வியாழன், ஜூன் 13, 2013

அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயங்கள் சில..,

1.  இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தும் பேசாமல் இருப்பது...,

2. கணவன் பேசும் போது மறு பேச்சு பேசாமல் முழுவதையும் காது கொடுத்து கேட்கும் பெண்கள் இருப்பது...,


3. காதலனுக்கு செலவு வைக்காமல் தனது பில்களையெல்லாம் தானே செலுத்தும் காதலி இருப்பது...,


4. மேக்கப் போடாமல் வீட்டிற்கு வெளியே போகும் பெண்கள் இருப்பது...,


5. உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று ஒரே ஒரு பெண்ணிடம் சொல்லும் ஆண்கள் இருப்பது...,


6. பேஸ்புக்கில் பெண்கள் சொல்லும் மொக்கைகளுக்கு ஒரு லைக்ஸும் விழாமல் இருப்பது..,


7. பேஸ்புக்கில் ஆண்கள் சொல்லும் நல்ல கருத்துகளுக்கு சில லைக்ஸாவது கிடைத்து இருப்பது...,


8. தமிழ் நலனுக்காக உண்மையாக பாடு படும் ஒரு தலைவர் இருப்பது...,


9. இங்கிலிஷில் பேசி பீலா விடாத தமிழ் கல்லூரிப் பெண்கள் இருப்பது...,


10. கல்யாணம் ஆகி குழந்தை பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகும் கணவனை குறை சொல்லாமல் நேசிக்கும் பெண்கள் இருப்பது..,


11. செய்திகளை திரிக்காமல் வெளியிடும் பத்திரிக்கைகள் வருவது..,


12 . விகடன் குழும பத்திரிக்கைகளில் சினிமா நடிகைகளின் கவர்ச்சி படங்கள் வராமல் இருப்பது...,


13. ஜெயலலிதா அவர்களின் காலில் விழுந்து வணங்காத அமைச்சர்கள் இருப்பது...,


14. கலைஞர் அறிக்கைகள் விடாமல் இருப்பது...,


15. சட்டசபையில் ஜெயலலிதாவும் கலைஞரும் எதிர் எதிராக அமர்ந்து தமிழ் மக்கள் நலனுக்காக ஆரோக்கிய மாக விவாவதிப்பது...,


16. கமலஹாசன் ஆங்கில படங்களை தழுவாமல் இப்போது படங்கள் எடுப்பது..,


17. ரஜினிகாந்த வருடத்திற்கு ஒரு முறையாவது வாய்ஸ் கொடுக்காமல் இருப்பது...,


18. தீபாவளி , பொங்கல் , புத்தாண்டு தினங்களில் டிவிகளில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் இல்லாமல் இருப்பது...,


19. தன் பொண்டாட்டியை விட அடுத்தவன் பொண்டாட்டி நல்லவளாக இருப்பாள் என்றுநம்பும் ஆண்கள்..


20. பேஸ்புக்குல இருந்து சுட்டு .., பதிவர்கள் படிக்க..பகிர்ந்த ராஜியும் கூட..., அதிசயமே அசந்து போகும் அதிசயம்...,


நோ! நோ! பேச்சு பேச்சாதான் இருக்கனும்.. கல்லெல்லாம் தேடப்படாது.., வர்ட்ட்ட்ட்ட்டா!?                                             
 

17 கருத்துகள்:

 1. அதிசயமே அசந்து போகும் அதிசயம்...,ஆச்சரியம்//

  பதிலளிநீக்கு
 2. பேச்சுப் பேச்சாத்தான் இருக்கணும் அப்படீன்னு சொன்னாப் பிறவும்
  யாரையா கல்லத் தூக்குறது ?.....உண்மையச் சொன்னா எதுக்கு
  கொதிக்குரீக ?...:))))))))))))))))))) உலக அதிசங்கள் ஏறீட்டே போவுது பாரு ! :)))

  பதிலளிநீக்கு
 3. ராஜி எங்கிருந்து சுட்டாலும் சுவையாக இருந்தது. பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. இந்த அதிசயங்கள்ள ஏதேனும் ஒன்னு நடந்தாலும் அதிசயம்தான்.

  பதிலளிநீக்கு
 5. முகம் கழுவி, தலை சீவி ,பொட்டு வைப்பது மேக்கப் இல்லையென்றால் அந்த அதிசயம் எங்கள் வீட்டில் நடந்தேறுகிறது......

  பதிலளிநீக்கு
 6. அதிசயங்களுக்கு குறைவில்லை.:) தொடரட்டும் .........

  பதிலளிநீக்கு
 7. விஜயகாந்த் சரகடிக்காமல் இருப்பதும் அதிசயமே

  நகைச்சுவையான அதிசயங்கள் ஹா ஹா

  பதிலளிநீக்கு
 8. பேஸ்புக்கில் ஆண்கள் சொல்லும் நல்ல கருத்துகளுக்கு சில லைக்ஸாவது கிடைத்து இருப்பது..//ஹி ஹி இந்த நிலை இப்ப கொஞ்சம் மாறிட்டுது.
  சிரிப்பு போலீஸ் போல சிரிப்பு அதிசயங்களா இவை

  பதிலளிநீக்கு
 9. சுட்டப்பழமும் சுவையாகத்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. கலக்கல் ராஜி... ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்க அதிசயங்கள்தாம். பகிர்வுக்கு நன்றிப்பா.

  பதிலளிநீக்கு