Monday, March 24, 2014

இப்படியும் சில ஆசிரியர்கள்!! - ஐஞ்சுவை அவியல்

ஐயோ என்ன மாமா இப்படி அடிப்பட்டு வந்திருக்கீங்க!? என்னாச்சு!?

வண்டில போகும்போது கீழ விழுந்துட்டேன் புள்ள!

பார்த்து கவனமா வண்டி ஓட்டிக்கிட்டு வரக்கூடாதா மாமா!? என்னாச்சு!? எப்படி கீழ விழுந்துட்டீங்க!? பாதையில எதாவது குறுக்க வந்துட்டதா!?

ம்ஹூம்.  சாவு ஊர்வலத்து போது ரோட்டுல போட்ட மாலை மேல வண்டி ஏறி பேலன்ஸ் பண்ண முடியாம கீழ விழுந்துட்டேன் புள்ள.

இதை யார்கிட்டயாவது சொன்னா சிரிப்பாங்க மாமா!  பூ மாலை மேல வண்டி ஏறி ஆக்சிடெண்ட் ஆச்சா!? யார்க்கிட்ட ரீல் விடுறீங்க!?

போடி போக்கத்தவளே!  மாலைலாம் சின்னதா இருந்தா பரவாயில்ல. ஒண்ணொன்னும் யானை தும்பிக்கை பெருசா இருக்கு. அவனவன் தன் பந்தாவைக் காட்ட ஆளுயர மாலைகளை செத்தவங்களுக்குப் போட்டு அதை ரோட்டுல வீசி எறிஞ்சுட்டுப் போறாங்க. நல்ல விசயத்துக்கு போறவங்க, ஸ்கூல், ஆஃபீஸ் போறவங்களுக்குலாம் இது எவ்வளவு இடைஞ்சலாவும், அபசகுனமா இருக்குன்னு அவங்களுக்குப் புரியல. அதுமில்லாம,  இறந்தவர் மேல் போடப்பட்ட அந்த மாலைகளால் கிருமித் தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்குன்னு சம்பந்தப்பட்டவங்களுக்குப் புரிய மாட்டேங்குது! 

நீங்க சொல்றதுலாம் நியாயம்தான் மாமா!  ராஜியோட சின்ன பொண்ணு இனியா இந்த வருசம் பத்தாவது பரிட்சை எழுதப் போகுது. போன வெள்ளிக்கிழமையோட ஸ்கூல் முடிஞ்சுப் போச்சு. அதுக்காக, சின்னதா ஒரு பார்ட்டி வச்சிருக்காங்க.  பார்ட்டி முடிஞ்சதும் எல்லாப் பிள்ளைகளுக்கும் பேனா ஒண்ணை பரிசா தந்திருக்காங்க ஒரு டீச்சர். பதிலுக்கு பசங்க அவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி வந்திருக்காங்க. பசங்களைப் பிரிய முடியாம அந்த டீச்சர் அழுத அழுகை பிள்ளைங்களைக் கூட்டிப் போக வந்திருந்த பெற்றோர் மனசை நெகிழ வச்சிடுச்சு. பாஸ் பண்ணுற எல்லாப் பிள்ளைகளுக்கும் தன்னால் முடிஞ்ச பரிசு உண்டுன்னு சொல்லி இருக்காங்க அந்த டீச்சர்.

இப்படியும் சில டீச்சர்கள் இருக்காங்க. இனியா இப்பதான் ஸ்கூல் சேர்த்து விட்ட மாதிரி இருக்கு. அதுக்குள்ள பத்தாவது வந்துடுச்சா. அவள் ஸ்கூல் சேர்ந்து  தத்தக்க பித்தக்கான்னு தமிழ் படிக்க ஆரம்பிச்ச நேரம். ஏதோ ஒரு கல்யாணப் பத்திரிக்கையை படிச்சு காட்டிட்டு இருந்தா. அதுல, ”லேட்”ன்னு அடைமொழிப் போட்டு ஒரு பேரை போட்டுருந்தாங்க(இறந்தவங்க பேர் முன்னாடி ”லேட்”ன்னு போடுவது எங்க ஊர் வழக்கம்.) அதைப் படிச்ச இனியா ஏன்மா இவங்க எப்பவும் லேட்டாதான் போவாங்கள்!? அதான் லேட்ன்னு போட்டிருக்காங்களா!?ன்னு உன் ஃப்ரெண்ட் போலவே எடக்கு மடக்கா கேட்டுச்சு.
ம்க்கும். சிரிச்சது போதும். நான் ஒரு ஜோக் சொல்றேன். கேட்டு அதுக்கும் சேர்த்து சிரிங்க. 
வாடிக்கையளர்:"சார் பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?"
வங்கி ஊழியர்:"900 ரூபாய் கிடைக்கும் சார்"
வாடிக்கையாளர்: "பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?"
வங்கி ஊழியர்:"இப்பதானே சார் சொன்னேன்"
வாடிக்கையாளர்;"இது வேற ஒரு பத்தாயிரம் சார்"
சிரிப்பே வரலைப் புள்ள.சிரிக்காட்டி மதியம் சோறு போடமாட்டியே! அதனால சிரிச்சு வைக்குறேன். நான் ஒரு விடுகதை  கேக்குறேன் பதில் சொல்லுப் பார்க்கலாம்!

கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன?

பதில் யோசிச்சு வை. நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்.


15 comments:

  1. சம்பந்தப்பட்டவங்களுக்குப் புரிவதற்கு நாளாகும்...

    அந்த டீச்சரின் ஊக்கத்திற்கு பாராட்டுக்கள்...

    "லேட்" தான் ஹிஹி...

    என்னத்த சுற்றி வரும்...? முடங்கி விடும்...? மின்சாரம் இருந்தால் தானே மின்விசிறி வரும் + விடும்...!

    ReplyDelete
  2. என்னிடம் ஒரு பத்தாயிரம்ரூபா இருக்கு அதுக்கு வட்டி எவ்வளவு தருவாங்கனு கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்க!

    ReplyDelete
  3. நீங்க நம்ம பகவான்ஜி கிட்ட டிரெயினிங் எடுத்துகிட்டீங்களா என்ன? இப்படி கடிக்க ஆரம்பிச்சுட்டீங்க..

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நீங்க சொன்ன ஜோக்கைவிட உங்க பொண்ணு கேட்ட லேட் கேள்வி சிரிப்பை அள்ளியது! அந்த நல்ல ஆசிரியைக்கு எனது வந்தனங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. இது என்ன பெரிய விஷயம் எங்கள் ஆசிரியை ஒருவர் எங்கள் பரீட்சை
    நேரத்தில் எங்களுக்காக கல்வி கற்பிக்க வேண்டும் என்ற நோக்குடன்
    வேறு மாகாணம் சென்று திரும்பி வரும்போது கூலிப் படையினரால்
    சுட்டுக் கொல்லப்பட்டார் :(((தனக்கு வரும் வழியில் ஆபத்து இருக்கும்
    என்று தெரிந்தும் கூட எங்களுக்காக தன் இன்னுயிரை நீத்த அந்த
    தெய்வத்தை இந்த வேளையில் நினைக்கும் போது இந்த ஆசிரியை
    கூட எனக்குத் தெய்வமாகத் தான் தெரிகின்றார் சகோதரி :(((( அறிவுக்
    கண்ணைத் திறந்து வைக்கும் ஆசான்களின் அன்பிற்கும் நான்
    அடிமையே .சிறப்பான பகிர்வுக்கு நன்றி சகோதரியே .இனியா மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்கிட அவளிற்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லி விடுங்கள் சகோதரியே .

    ReplyDelete
    Replies
    1. ஐயோ....
      அந்த டீச்சர் இப்பொழுது இல்லையென்றாலும்
      மாணவர்களின் மனத்தில் எப்பொழுதும் வாழுவார்கள்!

      Delete
  7. லேட் ஜோக் கூப்பர்.

    ReplyDelete
  8. நல்ல அவியல்.

    ஆசிரியருக்கு எனது பாராட்டுகள்.....

    ReplyDelete
  9. அருமையான அவியல்.

    ReplyDelete
  10. சுவாரஸ்யமான தொடர் பதிவு ஆரம்பம்...

    அழைப்பவர் : சகோதரி தென்றல் சசிகலா அவர்கள்

    விவரங்களுக்கு : இணைப்பு வனப்புமிகு வடசேரி (தொடர் பதிவு)

    ReplyDelete
  11. இது போன்ற நிறைவ நெகிழ்வுகளை இனியா இனி தொடர்ந்து சந்த்திக்க வேண்டும் தானே அக்கா... படிக்கையில் எனக்கும் என்னுடைய பள்ளி நாட்கள் நியாபகத்தில் வந்து சென்றன... இனியாவிற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்... நல்லபடியாய் தேர்வு எழுத...

    ReplyDelete
  12. எனக்கு முன்பே சகோ. தகவலை பகிர்ந்து விட்டாரே... நன்றிங்க சகோ. வந்துடுங்க அக்கா.

    ReplyDelete
  13. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    தங்களுக்குக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete