Showing posts with label திருமண நாள். Show all posts
Showing posts with label திருமண நாள். Show all posts

Friday, September 14, 2018

அம்மா அப்பா கல்யாணம்

44 வருடங்களுக்கு முன், இதே நாள், இதே மாதம்,  ஒரு கிராமத்து தெருவுல, சொந்தங்களின் பூரிப்பில், உறவினர்கள் புடைச்சூழ.  ஒரு மணப்பெண் ஊர்வலம் நடந்துக்கிட்டு இருக்கு. சரியாய் அதேநேரம் மணப்பெண் வீட்டில் மணமகனுக்கும், மணமனோட அப்பாக்கும் பெரிய வாக்குவாதம்.

அப்பா! நான்  இந்த பொண்ணை கட்டிக்க மாட்டேன்.

ஏண்டா?

அந்த பொண்ணு நல்ல சிவப்பா கொழுக், மொழுக்குன்னு அழகா இருக்கு. என்னை பாருப்பா. ஒல்லியா, கருப்பா இருக்கேன். அதுமில்லாம பியூசி படிச்சுட்டு வேலைவெட்டிக்கு போகாம, நானே தண்டச்சோறு சாப்பிடும்போது கூட இன்னோரு பொண்ணை ஏன்ப்பா கஷ்டப்படுத்தனும்?

டேய்! அது என் மச்சான் பொண்ணு, அதை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு போறேன்னு வாக்கு குடுத்துட்டேன். 

அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாத்தானே வருனும்??!!அப்படின்னா, நீயே கட்டிக்கோயேன். 

அப்புறம் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி அந்த கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சுது. இப்படி கலாட்டாவா நடந்த கல்யாணம் வேற யாருடையதுமில்லை. என் அப்பா, அம்மாவோட கல்யாணம்தான்.
தாத்தா அப்பாவை வற்புறுத்தி கட்டி வெச்சுட்டு, மனசுக்குள் வருத்தப்படுவாராம். கட்டாய கல்யாணம் பண்ணிட்டோம். இதுங்க எப்படி இருக்க போகுதோன்னு??!!

ஆனா, எனக்கு  நினைவு தெரிஞ்ச நாள் முதலா அப்பா, மனசு கோணாம அம்மா நடந்துப்பாங்க. அம்மாவோட விருப்பத்துக்கு மாறாக அப்பா எதுவுமே செய்ய மாட்டார்.

எவ்வளவோ கஷ்டத்தை இருவரும் ஒன்றாய் சேர்ந்து சமாளிச்சு இருக்காங்க. மனமொத்த தம்பதிகளுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்திருக்கும் நினைக்குறீங்களா?!

நான் மகளா பொறந்திருக்கேனே?! இதைவிட வேறென்ன கஷ்டம் வாழ்க்கையில் வேறென்ன வேணும்?!
 சில வருடங்களுக்கு முன் அப்பாக்கு உடம்பு முடியாம, படுத்த படுக்கையாய் ஆன போது, படிப்பறிவு ஏதுமின்றி, தனியாய் சென்னையில் யார் துணையுமின்றி, 1 மாதம் வைராக்கியத்துடன்  போராடி, அப்பாவை நல்லபடியாய் தேற்றி நடக்க வைத்து திரும்ப அழைத்து வந்தவள். படிப்பறிவு இல்லைன்னாலும் தன்னம்பிக்கை மிகுந்தவள் அம்மா. இப்பவும், தனக்கு முடியாம ஹாஸ்பிட்டலில் இருந்தாலும், நானே சமாளிச்சுக்குறேன். நீ பிள்ளைகளையும், அப்பாவையும், வீட்டையும் பார்த்துக்கோ! ஆப்ரேஷன் போது வந்தால் போதும்ன்னு தன்னந்தனியாய் இருக்கும் இரும்பு மனுசி!! எனக்குலாம் அம்புட்டு தைரியம் இல்ல. பொசுக்குன்னா அழுதுடுவேன்! ஆனா, அம்மா அழுது அதிகம் பார்த்ததில்ல!!

பார்க்க கரடு முரடாக இருந்தாலும், பாசக்கார அப்பா.  விளையாட்டுக்கு கூட குழந்தைகளிடத்தில் கூட பொய் சொல்லாதவர். மனதில் தோன்றுவதை வார்த்தை ஜாலமின்றி பேசும் குணம் படைத்தவர், செய்வன திருந்த செய்ன்னு அறிவுரை சொல்லும், பெற்ற மகளே ஆனாலும் காசு விசயத்தில், கணக்கு வழக்கு வேணும்ன்னு நினைக்கும் அப்பா..., எனக்கு தெரிஞ்சு வருமான வரிக்காக திடீர்ன்னு இன்சூரன்ஸ் போடுறது, அதை இதை வாங்குறதுன்னு இல்லாம எத்தனை ஆயிரம் வந்தாலும் அப்படியே வரி கட்டும் நேர்மையானவர். ஒரு ரூபாய் செலவழித்தாலும் நோட்டில் எழுதி வைக்கும் பழக்கத்துக்கு சொந்தக்காரர்.
                                                                       
தோள்மீது போட்டு தாலாட்டியதில்லை..
மடிமீது சாய்த்து தூங்க வைத்ததில்லை..
கதைச்சொல்லி உற்சாகப்படுத்தியதில்லை..
யானைச்சவாரி சுத்தியதில்லை..

வழிக்காட்டியதுண்டு... 
ஆனா, கருத்து சொல்ல அனுமதித்ததில்லை..
சராசரி இந்திய பெற்றோராய் 
பெண்பிள்ளையை தட்டி வைத்தே வளர்த்தீர்
அந்நியமும் ஆனீர்...

கைப்பிடியை உதறிச்செல்ல முயன்றேன்...
ஆனாலும், கைப்பிடியை  விட்டதில்லை..
உங்கள்மீது அன்பில்லை..
பாசமில்லை...
வெறுப்பு மட்டுமே உண்டு

எனத்தான் இத்தனை நாள் நினைத்திருந்தேன்!
என் அப்பா மாதிரி  காத்திருக்க தெரில...
அம்மா மாதிரி பிடிச்சதை தெரிஞ்சுக்க தெரில..’
அப்பாப்போல தோசை சுட்டு தரத்தெரில..
அம்மா மாதிரி செலவழிக்க தெரிலன்னு 
கொண்டவனை குறை சொல்லும்போதுதான் தெரிகிறது
உங்கள்மீது நான் கொண்ட பாசம்....

சொந்தம், பந்தம், நட்புன்னு அத்தனை உறவுகளும், சிலசமயம் கடவுளும்கூட கைவிட்டாலும் எந்த சந்தர்ப்பத்திலும், எந்நாளும் என்னை நீங்க கைவிட்டதில்லை... நான் இது வரை உங்களிடம் கேட்டதில்லை. ஆனாலும் இன்று கேட்கிறேன்.......  மறு ஜென்மம் இருந்தால் நீங்கள் எனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும்.  அப்போதாவது நீங்கள் என்னை கவனித்ததை போல் நான் உங்களை கவனித்து என் நன்றி கடனை தீர்க்க வேண்டும்.  இந்த வேண்டுதல் அடுத்த பிறவிக்கு... இப்பிறவியின் வேண்டுதல்..  ஒருசேர ஒரு நொடியில் இருவரது உயிரும் பிரியனும்.. ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்திருக்க கூடாது... அன்றில்பறவையாய் உங்களை கண்டவள் ஒருவரை மட்டும் காண சகியாது..  இந்நாளிலும் இதுவே என் வேண்டுதல்... ஆசையும்கூட... 

நான் இது வரை உங்களிடம் சொன்னதில்லை.  இன்று சொல்லுகிறேன்...... I Love U Paa.......  I Love U Maa........
நன்றியுடன்,
ராஜி. 

Thursday, September 14, 2017

அப்பா அம்மா கல்யாணம் பாரு .....

42 வருடங்களுக்கு முன், இதே நாள், இதே மாதம்,  ஒரு கிராமத்து தெருவுல, சொந்தங்களின் பூரிப்பில், உறவினர்கள் புடைச்சூழ.  ஒரு மணப்பெண் ஊர்வலம் நடந்துக்கிட்டு இருக்கு. சரியாய் அதேநேரம் மணப்பெண் வீட்டில் மணமகனுக்கும், மணமனோட அப்பாக்கும் பெரிய வாக்குவாதம்.

அப்பா! நான்  இந்த பொண்ணை கட்டிக்க மாட்டேன்.

ஏண்டா?

அந்த பொண்ணு நல்ல சிவப்பா கொழுக், மொழுக்குன்னு அழகா இருக்கு. என்னை பாருப்பா. ஒல்லியா, கருப்பா இருக்கேன். அதுமில்லாம பியூசி படிச்சுட்டு வேலைவெட்டிக்கு போகாம, நானே தண்டச்சோறு சாப்பிடும்போது கூட இன்னோரு பொண்ணை ஏன்ப்பா கஷ்டப்படுத்தனும்?

டேய்! அது என் மச்சான் பொண்ணு, அதை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு போறேன்னு வாக்கு குடுத்துட்டேன். 

அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாத்தானே வருனும்??!!அப்படின்னா, நீயே கட்டிக்கோயேன். 

அப்புறம் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி அந்த கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சுது. இப்படி கலாட்டாவா நடந்த கல்யாணம் வேற யாருடையதுமில்லை. என் அப்பா, அம்மாவோட கல்யாணம்தான்.
தாத்தா அப்பாவை வற்புறுத்தி கட்டி வெச்சுட்டு, மனசுக்குள் வருத்தப்படுவாராம். கட்டாய கல்யாணம் பண்ணிட்டோம். இதுங்க எப்படி இருக்க போகுதோன்னு??!!

ஆனா, எனக்கு  நினைவு தெரிஞ்ச நாள் முதலா அப்பா, மனசு கோணாம அம்மா நடந்துப்பாங்க. அம்மாவோட விருப்பத்துக்கு மாறாக அப்பா எதுவுமே செய்ய மாட்டார்.

