Monday, July 29, 2019

கூண்டில் அடைச்ச மிருகத்தின் நிலை என்ன?!- ஐஞ்சுவை அவியல்

இந்தாடி, கொஞ்சமாவது புருசன்ன்ற மட்டுமரியாதை இருக்கா உனக்கு?! 

வேணும்ன்னா இனி, உன்னை  சார்ன்னு கூப்பிடவா?!

அதுக்காக உன்னை சார்ன்னு கூப்பிட சொல்லல. நம்ம ஊர்களில்தான் சார்ன்னு சொல்றதை பெருமையா நினைக்கிறோம். இதுவே பன்னாட்டு நிறுவனங்களில் சார்ன்னு கூப்பிடக்கூடாதுன்னு விதியே இருக்கு.  SLAVE I REMAIN என்பதன் சுருக்கமே நாம பெருமையா நினைக்கும்  SIRன்ற வார்த்தையின் விரிவாக்கம். நான் உங்களின் அடிமை என்பதை நினைவூட்டுகிறேன் என்பதே இதன் அர்த்தம். இதைதான் நாம பெருமையா சார்ன்னு சொல்லிக்கிட்டு திரியுறோம்.பெரிய சாதனை செய்தவங்களுக்குதான் சர்(SIR) பட்டம் கொடுத்து கௌரவிச்சாங்க.  வானம் ஏன் பகல்ல நீலநிறமாய் தெரியுது?! உட்பட பல கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான நம்மூர் இயற்பியல் துறை வல்லுனரான சி.வி ராமனுக்கு(சந்திரசேகர வெங்கட்ராமன்) சர் பட்டம் கொடுத்து சிறப்பிச்சாங்க. 

அதனால் இனி கூடியவரைக்கும் சார்ன்னு சொல்றதை தவிர்க்கலாம். இங்க யாரும் யாருக்கும் அடிமை இல்லியே!

சரி மாமா, இனி யாரையும் சார்ன்னு சொல்லல. வானம் ஏன் நீல நிறமா தெரியுதுன்னு சொல்லேன்..


சூரியனிலிருந்து வரும் ஒளி வெண்மை நிறமா இருந்தாலும் அதில் அதில் பல நிறங்கள் இருக்கு.  இதை மழைநேரத்தில் வரும் வானவில்லில் பார்க்கலாம். வாயுமண்டலத்தில்  நைட்ரஜன் 78 %,  21% ஆக்சிஜனும், நீராவியும் மாசுத்துணிக்கைகளும் இருக்கு.  இவற்றின் வழியேதான் சூரிய ஒளி பூமிக்கு வருது. ஒவ்வொரு நிற ஒளி அலைகளும் வெவ்வேறு  அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய  நிறங்கள், நீண்ட அலை நீளம்  கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது.  நீண்ட அலைநீளம் உடைய ஒளி அலைகள் பூமிக்கு வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சிய துணிக்கைகள் அதை தெறிக்க விடுகின்றது. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோற்றமளிக்கின்றது. ஒளியானது காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக்கூறுகள், நீர்த்துளிகள், பனிமூட்டம் போன்றவற்றால் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மீண்டும் பயணிக்கும்போது மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு சிதறடிக்கும்போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. சிவப்பு நிறம் மிகக்குறைவாக சிதறுகிறது. நாம் பார்க்கும்போது அந்த ஒளி அலைகள் நம்மை கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருக்குற மாதிரி காட்சியளிக்கின்றது. வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், வானவில் வண்ணங்களால் நிரம்பியுள்ளதே  தவிர நாம பார்க்குற மாதிரி நீல நிறமாய் மட்டுமில்ல. 

என்னென்னமோ சொல்றே மாமா! எனக்குதான் ஒன்னும் புரியல!!
சிம்பிளா சொல்லனும்ன்னா இயற்பியல் விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக் கொள்கிறது. வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது. காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம்போது மட்டும் வானம் சிவப்பாக தெரியக்காரணம்,  சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!

ம்ம் இப்ப புரியுது மாமா!

அப்பாடா! புரிஞ்சுட்டுதா?! சரி நான் கொஞ்சம் வெளியில் போகும் வேலை இருக்கு. போயிட்டு வரேன்..

ம்ம்ம் போகும்போது ஹெல்மெட் போட்டுக்கிட்டு போ மாமா! போலீஸ்காரங்க புடிக்குறாங்களாம். திருடனை, கொள்ளையடிச்சவனைலாம் விட்டுட்டு ஹெல்மெட் போடாதது பெரிய குத்தம்ன்னு புடிக்குறானுங்க.

