Tuesday, June 25, 2013

ஆண்களே கொஞ்சம் அழகா மாறுங்கப்பா!! ப்ளீஸ்...,

 
 
 பத்து வயதில்: எண்ணெய் வழிய, வழிய..,  படிய வாரிய தலை..., இல்லாட்டி குலதெய்வத்துக்கு நேர்ந்துக்கிட்டு வருடத்துக்கு நாலு மொட்டை...., 

இருபது வயதில்:  சிலிப்பிக்கிட்டு நிக்கும்  தலைமுடி... அதை அடிக்கடி கையால அஓஅடி  ஸ்டைலா கோதிக்கிட்டு  ரோட்டில் போகும் பெண்களை ஒரு பார்த்து ஒரு "லுக்'...  தங்கச்சிகிட்ட சண்டை போட்டு,  பேர் அண்ட் லவ்லியை வாங்கி பட்டி பார்த்து...,  டப்பா, டப்பாவா  பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி,  ரெண்டு தெருவுக்கு முன்னயே தன் வருகையை சொல்லும் விதமா செண்ட் அடித்து கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கும் பொறுமை...

முப்பது வயதில் :  மேட்ச், மேட்ச் பேண்ட் சட்டை மாட்டிக்கிட்டு.., மழுங்க சேவ் பண்ணி, ஒரு சீரா பவுடட் போட்டு, வகிடெடுத்து தலைசீவி, கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு  வெளியில் செல்லும்போது மட்டும் கண்ணாடி பார்க்கும் ஆர்வம்..,

நாற்பது வயதில்: எந்த பேண்டுக்கும் எந்த சட்டையையும் போட்டுக்கிட்டு.., பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று "தம்மாத்தூண்டு' பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு...

ஐம்பது வயதில்: "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, குவித்து வைத்து சீவி... பவுடர் டப்பாவை பார்த்தாலே கடுப்புடன் தூக்கி வீசி... கண்ணாடி என ஒன்று இருப்பதையே கண்டுகொள்ளாமல், வேலைக்கு செல்லும் அவசரம்...


இம்புட்டுதாங்க ஆம்பிளைங்க  தங்களை அழகுபடுத்திக்குற லட்சணம்.., கல்யாணத்தன்னிக்கு  மட்டும் மாமனார் சீதனமா தர்ற  காசுல கோட், பியூட்டி பார்லர்ன்னு  தன்னை கட்டிக்க போற பொண்ணும், மத்தவங்களும் பாராட்டனும்னு அழகுப்படுத்திக்கிட்டு ஜொலிப்பாங்க...,

 கல்யாணத்துக்குப் பின்னாடி  தங்களுக்குள் சுய கட்டுப்பாடு போட்டுக்கிட்டு..,   குடும்ப பாரத்தை சுமக்க,  வருமானத்தை  பார்க்குறதுல பிசியாகிடுறாங்க. இன்னும் சில பேரு டென்ஷன்ல  சிக்கி தண்ணி, தம்ம், போதைன்னு திசை மாறி போகிடுறாங்க..,  இதனால ஹெல்த் பாதிக்கப்பட்டு  ரொம்ப சீக்கிரம் தன் அழகை போக்கிக்குறாங்க...,

வியர்வை சிந்தி உழைச்சு சம்பாதிச்ச  பணத்தை, தண்ணி, தம்முன்னு வீணாக்குவாங்களே தவிர, அழகா ட்ரெஸ் பண்ணி,பார்லர், ஜிம்முக்கு போய்   அழகாய், கம்பீரமாய் மாறலாமே! அப்படி ஒரு முறை மாறிதான் பாருங்களேன்.., அந்த அழகும், கம்பீரமும் உங்களுக்கே தெரியாம உங்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும். உங்க செயல்ல, நடத்தையில, எண்ணத்துல பெரிய மாற்றம் ஏற்பட்டு நீங்களும், உங்களை சுத்தியும் அழகாவும், நல்லதாவும் தெரிய ஆரம்பிக்கும்.. ஆம்பிளைகளில்  ரொமப் சிலர்தான் பார்லர் போய் தன் முகத்துக்கு ஏற்ற மாதிரி பேஷியல், ஹேர் கட் பண்ணிட்டு வர்றது.., மத்தவங்களாம்  தாத்தா காலத்து சேர் போட்டு நடத்துற சலூனுக்கு போய் தனக்கு தோணுனதை ஹேர் கட் பண்ணிட்டு .., தனக்கு தானே அழகா இருக்குறதா நினைச்சுக்குறது..,
 
ஆம்பிளைங்க  கம்பீரத்த்துக்கு முகப்பொலிவும் ஒரு காரணம். முன்னைவிட இப்போ பரவாயில்லை..,காலேஜ் பசங்க இல்லாம 40 வயசுக்காரங்களும் தங்களை அழகுப்படுத்திக்க கொஞ்சம் மெனக்கெடுறங்க.. பெண்களை போல,  மாசம் ஒருமுறை பியூட்டி பார்லருக்கு போய்  அழகுபடுத்திக்கிட்டா  புத்துணர்ச்சி கண்டிப்பா கிடைக்கும்.., மைண்ட் ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவாங்க வீட்டுல வள், வள்ன்னு எரிஞ்சு விழமாட்டாங்க..  முப்பது வயசுக்கு மேல முடிக்கொட்டுறது இயற்கைன்னு அப்படியே விட்டுடாம.., அம்மாக்கிட்டயோ இல்ல பொண்டாட்டிக்கிட்டயோ கெஞ்சி வீட்டுலயே மூலிகை எண்ணெய் காய்ச்சி தரச் சொல்லுங்க இல்லாட்டி முடிகொட்டுவதை தடுக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர்வேத டானிக், "பேசியல்' செய்ய பழம், வேர்கள் கலந்த மூலிகைகளை பயன்படுத்துவது நல்லது..

ஆண்சிங்கம், ஆண் மயில்,  ஆண் மான், ஆண்குரங்கு!!??, ஆண் யானைன்னு மனுசனைத்தவிர மற்ற எல்லா உயிர் இனத்துலயும் ஆண் வர்க்கம்தான் அழகு.., அதை மெய்பிக்குற மாதிரி கொஞ்சம் மெனக்கெட்டு அழகா மாறிக்காட்டுங்கப்பா ப்ளீஸ்!!...
 

40 comments:

 1. நாங்க எங்கல அழகு படுத்திக்காம இருக்கும் போதே எங்களை சுற்றி சுற்றி வாராங்க பொண்ணுங்க அப்புறம் நாங்க கொஞ்ச்சம் மேக்க்கப் பண்ண ஆரம்பிச்சா சும்மா சொல்லவே வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. கல்லெறிவாங்களா?!

   Delete
 2. //முப்பது வயசுக்கு மேல முடிக்கொட்டுறது இயற்கைன்னு அப்படியே விட்டுடாம.., அம்மாக்கிட்டயோ இல்ல பொண்டாட்டிக்கிட்டயோ கெஞ்சி///

  சண்டை போடும் போது தலைமுடியை இழுத்து அடிக்காதிங்க என்று சொன்னாலே பாதி முடி தப்பிடும்

  ReplyDelete
  Replies
  1. அவங்க சண்டை போடும்போது நீங்க ஏன் நடுவால நிக்குறீங்க?????! பீரோ பின்னாடி போய்ட வேண்டியதுதானே!

   Delete
 3. ///வியர்வை சிந்தி உழைச்சு சம்பாதிச்ச பணத்தை, தண்ணி, தம்முன்னு வீணாக்குவாங்களே தவிர, அழகா ட்ரெஸ் பண்ணி,பார்லர், ஜிம்முக்கு போய் அழகாய், கம்பீரமாய் மாறலாமே! அப்படி ஒரு முறை மாறிதான் பாருங்களேன்.., அந்த அழகும், கம்பீடமும் உங்களுக்கே தெரியாம உங்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்///
  என்னமோ இப்ப எங்களுக்கு தன்னம்பிக்கை இல்லேன்னு நாங்க சொன்ன மாதிரில்ல பேசுறீங்க
  தண்ணி அடிச்சாலே தன்னம்பிக்கை சும்மா ஜிவ்வுன்னு வரும் அதையெல்லாம் வீணானது என்று சொல்லாதீர்கள்

  ReplyDelete
  Replies
  1. தண்ணி அடிக்குறது தப்பில்லைன்ற மனநிலைக்கு தள்ளபட்டிருக்கு நம்ம சமூகம்!!

   Delete
 4. அழகு படுத்துங்களேன் சொல்லிட்டு அப்புறம் குரங்குன்னு சொல்லிட்டேங்க குரங்குக்கு எதுக்கு பியுட்டி பார்லர் எப்படியும் அது ஜோடி தேடுறது பெண் குரங்காக தான் இருக்க போகுது..அதுக்கு ஏன் வீணா செலவு பண்ணிட்டு

  ReplyDelete
  Replies
  1. அந்த பெண்குரங்கும் பார்லர் போறதா இருந்தா?!

   Delete
 5. ஏன்? நான் அழகாத்தானே இருக்கேன்..

  ReplyDelete
  Replies
  1. அதுதானே :))))))))))) ஏன் ராஜி குற்றம் சொல்லுறீங்க ?:.......:)))))

   Delete
  2. அழகா இல்லாதவங்கள சொல்றாங்க போல..அதனால நீங்க ஃப்ரீயா இருங்க சகோதரி.. நானா அவுங்களான்னுன்னு ஒருகை பாத்துடுறேன்..

   Delete
 6. அழகுக்கு அழகு செய்தல்
  அறிவீனமான செயல் இல்லையோ ?

  ReplyDelete
 7. அக்கா ஏதும் பார்லர் திறக்குற எண்ணம் இருக்கா ? மார்கெட்டிங் பண்ற மாதிரி தெரியுது ...

  ReplyDelete
  Replies
  1. மெய்யாலுமே எனக்கும் அப்டித்தானுங்க தோணுது ...!

   Delete
 8. பாருங்க ரமணி ஐயா கூட தடுமாறிப் போனார் !.....
  (இந்த ஆண்களே இப்படித்தான் பெண்கள் எது சொன்னாலும் எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிஞ்சுக்கணும் தோழி :))))))) ம்ம்ம்ம்ம் ...:)

  ReplyDelete
 9. சிறப்பான படைப்பு இதற்க்கு வாழ்த்துக்கள் என் தோழிக்கு .

  ReplyDelete
 10. என் கல்யாணத்திற்கு என் காசுல்ல தான் கோட் எல்லாம் வாங்குனேன் சீதனமெல்லம் வாங்கவில்லை சகோதரி

  நீங்கள் சொல்வது போல சுய சிந்தனை இல்லாதவர்களே நீங்கள் சொல்வது போல இருப்பார்கள் மற்ற அனைவரும் அதுபோல இல்லை என்பது எனது எண்ணம்

  ReplyDelete
  Replies
  1. நான் பொதுவாதான் சொன்னேன் சகோ! இதுல சுய சிந்தனை ஒரு பக்கமிருந்தாலும்..., கௌரவம், குடும்ப வழக்கம்ன்னு ஆயிரத்தெட்டு விசயங்கள் இருக்கு மாமனார் வீட்டில் சீர் வாங்க..,

   Delete
 11. வீணாக்குபவர்களை விடுங்க... இயற்கையிலே அழகு என்பதாலும், அகத்தில் என்றும் அழகு இருப்பதால் புற அழகு எதற்கு...?

  (இந்த விசயத்தில்) பொறாமை என்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது...!

  அதை விட அழகுபடுத்திப் பார்ப்பதில் எங்களை மிஞ்ச ஆளே கிடையாதாக்கும்...!

  ஹிஹி... வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துகள் அத்தனையும் உண்மைதான் தனபாலன் சார்!

   பெண்கள் அழகோ இல்லை அழகுபடுத்திப் பார்ப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள்தான்...:).

   Delete
 12. அட்டகாசம் ராஜி.உங்கள் கறபனை வளத்துக்கு ஒரு ஜே.இதே போல் பெண்கலுக்குமானதை அடுத்த பகிர்வில் உங்கள் கற்பனை குதிரையத்தட்டி விட்டு ஒரு பதிவைப்போடுங்கள்.

  ReplyDelete
 13. அட எங்கிருந்துதான் இப்படி நல்ல்ல சமாச்சாரமெல்லாம் உங்களுக்கு வருகுதோ...:)

  அசத்திட்டீங்க...
  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 14. அலோ.... மாமாவை பார்த்துட்டு இந்த பதிவை எழுதினிங்களா????

  ReplyDelete
 15. அட! நாங்க அழகா இல்லையா! இப்படி போங்கு ஆட்டம் ஆடக்கூடாது! நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. உண்மைதான் ஆண்கள் அழகியலில் கவனம் கொள்ள வேண்டும். ஆனால் இப்பவே பல பெண்கள் கலியாணம் ஆணாக இருந்தாலும் வட்டமடிக்கின்றனர், அழகும் பண்ணிக்கிட்டா என்னாகிறது, அய்யய்யோ ! :P

  ReplyDelete

 17. ஆண் என்றாலும் பெண் என்றாலும் உடலழகு மாறக்கூடியதே! உள்ளம்தான்
  அழகாக இருக்க வேண்டும்!

  ReplyDelete
 18. நல்ல அட்வைஸ் எல்லாம் கொடுக்கிறீங்கள் :))

  ReplyDelete
 19. நல்லா யோசனைப்பண்ணி அறிவுரைச் சொல்லுங்க

  ReplyDelete
 20. புலவர் ஐயா சரியாச் சொன்னீங்க!

  ReplyDelete
 21. ஆண்சிங்கம், ஆண் மயில், ஆண் மான், ஆண்குரங்கு!!??, ஆண் யானைன்னு எல்லா உயிர் இனத்துலயும் ஆண் வர்க்கம்தான் அழகு..,\\ மனிதனிலும் இதே தான்!!

  ReplyDelete
 22. ராஜி மேடம்....
  ஆண்கள் மேக்கப் போட்டா மட்டும்....? ம்ம்ம்...

  (இதுல வேற “மூங்கில் காற்று“ என்னை ஆண்களை வர்ணித்து
  ஒரு பாட்டு வேற எழுத சொல்லி இருக்கிறார்.)
  என்னன்னு எழுத?

  (இருந்தாலும் நம்ம ஊர் ஆண்கள் அழகாவே இல்லை என்றாலும்
  அவர்களுக்கு அந்த மீசை மட்டுமே போதும். அழகைக் கூட்டி
  கம்பீரமாக்கி விடுகிறது.
  இந்த வகையில் மற்ற நாட்டு மீசை இல்லாத ஆண்களைவிட
  நம் நாட்டு மீசை வைத்த ஆண்கள் அழகு தான்.)

  ReplyDelete
 23. நகைச்சுவையாக எழுதுகிறீர்கள்...!கொஞ்சம் உண்மையையும் சேர்த்து எழுதினால் நன்றாக இருக்கும்..!!

  ReplyDelete
 24. சரியாப் போச்சு... பொம்பளைங்க ப்யூட்டி பார்லர்க்கு செலவு பண்றதுக்கே பணம் ‌ஒதுக்கி கட்டுப்படியாகல... இதுல நாங்களும் அழகு படுத்திக்கறோம்னு ப்யூட்டி பார்லர், மசாஜ் சென்டர்னு போனா... புவ்வாவுக்கு என்னம்மா வழி? பட், ஆண்களுக்காகவும் அக்கறையா யோசிக்கற உன்னோட நல்ல மனசு புடிச்சிருக்கு!

  ReplyDelete
 25. எனக்கு 57 வயது தங்களுடைய பதிவில் 50 வயதுக்கு குறிப்பிட்டு இருந்த தகவல் என்னைப் பற்றி உள்ளதே?
  என்னை வேவு பார்ப்பதற்கு ஏதேனும் நாசா உடன் தங்களுக்கு உடன்படிக்கை உள்ளதா?
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 26. ராஜி: நீங்க உடலழகு பற்றி பேசுறீங்களா? இல்லைனா உள்ளத்தில் அழகா இருக்கணும்னு சொல்றீங்களா?

  உடலழகு என்றால் தொப்பை இல்லாமல் ஃபிசிக்கல்லி ஃபிட் ஆக இருக்கணும்! மற்றவை எல்லாம் அப்புறம்தான்! (ஏன் என்றால் உங்கள் உடல் பருமனை உங்களால் கட்டுப்படுத்த முடியும்!). அதே உள்ளத்தில் அழகுனா நான் என்னணு சொல்லத்தேவை இல்லை!

  நம்ம ஊரில் தொப்பை இல்லாமல் இருக்கம் ஆண்கள் அரிதுதான். கல்யாணம் ஆன ஆண்கள், காதலியுள்ள ஆண்கள் எல்லாம் மற்ற இளம்பெண்கள் மனதை இனிமேல்க் கெடுக்கக்கூடாதுனு நல்லெண்ணத்தில்தான் தொப்பையும் தொந்தியுமாம் இருக்காங்களாம்! எவ்ளோ நல்லஎண்ணம் பாருங்க! அது தப்பா என்ன??

  ReplyDelete
 27. ஆண்கள் இயற்கையிலேயே அழகுதான். குடும்ப பொறுப்புகளால் அதைக்கொஞ்சம் கவனிக்காமல் இருந்துவிடுவது இயற்கையே. 60 வயதிலும் ஆண்கள் ஹீரோவாக இளமையுடன் நடிக்கும் நடிகர்கள் உள்ளனர்.

  ReplyDelete