எவ்வளவோ கஷ்டத்தை இருவரும் ஒன்றாய் சேர்ந்து சமாளிச்சு இருக்காங்க. மனமொத்த தம்பதிகளுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்திருக்கும் நினைக்குறீங்களா?!

நான் மகளா பொறந்திருக்கேனே?! இதைவிட வேறென்ன கஷ்டம் வாழ்க்கையில் வேறென்ன வேணும்?!
 கடந்த வருடம் அப்பாக்கு உடம்பு முடியாம, படுத்த படுக்கையாய் ஆன போது, படிப்பறிவு ஏதுமின்றி, தனியாய் சென்னையில் யார் துணையுமின்றி, 1 மாதம் வைராக்கியத்துடன்  போராடி, அப்பாவை நல்லபடியாய் தேற்றி நடக்க வைத்து திரும்ப அழைத்து வந்தவள். படிப்பறிவு இல்லைன்னாலும் தன்னம்பிக்கை மிகுந்தவள் அம்மா. இப்பவும், தனக்கு முடியாம ஹாஸ்பிட்டலில் இருந்தாலும், நானே சமாளிச்சுக்குறேன். நீ பிள்ளைகளையும், அப்பாவையும், வீட்டையும் பார்த்துக்கோ! ஆப்ரேஷன் போது வந்தால் போதும்ன்னு தன்னந்தனியாய் இருக்கும் இரும்பு மனுசி!! எனக்குலாம் அம்புட்டு தைரியம் இல்ல. பொசுக்குன்னா அழுதுடுவேன்! ஆனா, அம்மா அழுது அதிகம் பார்த்ததில்ல!!

பார்க்க கரடு முரடாக இருந்தாலும், பாசக்கார அப்பா.  விளையாட்டுக்கு கூட குழந்தைகளிடத்தில் கூட பொய் சொல்லாதவர். மனதில் தோன்றுவதை வார்த்தை ஜாலமின்றி பேசும் குணம் படைத்தவர், செய்வன திருந்த செய்ன்னு அறிவுரை சொல்லும், பெற்ற மகளே ஆனாலும் காசு விசயத்தில், கணக்கு வழக்கு வேணும்ன்னு நினைக்கும் அப்பா..., எனக்கு தெரிஞ்சு வருமான வரிக்காக திடீர்ன்னு இன்சூரன்ஸ் போடுறது, அதை இதை வாங்குறதுன்னு இல்லாம எத்தனை ஆயிரம் வந்தாலும் அப்படியே வரி கட்டும் நேர்மையானவர். ஒரு ரூபாய் செலவழித்தாலும் நோட்டில் எழுதி வைக்கும் பழக்கத்துக்கு சொந்தக்காரர்.
                                                                       
தோள்மீது போட்டு தாலாட்டியதில்லை..
மடிமீது சாய்த்து தூங்க வைத்ததில்லை..
கதைச்சொல்லி உற்சாகப்படுத்தியதில்லை..
யானைச்சவாரி சுத்தியதில்லை..

வழிக்காட்டியதுண்டு... 
ஆனா, கருத்து சொல்ல அனுமதித்ததில்லை..
சராசரி இந்திய பெற்றோராய் 
பெண்பிள்ளையை தட்டி வைத்தே வளர்த்தீர்
அந்நியமும் ஆனீர்...

கைப்பிடியை உதறிச்செல்ல முயன்றேன்...
ஆனாலும், கைப்பிடியை விட்டதில்லை..
உங்கள்மீது அன்பில்லை..
பாசமில்லை...
வெறுப்பு மட்டுமே உண்டு

எனத்தான் இத்தனை நாள் நினைத்திருந்தேன்!
என் அப்பா மாதிரி  காத்திருக்க தெரில...
அம்மா மாதிரி பிடிச்சதை தெரிஞ்சுக்க தெரில..’
அப்பாப்போல தோசை சுட்டு தரத்தெரில..
அம்மா மாதிரி செலவழிக்க தெரிலன்னு 
கொண்டவனை குறை சொல்லும்போதுதான் தெரிகிறது
உங்கள்மீது நான் கொண்ட பாசம்....

சொந்தம், பந்தம், நட்புன்னு அத்தனை உறவுகளும், சிலசமயம் கடவுளும்கூட கைவிட்டாலும் எந்த சந்தர்ப்பத்திலும், எந்நாளும் என்னை நீங்க கைவிட்டதில்லை... நான் இது வரை உங்களிடம் கேட்டதில்லை. ஆனாலும் இன்று கேட்கிறேன்.......  மறு ஜென்மம் இருந்தால் நீங்கள் எனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும்.  அப்போதாவது நீங்கள் என்னை கவனித்ததை போல் நான் உங்களை கவனித்து என் நன்றி கடனை தீர்க்க வேண்டும்.  இந்த வேண்டுதல் அடுத்த பிறவிக்கு... இப்பிறவியின் வேண்டுதல்..  ஒருசேர ஒரு நொடியில் இருவரது உயிரும் பிரியனும்.. ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்திருக்க கூடாது... அன்றில்பறவையாய் உங்களை கண்டவள் ஒருவரை மட்டும் காண சகியாது..  இந்நாளிலும் இதுவே என் வேண்டுதல்... ஆசையும்கூட... 

