Wednesday, August 28, 2013

பதிவர் சந்திப்புக்கு வர கட்டுச்சோறு ரெடி - கிச்சன் கார்னர்

டைம் மெஷின்ல ஏறி கொஞ்சம் நம்ம சின்ன வயசு காலத்துக்கு போவோம்..,

ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ஸ்டாப், ஸ்டாப் ரொமப் தூரம் போவாதீங்க. இங்கயே நில்லுங்க. ஒரு 20 வருசக்காலம் முன்ன வரை இப்போ மாதிரி எங்க பார்த்தாலும் ஹோட்டல்கள் இருக்காது, டவுன்லலாம்தான் ஹோட்டல் இருக்கும். அதும் காலைல, மதியம் மட்டும்தான். மத்த நேரத்துல சாப்பிட எதும் கிடைக்காது. பட்டினியாதான் வரனும். அதனால, அப்போலாம் டூர், பிக்னிக், குலதெய்வ கோவில், ஹாஸ்பிட்டல்ன்னு எங்க போனாலும் கட்டுச்சோறு கட்டிக்கிட்டுதான் போவாங்க.  கட்டுச்சோறுன்னா புளிசாதம், மாங்காய் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தாளிச்ச இட்லி, வெல்ல இட்லி இப்படி எதாவது ஒண்ணுதான் இருக்கும். அதிகாலைலயே எழுந்துக்கிட்டு பொம்பளைங்க ரெடி பண்ணுவாங்க.

மாங்காய் சாதம் அதிகபட்சம் ரெண்டு வேளை தாங்கும், எலுமிச்சை சாதமும், தயிர்சாதமும் ஒரு நாள் தாங்கும். ஆனா, புளிச்சாதம் மட்டும் ரெண்டு நாளைக்கு தாங்கும்.

நான், பதிவர் சந்திப்புக்கு வர்றதால, ஹோட்டல்லாம் சாப்பிட்டா கட்டுப்படியாகாதுன்னு கட்டுச்சோறு மூட்டை கட்டிக்கிட்டுதான் வரப் போறேன்.  காலைல ஒரு வேளை மட்டும்தான் நம்ம சாப்பாடு. மதியம், மாலைலாம் ஓசி சாப்பாடு . அதனால, சிம்பிளா எலுமிச்சை சாதம் கட்டிக்கிட்டு வந்துட போறேன்.

எலுமிச்சை சாதத்துக்கு தேவையான பொருட்கள்:

அரிசி - 1 டம்பளர்
எலுமிச்சை பழம் - 2 
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
மஞ்சப்பொடி- கொஞ்சம்,
பெருங்காயப் பொடி - கொஞ்சம்,
பூண்டு - 10 பல்,
காய்ந்த மிளகாய் - 2
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
வேர்கடலை - விருப்பப்பட்டா 1 டேபிள்ஸ்பூன் 
முந்திரிபருப்பு- 15 தேதிக்குள்ளன்னா 10 15 தேதிக்கு மேலன்னா வேணாம்.
கடுகு - கொஞ்சம்
எண்ணெய் தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு- தேவையான அளவு,

அரிசியை ஊற வச்சு உப்பு போட்டு வடிச்சு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைங்க.

எலுமிச்சை பழத்தை ரெண்டா வெட்டி தண்ணில ஒரு அஞ்சு நிமிசம் போட்டு வச்சு சாறு பிழிஞ்சி வடிக்கட்டி எடுத்துக்கோங்க. இஞ்சியை தோல் சீவி நசுக்கி வச்சுக்கோங்க. ப,மிளகாயை நீளவாக்குல கீறி வச்சுக்கோங்க. பூண்டை தோல் உறிச்சு ஒண்ணு ரெண்டா தட்டி வச்சுக்கோங்க. பருப்புகளை தனித்தனியா எண்ணெயில பொன்னிறமா வறுத்து எடுத்து வச்சுக்கோங்க.

வாணலில எண்ணெய் ஊத்தி கடுகை போட்டு பொறிய விடுங்க. கிளறுற சாதத்துக்குலாம் கொஞ்சம் அதிகமா எண்ணெய் ஊத்தினாதான் நல்லா இருக்கும். அதுக்காக ஓவரா எண்ணெயை ஊத்தி எனக்கு கெட்ட பேரு வாங்கி குடுத்துடாதீங்க.


கடுகு பொறிஞ்சதும் கீறி வச்ச பச்சை மிளகாயை போடுங்க.

அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு சிவக்க விடுங்க....,


நசுக்கி வெச்ச பூண்டை போட்டுக்கோங்க..,

அடுத்து நசுக்கிய இஞ்சியை போட்டு சிவக்க விடுங்க..

கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியா நறுக்கி சேர்த்துக்கோங்க. 

மஞ்சப்பொடியை சேர்த்துக்கோங்க...,


பெருங்காயப் பொடியை சேர்த்து லேசா எண்ணெயில வதக்கிக்கோங்க.

மஞ்சப்பொடி வாசனை போனதும் வடிகட்டுன எலுமிச்சை சாறை சேர்த்துக்கோங்க.

தேவையான அளவு உப்பு சேர்த்துக்கோங்க. ஏற்கனவே சாதத்துல நாம உப்பு சேர்த்து வேக வச்சிருக்குறதை ஞாபகத்துல வச்சுக்கிட்டு உப்பு சேர்த்துக்கோங்க. ரெண்டு கொதி கொதிக்க விட்டு அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இறக்கிகோங்க.

ஆற வச்சிருக்கும் சாதத்துல, வறுத்து வச்சிருக்கும் பருப்புகளை கொட்டி கிளறுங்க.

கொதிக்க வச்ச எலுமிச்சை சாறை பருப்பு கலந்த சாதத்துல கொட்டி ஒரு இடம் பாக்கி விடாம எல்லா இடத்துலயும் எலுமிச்சை சாறு படுற மாதிரி கிளறுங்க. இஷ்டப்பட்டா கடைசியா வெந்தயப் பொடி லேசா சேர்த்துக்கலாம். என் பையனுக்கு பிடிக்காதுங்குறதால நான் சேர்ப்பதில்லை.

பதிவர் சந்திப்புக்கு வரும்போது கட்டுச்சோறு கட்டி வர எலுமிச்சை சாதம் ரெடி. 

இப்படி கிளறுன சாதம் செய்யும்போது பருப்பு வகைகளை வறுத்து வச்சுக்கிட்டு சாதம் கிளறும்போது போட்டு கிளறுனா பருப்பு சீக்கிரம் நமத்து போகாம மதியம் வரை மொறுமொறுன்னு இருக்கும். எலுமிச்சை சாறுலயோ இல்ல புளிக்கொழம்புலயோ சேர்த்து கொதிக்க வச்சா பருப்பு சீக்கிரமே நமத்து போய் புளிப்பு ஏறி ஒரு மாதிரியா இருக்கும்.

என் பசங்களுக்கு மதியம் பாக்சுல இதுப்போல சாதம் கிளறி கொடுத்து அனுப்பும்போது முந்திரிப்பருப்பு வறுத்து சேர்க்குற மாதிரி இருந்தா , முந்திரி பருப்பை மட்டும் தனியே எடுத்து வச்சு ஒவ்வொருத்தர் டப்பாவுலயும் சமமா பிரிச்சு போட்டு அனுப்புவேன். இல்லாட்டி பொண்ணுதான் உசத்தி, பையந்தான் உசத்தின்னு அதிகமா கொடுத்திட்டியான்னு மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டி வரும் :-(

தொட்டுக்க மசால் வடை, வத்தல், மிக்சர் பக்கோடா, பூண்டு, ஊறுகாய்லாம் இதுக்கு தொட்டுக்க செமயா இருக்கும்.

