மூக்கு, காது குத்துறதலாம் உடலில் உள்ள கெட்ட வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்குதான். குழாய் கனெக்ஷன் கொடுக்கும்போது காத்து வெளியேற ஒரு குழாய் வைக்குற மாதிரிதான் இதும். . பெண்களுக்கு முன் நெற்றிப் பகுதியிலிருந்து ஆலம் விழுதுகள்போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழ வரும். இப்படி விழுதுகள் மூக்குப்பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்திலுள்ள கெட்ட வாயு அகலும்.
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே மூக்குத்தி அணிவிக்கப்படுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில்தான் அந்த கெட்ட வாயு உற்பத்தி ஆகும். மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படும். இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனாசக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.(எங்க ஊர் பக்கம்லாம் வலது பக்கம்தான் குத்துவாங்க. இடப்பக்கம் மூக்கு குத்தினால் என்ன வடநாட்டு பொண்ணான்னு கேப்பாங்க.
நகைகளின்மீது பெருசா ஆர்வமில்லை. ஆனா, மூக்கித்தின்னா கொள்ளை இஷ்டம். வெறுமனே வீட்டில் போட்டுக்க பொட்டு மூக்குத்தி, விஷேசங்களின்போது போட்டுக்க, ஏழுகல் கொண்ட ஸ்ரீதேவி மூக்குத்தி, ஒத்தைக்கல் மூக்குத்தி, ஸ்டார் மூக்குத்தி, ஒற்றைக்கல்லில் தொங்கும் மூக்குத்தி, கல் இல்லாம தொங்கும் மூக்குத்தி, அதில்லாம வளையம்ன்னு ஒரு ஆறேழு செட் மூக்குத்தி இருக்கு. ஆனாலும் வைர மூக்குத்தி மேல் ஆசை. அது போட்டா கண்பார்வை பாதிக்கும்ன்னு டாக்டர் சொல்லிட்டதால் அப்பா வாங்கி தரல. ஆல்ரெடி -3ல பார்வைதிறன் இருக்கு. வைரமூக்குத்தி போட்டால் டோட்டலா பார்வை காலின்னு சொல்லி அவாய்ட்.
என்னடா! திடீர்ன்னு மூக்குத்தி புராணம்ன்னு யோசிக்காதீங்க. இதோ கீழ இருக்கும் பாட்டுக்காகத்தான்....
மணியே! மணிக்குயிலே! மாலை இளம் கதிரழகே!
கொடியே! கொடி மலரே! கொடி இடையின் நடை அழகே!
மணியே! மணிக்குயிலே! மாலை இளம் கதிரழகே!
கொடியே! கொடி மலரே! கொடி இடையின் நடை அழகே!
தொட்ட இடம் பூ மணக்கும்...
துளிர் கரமோ தொட இனிக்கும்....
பூமர பாவை நீயடி,
இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ…ஓ !
பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே
வண்ண மயில் போல வந்த பாவையே..
எண்ண இனிக்கும் நிலையே!
இன்பம் கொடுக்கும் கலையே!
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..
கன்னிமயில் தூண்டிலிட்டு..
காதல்தனை தூண்டிவிட்டு..
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழயே!
பெண்ணிவளை ஆதரித்து..
தொட்டு தொட்டு காதலித்த
இன்பம் கண்ட காரணத்தால் தூங்கலயே!
சொல்லி சொல்லி ஆசை வைத்தேன்..
கொடி இடையில் பாசம் வைத்தேன்..
பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும்
மரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ ஓ !
மணியே! மணிக்குயிலே! மாலை இளம் கதிரழகே!
கொடியே! கொடிமலரே! கொடி இடையின் நடை அழகே!
கண்ணிமைகளை வருத்தி கனவுகளை துரத்தி..
என் மனதினால் முடித்த மூக்குத்தி..
என்னுயிரிலே ஒருத்தி கண்டபடியெனை துரத்தி,
அம்மனவள் வாங்கி கொண்ட மூக்குத்தி..
கோடி மணி ஓசை நெஞ்சில் கூடி வந்து தான் ஒலிக்க
ஓடி வந்து கேட்க வரும் தேவதைகள்…
சூட மலர் மாலை கொண்டு தூபமிட்டு தூண்டிவிட்டு
கூடவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள்…
அந்தி வரும் நேரமம்மா ஆசை விளக்கேற்றுதம்மா…
பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ ஓ !
நல்லபாடல் விளக்கங்களும் அருமை சகோ.
ReplyDelete//மூக்குத்திப்பூ மேலே காற்று உட்கார்ந்து பேசுதம்மா//
அந்த பாட்டும் பிடிக்கும்ண்ணே
Deleteஎனக்கும் பிடித்த பாடல்.
ReplyDeleteசூப்பர் ஹிட் பாட்டாச்சுதே
Deleteஎப்போதும் ரசிக்கும் பாடல்...
ReplyDeleteதென்றலாய்...
ஆமாம்ண்ணே. அதுலயும் பாடலின் ஆரம்பத்துல வரும் இசை... செம
Deleteஎட்டுக்கல் பேசரி போட்டா எடுப்பா இருக்கும்மூக்கு
ReplyDeleteமூக்கு எடுப்பாதான் இருக்கும். ஆனா, எடுத்து கொடுக்க ஆள் இல்லியே!
Deleteநல்ல பாடல். எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும்.
ReplyDelete