நான் இது வரை உங்களிடம் சொன்னதில்லை.  இன்று சொல்லுகிறேன்...... I Love U Paa.......  I Love U Maa........

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி. 

Tuesday, July 15, 2014

கடவுள் நினைத்தான்..., மண நாள் கொடுத்தான்..., வாழ்கை உண்டானதே ...!!!

ஏங்க! இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. அதனால காலை டிஃபனுக்கு என்ன செய்யட்டும்!? அப்புக்கு பிடிச்ச மொறு மொறு தோசையும் சாம்பாருமா!?  பெருசுக்கு பிடிச்ச  பூரி, குருமாவா??! இல்ல சின்னதுக்குப் பிடிச்ச சப்பாத்தியும் தக்காளித் தொக்குமா!?

ம்ஹூம் எதும் வேணாம். புது மாவுல செஞ்ச இட்லியும், மைல்டா காரமில்லாத தேங்காய் சட்னியும் செஞ்சிடேன்.

ஐயையே! எப்பப் பாரு சப்புன்னு சட்னியும், இட்லியும்தானா!? உங்களோட பெரிய இம்சையா போச்சு! உங்களுக்கு பிடிச்சதைத்தான் நாங்களும் சாப்பிடனுமா!? எங்களுக்குன்னு தனிப்பட்ட ஆசை இல்லையா!?....,

அம்மா! தாயே! உனக்கு எது செய்யத் தோணுதோ அதையே செய். நான் சாப்பிட்டுக்குறேன்.

இப்படிச் சொன்னா எப்படிங்க!? அப்புறம் நான் உங்களை கொடுமைப்படுத்துறதா உங்க அண்ணன், தம்பி, அம்மாக்கிட்டலாம் போய் ஒப்பாரி வைக்காதீங்க.

டேய் அப்பு! நான் முடி வெட்டிக்க கடைக்குப் போறேன். அம்மாக்கிட்ட சொல்லிடு.
ஏங்க! நாளைக்கும், நாளன்னிக்கும் கவர்ன்மெண்ட் லீவாச்சே! எங்காவது போய் வரலாமா!?

டெய்லியும் நாப்பது கி.மீ தூரத்தில் இருக்குற ஆஃபீசுக்கு பஸ்சுல போய் வரேன். அங்க போய் சீட்டு தேய்க்குற ஆஃபீஸ் உத்தியோகம்ன்னு நினைச்சியா!? அவங்க சொல்ற இடத்துக்கு ஓடனும்டி.  எப்படா லீவு கிடைக்கும், ஆயில் பாத் எடுத்து, அக்கடான்னு தூங்கலாம்ன்னு நினைச்சா, அங்க போலாம், இங்க போலாம்ன்னுட்டு...,

ம்க்கும், உங்களுக்கென்ன!? ஆஃபீஸ் போறேன்னுட்டு சாக்குச் சொல்லிட்டு காலைல போய் நைட்தான் வர்றீங்க. சில சமயம் ஞாயித்துக்கிழமைல கூட ஆஃபீசுக்குப் போயிடுறீங்க. ஆனா, வாரத்துல ஏழு நாளும், வருசத்துல 365 நாளும் நீங்க பெத்ததுங்கக்கிட்ட நாந்தானே லோல் படுறேன்!! உங்களைக் கட்டிக்கிட்டு  ஒரு பார்க் உண்டா?! கோவில் உண்டா? இல்ல சொந்தக்காரங்க வூட்டுக்குதான் போனதுண்டா!?

வேணும்ன்னா உங்கம்மா வீட்டுக்குப் போயிட்டு வாயேன்!!

நல்லா வந்துடும் என் வாயில. பக்கத்து தெருவில் இருக்கும் அம்மா வீட்டுக்கு போனால் என்ன? போகாட்டி என்ன?! போய் அக்கடான்னு ரெண்டு நாள்  இருக்க முடியுமா!? வாசல் தெளிக்க ஓடி வரனும், வீட்டைக் கூட்ட ஓடி வரனும்.

குட்டிம்மா!  காலைலயே ரவி போன் பண்ணான். போய் என்னான்னு கேட்டுட்டு வந்துடுறேன். அம்மாக்கிட்ட சொல்லிடு. 

ஏம்மா! என் கல்யாணத்துக்கு முன்னாடி படிச்சு என் சமபாத்தியத்துல கார், வீடுன்னு செட்டிலாகனும், பெரிய, பெரிய கல் வச்ச நகை வாங்கனும், பெரிய மண்டபத்துல பண்னனும்,  மாப்பிள்ளைக்கு சமைக்க தெரிஞ்சிருக்கனும்ன்னு என் எதிர்பார்ப்பு பெரிய லிஸ்டே இருக்கு. உன் கல்யாணத்தப்போ அப்படி எதும் எதிர்பார்ப்பு இல்லியா!? 

