சிலபல வருடங்களுக்கு முன் மதுரை, திருச்செந்தூர், குற்றாலம்ன்னு தென் தமிழகத்தில் ஒரு வாரம் குடும்பத்தோடு டூர் போனோம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளை தரிசனம் செய்து முடிச்சோம். அப்பதான் கோவிலில் அன்னதான திட்டம் அறிமுகப்பட்டிருந்தது. தரிசனம் முடிச்சு வரும் வெளியூர் பக்தர்களுக்கு டோக்கன் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. எங்க வீட்டில் யாரும் அன்னதானத்தில் சாப்பாடு வாங்கி சாப்பிடுறதை கௌரவக்குறைச்சலா நினைக்க மாட்டோம். அதனால் டோக்கன் வாங்கி சாப்பிட உக்காந்தோம்...
Showing posts with label கத்தரிக்காய். Show all posts
Showing posts with label கத்தரிக்காய். Show all posts
Tuesday, June 09, 2020
Tuesday, September 03, 2019
கத்திரிக்காய் காரக்குழம்பு - கிச்சன் கார்னர்

ஆரணிக்கு பக்கத்தில் படைவேடுன்னு ஒரு ஊர் இருக்கு. அங்க புகழ்பெற்ற ரேணுகாம்பாள் ஆலயம் இருக்கு. அங்கு அம்மன் கோவில் மட்டுமில்லாம அந்த ஊரில் விளையும் புளி, இளநீர், கத்தரிக்காய், தக்காளிக்கென தனி மவுசு எங்க ஊரில் உண்டு. அதிகாலையில் எங்க ஊர் உழவர் சந்தையில் கீரைகள், பப்பாளி, தேங்காய், தென்னந்துடைப்பம்ன்னு கடை விரிச்சிருப்பாங்க. வயலட் கத்தரிக்காய், வெள்ளை கத்தரிக்காய், நாம கத்தரிக்காய்ன்னு எத்தனையோ விதங்கள் கத்தரிக்காய் இருந்தாலும், எங்க ஊர் கத்தரிக்காய் ருசிக்கு ஈடாகாது.
காம்பில் சின்ன சின்னதா முட்கள் இருப்பதால் இதற்கு முள் கத்தரிக்காய்ன்னு எங்க ஊர்பக்கம் பேரு வச்சிருக்கோம். வயலட் நிறத்தில் மினுமினுன்னு குண்டு குண்டாய் இருக்கும். எல்லா கத்தரிக்காயிலும் காம்பையும், கத்தரிக்காயையும் இணைக்கும் பாவாடை பகுதி பிஞ்சாய் இருக்கும்போது ஒட்டிக்கிட்டு இருக்கும். காய் பெருசாக ஆக... பாவாடை பகுதி சிறிதாய் ஆகி, கத்தரிக்காயிலிருந்து பிரிஞ்சு இருக்கும். ஆனா, எங்க ஊரு கத்தரிக்காய்ல பாவாடை பகுதி பெருசாவும், காய் பெருசானாலும் காயோடு பாவாடை ஒட்டிக்கிட்டும் இருக்கும். சாம்பார், காரக்குழம்பு, பொரியல், அவியல்ன்னு ஒருமுறை எங்க ஊர் கத்தரிக்காயை சமைச்சு சாப்பிட்டால் அதன் ருசியை மறக்கவே மாட்டாங்க. அரிசி, பருப்பு மாதிரி கத்தரிக்காய் எங்க வீட்டில் எப்பயும் ஸ்டாக் இருக்கும்.
எங்க வீட்டு பசங்களுக்கு, புதுசா வாங்கின குட்டியூண்டு பிஞ்சு கத்தரிக்காயை லேசாய் கீறி முழுசா போட்டு காரக்குழம்பு வைக்கனும். இதுக்காகவே பார்த்து பார்த்து வாங்குவேன். கத்தரிக்காய் காரக்குழம்பு எப்படி வைக்குறதுன்னு பார்க்கலாம். எங்க ஊரு கத்தரிக்காய்ன்னு இல்ல, எந்த ஊரு கத்தரிக்காய்லயும் இந்த குழம்பை செய்யலாம். ஆனா, ருசியில் நிச்சயம் வித்தியாசம் தெரியும்.
தேவையான பொருட்கள்...
