Showing posts with label தூக்கம். Show all posts
Showing posts with label தூக்கம். Show all posts

Saturday, November 09, 2013

கனவு தேவதை


குளிருக்கு இதமாய்
போர்வைக்குள் சுருண்டிருந்த அதிகாலை...,
மொட்டுகள் மலர்ந்து மனம் வீச
காத்திருக்கும் வேளையில்,
காத்திருந்தேன். என் கண்ணம்மாவுக்காக!!

முத்தம் தருவாள்!
வாழ்வை வசந்தமாக்குவாள்!
என கற்பனையில் மிதந்தேன்.
அதோ, வந்தே விட்டாள் என்னவள்!
தேவதையும் தோற்கும் விதமான அழகோடு!!

அன்ன நடை பின்ன, 
குயிலிசை தோற்கடிக்கும் 
குரலோடு,என்னைக் 
கொஞ்சியவள் நெற்றியோ
 மூன்றாம் பிறை!!

கிளிக்கு போட்டியிடும் சிவந்த
அதரங்கள், ஆப்பிள் கன்னம்,
கூர் நாசி, கேள்விக்குறியென 
வளைந்த காது!!  அவள் முகமன்றி,
 மற்றவையெல்லாம், அவுட் ஆஃப் ஃபோகஸ்!!

காதோரம் என்னவோ கேட்டவள்,
என் பதில்லாமல் போகவே,
மெல்ல குட்டியவள் கைகள்
அத்தனை மிருது!!

மிருதுவான கைகளுக்கு இவ்வளவு
வலிமையா!? மண்டை ”வின்”னென்றது!!
கண் விழித்து பார்த்தேன். அருகினில்
நிற்பவளின் முகத்தை!!

ஆ! என் மனைவி!!
பூரிக்கட்டை ஆயுதமேந்தி,
காளி அவதாரம் கொண்டு....,

Thursday, September 27, 2012

உறங்காமலே காத்திருக்கிறேன்....,


என் கனவே! 
நீ என்பதால்தான் 
கலைந்துபோகும் 
உறக்கத்தை வெறுக்கிறேன்...,

நான் உன் விழிக்கு
இமையாக மட்டும் அல்ல...,
உறக்கத்திலும் கூட
உன்னைக் காக்கும்
விழியாவேன்...,

நீ, 
என்னுடன்  வாழ்ந்ததிற்கான 
ஆதாரங்களை உன்னுள்
 நான் காணவும்...

உன்னுடன், 
 நான் வாழ்ந்ததிற்கான??!!
 ஆதாரங்களை
என்னுள் நீ உணரவும்...

நீ வேண்டும்!
விரைந்து வா...
என் உயிரே! உறங்காமலே
உனக்காக காத்திருகிறேன்...
 

Tuesday, December 20, 2011

ஆபீசுல தூங்குபவரா நீங்க..., உங்களுக்கான டிப்ஸ்

ஆபீசுல தூங்குபவரா நீங்க.     அப்பிடி தூங்கி மேலதிகாரிக்கிட்ட மாட்டி  அடிக்கடி டோஸ் வாங்குபவரா? உங்களுக்கான டிப்ஸ் இதோ...,
இதுப்போல செய்தால் மேலதிகாரிங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க வேணாம் பாருங்க. ரொம்ப யோசிச்சு யாரோ ஒரு புத்திசாலி இப்படிலாம் ஐடியா கண்டுபிடிச்சிருக்காரு பாருங்க.     





டிஸ்கி: நம்ம பிளாக்கர்ஸ் யாரும் ஆபீசுல தூங்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அம்புட்டு நல்ல பசங்க நாங்கன்னு காலரை தூக்கிவிட வேணாம்... பதிவை ரெடி பண்ணாவௌம், போஸ்ட் போடவும், திரட்டிகளில் இணைக்கவும், கமெண்டுக்கு ரிப்ளை பண்ணவும், மொய் கமெண்ட் வைக்கவுமே சரியா இருக்கும்போது எங்கிருந்து தூங்குவது?! என்ன நான் சொல்றது சரிதானே?!