அது மாதிரிலாம் எதுமில்லம்மா! ஆனா, பட்டுச்சேலைன்ற பேர்ல 25000 ரூபாய்க்கு மேல தார் பாயை கொண்டு வந்துக் கொடுக்கக்கூடாது.சிம்ப்ளா, பச்சைக்கலர்ல இருந்தா போதும்ன்னு ஒரு கண்டிசன் மட்டும் போட்டேன்.

அப்பா!!  உனக்குப்பா!?

இருந்துச்சுமா!? எதாவது ஊனமுற்ற பொண்ணுக்குதான் வாழ்வுக் கொடுக்கனும்ன்னு மனசுக்குள் நினைச்சுட்டிருந்தேன். உன் தாத்தாதான் உங்கம்மாவை காட்டி கட்டிக்கனும்ன்னு சொன்னார். மறுக்க முடியல, உங்கம்மாவோட அப்பா, அம்மா ரொம்ப நல்லவங்க, பொண்ணும் சிவப்பா, அழகா!!?? இருந்துச்சு. கட்டிக்கிட்டேன். அதனால,என் ஆசை நிறைவேறாம போச்சு.

அப்பா! அம்மாவை கட்டிக்கிட்டும்,  ஊனமுற்றப் பெண்ணைத்தான் கட்டிக்கனும்ன்ற உங்க எண்ணம் நிறைவேறிடுச்சு.

என்னடா சொல்றே!? அதான் உங்கம்மா, கை, கால், கண்ணுலாம் நல்லா இருக்கே!!

ஆனா, மூளை வளர்ச்சி இல்லியே! அதும் ஊனமுற்றவங்க லிஸ்ட்லதானே வருது.

அடிசெருப்பால! எப்பப் பாரு, கும்பலா உக்காந்துக்க வேண்டியது, என்னைப் பத்தி புரணி பேச வேண்டியது இதே வேலையாப் போச்சு இதுங்களுக்கு.....................................................................................,

எங்களுது அரேஞ்ச்டு மேரேஜ். இவர் எங்கம்மா வழில சொந்தம். பாட்டி வீட்டுக்கு எதிர் வீடு. பாட்டி வீட்டுக்கு போகும்போதெல்லாம் பார்த்து, பேசி சீன் போட்ட்டிருக்கேன். அதனால, அவர் , மனசில் என்னைப் பத்தி உயர்ந்த நினைப்புப் போல. என்னை அவர் அப்பா கைக்காட்டினதும் சம்மதிச்சுட்டார். விதி வலியதாச்சே!

பெண் பார்க்கும் படலம் ரெண்டு முறை நடந்துச்சு. முதல் முறை சொந்தம் பந்தங்களுக்காக சொந்தக் கிராமத்துல நடந்துச்சு. அப்போ, மண்ணுக்கு மரியாதை கொடுத்த பாரதிராஜா பட ஹீரோயின் போல வீட்டுத்தூணைக் கட்டிக்கிட்டு நின்னுட்டு காஃபி கொடுத்துட்டு வந்ததோடு சரி. அவர் முகத்தைப் பார்க்கவே இல்ல.  அடுத்து நட்புக்களுக்காய், அந்த நேரத்துல நாங்க குடியிருந்த திருத்தணி வீட்டுக்கு மறுபடியும் பெண் பார்க்கும் படலம் நடந்துச்சு.

ஷூ போட்டிட்டு வந்த இவர் ஷூவை தெருவில் விட்டுட்டு சாக்ஸோடு சேர்ல உக்காந்திட்டிருந்த இவரைப் பார்த்து, தம்பி! அந்த துணியைக் கழட்டு உன் கால் விரல்லாம் நல்லா இருக்கான்னு பார்க்கனும்ன்னு என் ஃப்ரெண்டோட பாட்டிச் சொல்லி இவரோட கால் விரல், கைவிரல்லாம் செக் பண்ணாங்க.

கல்யாணம் ஆகி என் பவுசு என்னன்னுத் தெரிஞ்சதுக்குப் பின்.., பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் துப்பில்ல..., இதுல என் கால், கைவிரல்லாம்  செக் பண்ணாங்கன்னு பசங்கக்கிட்ட சொல்லிக் கிண்டலடிப்பார். 
  
எங்க கல்யாணத்தப்போ எங்க வீட்டுல ஃபோன் கிடையாது. நல்லது, கெட்டதுன்னா பக்கத்துல இருந்த கல்யாண மண்டபத்துக்குதான் போன் பண்ணி எங்களைக் கூப்பிட்டு பேசுவாங்க. என் அம்மாவும், அப்பாவும் பத்திரிக்கை வைக்க இவர் வீட்டுக்கு போயிருந்த நேரம் என்கிட்ட பேச ஆசைப்பட்டு, ஃபோன் செய்துக் கூப்பிட, பேச கூச்சப்பட்டுக்கிட்டு எதிர்வீட்டு மாமியை பதில் சொல்ல வச்சேன். 

அன்னிக்கு பேசாம சாவடிச்சா. இன்னிக்கு பேசியே சாவடிக்குற உங்கம்மான்னு அடிக்கடி பசங்கக்கிட்ட சொல்வார். 