39 comments:

  1. பதிவுக்குன்னே செய்வீங்க போல இருக்கே
    செய்முறை பார்க்கவும் செய்ததைப் பார்க்கவும்
    சூப்பரா இருக்கு,ஞாயிறு காலையிலதான்
    வருவதாகத்தானே சொல்லியிருக்கீங்க
    அப்ப எப்படியும் கொண்டு வருவீங்கன்னு
    நினைக்கிறேன்.பிரசாதம் மாதிரி
    ஆளுக்குக் கொஞ்சம் சாப்பிட்டுக்குறோம்

    ReplyDelete
    Replies
    1. பிரசாதம் மாதிரின்னாலும் 250 பேருக்குன்னா ஒரு பத்து படி சாதம் வடிச்சாதான் சரியா இருக்கும்ப்பா!

      Delete
  2. நான் இதுவரை பார்த்த எலுமிச்சை சாதம் எல்லாம் மஞ்சள் கலர்ல இருக்கும்.. இது பார்க்கவே வித்தியாசமா இருக்கே..

    எனக்கும் ஒரு பாக்கெட் பார்சல்ன்னு சொல்லலாம்னு யோசிச்சப்ப தான் ஆரூர் மூனா அண்ணன் மெனு கார்டுல சிக்கன காமிச்சு டைவர்ட் பண்ணிட்டார்.. ஹிஹி..

    ReplyDelete
    Replies
    1. மஞ்சப்பொடி அதிக்மா போட்டா என் வூட்டுக்காரருக்கு பிடிக்காது. அதனால, நானும் மஞ்சப்பொடி போட்டேன்னு கொஞ்சமாதான் போடுட்வேன்.

      Delete
  3. மிகவும் திருப்தி சகோதரி...

    ReplyDelete
  4. நீங்க புதுசா கேமரா வாங்கி இருக்கீங்களா அல்லது வடை சட்டி புதுசா? அதுதான் இப்படி எல்லாம் ரெசிப்பி வருதா

    ReplyDelete
    Replies
    1. கேமராவும், வடை சட்டியும் பழசுதான்! ஆனா, நான் சமைக்குறேன் பாருங்க அதான் புதுசு. அதான் இப்படிலாம் பதிவு!!

      Delete
  5. ஆமாம் விட்டா அடுத்த பதிவுல எப்படி தண்ணிர் சுட வைப்பது என்று பதிவுகள் போடுவீரகள் போல இருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அடுத்த பதிவு அதான்!!

      Delete
  6. வெகேஷனுக்கு போனாலும் பதிவுலகிற்கு வந்து எட்டிப்பார்க்கவில்லை என்றால் மனது ஏதோ இழந்தது போலிருக்கிறது அதனால்தான் இங்கு வந்து எட்டிப் பார்த்து கமெண்டுகள் போட்டு வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. என் பதிவு உங்களை அப்படி ஈர்க்குதா சகோ!

      Delete
    2. அதுக்குத்தான் கிளம்பும் போதே உங்க வீட்ல கூடவே பூரிக்கட்டையை எடுத்து வச்சிக்க சொன்னேன்...

      Delete
  7. ///காலைல ஒரு வேளை மட்டும்தான் நம்ம சாப்பாடு. மதியம், மாலைலாம் ஓசி சாப்பாடு ///

    டோண்ட்வொரி விழாவிற்கு அடுத்த 2 நாள் உங்களின் சாப்பாடிற்கு கவலை இல்லை. நான் விழாக்குழுவினரிடம் மிச்சம் மீதி இருக்கும் உணவை உங்களுக்கு அப்படியே பார்சல் பண்ண சொல்லி இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அபா! ரொம்ப நன்றி சகோ! அப்படி செஞ்சுட்டா ரெண்டு நாளைக்கு எந்த இம்சையும் இல்லாம நான் போஸ்ட் தேத்துவேன்!!

