Showing posts with label நாடோடி தென்றல். Show all posts
Showing posts with label நாடோடி தென்றல். Show all posts

Sunday, September 23, 2018

மணியே மணிக்குயிலே - பாட்டு புத்தகம்



மூக்கு, காது குத்துறதலாம்  உடலில் உள்ள கெட்ட வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்குதான்.  குழாய் கனெக்‌ஷன் கொடுக்கும்போது காத்து வெளியேற ஒரு குழாய் வைக்குற மாதிரிதான் இதும்.    பெண்களுக்கு முன் நெற்றிப் பகுதியிலிருந்து ஆலம் விழுதுகள்போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழ வரும். இப்படி விழுதுகள் மூக்குப்பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்திலுள்ள கெட்ட வாயு அகலும். 
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே மூக்குத்தி அணிவிக்கப்படுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில்தான் அந்த கெட்ட வாயு உற்பத்தி ஆகும். மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படும்.  இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனாசக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.(எங்க ஊர் பக்கம்லாம் வலது பக்கம்தான் குத்துவாங்க. இடப்பக்கம் மூக்கு குத்தினால் என்ன வடநாட்டு பொண்ணான்னு கேப்பாங்க. 

நகைகளின்மீது பெருசா ஆர்வமில்லை. ஆனா, மூக்கித்தின்னா கொள்ளை இஷ்டம். வெறுமனே வீட்டில் போட்டுக்க பொட்டு மூக்குத்தி,  விஷேசங்களின்போது போட்டுக்க,  ஏழுகல் கொண்ட ஸ்ரீதேவி மூக்குத்தி, ஒத்தைக்கல் மூக்குத்தி, ஸ்டார் மூக்குத்தி, ஒற்றைக்கல்லில் தொங்கும் மூக்குத்தி, கல் இல்லாம தொங்கும் மூக்குத்தி, அதில்லாம வளையம்ன்னு  ஒரு ஆறேழு செட் மூக்குத்தி இருக்கு. ஆனாலும் வைர மூக்குத்தி மேல் ஆசை. அது போட்டா கண்பார்வை பாதிக்கும்ன்னு டாக்டர் சொல்லிட்டதால் அப்பா வாங்கி தரல. ஆல்ரெடி -3ல பார்வைதிறன் இருக்கு. வைரமூக்குத்தி போட்டால் டோட்டலா பார்வை காலின்னு சொல்லி அவாய்ட்.

என்னடா! திடீர்ன்னு மூக்குத்தி புராணம்ன்னு யோசிக்காதீங்க. இதோ கீழ இருக்கும் பாட்டுக்காகத்தான்....
மணியே! மணிக்குயிலே! மாலை இளம் கதிரழகே!

கொடியே! கொடி மலரே! கொடி இடையின் நடை அழகே!
மணியே! மணிக்குயிலே! மாலை இளம் கதிரழகே!

கொடியே! கொடி மலரே! கொடி இடையின் நடை அழகே!
தொட்ட இடம் பூ மணக்கும்...
 துளிர் கரமோ தொட இனிக்கும்....
பூமர பாவை நீயடி, 
இங்கு நான் பாடும்

பாமரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ…ஓ !
பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே
வண்ண மயில் போல வந்த பாவையே..
எண்ண இனிக்கும் நிலையே!
 இன்பம் கொடுக்கும் கலையே!
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..

கன்னிமயில் தூண்டிலிட்டு..
காதல்தனை தூண்டிவிட்டு..

எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழயே!
பெண்ணிவளை ஆதரித்து.. 
 தொட்டு தொட்டு காதலித்த
இன்பம் கண்ட காரணத்தால் தூங்கலயே!

சொல்லி சொல்லி ஆசை வைத்தேன்.. 
கொடி இடையில் பாசம் வைத்தேன்..
பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும்
மரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ ஓ !
மணியே! மணிக்குயிலே! மாலை இளம் கதிரழகே!
கொடியே! கொடிமலரே! கொடி இடையின் நடை அழகே!
கண்ணிமைகளை வருத்தி கனவுகளை துரத்தி..
என் மனதினால் முடித்த மூக்குத்தி..
என்னுயிரிலே ஒருத்தி கண்டபடியெனை துரத்தி,
அம்மனவள் வாங்கி கொண்ட மூக்குத்தி..

கோடி மணி ஓசை நெஞ்சில் கூடி வந்து தான் ஒலிக்க

ஓடி வந்து கேட்க வரும் தேவதைகள்…
சூட மலர் மாலை கொண்டு தூபமிட்டு தூண்டிவிட்டு
கூடவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள்…
அந்தி வரும் நேரமம்மா ஆசை விளக்கேற்றுதம்மா…

பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ ஓ !
மணியே! மணிக்குயிலே! மாலை இளம் கதிரழகே!
கொடியே! கொடிமலரே! கொடியிடையின் நடை அழகே!


படம் : நாடோடி தென்றல்
பாடல் : மணியே மணிக்குயிலே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ
நடிகர்கள்; கார்த்திக், ரஞ்சிதா
நன்றியுடன்,
ராஜி

Thursday, August 30, 2018

சந்தன மார்பிலே... - பாட்டு புத்தகம்

இப்ப மாதிரி ஆபாச அசைவுகளையும், பாடல்வரிகளையும் கொண்ட பாடல்கள்லாம் வீட்டுக்குள் வராத காலம்.   தாவணி கனவுகள் படத்துல  பாக்கியராஜ் தன்னோட சகோதரிகளை சினிமாவுக்கு கூட்டி போவார். லவ் சீன் வரும்போதெல்லாம் சில்லறைய கீழ போட்டு தங்கச்சிங்களை எடுக்க சொல்லி அந்த சீனை பார்க்க விடாம பண்ணுவார். அதுமாதிரிதான் எங்கூட்டுலயும் நடக்கும்.  நாடோடி தென்றல்  படப்பாட்டு செம ஹிட். அதனால் படம் பார்த்தே ஆகனும்ன்னு அடம்பிடிச்சு போயாச்சுது. கார்த்திக் படம் ரிலீசானால் அதோட பாட்டுக்களை என் அண்ணா ஒருத்தங்க ரெக்கார்ட் பண்ணி எனக்கு கொடுப்பார்.    மணியே மணிக்குயிலே பாட்டுதான் இந்த படத்துல செம ஹிட். ஆனாலும் எனக்கு சந்தன மார்பிலே.. பாட்டு பிடிக்கும். அந்த பாட்டுல ஒருசில சீன் அப்பிடி இப்படி இருக்கும்.  படம் பார்த்ததிலிருந்து எங்க வீட்டில் இந்த பாட்டுக்கு 144 போட்டாச்சு. அட! ஆடியோ கேசட்டுக்கு தடா போட்ட என் அப்பாரு அறிவை நினைச்சு இப்ப நான் வியக்கேன்.

ஏழையர்  துணை முலை குங்குமச் சுவடும்
ஆடவர், மணி வரைப் புயத்து மென் சாந்தும் மாழ்கி...

இது கம்பராமாயணத்தில் வரும் வரி. அந்த காலத்தில் ஆண்கள் தோள்களில் சந்தனம் பூசுவது வழக்கம். அதேப்போல, வயதுக்கு வந்த பெண்கள் மார்பினில் குங்குமம் பூசுவது வழக்கமா இருந்துச்சாம். ஏழையர்ன்னா பெண்கள்,  பெண்கள் மார்பில் பூசி இருக்கும் குங்குமமும், ஆண்கள் தோளில் பூசி இருக்கும் சந்தனமும் கலக்குமாறு காதலன் காதலி சேர்ந்தனர்ன்னு பொருளாம்.  பெண் மார்பில் பூசி இருக்கும் குங்குமம், ஆண் தோளில் பூசி இருக்கும் சந்தனத்தோடு கலக்குதுன்னா பெண்,ஆணைவிட உயரமா இருக்கனும், இருந்திருக்கனும்.  

