Wednesday, February 13, 2013

சொர்க்க லோகம்

                                            Romance

இப்போலாம் ஆஃபீசில் எட்டு மணி நேரம் வேலை செய்யுறவங்களுக்கு டூர், ஜிம், யோகாக்கு  வருடத்திற்கொரு முறை  லாம் போக அவங்களே  ஏற்பாடு செய்யுறாங்க. சில கார்ப்பரேட் கம்பனிகள் தங்கள் ஆஃபீசுலயே ஸ்ட்ரெஸ்ஸை போக்க.., ஜிம்மும்,  கேரம், டேபிள்டென்னிஸ், செஸ் போன்ற சின்னதா உள் விளையாட்டு அரங்கமும் வெச்சு குடுத்து தங்களோட  பணியாளர்கள்  மன அழுத்தம் இல்லாம இருக்க மெனக்கெடுது.

ஏறக்குறைய  எட்டுமணிநேர வேலைக்கே இத்தனை மெனக்கெடல் இருக்கும் போது விடியற்காலை முதல் மறு நாள்  விடியற்காலை வரை இணைந்தே இருக்கும் தங்கமணிக்கு  என்னென்ன செய்யனும்ன்னு ஒரு பட்டியலே போட்டிருக்காங்க “உளவியல் நிபுணர்கள்”. அவங்க கிடக்குறாங்க இப்படித்தான் எதாவது சொல்லுவங்கன்னு பதிவை படிச்சு, ஓட்டு போட்டு, கருத்து சொல்லிட்டு மறந்து போயிட்டா அவஸ்தை படப்போறது நீங்கதான் சகோ. அதனால, இதை அப்படியே செய்ய  முடியலைனாலும் சிலதை மட்டுமாவது செஞ்சு “எங்க வூட்டுக்காரர் போலாகுமா”?உங்க வூட்டம்மாக்கிட்ட நல்ல பேரு வாங்குங்க...,

அலுவலக டென்சன்

ஆஃபீசுல என்னதான் டென்ஷனா இருந்தாலும் அதை ஆஃபீசோட விட்டுடுங்க. . வீட்டில  உங்க பொண்டாட்டி, புள்ளைங்களை மட்டும் நினைங்க. ஆஃபிசுல மத்தவங்க மேல இருக்குற  கோபத்தை எக்காரணம் கொண்டும் பொண்டாட்டிக்கிட்ட காட்டாதீங்க.

ஆஃபிசுல இருந்து வந்ததும்,  வீட்டுல   ”உங்க” வூட்டம்மாவை பார்த்ததும் அவங்களை பாசத்தோடு லேசா கட்டித் தழுவுங்க.  (பக்கத்துல யாரும் இல்லாத நேரத்துல் பொடுசுங்க இருந்தா வயசாகியும் ரொமான்ஸ் குறையலைன்னு கேலி பேசும்ங்க..)ஆசையா மென்மையா  சில முத்தங்களையும் கொடுங்க. அவங்களும் தன் பங்குக்கு உங்கள் மீது பாசத்தை கொட்டுவாங்க

சமையல் செய்யும்போது நீங்களும்வூட்டம்மா க்கு உதவி செய்யுங்க. விடுமுறை நாளில்நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யுங்க.  நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாங்க  உங்க வூட்டம்மா

குழந்தையாக மாற்றுங்கள்

வீட்டில் சாப்பிடும் சூழ்நிலையில் முடிந்தவரை சாப்பிடும்போது ஒண்ணாவே  சாப்பிடுங்க. அப்போது வூட்டம்மாக்கு சாப்பாட்டை ஊட்டி விடுவதில் தவறே இல்லை. அப்படி செஞ்சீங்கன்னா அவங்க  ஒரு குழந்தையாகவே மாறிடுவாங்க. அந்த குழந்தைத் தனத்தில் அவங்க செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போயிடும். வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு கூட்டி போங்க. சிரிச்சுப் பேசுங்க, மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்க. வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே போங்க(அதுக்காக ஈஷிக்காதீங்க. மத்தவங்க கேலிக்கு ஆளாக வேண்டி வரும்.). முடிந்தால் அவங்க கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்க. இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பாங்க.

காதலும் புரிதலும்

சிலநேரங்கள்ல, அவங்களே எதிர்பார்க்காத வகையில கிஃப்ட் வாங்கிக்கொடுத்து அசத்துங்க. எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கும் போது உங்கள் வூட்டம்மாகிட்டயும்  விஷயத்தை சொல்லி, அவங்களோட கருத்தையும்  கேளுங்க. அவங்க  அப்போது கூறும் அறிவுரைகளையும் ஃபாலோ பண்ணி பாருங்க. ”அந்த” னேரத்தில்  மட்டுமல்லாம, எல்லா நேரத்திலுமே உங்கஉங்க வூட்டம்மாக்கிட்ட அன்பை பரிமாறிக் கொள்ளுங்க.

