் கார்டு 33 ரூபாதான். மாசம் ஃபுல்லா அளவில்லாம பொய் சொல்லலாம்.., சாரி, மெசேஜ் அனுப்பலாம். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க மறக்காம செஞ்சாகணும்..

2. உங்க “அவங்களை”ப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல்ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்.(பார்த்துங்க வேற எதாவது கொரில்லா குரங்கு அழகா இருக்குன்னு ஏற்கனவே வெச்சிருந்த ஸ்கிரீன் சேவரையும், இந்த டயலாக்கையும் மிக்ஸ் பண்ணிடாதீங்க..., )

3. உங்க “அவங்க” பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க அவங்க ரியாக்சனை... 

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது?!

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.அப்படி ஒரு வேளை எழுத தெரியாட்டா உடனே, மூஞ்சு புத்தகத்துலயும், ட்விட்டர்லயும் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணீ பாருங்க அங்க கொட்டிக் கிடக்கு விதம் விதமா, ரகம், ரகமா கவிதைகள்..,)

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க) 

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, பரக்காவெட்டித்தனமா நீங்க  ஃபர்ஸ்டா  ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான் இந்த அடக்கி வாசிப்பு..,)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது அந்த தேவதைங்கலாம் உங்க கண்ணை குத்தும். கொஞ்சம் சமாளிசிக்கோங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது. 

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.
 

26 comments:

  1. 30 நாளெல்லாம் ரொம்ப அதிகம்ங்க.... அது அந்த கால லவுங்க.. இந்த காலத்தில 30 நிமிசத்துல பிக்கப் பண்ணி 30 மணி நேரதிற்குள்ள குடித்தனம் நடத்தி 30 நாளில் பொண்ணை கலட்டி விட்டனுமுங்க.... இல்லைன்னா க்யூவுல நிக்கிற பொண்ணுங்க எல்லாம் வருத்தப்படுமுங்க

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா?!அனுபவம் பேசுதோ?! எல்லாம் சரி, உங்க பின்னாடி நிக்குற கியூல எத்தனை பேரு நிக்குறாங்கன்னு கொஞ்சம் தோராயமா எண்ணி சொல்லுங்களேன்

      Delete
  2. //குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து வுடணும் இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க மறக்காம செஞ்சாகணும்.//


    நீங்க சொன்ன இதே விஷயத்தை நைட்டுலேயும் சொன்னா நீ சரியான லூசுன்னு சொல்லிவிட்டு நம்மபளை கழட்டிவிட்டுவாங்க அல்லது நீ இந்த ராஜியம்மா எழுதுன பதிவை படித்துவிட்டு என்னிடம் உளறுகிறாயா என்று நல்லா வெள்த்து கட்டுவாங்களே
    .

    ReplyDelete
    Replies
    1. நீங்க கொஞ்சம் அறிவாளின்னு நினைச்சு சுருக்கமா சொல்லிட்டேன். இதுப்போல மறக்காம குட்நைட் மெசேஜ் அனுப்பனும்ன்னு சொல்லனும்ன்னு மாத்திடுறேன் போதுமா?!

      Delete
  3. ///நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். ///

    இதெல்லாம் 40 வயசுக்கு மேல் உள்ளவங்களை காதலிக்கும் போதுமட்டும்தான் சொல்ல வேண்டும் அதைவிட்டுட்டு இந்த கால பொண்ணுக கிட்டடே சொன்ன என்ன நக்கலா பண்ணுறே என்று சொல்லிவிட்டு நம்பளை கழட்டிவிட்டுவாங்க

    ReplyDelete
    Replies
    1. ஆக, வயசு வித்தியாசமில்லாம எல்லா கேட்டகிரி பொண்ணுங்களையும் லவ் பண்றீங்களா சகோ?!

      Delete
  4. தூங்காம இப்படியெல்லாம் ஐடியா கொடுக்க கூடாது.இதைபோயி இப்ப ஏன் யோசனை பண்ணுறீங்க ?