      Delete
  8. நல்ல தீயுற மாதிரி வருக்கனும்னு இருக்குற இடத்துல போட்டோ (எட்டாவது போட்டோ ..)நல்ல தீஞ்ச மாதிரி தணலாஇருக்கு எலுமிச்சை சாததிலே கிராபிக்ஸ்சா..அதுல வேற இங்ககிளிஷ் படத்துல படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னே கொஞ்சம் கதை சுருக்கம் சொல்ல்வாங்களே அதே மாதிரி ..எலுமிச்சை சாதத்திற்கு டைம் மெசின் டைட்டிலே ஸ்டோரியா ?

    ReplyDelete
    Replies
    1. அது ஃப்ளாஷ் லைட் வெளிச்சமுங்க.

      Delete
  9. அந்த எலுமிச்சை சாதத்தை நம்பி நான் ப்ரேக் பாஸ்ட் சாப்பிடாம
    வாரேன்.

    கொஞ்சம் கூடவே எடுத்துண்டு வாங்க... நீங்க சாதம் எடுத்துகிட்டு வாங்க.. நான் ஊறுகாய் கொண்டு வாரேன்.

    மறந்துடாதீக...

    எங்கே ராஜி, எங்கே ராஜி அப்படின்னு கூட்டத்திலே தேடும்படியா இருக்காம, வாசலேலே ரிசப்சன் பக்கத்துலே இருங்க...

    வந்துக்கினே இருப்பேன்.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. இதென்ன வம்பா போச்சு?! நான் எனக்கு மட்டும்தான் கட்டி எடுத்து வருவேன். உங்களுக்கெல்லாம் பதிவர் சந்த்ப்புல சாப்பாடு போடுவாங்க!!

      Delete
    2. ஐயையோ

      நீங்க எலுமிச்ச சாதம் கட்டி ஒரு 300 பேருக்கு கொண்டு வருவீக
      அப்படிங்கற நினைப்பிலே தானே

      நானும்
      தயிர் சாத் கூடைக்கு ஆர்டர் பண்ணி இருக்கேன்.
      ஆவக்காய், ஊறுகாய். சிப்ஸ் .

      For further details
      சுப்பு தாத்தா.
      www.subbuthatha.blogspot.com

      Delete
  10. இவ்வளவு கிட்ட போய் படம் எடுக்கிறதில காமிரா பொட்டி ஒண்ணும் ஆகலையா?

    ReplyDelete
    Replies
    1. ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜீம் போட்டு எடுக்குறோமில்ல! அதனால கேமரா ஒட்டிக்கு ஒண்ணும் ஆகாது.

      Delete
  11. பதிவர்சந்திப்புக்கு கட்டுசோறுடன் போகிறீர்களே அப்போ நாங்களும் வர ரெடி:))

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்கும் சேர்த்து சமைக்கனுமா?! சமைச்சுட்டா போச்சு!!

      Delete
  12. அந்த ஊறுகாய் பாட்டிலை கவனமா பாதுகாத்து வையுங்கோ

    ReplyDelete
  13. நடக்கட்டும் நடக்கட்டும்.... நமக்கு எப்பவுமே கட்டுச் சோறுன்னா புளியோதரையும் அவிச்ச முட்டையும் தான்

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான காம்பினேசனா இருக்கே! ஒரு முறை ட்ரை பண்ணி பார்க்கலாம்.

      Delete
  14. ஆத்துக்கார் கிட்டே சொல்லி தங்க வளையல் போட சொல்லுங்க! இல்லை அவருக்கு பிடிச்ச எலுமிச்சை சாதத்தில் உப்பை கொஞ்சம் அள்ளி விடுங்க! மாமியாரரூக்கு உப்புமா செய்றா மாதிரி!

    இதெல்லாம் நாங்க சொல்லி தான் நீங்க தெரிஞ்சுக்கப் போரீங்களாக்கும்..!

