Wednesday, August 07, 2019

ஊர்க்காவலன் - முனீஸ்வரன் - சிறுதெய்வ வழிபாடு

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு
 – மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம்
 -ஔவையார் 
குலம் என்பது இன்னிக்கு நாம நினைக்குற மாதிரி ஜாதியினாலோ அல்லது செய்யும் தொழிலினாலோ  பிரிக்கப்பட்டதல்ல!! மாறக,  குறிப்பிட்ட குடும்ப வம்சம் எந்த தெய்வத்தை வழிபடுகிறது, எந்த மாதிரியான பூஜை முறைகளை கொண்டிருக்கிறது என்பதை பொறுத்து உருவானதே குலம் என்ற கோட்பாடு. 

ஓராயிரம் தெய்வங்கள் இருந்தாலும் ஒவ்வொரு குலத்தினையும் காக்க ஒரு தெய்வம் இருக்கும். அத்தெய்வமே குலதெய்வம் என அழைக்கப்படுகிறது.  குலதெய்வத்துக்கு மிஞ்சிய தெய்வமில்லை. குலதெய்வத்திற்கே வலிமை அதிகம். கடினமான வழிபாடு இல்லாமலேயே  கேட்ட வரத்தினை குலதெய்வம் தரும். குலதெய்வமென்பது பெரும்பாலும் கன்னியம்மன், முனிஸ்வரன், ஐய்யனார்.... என சிறு தெய்வமாகவே இருக்கும். எங்கோ ஒருசிலருக்கு மட்டுமே முருகன் மாதிரி பெரு தெய்வமாய் இருக்கும். சிவன், விஷ்ணுலான் குலதெய்வமாய் கொண்டவர்களை நான் கேட்டதே இல்ல. குலதெய்வம் சிறுதெய்வம்தானேன்னு அலட்சியப்படுத்தக்கூடாது. ஏன்னா, உயிரை பறிக்க வரும் எமன்கூட குலதெய்வத்துக்கிட்ட பர்மிஷன் வாங்கிதான் உயிரை எடுப்பாராம்
ஆரியர்களின் வருகைக்கு பின்னரே பெருதெய்வம் என சொல்லபடும் சிவன், விஷ்ணு, பிரம்மா, லட்சுமி,சரஸ்வதிக்கள் வழிபாடுலாம் இந்தியாவிற்குள் வந்தன. சிவ,விஷ்ணு வருகைக்குமுன்  நம்ம கன்னி கழியாத பெண்கள், அற்பாயுளில்/கொடூரமாய் கொல்லப்பட்டவர்களது ஆத்மா சாந்தியடையவும் மற்றும் நம் பித்ருக்கள் எனச்சொல்லப்படும் முன்னோர்கள்  தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்களையே குலதெய்வமாய் வழிபடும் வழக்கம் உண்டானது. இவர்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமை தனது வம்சாவளியினருக்கு  ஏற்படாமல்  காத்தனர். ஒருவரது குலதெய்வத்தினை கொண்டே அவங்க வம்சத்தை பத்தி தெரிஞ்சுக்கலாம்.

குலதெய்வ பிரார்த்தனை என்பது அப்பா, தாத்தா, முப்பாட்டன்... அவர்களுக்கும் மூத்தவர்களால் வணங்கப்பட்டு, வழிவழியாய் செய்யப்படும் வழிபாட்டு முறையாகும். இவ்வழிபாட்டுக்கான பூஜைகளை தங்கள் கையாலேயே செய்வது வழக்கம்.  ஒரு சில இடங்களில்  கோவில் பெருசா இருந்தால் நிர்வகிக்க பண்டாரம் எனப்படும் ஒரு குறிப்பிட்ட ஆட்களிடம்  ஒப்படைச்சு இருப்பாங்க. குலதெய்வம் கோவிலுக்கு போனால், தெய்வத்தோட ஆசி மட்டுமில்லாம நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். அதனால் வருசம் ஒருக்கா போய் வரனும்ன்னு பெரியவங்க சொல்வாங்க.
 குலதெய்வ கோவில்கள் லும் சின்னதா இருக்கும். அதனால், மற்ற தெய்வஙகளுக்கென தனித்தனி சன்னிதி இருப்பதில்லை. வினாயகரை வழிப்பட்ட பின்னரே எதையும் ஆரம்பிக்கும் பழக்கம் வந்தபின்னரும்கூட, குலதெய்வ கோவில்களில் அந்த நியதிலாம் பின்பற்றுவதில்ல. அதனால் எந்த ஒரு  தீங்கும் வராமல் குலதெய்வம் காத்து நிக்கும்.

