Tuesday, July 30, 2019

புடலங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்

தேவையான பொருட்கள்..
புடலைங்காய்
கடலைபருப்பு
பாசிப்பருப்பு
மஞ்சள் தூள்
தேங்காய்
ப.மிளகாய்
வெங்காயம்
சீரகம்
கடுகு
எண்ணெய்
கறிவேப்பிலை
உப்பு

புடலைங்காயை கழுவி சின்ன சின்னதா வெட்டிக்கனும். கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊற வச்சு வேக வச்சுக்கனும்.

தேங்காய், ப.மிளகாய், சீரகம் இந்த நான்கையும் மிக்சில கொரகொரப்பா அரைச்சுக்கனும்..


 வெந்திருக்கும் கடலைப்பருப்போடு கொஞ்சூண்டு பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், புடலைங்காய் துண்டுகளை சேர்த்து வேக விட்டு எடுத்துக்கனும்...

 வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு பொரிய விடனும்..
அடுத்து கறிவேப்பிலை போடனும்....

 வெந்திருக்கும் புடலைங்காயினை சேர்க்கனும்...
தேவைக்கேற்ப உப்பு சேர்க்கனும்..

 அரைத்து வைத்திருக்கும் தேங்காய்+வெங்காயம்+சீரகம் விழுதினை சேர்த்து ரெண்டு நிமிசம் கொதிச்சதும் அடுப்பை அணைச்சுட்டு கொத்தமல்லி தூவிக்கனும்..

சீரகம் சேர்த்திருப்பதால் நல்லா வாசமா ருசியா இருக்கும். 

இதை இன்னொரு முறையாவும் செய்யலாம். கடலைப்பருப்பு+பாசிப்பருப்பை மஞ்சள் தூள்  சேர்த்து வேக வச்சு எடுத்துக்கனும். சீரகம்+கடுகு போட்டு தாளிச்சு, மிளகாய் கிள்ளிப்போட்டு வெட்டி வச்சிருக்கும் புடலைங்காயை சேர்த்து தண்ணி+உப்பு சேர்த்து வேகவிடனும். காய் வெந்ததும் பருப்பினை சேர்த்து கிளறி, அரைச்சு வச்சிருக்கும் தேங்காய் விழுதை சேர்த்துக்கனும்.. 

நன்றியுடன்,
ராஜி.

11 comments:

  1. தேவையான பொருட்கள் சொன்னீங்க சரி அதன் அளவு சொல்லவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. இதுக்கெல்லாமா அளவு?! கைக்கு வந்ததை போட வேண்டியதுதான்

      Delete
  2. ஐயே... புடலை எனக்கு பிடிக்கலை...

    ReplyDelete
    Replies
    1. வொய்ய்ய்ய்ய்ய்ய்?!

      Delete
  3. புடலங்காயும் ஒரு காயா! இருந்தாலும் என்ன செய்வது...இறைவன் மனிதனுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் காய்கறிகளைப் படைத்திருக்கிறான் என்று சாவி ஐயா சொன்னது நினைவுக்கு வருகிறது. சரி, தின்று வைப்போம்!

    -இராய செல்லப்பா (நியூஜெர்சியில் இருந்து)

    ReplyDelete
  4. பார்க்க கலர்ஃபுல்லாக நன்றாக வந்திருக்கிறது.

    ஆனாலும்..

    ஒரு ரகசியம் சொல்லவா..?!!

    புடலை எந்த ரூபத்திலும் எனக்குப் பிடிக்காது!!!!! ஹிஹிஹி...மிளகு, தேங்காய் அரைத்து விட்டுக்கூட்டு செய்தால் மட்டும் ரெண்டு ஸ்பூன் போட்டுப்பேன்!​

    ReplyDelete
  5. ராஜி அவர்கள் செய்முறைனா அதுல வெங்காயமும் பூண்டும் இருக்குமே...இன்றைக்கு பூண்டு மிஸ்ஸிங்.

    ReplyDelete
  6. புடலங்காயும் பிடிக்காதவர்கள் இருக்காங்க என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன். புடலை மிளகூட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். புடலை, பூசனி போன்றவை உடல் நலத்துக்கு மிக உதவும் காய்கறிகள்

    ReplyDelete
  7. அருமையா செஞ்சுருக்கீங்க ராஜி. மிகவும் பிடிக்கும்.

    தின்னவேலில இப்படித்தான் ஒரு சாரார் செய்வாங்க. சின்ன வெங்காயம் யூஸ் பண்ணுவாங்க ..அது ஒன்னுதான் வித்தியாசம்..

    கீதா

    ReplyDelete
  8. புடலங்காய் துகையல் கூட செய்யலாம்! நான் செய்வதுண்டு! இப்படிச் செய்வ[த]தில்லை. செய்து பார்க்கலாம் - ஒரு முறை!

    ReplyDelete