 நான் தீவிரவாதி. அவர் மிதவாதி.ஆசை,கோவம், வெறுப்பு, சிரிப்புன்னு எதாயிருந்தாலும் உடனே கொட்டித் தீர்த்துடனும் எனக்கு.., ஆனா, எதையும் வெளிக்காட்டாம இருக்குறது அவரோட இயல்பு. மார்கழி இரவுலயும் ஐஸ் வாட்டர் வேணும் எனக்கு.., சித்திரை வெயில்லயும் சுடுதண்ணி வேணும் அவருக்கு. ஊர் உலகமே என்னோடு நட்பாயிருக்கனும் எனக்கு..., தாயாய் பிள்ளையாய் இருந்தாலும் தள்ளியே இருக்கனும் அவருக்கு...., எதிலயும் வேகம், பரபரப்பு வேணும் எனக்கு...., புயலே அடிச்சாலும்  நிதானம் அவருக்கு...,

பசங்க எதிர்காலம், படிப்பு, அப்பா, அம்மா ஹெல்த்ன்னு எல்லாத்தையும் மனசுல போட்டு குழப்பிக்கிட்டே இருப்பேன் நான்..., எல்லாமே அவன் செயல், அவன் பார்த்துப்பான்னு அசால்ட்டா இருப்பார் அவர்...., லீவுன்னா ஊர் சுத்தனும் எனக்கு..., அக்கடான்னு படுத்து தூங்கனும் அவருக்கு..., பொண்ணுங்க படிச்சு வேலைக்கு போய் சம்பாதிச்சு அப்புறம்தான் கல்யாணம் கட்டிக்கனும்ன்ற நினைப்பு எனக்கு..., ப்ளஸ்டூக்கு மேல் படிச்சா திமிர் ஏறிடும்ன்ற நினைப்பு அவருக்கு...,

இப்படி எல்லாத்துலயும் எதிர் மறையா இருக்குற எங்களைத்தான் கடவுள் முடிச்சுப் போட்டு சேர்த்து வச்சுட்டார் கடவுள்....,

ஏம்பா! உனக்கும், அம்மாக்கும் எதுக்குமே மேட்ச் ஆகலியே! அப்புறம் இதை எப்படி 20 வருசமா சமாளிச்சிட்டிருக்கே!!?? 

எல்லாம் உங்க பாட்டி, தாத்தா முகத்துக்காகத்தான். ஒரே பொண்ணுன்னு இதுமேல பாசம் வச்சிட்டாங்க. இவ கண் கலங்குனா அவங்க தாங்க மாட்டாங்க. அதான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டிருக்கேன்.

அடப்பாவி மனுசா! இருபது வருசம் முடிஞ்சு இருபத்தோராம் வருச கல்யாண நாளன்னிக்குதான் உண்மைலாம் சொல்லத் தோணுதோ!!?? எப்படியோ, இப்பவாவது தைரியமா உண்மையைச் சொல்லனும்ன்னு தோணுச்சே! அதுக்காகவே உனக்குப் பிடிச்ச கேசரி செஞ்சு எடுத்து வந்திருக்கேன். இந்தாங்க சாப்பிடுங்க....,

ஏங்க! இன்னிக்கு நம்ம கல்யாண நாள். எப்படிங்க கொண்டாடலாம்!? நான் ஆஃபீஸ் போறேன். நீ எப்பவும் போல கம்ப்யூட்டர்ல உக்காந்து உங்காளுங்களோடு குப்பையைக் கொட்டு...., பசங்க ஸ்கூல் போகட்டும்...,

ம்க்கும், இத்தனை கல்யாண நாளா என்னத்தக் கண்டேன். இன்னிக்கு மட்டும் புதுசா காண!? ஒவ்வொரு வருசமும் இதே கதையாத்தானே இருக்கு. புது புடவை உண்டா!? நகை உண்டா!?...,

உங்க ராஜி வைப்ரேஷன் மோடுக்குப் போய்ட்டா. நான் ஆஃபீசுக்கு கிளம்புறேன். தைரியம் இருக்குறவங்க அவக்கிட்ட சொல்லிடுங்க....

Saturday, September 14, 2013

நினைத்தாலே இனிக்கும்!! - திருமண நாள் ஸ்பெஷல்

 42 வருடங்களுக்கு முன், இதே நாள், இதே மாதம்,  எங்க பூர்வீக கிராமத்து தெருவுல, சொந்தங்களின் பூரிப்பில், உறவினர்கள் புடைச்சூழ.  ஒரு மணப்பெண் ஊர்வலம் நடந்துக்கிட்டு இருக்கு. சரியாய் அதேநேரம் மணப்பெண் வீட்டில் மணமகனுக்கும், மணமனோட அப்பாக்கும் பெரிய வாக்குவாதம்.

அப்பா, நான்  இந்த பொண்ணை கட்டிக்க மாட்டேன்.

ஏண்டா?