தண்ணி அடிக்குறது, தம் அடிக்குறது, திருட்டு, கற்பழிப்புன்னு எந்த குற்றத்திற்கும் திருந்தி நல்லபடியா நடக்க சான்ஸ் உண்டு. ஆனா, ஹெல்மெட் போடாம போய்ட்டு, அதன்மூலம் உயிரிழப்பு நேர்ந்தால் திருந்தி நடக்க சான்ஸ் இல்லியே! அதான், மற்ற குற்றத்தைவிட ஹெல்மெட் போடாதது பெரிய குத்தமா போலீஸ் பார்க்குது.  ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்தபின் விபத்துகளின்மூலம் போக இருந்த பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கு, அதான் உண்மை..


வண்டியோட வேகம் கூடக்கூட நம்ம உடம்பின் எடை குறைச்சுக்கிட்டே போகும் , அப்படி இருக்கையில் எதோ ஒரு பொருளுடன், வண்டி மோதும்போது வண்டி ஓட்டும் நபர் வண்டிக்கு முன்பக்கமாக தூக்கி வீசப்படுவார்.அப்படி வீசும்போது, ஹெல்மெட் போட்டிருந்தால் கைகால் முறிவு, அல்லது சிறுகாயத்தோடு பிழைச்சுக்க சான்ஸ் உண்டு. அப்படி தூக்கி வீசப்படும்ப்போது ஹெல்மெட் போடலைன்னா தலை எதன்மீதாவது மோதி உயிரிழக்க சான்ஸ் நிறைய உண்டு. நான் மெதுவாதான் வண்டி ஓட்டிப்போவேன். சாலைவிதிகளை கரெக்டா பாலோ பண்ணுவேன். நான் எதுக்கு ஹெல்மெட் போடனும்ன்னு விதண்டாவாதம் பண்ணுறவங்களும் இருக்காங்க. எல்லாரும் இப்படி இருப்பாங்கன்னு என்ன நிச்சயம்?! அப்படியே இருந்துட்டாலும் விபத்துகள் எப்படி நிகழும்ன்னு யாராலும் சொல்லமுடியாதுல்ல! அதனால், பக்கத்து தெருவுக்கு வண்டில போறதா இருந்தால் ஹெல்மெட் போடுறதை வழக்கமா வச்சுக்கனும். ஹெல்மெட்டுக்கு இருக்கும் 18% ஜி.எஸ்.டி வரியை ரத்து பண்ணனும்.

நானா வண்டிய ஓட்டப்போறேன்?! நீதானே வண்டிய ஓட்டப்போறே! அதனால கட்டாயம் நீ ஹெல்மெட் போட்டுக்கிட்டு போ.

ஹெல்மெட் போட்டாலும் இப்ப வெளியில் போகமுடியாதே!!

ஏன் மாமா! வண்டியில் பெட்ரோல் இல்லியா?!

அதெல்லாம் இருக்கு. சட்டைப்பையில் வச்ச பைசாதான் இல்ல. ஏண்டி! எனக்கு தெரியாம சட்டைப்பையிலிருந்து பணத்தைலாம் எடுக்குறியே! இது திருட்டு. இது தப்புன்னு உன் மரமண்டைக்கு உரைக்கலியா?! கொஞ்சமாச்சும் குற்ற உணர்ச்சி இருக்காடி உனக்கு?!

இப்படிலாம் குற்ற உணர்ச்சி வரக்கூடாதுன்னுதான் இந்த வீடியோவில் வர்றமாதிரி பணத்தை எடுத்தேன்...

ஏய் பேஸ்புக் பார்த்து பார்த்து நீ ரொம்ப கெட்டுப்போயிட்ட...

சிங்கத்தை கூண்டில் அடைச்சு வச்சா இப்படிதான் நடந்துக்கும். ஃப்ரீ பேர்டா சுத்திக்கிட்டு இருந்த என்னை உனக்கு கட்டி வச்சு என் லைஃபே போச்சு. இந்த வீடியோவில் இருக்க சிம்பான்சி மாதிரிதான் என் நிலையும்.... அந்த சிம்பான்சியும், நானும் ஒன்னுதான்.இப்பதாண்டி உண்மையை ஒத்துக்கிட்டே! நீயும் சிம்பான்சியும் ஒன்னுதான்...

!@#$%^&*_)(*&^%$#@!@#$%^&*()_)(*&^%$#@!~

நன்றியுடன்,
ராஜி


4 comments:

 1. பாக்கெட்டிலிருந்து பணம் எடுக்கும் காணொளி ரசித்தேன். sir விளக்கம் தெரிந்ததுதானே? அதனால் உபயோகிக்காமல் இருக்க முடியுமா?!

  ReplyDelete
 2. இது தெரியாமல் நான் பலரையும் சார்னு சொல்லிப்புட்டேனே....

  காணொளிகள் கண்டேன்.

  ReplyDelete
 3. ஆகா...! சகோதரிக்கு தான் எவ்வளவு அறிவு...!

  ReplyDelete
 4. பாக்கெட்டிலிருந்து பணம் எடுக்கும் காணொளி - ம்ம்ம்... இப்படியுமா! நடக்கட்டும் நடக்கட்டும். :)))

  ReplyDelete