Monday, June 24, 2013

பூ பூக்கும் ஓசை - ஐஞ்சுவை அவியல்

  
என்ன மாமா செய்யுறீங்க?!

ஒண்ணுமில்ல புள்ள! நம்ம சின்ன மண்டையன் படிக்குற இஸ்கோலுல பெற்றோர் ஆசிரியர் கூட்டம் கூடப்போகுது அதுக்கு தலைமை தாங்க என்னை கூப்பிட்டு இருக்காங்க. அதான், என்ன பேசலாம்ன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன்..,

ம் ம்ம்  நீங்கதான் அடுத்தவங்க பேசுறது, நடக்குறதை  வச்சே உங்களுக்கு தேவையான பாய்ண்ட்ஸ் பிடிச்சுப்பீங்களே! ஆமா, அந்த மாதிரி திறமை எப்படி வந்துச்சு மாமா!

எல்லாத்தையும் உன்னிப்பா கவனிக்கனும் கண்ணு.., அப்போ நமக்கு தேவையானதுலாம் தானா நமக்கு புரியும்.., 

அதான் எப்படி மாமா?! உங்களால முடியுது.., என்னால முடியலை..,

அது பழக்கத்துனால வற்றது புள்ள! ஒருத்தன் தான் நல்லா படிச்சி பெரிய மேதையா வரனும்ன்னு, காட்டுல இருக்குற துறவிக்கிட்ட  குருகுலம் போய் சேர்ந்தான். அந்த  துறவி, சீடனைத் தினமும் காட்டிக்கு போய், அங்க நடக்குறதைலாம் பார்த்து வான்னு அனுப்பினார்.  அவனும் நாம பாடம் படிக்க வந்தா இவரு நம்மளை வேடிக்கை பார்க்க அனுப்புராரேன்னு நினைச்சுக்கிட்டே  தினமும் காட்டுக்கு போய்  வந்தான். 

ஃபர்ஸ்ட் நாள் போகும்போது  பயமா  இருந்துச்சு. ஒரு வாரத்துல காட்டு;ல இருக்குறது எல்லாம் என்ன? ஏது?ன்னு தெரிஞ்சு போனதால காட்டை பற்றிய பயம் போய்டுச்சு.., அப்புறம், வேண்டா வெறுப்பா காட்டுக்கு போனவன் ஆசையா போக ஆரம்பிச்சான்.., அங்க இருக்குற, செடி கொடி,  விலங்குகளை பார்த்துட்டு வந்து எல்லாத்தை பத்தியும் தன் குருக்கிட்ட சொல்வான்.

 இன்னும் காட்டை பற்றி நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு.., போய் வான்னு குரு சீடனை காட்டுக்கு அனுப்பினார்.  ஒருநாள் சீடன் ஒரு மரத்தோட நிழலில் உக்காந்திருந்தான். காட்டு நீரோடை சலசலத்து ஓடிக்க்கிட்டு இருந்துச்சு.., பறவைகள் பாடிக்கிட்டு இருந்துச்சு.தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு ஷார்ப்பா பார்க்க ஆரம்பிச்சான்..


விலங்குகளின் சப்தம், பறவைகளின் ஒலி காதுல  விழுந்ச்சு. இன்னும் கொஞ்சம் கவனிச்சான். வண்டுகளின் ரீங்காரம் கேட்டது. தான் பார்த்ததை குருவிடம் போய் சொன்னான்.  குரு.., ரொம்ப மகிழ்ச்சிப்பா! இன்னும் நல்லா பார்த்து வான்னி தட்டி கொடுத்து அனுப்பினார்..,

அப்படி பார்க்கும்போது..,   காட்டுல,   நடக்குற ஒரு விசயம் அதிசயமா அவன் காதுக்கு கேட்டுச்சு..,    தன்னுடைய காது தானா?ன்னு அவனுக்கு  சந்தேகம் வந்துச்சு..,  பூக்கள் பூக்கும் மெல்லிய ஓசையைக் கேட்டு தன்னை மறந்தான்.  குருவைத் தேடி ஓடி போய்..,  குருவே! என்ன சீடனே! இதுவரை நடக்காத அதிசயத்தை கண்டவாறு  இப்படி ஓடி வந்துள்ளாயே! அப்படியென்ன அதிசயம் காட்டிலே கண்டாய்?!ன்னு கேட்க ஆரம்பிச்சார்..,அவனும் ந டந்ததைச் சொன்னான்.  அதுக்கு, குரு சீடனே உனக்கு ஆழ்ந்த கவனம் கைவந்தது. நாளைல இருந்து நாம பாடம் ஆரம்பிக்கலாம்ன்னு சொன்னார். அதுப்போலதான்   ஆழ்ந்த கவனம் என்பது ”மனிதனுக்கு ஒருநாளில் வருவதல்ல. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம்”ன்னு புரிஞ்சுக்கிட்டியா?!