வெங்காயம்
தக்காளி
பிஞ்சு கத்தரிக்காய்(சின்ன சைஸ்)
எண்ணெய்
குழம்பு மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
சீரகம்-1/4 டீஸ்பூன்
சோம்பு-1/4 டீஸ்பூன்
கடுகு
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு- 4 பற்கள்
உப்பு
புளி
வாணலியில் கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி காய்ந்ததும், வெங்காயத்தை பெருசு பெருசா வெட்டி லேசாய் வதக்கனும்.. வெங்காயம் லேசாய் நிறம் மாறினாலே போதும்.
இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கனும்...
தக்காளி சேர்த்து வதக்கனும்...
மிளகாய் தூள் சேர்த்து வதக்கனும்..மஞ்சப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்துக்கனும்..
சீரகத்தை சேர்த்து வதக்கனும்,
சோம்பு சேர்த்து வதக்கி அடுப்பை அணைச்சு, ஆறவச்சு கொரகொரப்பா அரைச்சுக்கனும்..
கத்தரிக்காயின் நுனிகாம்பை மட்டும் வெட்டிட்டு, கத்தரிக்காயின் பின்பக்கம் ஆறு, ஏழு, எட்டு என கத்தரிக்காயின் முக்கால் பாகம் வரைக்கும் வெட்டிக்கனும். முழுசா வெட்டாம கவனமா இருக்கனும். வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும், வெட்டி வச்சிருக்கும் முழு கத்தரிக்காயினுள் அரைச்சு வச்சிருக்கும் விழுதினை தடவி எண்ணெயில் வதக்கி எடுத்துக்கனும்.
வெட்டி வச்சிருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கனும்.. சின்ன வெங்காயமா இருந்தால் குழம்பின் ருசி கூடும். எங்க ஊர் பக்கம்லாம் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60க்கு குறைவா கிடைக்காது. அதனால், எப்பயுமே பெல்லாரி வெங்காயம்தான்.
கறிவேப்பிலை, கொ.மல்லி சேர்த்து வதக்கனும்..
அரைச்சு வச்சிருக்கும் விழுதினை சேர்த்து வதக்கனும்..வதக்கி வச்சிருக்கும் கத்தரிக்காயை சேர்த்து கொதிக்க விடனும்..
கொதிச்சு பச்சை வாசனை போனதும், கத்தரிக்காய் வெந்தபின் புளிக்கரைச்சலை சேர்த்துக்கனும்.

அவரவர் விருப்பப்படி பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைச்சுடனும். கொஞ்சம் கெட்டியா இருந்தால்தான் இந்த குழம்பு நல்லா இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துக்கு நல்லா இருக்கும்.
நன்றியுடன்,
ராஜி
Thursday, August 08, 2013
கத்திரிக்கா!! கத்திரிக்கா!! குண்டு கத்திரிக்கா!! -ஆண்கள் ஸ்பெஷல்
ஒரு சட்டையோ இல்ல ஃபேண்டோ வாங்கும்போது திருப்பி திருப்பி பார்த்து வாங்கி வரும் நம்ம ஆளுங்களை ”ஒரு கால் கிலோ கத்திரிக்காயும், அரைக்கிலோ வெங்காயமும் வாங்கி வாங்க”ன்னு அனுப்பினா...,
கடைக்காரர் வாயையே பார்த்துக்கிட்டு கத்திரிக்காயில பாதி சொத்தையாவும் வெங்காயத்துல பாதி அழுகலாவும் வாங்கி வருவாங்க. இவங்களுக்குன்னே இதெல்லம் எடுத்து வச்சிருப்பாங்களோ தலையில் கட்ட!!
ஒரு கத்திரிக்காய் வாங்க துப்பில்லே நீயெல்லாம் ஒரு ஆஃபீசுல மேனேஜரா எப்படிதான் குப்பை கொட்டுறியோ?!ன்னு நம்ம சகோ’ஸ் பேச்சும், ஏச்சும் வாங்கக்கூடாதுன்னுதான் இந்த பதிவு....,
வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமயும்,உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்கனும்...,
வெள்ளை வெங்காயத்தை நசுக்கி பார்த்தா சாறு வரும்படி இருக்கனும்.(அதுக்காக, ரொம்ப அழுத்தமா நசுக்கி ஜூஸ் எடுத்துட்டு கடைக்காரர்கிட்ட அடி வாங்குனா கம்பெனி பொறுப்பேற்காது)
முருங்கைக்காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களால லேசா முறுக்கினா, ஈசியா வளைஞ்சா அது நல்ல முருங்கைகாய். ஒடிஞ்சா அது முத்தல்.
சர்க்கரைவள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடிப்பட்டு கருப்பா இருந்தா கசக்கும்
மக்காச்சோளம் அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
கோவக்காய் முழுக்க பச்சையா வாங்கனும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேணாம். பழுத்தது ருசி இல்லாம இருக்கும்
சின்ன வெங்க்யாம் வாங்கும்போது பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருக்குறதும், முத்து முத்தாக தெளிவா இருப்பதை வாங்கவும்
தோல் சுருங்காம இருக்கனும். கரும்பச்சையில இருந்தாலும் வாங்கவேணாம்.
காலிபிளவர் பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாம அடர்த்தியா காம்பு தடினமனா இல்லாம வாங்கனும். எடை போடும்போது இலை தண்டை வெட்டிட்டு எடை போட சொல்லுங்க.
சர்க்கரைவள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடிப்பட்டு கருப்பா இருந்தா கசக்கும்
மக்காச்சோளம் அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
கோவக்காய் முழுக்க பச்சையா வாங்கனும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேணாம். பழுத்தது ருசி இல்லாம இருக்கும்
சின்ன வெங்க்யாம் வாங்கும்போது பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருக்குறதும், முத்து முத்தாக தெளிவா இருப்பதை வாங்கவும்
தோல் சுருங்காம இருக்கனும். கரும்பச்சையில இருந்தாலும் வாங்கவேணாம்.
காலிபிளவர் பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாம அடர்த்தியா காம்பு தடினமனா இல்லாம வாங்கனும். எடை போடும்போது இலை தண்டை வெட்டிட்டு எடை போட சொல்லுங்க.
மாங்காய வாங்கும்போது தட்டி பார்க்கும்போது டொக்க்ன்னு சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சின்னதா இருக்கும்
பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ): அடிப் பகுதி குண்டா இல்லாம காய் முழுதும் ஒரே சைசில் இருக்குற மாதிரி பார்த்து வாங்குறது நல்லது
புடலங்காய் கொஞ்சம் கெட்டியா அழுத்தமா இருக்குற மாதிரி பார்த்து வாங்குங்க. அப்போதுன் விதைப்பகுதி குறைவா, சதைபகுதி அதிகமா இருக்கும்
உருளை கிழங்கு முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர மாதிரி இருக்கனும்.
கருணை கிழங்கு முழுசா வாங்கும் போது பெரியதா பார்த்து வாங்குறது நல்லது. வெட்டிய கிழங்கை வாங்குனா, உள்ள இளம்சிவப்பு நிறத்துல இருக்குமாறு வாங்கவும்
சேப்பங்கிழங்கு முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது.கொஞ்சம் உருண்டையா பார் த்து வாங்கவும்
பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும். கீழ் பகுதில வால் முளைக்காமயும் பார்த்து வாங்குங்க.
இஞ்சி லேசா கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வந்தா வாங்குங்க.இதுல நார் குறைவா இருக்கும்.
கத்திரிக்காய் தோல் சாஃப்டா இருக்கனும். மேல் காம்பு தடிமனா இல்லாம, மேல்தோல் கத்திரிக்காயோடு ஒட்டி இருக்கனும்.
சுரைக்காயை நகத்தால அழுத்தினா நகம் உள்ளே இறங்னும். அப்போ தான் அது இளசு.
பூண்டு பல் பல்லா வெளியே தெரியனும். இல்லாட்டி உள்ளே பூச்சி, பூஞ்சை இருக்க வாய்ப்பு அதிகம்.
அவரைக்காய் தொட்டு பார்த்து விதைகள் பெரிதா இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசா வாங்கினா நார் அதிகம் இருக்காது
பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது.
வாழைப்பூவோட மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா?! என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் பூன்னு அர்த்தம்.
மொச்சைக்காய் வாங்கும்ப்போது கொட்டை பெரிதா தெரியும் காய் பார்த்து வாங்கவும்
சௌசௌ வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தா முற்றிய காய்
முள்ளங்கி லேசாக கீறினா தோல் மென்மையா இருந்தா அது இளசு- நல்ல காய்.
பச்சை மிளகாய் நீளமானது காரம் குறைவா இருக்கும்.
குண்டா இருக்குறதுதான் காரம் தூக்கலாகவும் வாசனையும் பிரமாதமாக இருக்கும்.
இப்படி பார்த்து பார்த்து காய் வாங்கிட்டு போய் வூட்டம்மாக்கிட்ட நல்ல பேரு எடுங்க சகோ’ஸ்
Subscribe to:
Posts (Atom)