    ReplyDelete
    Replies
    1. இப்படி தூங்காம பதிவு போட்டதுலயும் ஒரு நன்மை. நம்ம சகோ படிச்சுட்டு சந்தேகம்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு எல்லா கேட்டகிடி பொண்ணுங்களையும் லவ் பண்ண போய் இருக்கார்

      Delete
  5. இந்த விஷயத்துக்கும் எனக்கும் ரொம்ப தூரமாய்ப் போச்சுதே... அவ்வ்வ்வ்வ்›!!!

    ReplyDelete
  6. இதுக்கும் முப்பது நாள் கிராஷ் கோர்ஸ் வந்துடுச்சா??

    ReplyDelete
  7. பாடம் எல்லாம் சரிதான் காதலிக்கு எங்க போறது அக்கா
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் காதலி செலக்ட் செய்வது எப்படினு 30 நாள் கோர்ஸ் எதாவது இருக்கா?

    ReplyDelete
  8. முப்பது நாள் தேவையா...?

    "பார்வை ஒன்றே போதுமே...
    பல்லாயிரம் சொல் வேண்டுமா...?"

    யார் நீ (படத்தின் பெயர்)

    ReplyDelete
  9. இதெல்லாம் நமக்கு உதவாது! என்ற வூட்டு அம்மணி நான் படிக்கிற எல்லா இடத்திலயும் வருவாங்க! அதுனால உடு ஜூட்!

    ReplyDelete
  10. அய்யய்யோ இவ்ளோ பொய் சொல்லனுமா..

    ReplyDelete
  11. இவளோ பொய் சொல்லி காதலிச்சிட்டு கல்யாணத்துக்கப்பரம் உண்மைய சொன்னீங்கனா சோத்துக்கு சங்குதான்.

    ReplyDelete
  12. முப்பது நாட்களில் புது மொழி கத்துக்கொடுக்கிற மாதிரி,இதுக்கும் 30 நாட்களா??

    ReplyDelete
  13. Replies
    1. காக்கா தூக்கிட்டு போய் ஸ்பேம் பாக்ஸ்ல போட்டிடுசசான்னு பார்த்துட்டு வரேன்

      Delete
  14. இந்தக்கால பொண்ணுங்க எல்லாம் ரொம்ப உசாருங்க.வழியிற பசங்கள கண்டுக்குறதே இல்லைங்க.

    ReplyDelete
  15. அருமையான யோசனை......... கல்யணம் பண்ணிட்டனே, இதையெல்லாம் செயல்படுத்த குடுத்து வக்கலியே.............அடச் ச்சே,,,,,,,, இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியாமப் போச்சே................

    ReplyDelete
  16. உங்களுடைய இந்த இடுகையைப் படிச்சா....
    எல்லா பொண்ணுங்களும் உசாராகிடுங்...கோ....!!!

    ReplyDelete
  17. ஆமா எங்கிருந்து பிடிச்சீங்க இந்த ஐடியாவையெல்லாம் சொந்த அனுபவமோ ஹி... ஹி. அப்போ ரொம்ப பழசு. தேவைப்படறவங்க படிச்சு மனசுல வச்சுக்குங்கப்பா....

    ReplyDelete
  18. யு ஆர் டூ லேட் சகோதரி , கடந்த 15 வருடங்களாக இப்படித்தான் என் வீட்டுககாரம்மக்கிட்டே சொல்லிக்கிட்டு இருக்கிறேன் .

    ReplyDelete
  19. இப்பிடித்தான் உங்க அவர் உங்ககிட்ட பல காலமா மெய் பேசிட்டு இருந்தாரோ...:)

    ReplyDelete
  20. ஐயோ, பாவம் ஆண்பிள்ளைகள் என்றுதான் நினைக்கத்தோணுது ராஜி.

    ReplyDelete
  21. கொஞ்சம் லேட்டாத் தெரிஞ்சுக்கிட்டேன்!

    ReplyDelete