Sunday, September 08, 2019

என் ஜீவன் பாடுது.. உன்னைத்தான் தேடுது.. - பாட்டு புத்தகம்

எள்ளலும் எகத்தாளமுமாய் காதல் பாடல்பாடி நம்மையும் ரொமாண்டிக் மூடுக்கு கொண்டு போறதில் எஸ்.பி.பியை மிஞ்ச யாருமில்லை. அதேப்போல் சோகப்பாடல்களைப்பாடி நம் கண்ணில் நீரை வரவழைப்பதில் கே.ஜே.யேசுதாஸைவிட யாருமில்லை. தாஸன்னான்னு இளையராஜாவால் செல்லமாய் கூப்பிடப்படும் யேசுதாஸ் பல பாடல்களை பாடி இருந்தாலும யேசுதாஸின் டாப் டென் பாடல்கள்ன்னு வரிசைப்படுத்தினால் அதில் நீதானா அந்தக்குயில் படத்தில் வரும்  என் ஜீவன் பாடுது..உன்னைத்தான் தேடுது...பாடல் கட்டாயம் இருக்கும்.

பாட்டின் முதலில் வரும் ஹம்மிங்க் பாட்டு சுமந்து வரும் சோகத்துக்கு கட்டியம் கூறி நம்மை அழைத்துச்சொல்லும்.  பாடலின் இடையிடையே ஒலிக்கும் உடுக்கை சத்தம்  நம் மனசின் அடி ஆழத்திலிருக்கும் சோகத்தை அசைச்சு வெளிக்கொணர்ந்துட்டுதான் ஓயும். பாடல், வரிகள், இசைன்னு இந்த  பாட்டு ஹிட்டடிக்க பல காரணங்கள் இருந்தாலும், இந்த படம் ஹிட் அடிக்காம போனதுக்கு ஒரே காரணமாதான் இருக்கும். அது இந்த படத்துல நடிச்ச ராஜா. செத்தவன் கையில் கொடுத்த வெத்தலை பாக்கு மாதிரின்னு எங்க ஊர் பக்கம் சொல்வாங்க, அந்த மாதிரி, உணர்ச்சிகொந்தளிப்பில் ஒலிக்கும் இந்த பாட்டை எந்தவித உணர்ச்சியுமில்லாம வெறும் வாயை மட்டுமே அசைச்சு சொதப்பி வச்சிருப்பாரு.

இரவுப்பயணத்தின்போது இந்த பாட்டை கேட்டா, கண்ணில் நீர் எட்டிப்பார்க்காம இருக்காது...
என் ஜீவன் பாடுது, உன்னைத்தான் தேடுது..
என் ஜீவன் பாடுது, உன்னைத்தான் தேடுது...
காணாமல் ஏங்குது, மனம் வாடுது...
எங்கே என் பாதை மாறி, எங்கெங்கோ தேடி தேடி....
என் ஜீவன் பாடுது.. உன்னைத்தான் தேடுது...
ஆஆஆஆ

கண்ணோடு மலர்ந்த காதல் ,
நெஞ்சோடு கனிந்த நேசம்
பொன்னாக வளர வேண்டும் வாழ்விலே!
ஒன்றோடு ஒன்று சேரும் .

உல்லாசம் வாழ்வில் கூடும் 

என்றே நான் நினைத்தேன் உண்மை நீரிலே...

உன் மேனி சேர துடிக்குது ஓர் மனம்,
கல்யாண காலம் வந்ததும் திருமணம்
எப்போது அந்த சொர்க்கம் தோணுமோ?! 
ஆஆஆஆஆஆ..

என் ஜீவன் பாடுது..உன்னைத்தான் தேடுது..

நெஞ்சத்தை திறந்து வைத்தேன்.
எண்ணத்தை சொல்லி வைத்தேன்.
என் ராணி மனசு இன்னும் தெரியலே!!
முல்லைப்பூ வாங்கி வந்தேன்.
முத்தாட ஏங்கி நின்றேன்.
கொண்டாட காதல் நாயகி வரவில்லை!!
என் ஜீவன் போனப்பாதையில் போகிறேன்..
என் நெஞ்சில் பொங்கும் கேள்வியை கேட்கிறேன்
அன்பே என் காலம் யாவும் நீயன்றோ?!!
ஆஆஆ..

என் ஜீவன் பாடுது..உன்னைத்தான் தேடுது...

படம்: நீதானா அந்தக்குயில்..
நடிகர்கள் :ராஜா, ரஞ்சனி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

அடுத்த வாரம் கார்த்திக் பாட்டோடு வர்றேன். அதுக்கொரு காரணம் இருக்கு.. என்னன்னு ஒருவாரம் வெயிட் செய்யண்டி!!
நன்றியுடன், 
ராஜி. 

5 comments:

 1. இளையராஜா இசையில வந்த எல்லா ரொமான்டிக் பாடல்கள் எல்லாமை இனிமையானவை. எனக்கும் என் ஜீவன் பாடுது என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.

  ReplyDelete
 2. நல்ல பாடல். எனக்கும் இந்தப் பாடல் பிடித்த பாடல்.

  ReplyDelete
 3. // செய்யண்டி!!//
  இங்கேருடா இந்தம்மாவுக்கு வந்த கவருனரு ஆசய

  ReplyDelete
 4. பிடித்த பாடல்களில் ஒன்று.
  சில வெள்ளிகளுக்கு முன்னால் நான் பகிர்ந்த கார்த்திக் பாடல் ஒன்றில் உங்களை நினைவு கூர்ந்திருந்தேன்.

  ReplyDelete