Monday, February 03, 2020

பொண்ணுங்க புருசனை எப்படிலாம் கூப்ப்பிடுவாங்க?! - ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள!! நான் வீட்டுக்கு வருவதுக்கூட தெரியாம போன்ல யார்கிட்ட அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கே?!
அரட்டைலாம் அடிக்கல. ராஜிக்கு உடம்புக்கு முடியலியே! அவளைதான் விசாரிச்சுக்கிட்டு இருந்தேன்.

உன் பிரண்டுக்கு இப்ப கால் எப்படி இருக்காம்?1
குணமாகிட்டே வர்றா. ஆனாலும் பழையபடி நடக்க இன்னும் 1 மாசத்துக்கு ஆகுமாம். அவ கால் எலும்பு முறிவுக்காக ஹாஸ்பிட்டல் போகும்போது, அங்க 45 நாட்களே ஆன பெண்குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு வந்திருக்காங்க. குழந்தைக்கு தடுப்பூசி போட போகும்போது,  குழந்தையின் தாயும், தகப்பனும் குழந்தையோடு டூவீலர்ல  போய் இருக்காங்க. ஹாஸ்பிட்டலில் இருந்து  வரும்போது தாயின் கையிலிருந்து  குழந்தை நழுவி விழுந்திட்டிருக்கு. குழந்தையின் கால் உடஞ்சு போச்சுதாம். குழந்தையி பிடிக்கப்போன அம்மாவும் கீழ விழுந்து முகத்துல அடிபட்டு பல்லுலாம் கொட்டி போயிருக்கு.

குழந்தையை   இப்படி அஜாக்கிரதையாகவா கொண்டு போவாங்க?! ஒருவேளை  குழந்தையோட அம்மா தூங்கிடுச்சோ! 


அதுலாம் இல்ல மாமா! இப்ப குழந்தைகளுக்குன்னு ஒரு பேக் மாதிரி  ஸ்லீப்பிங் பேக் வந்திருக்கே! அதுல வச்சு கொண்டு போய் இருக்காங்க.அதிலிருந்து நழுவி  கீழ விழுந்திருக்கு. இந்தமாதிரி பேக்ல இருந்து விழுந்த குழந்தை இறந்தே போச்சுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இப்பதான் அனுபவப்பூர்வமா பார்த்தேன்.

குளிர்பிரதேச நாடுகளில் குழந்தைகளை குளிரிலிருந்து காப்பாத்த இந்த மாதிரி பைகளை தச்சு குழந்தைகளை இதில் வச்சுப்பாங்க புள்ள. ஆனா, உஷ்ணப்பிரதேசமான நம்மூருக்கு இது தேவையான்னு நம்மாட்கள் யோசிப்பதே இல்ல. இதனால் குழந்தைக்கு உடல் சூடு, சருமக்கோளாறு என பலவித பிரச்சனைகள் வருவதோடு இதுமாதிரியான விபத்துகளும் நடக்கும்ன்னு இனியாவது நம்ம பொண்ணுங்க யோசிக்கனும்.

ஆமா மாமா! ராஜியோட பையனும் இதேதான் அந்தம்மாக்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கான். ஆண்டி! நான் பிசியோதெரபி டாக்டர்ங்குற முறையில் என் கண்ணீல் படும்போது இந்தமாதிரியான பேக்கை தவிர்க்க சொல்வேன். இனிமே எனக்காக இந்த பேக்கை பயன்படுத்தாதீங்க.ன்னு சொல்லி குழந்தைக்கு தேவையான  பயிற்சிகளை சொல்லிக்கொடுத்து  பயந்துபோய் இருந்த பெத்தவங்களுக்கு ஆறுதலும் சொல்லி வந்திருக்கான். 

ம்ம் நல்ல விசயம்தான் செஞ்சிருக்கான். இதேமாதிரிதான் தேவையில்லாத இன்னொரு விசயத்தை நம்ப பொண்ணுங்க செய்யுது. 

அது என்ன மாமா!?

அழகா இருக்க புருவம் திருத்துறேன்னு பார்லர் போய் த்ரெட்டிங்க்ன்னு செஞ்சு தங்களோட ஆயுளை குறைச்சுக்குறாங்கன்னு..

ஐயோ! இதென்ன மாமா புது கதையா இருக்கு?!

கதைலாம் இல்ல.  புருவமுடிகள்தான் பிராணன் இயங்கும் இடங்கள்ன்னு வைத்திய சாஸ்திரங்கள் சொல்லுது.  மூப்படைஞ்சு இறப்பு நெருங்கும்போது  புருவமுடிகளை தொடும்போதே கையோடு வந்திடும்.  இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது , கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் , பொட்டு வர்மம் (அல்)சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில் பாதிப்புகள் உண்டாகும். இந்த புருவ முடிகளை திருத்துகின்ற பார்லர் பெண்களுக்கு இந்த வர்ம புள்ளிகளைப்பத்தி தெரிய வாய்ப்பில்லை.