அந்த பொண்ணு நல்ல சிவப்பா கொழுக், மொழுக்குன்னு அழகா இருக்கு. என்னை பாருப்பா. ஒல்லியா, கருப்பா இருக்கேன். அதுமில்லாம பியூசி படிச்சுட்டு வேலைவெட்டிக்கு போகாம, நானே தண்டச்சோறு சாப்பிடும்போது கூட இன்னோரு பொண்ணை ஏன்ப்பா கஷ்டப்படுத்தனும்?

டேய்! அது என் மச்சான் பொண்ணு, அதை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு போறேன்னு வாக்கு குடுத்துட்டேன். 

அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாத்தானே வருனும்??!!அப்படின்னா, நீயே கட்டிக்கோயேன். 

அப்புறம் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி அந்த கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சுது. இப்படி கலாட்டாவா நடந்த கல்யாணம் வேற யாருடையதுமில்லை. என் அப்பா, அம்மாவோட கல்யாணம்தான்.

தாத்தா அப்பாவை வற்புறுத்தி கட்டி வெச்சுட்டு, மனசுக்குள் வருத்தப்படுவாராம். கட்டாய கல்யாணம் பண்ணிட்டோம். இதுங்க எப்படி இருக்க போகுதோன்னு??!!

ஆனா, எனக்கு  நினைவு தெரிஞ்ச நாள் முதலா அப்பா, மனசு கோணாம அம்மா நடந்துப்பாங்க. அம்மாவோட விருப்பத்துக்கு மாறாக அப்பா எதுவுமே செய்ய மாட்டார்.

எவ்வளவோ கஷ்டத்தை இருவரும் ஒன்றாய் சேர்ந்து சமாளிச்சு இருக்காங்க. மனமொத்த தம்பதிகளுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்திருக்கும் நினைக்குறீங்களா?!

நான் மகளா பொறந்திருக்கேனே?! இதைவிட வேறென்ன கஷ்டம் வாழ்க்கையில் வேறென்ன வேணும்?!

 கடந்த வருடம் அப்பாக்கு உடம்பு முடியாம, படுத்த படுக்கையாய் ஆன போது, படிப்பறிவு ஏதுமின்றி, தனியாய் சென்னையில் யார் துணையுமின்றி, 1 மாதம் வைராக்கியத்துடன்  போராடி, அப்பாவை நல்லபடியாய் தேற்றி நடக்க வைத்து திரும்ப அழைத்து வந்தவள். படிப்பறிவு இல்லைன்னாலும் தன்னம்பிக்கை மிகுந்தவள் அம்மா.

இப்பவும், தனக்கு முடியாம ஹாஸ்பிட்டலில் இருந்தாலும், நானே சமாளிச்சுக்குறேன். நீ பிள்ளைகளையும், அப்பாவையும், வீட்டையும் பார்த்துக்கோ! ஆப்ரேஷன் போது வந்தால் போதும்ன்னு தன்னந்தனியாய் இருக்கும் இரும்பு மனுசி!! எனக்குலாம் அம்புட்டு தைரியம் இல்ல. பொசுக்குன்னா அழுதுடுவேன்! ஆனா, அம்மா அழுது அதிகம் பார்த்ததில்ல!! 

பார்க்க கரடு முரடாக இருந்தாலும், பாசக்கார அப்பா.  விளையாட்டுக்கு கூட குழந்தைகளிடத்தில் கூட பொய் சொல்லாதவர். மனதில் தோன்றுவதை வார்த்தை ஜாலமின்றி பேசும் குணம் படைத்தவர், செய்வன திருந்த செய்ன்னு அறிவுரை சொல்லும், பெற்ற மகளே ஆனாலும் காசு விசயத்தில், கணக்கு வழக்கு வேணும்ன்னு நினைக்கும் அப்பா..., எனக்கு தெரிஞ்சு வருமான வரிக்காக திடீர்ன்னு இன்சூரன்ஸ் போடுறது, அதை இதை வாங்குறதுன்னு இல்லாம எத்தனை ஆயிரம் வந்தாலும் அப்படியே வரி கட்டும் நேர்மையானவர். ஒரு ரூபாய் செலவழித்தாலும் நோட்டில் எழுதி வைக்கும் பழக்கத்துக்கு சொந்தக்காரர்.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கே மகளாய் பிறக்கும் வரம் தர வேண்டுமென இந்த இனிய நாளில் வணங்குகிறேன்!!.
                                                                            
மூத்தவர் நீங்கள் அரண்களாய் இருந்து...,
முந்திய அறங்கள் எல்லாம் சிறக்க...,
ஒன்றுக்குள் ஒன்றாகி உறவுக்கு விளக்கமாகி...,,
உணர்வுகளை மதித்து ,உரிமைக்கு இடம் அளித்து...,

அன்பென்னும் பந்தத்தில் அரும்பெரும் சுடராகி...,
பண்பென்னும் பகுப்பிலே பலமான விருட்சமாகி...,
வாழ்வின் இன்ப வளைவுகளை வசந்தத்தின் வாசலாக்கி...,
வந்து விழுந்த துன்பங்களை வளைத்தெடுத்து வாளிப்பாக்கி...,

வாழ்க்கைத்துணையுடன் கை கோர்த்து....,
வாழ்வின் நோக்கத்தை தேர்ந்தெடுத்து...,
மனம்போல் மகிழ்வோடும்,அழகான மகவோடும்??!!
வாழ்க்கையை உங்கள் வசமாக்கி...,

வந்திட்ட பொழுதுகளை வாசமாக்கி
இல்லறத்தில் மகத்தான வாகை சூடி....

