Thursday, August 30, 2018

சந்தன மார்பிலே... - பாட்டு புத்தகம்

இப்ப மாதிரி ஆபாச அசைவுகளையும், பாடல்வரிகளையும் கொண்ட பாடல்கள்லாம் வீட்டுக்குள் வராத காலம்.   தாவணி கனவுகள் படத்துல  பாக்கியராஜ் தன்னோட சகோதரிகளை சினிமாவுக்கு கூட்டி போவார். லவ் சீன் வரும்போதெல்லாம் சில்லறைய கீழ போட்டு தங்கச்சிங்களை எடுக்க சொல்லி அந்த சீனை பார்க்க விடாம பண்ணுவார். அதுமாதிரிதான் எங்கூட்டுலயும் நடக்கும்.  நாடோடி தென்றல்  படப்பாட்டு செம ஹிட். அதனால் படம் பார்த்தே ஆகனும்ன்னு அடம்பிடிச்சு போயாச்சுது. கார்த்திக் படம் ரிலீசானால் அதோட பாட்டுக்களை என் அண்ணா ஒருத்தங்க ரெக்கார்ட் பண்ணி எனக்கு கொடுப்பார்.    மணியே மணிக்குயிலே பாட்டுதான் இந்த படத்துல செம ஹிட். ஆனாலும் எனக்கு சந்தன மார்பிலே.. பாட்டு பிடிக்கும். அந்த பாட்டுல ஒருசில சீன் அப்பிடி இப்படி இருக்கும்.  படம் பார்த்ததிலிருந்து எங்க வீட்டில் இந்த பாட்டுக்கு 144 போட்டாச்சு. அட! ஆடியோ கேசட்டுக்கு தடா போட்ட என் அப்பாரு அறிவை நினைச்சு இப்ப நான் வியக்கேன்.

ஏழையர்  துணை முலை குங்குமச் சுவடும்
ஆடவர், மணி வரைப் புயத்து மென் சாந்தும் மாழ்கி...

இது கம்பராமாயணத்தில் வரும் வரி. அந்த காலத்தில் ஆண்கள் தோள்களில் சந்தனம் பூசுவது வழக்கம். அதேப்போல, வயதுக்கு வந்த பெண்கள் மார்பினில் குங்குமம் பூசுவது வழக்கமா இருந்துச்சாம். ஏழையர்ன்னா பெண்கள்,  பெண்கள் மார்பில் பூசி இருக்கும் குங்குமமும், ஆண்கள் தோளில் பூசி இருக்கும் சந்தனமும் கலக்குமாறு காதலன் காதலி சேர்ந்தனர்ன்னு பொருளாம்.  பெண் மார்பில் பூசி இருக்கும் குங்குமம், ஆண் தோளில் பூசி இருக்கும் சந்தனத்தோடு கலக்குதுன்னா பெண்,ஆணைவிட உயரமா இருக்கனும், இருந்திருக்கனும்.  

ஆனா,  தன் பிள்ளைகளுக்கு வரன் தேடும்போது  பொண்ணைவிட மாப்ளை உயரம் அதிகமா இருக்கனும்ன்னு நம்ம ஊரில் எதிர்பார்ப்பாங்க. அது எதுக்குன்னா, பெண் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் ஏராளம். அவள் துவண்டிருக்கும்போது, தன்னோட மாப்ளை மார்பில் சாய்ஞ்சு ஆறுதல் தேடிக்குவா. அப்படி சாயும்போது  அவனோட இதயம் துடிக்கும் ஓசை அந்த பொண்ணுக்கு பெரும் ஆறுதல் கொடுக்குமாம்.  ஆணின் மார்பில் பூசி இருக்கும் சந்தனத்தோடு, பெண்ணின் நெற்றி குங்குமம் கலக்கும்ன்னு ஒரு சினிமா பாட்டுக்கு, அதும் கொஞ்சம் அப்பிடி இப்படி இருக்கும் சினிமா பாட்டுக்கு இப்படி ஒரு விளக்கத்தை    கொடுக்கும் தமிழாசிரியைலாம் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்ல்ல! 9 டூ 12 வரையான வகுப்பில் வந்த என் தமிழாசிரியை பேரு மீனாட்சி.  காதல் முதல் சினிமா வரை எல்லாம் பேசுவாங்க.  எனக்கு தமிழின்மீது ஆர்வம் வரக் காரணமானவங்க. இப்ப எங்க எப்படி இருக்காங்கன்னு தெரியாது. ஆனா இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் என் ஆசிரியை நினைவுக்கு வருவாங்க


சிவரஞ்சனி ராகத்துல ஷெனாய், புல்லாங் குழல், தபலா, வயலின்னு  மனதை மயக்கும் அத்தனை இசைக்கருவிகளும் இதுல இருக்கும்.   அதிலும் ஆரம்பத்துல வரும் புல்லாங்குழல் இசை நம்மை எங்கோ கொண்டு செல்லும். இதுல கார்த்திக்கை பரதம் ஆடச்சொன்னால், எக்சர்சைஸ் செஞ்சிருப்பார். பரத நாட்டியத்துக்குன்னு ஒரு நளினம் உண்டு. அதுல கார்த்திக் பெயில்தான்.


சந்தன மார்பிலே
குங்குமம் சேர்ந்ததே!
ஓ மதி ஓ மதி..

மங்கள நேரமே ‘
இங்கொரு யாகமே!
ஓ மதி ஓ மதி..
நாதங்கள் சாட்சி..
வேதங்கள் சாட்சி... ஓஒ
சந்தன மார்பிலே
குங்குமம் சேர்ந்ததே....

பல உலகம் போகும் யாத்திரை
நிழலுககில் நேர்ந்ததே!
கனவுலகில் விழுந்த ஓர் திரை
நிழலுகில் விலகுதே!
வேள்வி வேள்வி காதல் தேவனே! 
தோல்வி தோல்வி காதல் போரிலே!
நாதங்கள் சாட்சி.. வேதங்கள் சாட்சி.. ஓ ஓ ஓ

சந்தன மார்பிலே.. குங்குமம் சேர்ந்ததே.....

அலை அலையாய் காதல் சங்கொலி 
நடு இரவில் முழங்குதே! 
மணிமணியாய் நாதன் கிண்கிணி
நடு இரவில் பொழியுதே!
வேதம் வேதம் 
காதல் வேதமே!
ஓது ஓது காதல் தேவனே!
நாதங்கள் சாட்சி.. வேதங்கள் சாட்சி ஓஓஒ..

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே!...
ஓ மதி ஓ மதி
மங்கல நேரமே இங்கொரு யாகமே! 
ஓ மதி ஓமதி..
படம் : நாடோடி தென்றல்
இசை : இளையராஜா
பாடியவர்கள்: மனோ, எஸ்.ஜானகி
எழுதியவர்: வைரமுத்து
நடிகர்கள் : கார்த்திக், ரஞ்சிதா

இந்த பாட்டுலாம் இரவு நேரத்தில், பயணங்களின்போது இயர்போன்ல புல் சவுண்ட் வச்சு கேக்கனும். 
நன்றியுடன்,
ராஜி

18 comments:

  1. //சிவரஞ்சனி ராகத்துல ஷெனாய்//
    இதெல்லாம் கூட தெரியுமா.
    அண்ணேன்னு சொல்ல பெருமையாத்தான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. சேக்ஸ் அண்ணா! உங்க தங்கச்சி ஆல் இன் ஆல் அழகு ராணின்னு தெரியாதா?!

      Delete
  2. அடடே சினிமா பாட்டுக்குகூட இவ்வளவு விளக்கம் கொடுக்கிறீங்களே...

    ReplyDelete
    Replies
    1. விளக்கம் கொடுக்குறதுன்னு முடிவு பண்ணிட்ட பின் சினிமா பாட்டாய் இருந்தால் என்ன?! இல்ல சமையலா இருந்தால் என்ன?! எல்லாத்துலயும் கை வச்சிடனும்

      Delete
  3. அற்புதமான விளக்கங்கள்

    அற்புதமான பாடலுக்கும் உங்களின் இலக்கிய விளக்கங்களும் பாராட்டுக்கள்

    பாடலை இயற்றியவர் நிச்சியமாக வைரமுத்து அல்ல .

    ஏனென்றால் "நீதானா அந்த குயில் "படத்திற்கு பிறகு இருவரும் (இளைய ராஜாவும் வைரமுத்துவும் ) மனக்கசப்பு
    ஏற்பட்டு பிரிந்துவிட்டனர் .


    இந்த பாடலை இயற்றியவர் வாலி அல்லது புலமைபித்தனாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. வைரமுத்து, பாரதிராஜா சண்டைய பத்தி தெரியும். நீங்க சொன்ன மாதிரி இந்த படத்து பாட்டை வைரமுத்து எழுதலை. அதேநேரம் வாலியும், புலமைபித்தனும்கூட எழுதல. இந்த படத்தின் எல்லா பாடல்களையும் எழுதியது இளையராஜாவாம். கூகுளாண்டவர் சொன்னார்.

      Delete
  4. இளையராஜா இந்த ராகத்தில் நிறைய பாடல்கள் போட்டிருக்கிறார். சோகரசத்திலேயே உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த இந்த ராகத்தை பல்வேறு ரசங்களில் தந்திருப்பார் இளையராஜா.

    நீங்கள் சொல்லி இருப்பது போல என் பேவரைட் இந்தப் படத்தில் மணியே மணிக்குயிலே பாடல்தான்!

    ReplyDelete
    Replies
    1. மணியே மணிக்குயிலே பாட்டுதான் அன்னிக்கு எல்லா வீட்டுலயும் ஒலிக்கும்.

      Delete
  5. இப்பாடலைக் கேட்டு ரசித்திருக்கிறேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுண்ணே

      Delete
  6. அருமையான பாடல். சந்தனத்தின் வித்தியாசமான மகிமையை தற்போது அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் சொல்ல முடியும். படம் மொக்கை, பாட்டு நல்லா இல்லன்னு ஈசியா சொல்லிடுறோம். ஆனா, அதுக்கு பின் எத்தனை பேரின் உழைப்பு இருக்குப்பா.

      Delete
  7. இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனா படம் வெற்றி பெறலை. பாரதிராஜாவின் எதார்த்தம் இதுல மிஸ்சிங்க்

      Delete
  8. உங்கள் பதிவை நமது வலைத்தளத்தில் பதிந்துள்ளேன்.
    சிகரம்
    சிறப்பு. பாடல்கள் என்றாலே இனிமை தானே? இடைக்காலப்பாடல்கள் மிகவும் அருமை. இப்போதெல்லாம் இனிமையான பாடல்கள் அத்தி பூத்தாற் போல தான் வருகின்றன. தொடருங்கள், தொடர்வோம்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி சகோ

      Delete