ம்ம்ம்ம் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்..., நீங்க மேதாவிதான் ஒத்துக்குறே. எங்கே? என்னோட இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்??!!
                                            
கேளு புள்ள!

உங்க கிட்ட பத்து தென்னங்கன்னுங்க கொடுக்குறேன்.  அஞ்சு  வரிசையில் வைக்கனும். ஆனா,  ஒவ்வொரு வரிசையிலும் நாலு தென்னங்கன்னுங்கதான்  இருக்கனும். அப்படின்னா, எப்படி வைப்பிங்க!?

ப்ச்ச்ச்ச்ச் சூ இதானா?! விடை சொல்லவா?!

இருங்க.., இருங்க.., ”அவங்க ”லாம் பதில் சொல்றாங்களான்னு பார்க்கலாம்.., அதுக்குள்ள ஒரு ஜோக் சொல்லுங்க மாமா!

                                       

ம்ம்ம்ம்ம்  ஒரு குடிகாரன் கிளினிக் போறான்.., அங்க..,

டாக்டர்: நீங்க ரொம்ப குடிப்பீங்களோ! அதான் உங்க  கைலாம் நடுங்குதோ?!
குடிகாரன்: டாக்டர்!  நீங்க வேற! இந்த கை நடுக்குத்துல டம்பள்ர்ல இருக்குற பாதி சரக்கு கொட்டிடுது.., மீதி இருக்குற கொஞ்சத்தைதான் குடிக்க வேண்டியிருக்கு!!
டாக்டர்: ????!!!!!

ஹா! ஹா! ஹா! ஜோக் நல்லா இருக்கு.., இந்த ஜோக் கேளுங்க மாமா! என் ஃப்ரெண்ட் ராஜி இருக்காளே, அவளோட ரெண்டாவது பொண்ணு இனியா இருக்கே! அதுக்கு அப்போ 5 வயசிருக்கும்.., ஃபர்ஸ்டோ! இல்ல செக்கண்டோ படிக்குது.., ராஜி அவளை  டியூசன் சேர்த்து விட்டா..,

அதுவரை அவளை ராஜி தனியா வெளில் எங்கும் போக விட்டதில்லை. அன்னிக்கு தனியா அனுப்ப வேண்டிய சூழ்நிலை.., அதனால, இனியா! டியூசன் போகும்போது பார்த்து கவனமா போம்மான்னு சொல்லியிருக்கா..

ம்ம் உன் ஃப்ரெண்ட் எப்பவாவதுதான்  இதுப்போல சரியா பேசுவான்னு எனக்கு தெரியுமே!!

போதுமே அவளை வாருனது.., அதுக்கு அந்த சின்ன பொண்ணு.., சரிம்மா! ஆனா, வரும்போது பார்த்து, கவனமா வர வேணாமான்னு கேட்டு ராஜியை வாயடைக்க வச்சிருக்கா!

இப்படியாவது உன் ஃப்ரெண்ட் கொஞ்ச நேரத்துக்கு வாய் மூடி இருந்தா நல்லதுதான்.., 
 


 ம்க்கும் எப்ப பாரு அவளை கிண்டல் பண்ணுறதே பொழப்பா போச்சு..., 

சரி சரி, உன் ஃப்ரெண்ட் பத்தி சொன்னா உனக்கு கோவம் பொத்திக்குக்கிட்டு வருமே! ஆமா, பொங்கல் ல ஏண்டி இப்படி சீரகத்தை கொட்டி வச்சிருக்கே! சீரகம் உங்கப்பனா வாங்கி தரான்?

ம்க்கும் இத்தனை வருசம் கழிச்சும் எங்கப்பா வாங்கித்தரனுமா உங்களுக்கு?! நம்ம உடம்புல இருக்குற எல்லா பார்ட்டையும் சீராக்கி ஹெல்த்தியா வச்சுக்குறதுனாலதான் அதுக்கு சீரகம்ன்னு பேரு..., சமையலுக்கு மணத்தையும்.., உடலுக்கு ஆரோக்கியத்தையும் சீரகம் தருது...,  

* நெஞ்சு எரிச்சலுக்கு வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டா சரியாகும்..,

* அகத்தி கீரயுடன் சீரகம், சின்ன வெங்காயமும் சேர்த்து கஷாயமாக்கி  சாப்பிட்டா மன நோய் குணமாகும்..,  