இந்த நிமிடத்தில் வாழ்வின் வெற்றியாளர்களாய் நிற்கின்ற
அம்மாவையும் அப்பாவையும்
வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றேன்!!!!!

இதுபோலே திருவிழா தினமும் கண்டு
ஒரு மனத்தோடு, இன்முகத்தோடு வாழ
உலகமுள்ளவரை வாழ்ந்திருக்க...,
வாழ்த்த வேண்டுமென...,

அகம் மகிழ்ந்து அன்பாலே
உண்மையான உள்ளத்தாலே..,
வாழ்க நீவிர் பல்லாண்டு என
வாழ்த்த வாருங்கள் உறவுகளே!!!!!!

Friday, September 14, 2012

நினைத்தாலே இனிக்கும்...., 40வது திருமண நாள்

 40 வருடங்களுக்கு முன், இதே நாள், இதே மாதம்,  எங்க பூர்வீக கிராமத்து தெருவுல, சொந்தங்களின் பூரிப்பில், உறவினர்கள் புடைச்சூழ.  ஒரு மணப்பெண் ஊர்வலம் நடந்துக்கிட்டு இருக்கு. சரியாய் அதேநேரம் மணப்பெண் வீட்டில் மணமகனுக்கும், மணமனோட அப்பாக்கும் பெரிய வாக்குவாதம்.

அப்பா, நான்  இந்த பொண்ணை கட்டிக்க மாட்டேன்.

ஏண்டா?

அந்த பொண்ணு நல்ல சிவப்பா கொழுக், மொழுக்குன்னு அழகா இருக்கு. என்னை பாருப்பா. ஒல்லியா, கருப்பா இருக்கேன். அதுமில்லாம பியூசி படிச்சுட்டு வேலைவெட்டிக்கு போகாம, நானே தண்டச்சோறு சாப்பிடும்போது கூட இன்னோரு பொண்ணை ஏன்ப்பா கஷ்டப்படுத்தனும்?

டேய்! அது என் மச்சான் பொண்ணு, அதை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு போறேன்னு வாக்கு குடுத்துட்டேன். 

அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாத்தானே வருனும்??!!அப்படின்னா, நீயே கட்டிக்கோயேன். 

அப்புறம் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி அந்த கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சுது. இப்படி கலாட்டாவா நடந்த கல்யாணம் வேற யாருடையதுமில்லை. என் அப்பா, அம்மாவோட கல்யாணம்தான்.

தாத்தா அப்பாவை வற்புறுத்தி கட்டி வெச்சுட்டு, மனசுக்குள் வருத்தப்படுவாராம். கட்டாய கல்யாணம் பண்ணிட்டோம். இதுங்க எப்படி இருக்க போகுதோன்னு??!!

ஆனா, எனக்கு  நினைவு தெரிஞ்ச நாள் முதலா அப்பா, மனசு கோணாம அம்மா நடந்துப்பாங்க. அம்மாவோட விருப்பத்துக்கு மாறாக அப்பா எதுவுமே செய்ய மாட்டார்.

எவ்வளவோ கஷ்டத்தை இருவரும் ஒன்றாய் சேர்ந்து சமாளிச்சு இருக்காங்க. மனமொத்த தம்பதிகளுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்திருக்கும் நினைக்குறீங்களா?!

நான் மகளா பொறந்திருக்கேனே?! இதைவிட வேறென்ன கஷ்டம் வாழ்க்கையில் வேறென்ன வேணும்?!

 கடந்த வருடம் அப்பாக்கு உடம்பு முடியாம, படுத்த படுக்கையாய் ஆன போது, படிப்பறிவு ஏதுமின்றி, தனியாய் சென்னையில் யார் துணையுமின்றி, 1 மாதம் வைராக்கியத்துடன்  போராடி, அப்பாவை நல்லபடியாய்   தேற்றி நடக்க வைத்து திருமப அழைத்து வந்தவள். படிப்பறிவு இல்லைன்னாலும் தன்னம்பிக்கை மிகுந்தவள் அம்மா.

பார்க்க கரடு முரடாக இருந்தாலும், பாசக்கார அப்பா.  விளையாட்டுக்கு கூட குழந்தைகளிடத்தில் கூட பொய் சொல்லாதவர். மனதில் தோன்றுவதை வார்த்தை ஜாலமின்றி பேசும் குணம் படைத்தவர், பெற்ற மகளே ஆனாலும் காசு விசயத்தில், கணக்கு வழக்கு வேணும்ன்னு நினைக்கும் அப்பா...,

எத்தனை ஜென்மம எடுத்தாலும் உங்களுக்கே மகளாய் பிறக்கும் வரம் தர வேண்டுமென இந்த இனிய நாளில் வணங்குகிறேன்.