ஆனா,  தன் பிள்ளைகளுக்கு வரன் தேடும்போது  பொண்ணைவிட மாப்ளை உயரம் அதிகமா இருக்கனும்ன்னு நம்ம ஊரில் எதிர்பார்ப்பாங்க. அது எதுக்குன்னா, பெண் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் ஏராளம். அவள் துவண்டிருக்கும்போது, தன்னோட மாப்ளை மார்பில் சாய்ஞ்சு ஆறுதல் தேடிக்குவா. அப்படி சாயும்போது  அவனோட இதயம் துடிக்கும் ஓசை அந்த பொண்ணுக்கு பெரும் ஆறுதல் கொடுக்குமாம்.  ஆணின் மார்பில் பூசி இருக்கும் சந்தனத்தோடு, பெண்ணின் நெற்றி குங்குமம் கலக்கும்ன்னு ஒரு சினிமா பாட்டுக்கு, அதும் கொஞ்சம் அப்பிடி இப்படி இருக்கும் சினிமா பாட்டுக்கு இப்படி ஒரு விளக்கத்தை    கொடுக்கும் தமிழாசிரியைலாம் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்ல்ல! 9 டூ 12 வரையான வகுப்பில் வந்த என் தமிழாசிரியை பேரு மீனாட்சி.  காதல் முதல் சினிமா வரை எல்லாம் பேசுவாங்க.  எனக்கு தமிழின்மீது ஆர்வம் வரக் காரணமானவங்க. இப்ப எங்க எப்படி இருக்காங்கன்னு தெரியாது. ஆனா இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் என் ஆசிரியை நினைவுக்கு வருவாங்க


சிவரஞ்சனி ராகத்துல ஷெனாய், புல்லாங் குழல், தபலா, வயலின்னு  மனதை மயக்கும் அத்தனை இசைக்கருவிகளும் இதுல இருக்கும்.   அதிலும் ஆரம்பத்துல வரும் புல்லாங்குழல் இசை நம்மை எங்கோ கொண்டு செல்லும். இதுல கார்த்திக்கை பரதம் ஆடச்சொன்னால், எக்சர்சைஸ் செஞ்சிருப்பார். பரத நாட்டியத்துக்குன்னு ஒரு நளினம் உண்டு. அதுல கார்த்திக் பெயில்தான்.


சந்தன மார்பிலே
குங்குமம் சேர்ந்ததே!
ஓ மதி ஓ மதி..

மங்கள நேரமே ‘
இங்கொரு யாகமே!
ஓ மதி ஓ மதி..
நாதங்கள் சாட்சி..
வேதங்கள் சாட்சி... ஓஒ
சந்தன மார்பிலே
குங்குமம் சேர்ந்ததே....

பல உலகம் போகும் யாத்திரை
நிழலுககில் நேர்ந்ததே!
கனவுலகில் விழுந்த ஓர் திரை
நிழலுகில் விலகுதே!
வேள்வி வேள்வி காதல் தேவனே! 
தோல்வி தோல்வி காதல் போரிலே!
நாதங்கள் சாட்சி.. வேதங்கள் சாட்சி.. ஓ ஓ ஓ

சந்தன மார்பிலே.. குங்குமம் சேர்ந்ததே.....

அலை அலையாய் காதல் சங்கொலி 
நடு இரவில் முழங்குதே! 
மணிமணியாய் நாதன் கிண்கிணி
நடு இரவில் பொழியுதே!
வேதம் வேதம் 
காதல் வேதமே!
ஓது ஓது காதல் தேவனே!
நாதங்கள் சாட்சி.. வேதங்கள் சாட்சி ஓஓஒ..

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே!...
ஓ மதி ஓ மதி
மங்கல நேரமே இங்கொரு யாகமே! 
ஓ மதி ஓமதி..
படம் : நாடோடி தென்றல்
இசை : இளையராஜா
பாடியவர்கள்: மனோ, எஸ்.ஜானகி
எழுதியவர்: வைரமுத்து
நடிகர்கள் : கார்த்திக், ரஞ்சிதா

இந்த பாட்டுலாம் இரவு நேரத்தில், பயணங்களின்போது இயர்போன்ல புல் சவுண்ட் வச்சு கேக்கனும். 
நன்றியுடன்,
ராஜி