    ReplyDelete
  15. அருமையான எலுமிச்சை சாதம். குழந்தைகள் இருவருக்கும் சமமாய் முந்திரியை எடுத்து போட்டு கொடுத்து அனுப்புவேன் என்று சொல்வது அம்மாவின் பாசத்தை சொல்கிறது ராஜி. நானும் அப்படித்தான் செய்வேன்.

    ReplyDelete
  16. கட்டிசாதத்துடன் பதிவர் சந்திப்பு வெல்லட்டும்

    ReplyDelete
  17. கட்டு சாதத்தோட வாங்க!
    எப்படி இருந்தாலும் சகிச்சிகிட்டு சந்தோஷமா சாப்பிட நாங்கள் தயார்

    ReplyDelete
  18. டோரிமான் உங்களையும் பாதித்து விட்டது போல...
    டைம் மிசின் ஏறி அப்படியே எங்களையும் கூட்டிகிட்டு போயிட்டீங்க...
    செய்முறை விளக்கம் மிக அருமை...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு டிவி பார்க்கும் பழக்கமில்லீங்கண்ணா! இது சும்மா நானே போட்டது!

      Delete
  19. எலுமிச்சை சாதம் ரெடி. ஸ்டோன் புடவை ரெடி. காமிரா பாட்டரி சார்ஜ் செய்ய மறந்துடாதீங்க. கிளம்பியாச்சா....ம்ம்ம்...நடத்துங்க.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் மறக்க மாட்டோம். அதுமில்லாம கேமராவுக்கு ரெண்டு பேட்டரி இருக்கு. ஒண்ணு கேமராவுல, இன்னொண்ணு சார்ஜ்ல. ஒண்ணு தீர்ந்துட்டா அடுத்து போட்டு எடுத்துடுவேன் எதையும் மிஸ் பண்ண மாட்டேனுங்க!!

      Delete
  20. வரசையாக ஒவ்வொரு ஐடமா போட்டு சமைக்கத்தான் நேரம் சரியாக இருக்கும் இதுக்கு இடையிலே கேமரா எடுத்து ஃபோட்டோ வேறே எடுத்திருக்கீங்களே அது எப்படி? இல்லை வீட்டுல யாரம் படம் எடுக்க உதவி செஞ்சாங்களா? பதிவு மிக அருமையாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. வலது கையால ஒவ்வொரு பொருளா போட்டுக்கிட்டு இடது கையால படம் பிடிப்பேன். சில சமயம் என் பசங்க எடுப்பாங்க. அவங்களை கூப்பிடாததுக்கு காரணம் இதெல்லாம் கஷ்டமான டிஷ், உனக்கே ஒழுங்கா சமைக்க வராதுன்னு கிண்டல் பண்ணுவாங்க. அதுக்காக, அவங்களை கூப்பிடுறதில்லை!!

      Delete
  21. அங்க வர்றவங்களுக்கெல்லாம் நீங்களே செஞ்சி கொண்டாந்துருங்களேன்...ப்ளீஸ்..

    ReplyDelete
  22. என் சார்பில் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள் ராஜி. எலுமிச்சை சாதம் பதிவாயிடுத்து .அடுத்து வெறும் சாதம் எப்படிச் செய்யறதுனும் போட்டுடுங்க:)முடிந்தால் எங்க வீட்டுப் பக்கமும் வாங்க.

    ReplyDelete
  23. ஆஹா ராஜிக்கண்ணு எவ்ளோ அழகா எலுமிச்சை சாதம் செய்திருக்கே... பார்க்கவே அழகா இருக்கே.. சாப்பிட்டா கண்டிப்பா சுவையா தான் இருக்கும்.... மிஸ் பண்ணிட்டேன் புள்ள விழாவையும் நீ அன்போடு சமைச்சு கொண்டு வரும் எலுமிச்சை சாதத்தையும்..

    சந்தோஷமா எல்லோரும் விழா சிறப்பாக நடத்திட அன்பு வாழ்த்துகள்பா ராஜி..

    ReplyDelete