* சீரகத்தை எலுமிச்சை சாறுல ஊற வச்சு,  காய வச்சு பொடியாக்கி மோரில் கலந்து சாப்பிட்டு வந்தா மார்பு வலி போகும்..,

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி சம அளவு எடுத்து தூளக்கி தேனில் கலந்து சாப்பிட்டா உடல் உறுப்புகள் சீராகி உடல் ஆரோக்கியமா இருக்கும்..,

* சீரகத்துடன், கீழானெல்லி அரைத்து எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தா கல்லீரல் நோய் குணமாகும்..,

* நல்லா காய்ச்சிய நல்ல எண்ணெய், அரிசி, தும்பைப்பூ, சீரக, மிளகு, பூண்டு. இஞ்சி, சாம்பிராணி க்லந்து தலைக்கும், உடலுக்கும் தேய்த்து வந்தால் உடம்பு மிணுமிணுப்பதோடு சுறுசுறுப்பா இருக்கும்..,இதை வாரம் ஒரு முறை இல்லாட்டி மாசம் ஒரு தரம் செஞ்சு வந்தால் நோய் அண்டாது..,

ம்க்கும் இதெல்லாம் எங்கம்மா பாட்டி செஞ்சாங்க.., நீதான் டிவி பொட்டி முன்னாடியும், ஊர்க்கதையும் பேசி பொழுதை வீணடிக்குறே. இதெல்லாம் செஞ்சு புருசனை நல்லா வச்சுக்கனும்ன்னு உனக்கெங்க தெரியப்போகுது?!

ஓ அப்படியா! சரி வர்ற சனிக்கிழமை கொதிக்குற எண்ணேயை அப்படியே தலையில் கொட்டி எண்ணெய் தேச்சு விடுறேன்.., சரியா மாமா!

என்னை கொல்ல பாக்குறாளேளேளேளேளேளே!!!

13 comments:

 1. ஐந்து முக நட்சத்திரம் வரையவும்.

  சும்மா இரண்டு முக்கோணம் போடக் கூடாது... கையை எடுக்காமல் ஐந்து முக நட்சத்திரம் வரையவும்...

  ஐந்து நேர் கோடுகள் உள்ளதா...?

  ஒவ்வொரு கோடுகளில் நான்கு இணையப் புள்ளிகளும் வருகிறதா... ?

  மொத்தம் பத்து புள்ளிகள் தான் இருக்கும்...

  ஒவ்வொரு புள்ளியிலும் தென்னை மரங்கள் நட்டு வைத்து விடுங்கள்... பிறகு வந்து பார்க்கிறேன்... ஹிஹி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தனபாலன் என் விடையை காப்பி அடிச்சுட்டாரு.....நான் பதிலை டைப் பண்ணுறதுக்கு முன்னால அவரு வேகமாக டைப்பு அடித்து பதில் போட்டுவிட்டாரு சகோ......

   Delete
 2. //சீரகத்தை எலுமிச்சை சாறுல ஊற வச்சு, காய வச்சு பொடியாக்கி மோரில் கலந்து சாப்பிட்டு வந்தா மார்பு வலி போகும்..,///
  சில சமயங்களில் என் மனைவி பூரிக்கட்டை எடுத்து மார்பிலும் அடிச்சுடுறா அப்ப இந்த அட்வைஸ்சை யூஸ் பண்ணி பார்க்கிறேன்
  இதுக்குதான் நமக்கு சகோ இருக்கனுமுங்கிறது

  ReplyDelete
  Replies
  1. அப்போ மெடிக்கல் ஃபீஸ் அக்கவுண்ட்ல போடவும்..,

   Delete


 3. கதை மிக அருமை சகோ

  ReplyDelete
 4. கதை கன்னியாகுமரில இருந்து புறப்பட்டு காசி வழியே போய் காஷ்மீரல நின்னுட்டு திருப்பியும் கடல் வழியா கன்னியாகுமரி வந்து சேர்த்தாச்சு ..இதுதான் 5 சுவை அவியலோ ..

  ReplyDelete
 5. ”மனிதனுக்கு ஒருநாளில் வருவதல்ல. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம் பூப்பூக்கும் ஓசை கேட்டு ரசித்தோம் ..

  ReplyDelete
 6. மனிதனுக்கு ஒருநாளில் வருவதல்ல. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம்”

  நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன் !

  ReplyDelete
 7. ஐஞ்சுவை அவியல் சுவைத்தது.

  ReplyDelete
 8. ஐஞ்சுவை அவியல்.... சுவையான அவியல்....

  ரசித்தேன்.

  ReplyDelete
 9. ஆகா, எனக்கும் விடை தெரிந்தது.. அனால் வடை போச்சே..

  ReplyDelete