அடுத்தவங்க  உங்களை புரிஞ்சுக்கனும்ன்னு நினைக்குறதுக்குபதிலா!!   முதல்ல  நீங்க  மத்த குடும்ப உறுப்பினர்களை புரிந்து கொள்ள முயற்சிங்க.  ஏனெனில்,  புரிந்து கொள்ளுதல் இல்லாததால்தான் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது.

லைஃப் பார்ட்னர்  மற்றும் மத்தவங்க  உரிமைகள், ஆசைகள், தேவைகளை தெரிஞ்சு  நடப்பதும், அவற்றை மதித்து,  அவருக்கு உதவுவதுமே ”புரிந்து கொள்ளல்” ஆகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை. எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீங்க. . இதைப்போய் நான் அவக்கிட்ட  கேட்கனுமான்னு  மட்டும் நினைக்காதீங்க. . உங்களுக்காகவே வாழ வந்தவங்ககிட்ட  நீங்க எல்லா விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!

சொர்க்கமாகும் இல்லம்

எதுக்காகவும் கோபத்தை அவங்ககிட்ட  வெளிப்படுத்தாதீர்கள்(அப்புறம் சோறு கிடைக்காது.) ஒரு வேளை  அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்க(பழசாவது கிடைக்கும்). எப்பவும்  உங்க கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீங்க. . ஏதோ தவறா பேசிட்டேன். இனி கண்டிப்பாக அப்படி பேச மாட்டேன்ன்னு தான்  சமாதானமா பேசணும் (அப்படித்தான்னு முறுக்கிகிட்டா திண்ணையிலதான் படுக்கனும் மைண்ட்ல வச்சுக்கனும்). அப்புறம் பாருங்கவூட்டம்மா முகத்துல அமைதி ஏற்படுவதை உணரமுடியும்.

இப்படியெல்லாம் உங்கள் வூட்டம்மாவை வெச்சிருந்தா உங்க இல்லமே ஒரு ”சொர்க்கலோகம்” தான். இதைலாம் நான் சொல்லலீங்க. ஆராய்ச்சி பண்ணி பெரியவங்க கொடுத்த ஸ்டேட்மெண்ட். அதனால, நம்பி வரும் காதலர்தினத்திலிருந்து  கல்யாணம் ஆனவங்க மட்டும் முயற்சி செய்யுங்க.    எல்லாம் நல்லதாவே நடக்கும்.

15 comments:

  1. எனக்கும் ஆசைதான் எம்பொண்டாட்டி கலந்தையா மாறணும்னு இப்பொதெல்லாம் எரிஞ்சு விழறார் என்ன செய்ய

    ReplyDelete
  2. கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு.முயற்சி பண்ணி பாப்போம்.

    ReplyDelete
  3. nalla pakirvu....

    naan saathu thaan...

    neenga sonnathula sila undu....

    ReplyDelete
  4. அலுவலக டென்சனை வீட்டில காட்டினால்தான் தங்கமணிக்கு நாம ஆணி புடுங்கறது தெரியும்... வந்தவுடனே கட்டிப்பிடிச்சா நாம ஆபிசில தூங்கிட்டு வர்றதா நினைச்சிட மாட்டாங்க?

    ReplyDelete
  5. இரு மனங்கள் ஒன்றாகி விட்டால் பிறகென்ன பிரச்சனை...?

    ReplyDelete
  6. இதெல்லாம் உங்க வீட்டுல நடக்கல...அதானே...எங்களுக்கு அட்வைஸ்...
    நாங்களும் கண்டுபிடிப்போம்ல...ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. என் சகோ வீட்டில் நடப்பதை எப்படி கண்டுபிடிச்சிங்க

      Delete
  7. புரிதலே வாழ்க்கை என்பது உண்மைதான்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  8. சீரியல் பார்க்கும் பொழுது எந்த தொந்தரவும் செய்யாமல் இருந்தாலே என் மனைவியிடம் எனக்கு நல்ல பெயர் தான்... மின்சார தடை பட்ட நேரத்தில் பார்க்காமல் விட்ட சீரியல்களின் பகுதியை இணையத்தில் காட்டினால் பரிசு கொடுத்தது போல் ஒரு சந்தோஷம் வேறு... அக்கறைக்கு இக்கரை பச்சை தோழி

    ReplyDelete
  9. திருமண வாழ்வில் இம்புட்டு மேட்டர் இருக்கா?
    பேச்சுலர் லைப் எவ்வளவு ப்ரியா ஜாலியா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. சொர்கமயமான நாட்கள் அவை..

      Delete
  10. //புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்தே வாழ முடியாது//

    மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க ராஜி.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  11. சரியான புரிதல் இருந்தால் வாழ்க்கை இன்பமே....

    காதலர் தினம் மட்டுமல்ல, எல்லா நாட்களிலும் இன்பம் பொங்கட்டும் அனைவருடைய வாழ்விலும்!

    ReplyDelete
  12. டென்சன் எவ்வளவு இருந்த போதும் புரிதலும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்தலும் இருந்து விட்டால் வாழ்க்கை இனிக்கும்.வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  13. புரிதல் தான் வாழ்வு..
    புரிந்தால் ஆனந்தமே.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete