வெள்ளி, ஜூன் 07, 2013

கல்வி வரம் அளிக்கும் ”ஹயகீரீஸ்வர்” -ஸ்கூல் ரி ஓப்பன் ஸ்பெஷல்

 
                       
பசங்களுக்குலாம் ஸ்கூல் திறக்குற நாள் கிட்ட வந்துடுச்சு. அவங்க நல்லா படிக்கனும்ன்னு செங்கல்பட்டு மாவட்டத்துல இருக்குற  செட்டிப்புண்ணியம் தேவநாதசுவாமி கோயில் ஹயக்ரீஸ்வரர் கோவிலுக்கு போய் வந்தோம். 

ஒருமுறை உலகம் அழிய இருந்த சமயத்துல, இந்த உலகத்தையும், மக்களையும் தன்னுள்ளே அடக்கி, ஆலிலை மேல் குழந்தை வடிவத்தில் சயனித்தாராம் மகாவிஷ்ணு. பிறகு, புதிய உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து (தொப்புள்) பிரம்மனை படைத்து, நான்கு வேதங்களையும் அவருக்கு உபதேசித்தாராம். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தாராம்.
இதன்பின், மது, கைடபன் என்ற அசுரர்கள் பெருமாளின் உடலில் இருந்த தண்ணீர் திவலைகளில் இருந்து பிறந்தனராம். விஷ்ணுவின் பிள்ளைகள் என்ற தைரியத்தில், பிரம்மாவிடம் இருந்த வேதங்களை அபகரித்தனராம்... தங்களுக்கும் படைப்புத்தொழில் செய்ய உரிமை உண்டு என வாதிட்டு, பின், குதிரை முகம் கொண்டு பாதாளத்திற்கு சென்று வேதங்களை ஒளித்து வைத்தனராம்...,

இதனால்  படைப்புத்தொழில் நின்று போனது. மது, கைடபரால் உலகில் அசுரர்கள் அதிகரிப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டது. பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தராம்.., பெருமாள் பாதாள உலகம் வந்த போது, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டு,  உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார்.

அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்ததாக இந்த புண்ணிய தளத்தோட வரலாறு.

கடலூருக்கு பக்கத்திலிருந்து “திருவஹீந்திரபுரம் தேவநாதன்” கோயிலில் இருந்து, அழகான பெருமாள் விக்ரகம் மற்றும் யோக ஹயக்ரீவர் ஒன்றை செட்டிப்புண்ணியத்துக்கு எடுத்து வந்து,  அவற்றை வைகாசி,  மகம் நட்சத்திரத்தில் செட்டிப்புண்ணியத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிறகு தாயார் ஹேமாப்ஜவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள், ஆண்டாள், ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  மூலவரை வரதராஜர் என்றும், உற்சவரை தேவநாத சுவாமி என்றும் அழைக்கின்றனர்.
இங்கு ”வித்யாதோஷ நிவர்த்தி”  ”சங்கல்ப ஆராதனை” என்னும் கல்வி பூஜை நடத்தப்படுகிறது.  இந்த சிறப்பு பூஜை தேர்வு வேளையில் செய்யப்படுகிறது. கல்வியாண்டு துவங்கும் வேளையிலும்,  மாணவர்களின் புத்தகம் மற்றும் எழுதுபொருட்களை எடுத்துச்சென்று பூஜை செய்தும் வரலாம். திக்குவாய் உள்ளவர்கள், பேச முடியாதவர்களுக்கு நாக்கில் தேன் தடவப்படுகிறது. இதன்மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள்.

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் வழியிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில் மகேந்திராசிட்டி ஸ்டாப்பில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் செட்டிப்புண்ணியம்ன்ற இத்திருத்தலம் இருக்கு.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 12 வரை, மாலை 4.30 முதல் இரவு8 வரை. நங்க நட்ட நடு மத்தியானத்துலதான் போனோம். வெயில் கொளுத்தி படுத்தி எடுத்திட்டுது.

இன்னொரு மனதை நெருடலான ஒரு விசயம்.., வண்டியை விட்டு இறங்கியதும் பத்து வயது  கூட நிரம்பாத குழந்தைகள் துளசி மாலையும்.., கற்பூரத்தையும் விற்க ஓடி வந்து போட்டி போடுதுங்க. உலகத்தாருக்குலாம் கல்வி வரம் அளிக்கும் அந்த ”ஹயகீரீஸ்வர்” கண்ணுக்கு இக்குழந்தைகள் புலப்படவே இல்லியோ!?

 படம் கூகுள் ல இருந்து சுட்டது...,

14 கருத்துகள்:

 1. கோவில் வரலாற்றை விட, மனதில் அந்தக் குழந்தைகள் நினைப்பு தான் உள்ளது...

  பதிலளிநீக்கு
 2. கல்விக் கடவுளின் வாசலில்,
  குழந்தைத் தொழிலாளர்கள்
  ஏனிந்த முரண்பாடு.
  கடவுளின் கண்களுக்கு
  ஏன் இந்தக் குழந்தைகள்
  தென்படவில்லை

  பதிலளிநீக்கு
 3. வரம் அளிக்கும் ஹயகீரீஸ்வர்” .கண்டுகொண்டோம்.

  இறுதியில் கேட்டீர்களே கேள்வி. விடைதான் முடிந்தபாடில்லை.

  பதிலளிநீக்கு
 4. சரியான சமயத்தில் சரியான பதிவு
  நானும் சமீபத்தில் அந்த திருத்தலம் போய் வந்தேன்
  நீங்கள் இறுதியாகச் சொல்லிய விஷயம்
  என்னையும் மிகவும் பாதித்தது
  பயனுள்ள தகவல்களுடன் கூடிய
  பதிவுக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 5. உலகத்தாருக்குலாம் கல்வி வரம் அளிக்கும் அந்த ”ஹயகீரீஸ்வர்” கண்ணுக்கு இக்குழந்தைகள் புலப்படவே இல்லியோ!?

  காணாமல் போன கல்வி ..!!????

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. குழந்தைகளுக்காக கல்வி வரம் அளிக்கும் ஸ்பெஷல் பதிவு அது சரி எங்களை மாதிரி ஆட்களுக்கு காதல் வரம் அளிக்கும் ஸ்பெஷல் எப்போ போடப் போகிறிர்கள் சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு வரம் கிடைச்சு அந்த வரம் பெண்ணுருக் கொண்டு உங்க வீட்டுல இருக்கு. போய் பாருங்க..,

   நீக்கு
  2. அந்த காதல் கல்யாணம் ஆனவுடனே முடிஞ்சுடுச்சு அதனாலதான் சகோ புது காதலுக்கு ஸ்பெஷல் போட சொல்லுறேன் சகோ

   நீக்கு
 8. செட்டிபுண்ணியம் கோயில் நானும சென்று தரிசித்ததுண்டு. மிக தொன்மையான ஆலயம். அழகா விவரிச்சு எழுதியிருந்தது ரசனைம்மா!

  பதிலளிநீக்கு
 9. ஸ்தல வரலாறு, விவரங்கள் எல்லாம் படிக்க திவ்யமாக...

  பதிலளிநீக்கு
 10. ஸ்தல வரலாறு கோவிலின் பெருமை எல்லாம் அருமையாக இருந்தது ..ஆனால் கடைசிவரிகள் உண்மையின் நிலைப்பாடு சிறிது மனதை நெருடியது உங்கள் கேள்வி நியாயமானதே

  பதிலளிநீக்கு
 11. நல்லதோர் கோவில் பற்றிய சிறப்பான பகிர்வு. கடைசி கேள்வி நெஞ்சைத் தொட்டது....

  பதிலளிநீக்கு