மனிதனாய் பிறந்தவன் தாய் தந்தை, குலதெய்வம், ஊர் எல்லை தெய்வம், இஷ்ட தெய்வம், சிவன்/விஷ்ணு/முருகன் மாதிரியான பெரு தெய்வம். நமக்கு ஒரு கஷ்டம்ன்னா முதல்ல ஓடி வருவது அம்மா அப்பா, அடுத்து நம் குலதெய்வம், அடுத்து நம் ஊரில் இருக்கும் எல்லை தெய்வம், அடுத்து, அவரவர் ஜாதகரீதிப்படியாய் அமைந்த இஷ்ட தெய்வம், இவர்களுக்கு அடுத்து கட்டக்கடைசியாதான் ஓடிவரும் மற்ற தெய்வஙகள்லாம். அதனால் குலதெய்வ வழிபாட்டை எக்காரணம் கொண்டும் மறக்கக்கூடாது. சிறுதெய்வ வழிபாட்டில் இன்னிக்கு நாம பார்க்கப்போறது முனீஸ்வரன் சாமியை...
முனீஸ்வரர் சாமி காலங்காலமாக கிராம மக்கள் மட்டுமல்லாது நகரத்து மக்களும் பயபக்தியுடன் கும்பிட்டு வரும் சிறு தெய்வமாகும். வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாக, முனீஸ்வரன் அறியப்படுகிறார். . முற்காலத்தில், ஒரு கிராமத்தையே இரவில் கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றியதால் அவ்வூரின் காவல் தெய்வமாகி பின்னர், அவ்வூர் மக்கள் குடிப்பெயர்ந்த  இடங்களில்லாம் முனீஸ்வரன் பயணப்பட்டு பல்வேறு இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார்.

முனி சிவனுடைய அம்சம்ன்னு நம்பப்படுகிறார். சிவனைப்போலவே சுடுகாட்டு சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு, பாம்பைக் கழுத்தில் ஆபரணமாக அணிந்து, கையில் பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு அகோர ரூபத்தில் காட்சிதந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர். சிவபெருமானின் முழு அம்சம் பொருந்திய இவர், தன் காலினால் எமனின் உயிரையே வீழ்த்தும் அளவுக்கு அற்புத சக்திகள் நிறைந்தவர். முனீஸ்வரன் சாமி, ஜடா முனி - நாதமுனி, வேதமுனி, பூதமுனி, சக்திமுனி, மாயமுனி, மந்திரமுனி, பால்முனி, கருமுனி, சுடலைமுனி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். 

ஜடாமுனிக்குள் எல்லாவிதமான தெய்வங்களும்  அடங்கும். எல்லா தெய்வங்களையும் இவரால் கட்டுப்படுத்த முடியும். விரித்த சடையுடன் இருக்கும் ஜடாமுனியை வணங்குவதால் எதிரிகள் தொல்லை நீங்கும். தீமைகள் விலகும், வறுமை நீங்கும், பில்லி ஏவல் சூனியம் விலகும், எதிரிகள் செய்யும் கெடுதல்கள் விலகும். ஜடாமுனியின் முக்கிய அம்சமாக கருதப்படுவது, தண்ணீரில் தவம் இருக்கக் கூடிய சக்தி படைத்தவர். எப்பவும் தவக்கோலத்தில் இருப்பார். அவர் தவத்தை கலைக்காதவாறு இவரை பூஜித்து வந்தால் வேண்டிய பலன்கள்  கிடைக்கும் என்பது ஐதீகம்.