விசயம் தெரியாம புருவங்களை திருத்துறதால பெண்களின் பிராண சக்தி குறையும். குறைவான பிராண சக்தியால் அவங்க ஆயுள் குறைவதோடு, பிராண சக்தி குறைவான பிள்ளைகளை பெறுகின்றனர். வர்மப்புள்ளிகளை சரிவர தெரிஞ்சுக்காம அதை கையாளும்போது அந்தந்த வர்மங்களில் நிலைக்கொண்டிருக்கும் மின்காந்த சக்தியை சிதைக்கப்படுகிறது. மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் அனைத்தும் கண்களுக்கு அருகில் ஓடுகின்றது அதுலலாம் கைவைக்குறது நமக்கு நாமே கொள்ளி வைக்குறதுக்கு சமம். சுத்தமான விளக்கெண்ணெயை தொட்டு கண்புருவங்களில் வச்சு வந்தாலே புருவம் அடர்த்தியா வளரும். அழகும் கூடும். அத்தோடு, பிராணன் சக்தியும் வீணாகமல் தேக நலனும், மன ஆரோக்கியமுள்ள குழந்தைகளை பெற்று சமுதாயத்திற்கும் நல்லது செய்யலாம்.

இதை நம்ப பொண்ணுங்க புரிஞ்சு நடந்துக்கிட்டா சரிதான் மாமா. ஆனா, ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் அறிவுகூட நமக்கு இல்லன்னுதான் சொல்லனும். இந்த ஐந்தறிவு ஜீவனுக்கு பாசமும், அறிவையும் பாருங்களேன்.

ஐந்தறிவு ஜீவனுக்கு இருக்கும் பாசம் ஆச்சரியப்படத்தான் வைக்குது புள்ள. சரி, பொம்பளைக தன்னோட புருசனை எப்படிலாம் கூப்பிடுவாங்கன்னு தெரியுமா புள்ள?!

ம்ம்ம்  ஆதிகாலம்ன்னா பிராணநாதா! சுவாமி! இடைப்பட்ட காலம்ன்னா அத்தான், மாமா. ஒரு பத்து வருசத்துக்குள்ளன்னா பேபி, ஹனி, மாம்ஸ்,மாமு.. இப்பன்னா பேர் சொல்லி கூப்பிடுதுங்க. இன்னும் சிலதுங்க டேய்ன்னுலாம் வூட்டுக்காரரை கூப்பிடுதுக மாமா.

அத்தான்னு ஏன் பொண்ணுங்க கூப்பிடுறாங்கன்னு தெரியுமா?!

ம்ம் தெரியுமே! தமிழ் உயிரெழுத்தின் முதல் எழுத்தான “அ”.ன்னு தொடங்கி,  மெய்யெழுத்தின் கடைசியான“ன்”ன்னும் முடியுற மாதிரி அத்தான்”ன்னு கூப்பிடுவாங்க. அதாவது என் உயிரும் நீதான், என் மெய்(உடலும்) நீதான்னு சொல்லாம சொல்லத்தான் அத்தான்னு கூப்பிட்டாங்க.  உயிரிலும், மெய்(உடலிலும்) கலந்த உறவு நீங்கன்ற அர்த்தத்துலதான் அத்தான்னு சொன்னாங்க.

அவங்க சொன்னதுலாம் இருக்கட்டும். என் கேள்விக்கு பதில் சொல்லுங்க..
முகம் பார்த்து வளரும்..
முடிவில்லாமல் தொடரும்..
அது என்னன்னு சொல்லு மாமா..

நன்றியுடன்,
ராஜி.

7 comments:

 1. சுவையான அவியல்.

  அந்த மாடு ஓடி வர்ம் காணொளி மீண்டும் பார்க்கத் தந்தமைக்கு நன்றி. எத்தனை பாசம்...

  அத்தான் - நல்ல அர்த்தம் தான்! :)

  புருவம் திருத்திக் கொள்வது - இதெல்லாம் சொன்னா, உங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்பவர்கள் தான் அதிகம்.

  ReplyDelete
 2. குழந்தை விழுந்த விஷயம் மனதை வருத்தியது.   சிக்கனம் பார்க்காமல் ஆட்டோவில் போயிருக்கலாம்.  புருவ முடி மர்மம் அறிந்தேன்!  காணொளி ரசித்தேன்.  புதிருக்கு DD விடை சொல்வார்!

  ReplyDelete
 3. ஆரம்பம் அ

  முடிவில் ன்

  என்னைப்பொறுத்தவரை திருக்குறள்

  ReplyDelete
 4. அத்தான்னு ஏன் சொல்றாங்கன்னா...என் மூக்குத்தியை அத்தான், செயினை அத்தான், வளையலை அத்தான், கொலுசை அத்தான்....

  ReplyDelete
 5. அருமையான தகவல்களுடன் இன்றைய அவியல்...

  ReplyDelete