ஊருக்கு ஊர் வழிபாட்டில் வித்தியாசம் இருந்தாலும், பொதுவான முறையாக பொங்கல் இட்டு, மாவிளக்கு ஏற்றி, வடை, பால், பாயாசம், சுருட்டு, காதுமணி கருவளையம், கொழுக்கட்டை, இறைச்சி, அவல், பொரி, கடலை, மது என    படையல் இடுவது வழக்கம். உயிர்பலியும் கொடுப்பதுண்டு.

முத்தரையர் முனி/ முத்து முனி, சின்ன முத்திரையர்/முத்து முனி, நொண்டி முனி, ஜடா முனி, வாள் முனி, செம்முனி என்ற ஏழு முனிகளும் சப்த.முனிகள் என அழைக்கப்படுகிறார்கள். முனீஸ்வரர் நல்லிரவு பன்னிரண்டு மணிக்கூர் மேல் 5 மணிக்கூருக்குள் மட்டுமே நகர்வலம் பாரா உஷார் வருவதாகவும், அவ்வாறு வரும்போது எதிரில் யாராவது வந்தால் அடித்து கொன்று விடுவதாக கிராமங்களில் இன்றும் நம்பிக்கை நிலவுகிறது. பெரும்பாலும் முனீஸ்வரர் கோவிலில் மேல்விதானம் இருக்காது.  முறுக்கிய மீசை, விரித்த சடை, பிதுங்கும் செவ்விழி, கையில் வாளுடன் இருந்தாலும் முகத்தில் இனிமையும், வாயில் சிரிப்புமாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். புது வாகனங்களுக்கு பூஜை இடுதல்,  இரவில் பயந்து அழும் பிள்ளைகளுக்கு தோசம் கழிப்பது, தவறான நோக்கத்தோடு ஊருக்குள் நுழைபவரை தடுத்தல் என இவரது பணி நீளும்...

1860ம் ஆண்டுவரை, தலைமை செயலக இடத்தில், கோட்டை சாமியாக முனீஸ்வரன் அருள்பாலித்து வந்தார் அப்புறம், பல்லவன் பணிமனையின் முன்பக்கம் மாற்றப்பட்டார். அங்கதான் முன்னலாம் பஸ்களுக்கு, பாடி கட்டும் வேலைகள் நடந்தன. அதேமாதிரி, ரயில் பெட்டிகளுக்கு மேற்கூரை அமைக்கும் வேலையும் நடந்து வந்ததால், அங்கிருந்த முனீஸ்வரன் "பாடிகார்ட் முநீஸ்வரன்" ஆனார்.

மலேசியா செரிம்பன் நகரிலிருந்து 15கிமீ தூரத்தில் கோவில் கொண்டிருக்கும் வாழ்முனி ஒரு கையில் சூலமும், மறுகையில் ஸ்டெத்கோப்பும் இருப்பதால் ஸ்டெத்கோப் முனீஸ்வராகவும் அருள்பாலிக்கிறார்.

ஓம் பவாய நம:
ஓம் சர்வாய நம:
ஓம் 
ருத்ராய நம:
ஓம் பசுபதே நம:
ஓம் உக்ராய நம:

ஓம் மஹாதேவாய நம:
ஓம் பீமாய நம:
ஓம் 
ஈசாய நம:

சிறுதெய்வ வழிபாடு தொடரும்...
நன்றியுடன்,
ராஜி



14 comments:

  1. குலதெய்வ/ சிறுதெய்வ வழிபாடு தகவல்கள் சிறப்பு 👌

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. ஆரியர் வருகை என்பதும், எதியோப்பியாவில் முதலில் தோன்றிய மனிதன் தான் தமிழ்னாட்டிற்கு வந்துசேர்ந்தான் என்பதெல்லாம் ஆங்கிலேயர்கள் விட்ட கதை. என்றாலும் தமிழ் நாட்டில் (மட்டும்) ஒவ்வொரு ஊரிலும் ஊர்க்காவல் தெய்வம் -அனேகமாக அய்யனார் - எங்கள் வட ஆற்காடு மாவட்டத்தில் பெரும்பாலும் பெண் தெய்வங்கள் ரேணுகா / திரௌபதி / மாரியம்மன் என்ற பெயரிலும்
    காவல் தெய்வங்களாக வழிபட்டுவந்திருப்பது குறைந்த பட்சம் இருநூறு ஆண்டுகளாகவாவது இருந்திருக்கும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. நகரங்களே இல்லாத சூழ் நிலையில், அந்தந்த ஊர்களில் இவை ஆட்சி செய்துவந்துள்ளன. அந்த ஊர்க்காரர்களுக்கு இவை குலதெய்வங்களாக கருதப்பட்டு அவர்கள்மீது ஓர் இறுக்கமான கட்டுப்பாட்டை செலுத்திவந்தன. அதனால் தான் பூசாரிகள் அதிக செல்வாக்கு பெற ஆரம்பித்திருக்க வேண்டும்.

    அந்த ஊர் மக்கள் பிற்பாடு நகரங்களுக்கு வந்தபோது தங்கள் ஊர்த் தெய்வங்களையும் கொண்டுவந்து நட்டார்கள் என்று தெரிகிறது.

    எப்படியாயினும், தெய்வத்தைத் தொழும் சிறிது நேரத்திலாவது மனிதர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கிறார்கள் என்பதே மிகப்பெரிய பயன் அல்லவா?


    ReplyDelete
    Replies
    1. இங்க எது தெய்வம்ன்னுதானே விவாதமே! நம் மண்ணில் முதல்ல தாய் வழிபாடுதான் இருந்துச்சு. அதுக்கு அடுத்து கொற்றவை வழிபாடு வந்தது. அதற்கு அடுத்து முருகன்.. அதன்பிறகே சிவனுக்கு முருகன் மகனானார். ஆதியில் முருகன் கதையில் வள்ளி மட்டுமே இருந்தாங்க. பிறகுதான் தெய்வானை உட்புகுந்தாங்க.

      Delete
  3. எங்கள் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு முனீஸ்வர மரம் இருந்தது. நான் திருமணத்துக்குமுன் அலுவலகத்திலேயே தங்கி இருந்த காலங்களில் அந்த மரத்தை இரவு நேரங்களில் கடக்க பயமுறுத்துவார்கள். நான் அந்த காவல் தெய்வம் இருக்கும்போது என்ன கவலை என்று தனியாய் தங்கியிருந்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்கு பயப்படலாமா?! இதை சொன்னா சிரிப்பாய்ங்க. தப்பு செஞ்சாதான் பயப்படனும்.

      Delete
  4. இப்படி பல தகவல்கள் சொல்லி பயமுறுத்தலாமோ...?

    முனீஸ்வரன் மாதிரியே...!

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே படித்தது, கேட்டது...

      ஒருக்காலத்தில் நாந்தான் உங்களை கண்டு பயந்திருக்கேன்.

      Delete
  5. முனீஸ்வரன் பற்றி அரிய செய்திகளை அறிந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிப்பா

      Delete
  6. நிறைய தகவல்கள் கலெக்ஷன் ராஜி.

    காவல் தெய்வம், ஊர் எல்லை தெய்வம் இல்லாத ஊர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்...

    மிகச் சிறு வயதில் இந்தக் காவல் தெய்வத்திற்குக் கொடை கொடுக்கும் விழா என்று நடக்கும். அப்போது பயமுறுத்தப்பட்டதால் பயம் இருந்தது. ஆனால் அதன் பின் இல்லை. அவர் என்ன செய்யப்போகிறார். காப்பவர்தானே. நாம் தான் தெய்வம் கொல்லும் தண்டிக்கும் என்று சொல்லிக் கொள்வது. நாம் செய்யும் தவறுகளுக்கு நாம் தண்டனை அனுபவிப்போமே தவிர அதற்கும் தெய்வத்திற்கும் தொடர்பு இல்லை. என்றாலும் அவை எல்லாம் சொல்லப்பட்டது மனிதன் நல்லவனாய் இருக்க வேண்டும் அந்த பயத்திலேனும் இருக்கமாட்டானா என்று சொல்லப்பட்டதே.

    என் தனிப்பட்டக் கருத்து எல்லா இறையும் ஒன்றே.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன் கீதாக்கா

      Delete