Tuesday, March 03, 2020

மாலை நேர காஃபிக்கு ஜோடி இந்த தட்டடை - கிச்சன் கார்னர்..

சமையலில் புலி இல்லதான். ஆனா, ஒருமுறைக்கு நாலுமுறை செய்தா எந்த பலகாரமும் செய்ய பழகிடும். ஆனா, இந்த எள்ளடை, தட்டடைன்னு சொல்லப்படும் தட்டை செய்ய மட்டும் எனக்கு இன்னும் கைவரல. மாவை ஆவில வச்சு பார்த்தாச்சு, வறுத்து பார்த்தாச்சு.. ஆனாலும் கைகூடாம இழுத்துக்கிட்டே இருந்துச்சு. கடைசியா ஒரு நாலைஞ்சு முறைதான் நல்லா வர ஆரம்பிச்சிருக்கு. பார்ப்போம் இந்நிலை தொடருதான்னு...

பச்சரிசியை ஊறவச்சு அரைச்சு மாவாக்கி சிலர் வறுத்தும், சிலர் ஆவியில் வேக வச்சு, மிளகாய் பூண்டை அரைச்சு அதில் சேர்த்து, பெருங்காயம், வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து தட்டை செய்வாங்க. ஆனா, நான் இப்பவும் கல் உரலில்  மாவு ஆட்டிதான் செய்வேன். 
தேவையான பொருட்கள்..
புழுங்கலரிசி - கால் படி
காய்ந்த மிளகாய்- காரத்திற்கேற்ப
பூண்டு - பத்து பல்
ஊறவைத்த கடலை பருப்பு  - ஒரு கப்
எள் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம்- தேவைக்கேற்ப
பொடித்த வேர்க்கடலை - சிறிது
கருவேப்பிலை கொஞ்சம்
உப்பு
எண்ணெய்


அரிசியை 2 மணிநேரம் ஊறவச்சு, அத்தோடு மிளகாய், பூண்டு, பெருங்காயம் உப்பு சேர்த்து அரைக்கனும்.  மிக்சிலயும் போட்டுக்கலாம்..
அரைச்ச மாவோடு ஊற வச்ச கடலை பருப்பு, எள், கறிவேப்பிலை, வேர்க்கடலை பொடி சேர்த்துக்கனும்..
கூடவே பொடித்த பொட்டுக்கடலை மாவு சேர்த்துக்கனும்..
நல்லா பிசைஞ்சுக்கனும்..

ஒரு சுத்தமான பருத்தி துணில தேவையான அளவில் தட்டை தட்டிக்கனும்.. அதிகப்படியான தண்ணியை துணி இழுத்துக்கும்.  அரிசி காய வைக்க, தானியங்கள் முளைக்கட்ட இப்படி பயன்படுத்த ஒரு காட்டன் லுங்கியை தனியா வச்சுக்குறது நல்லது. இல்லன்னா காடா துணியையும் இதுக்கு பயன்படுத்தலாம்.
எண்ணெயில் போட்டு இருபக்கமும் திருப்பி விட்டு சிவக்க விட்டு எடுத்தால் தட்டை ரெடி..
வாங்களேன்! தட்டையோடு கொஞ்சம் காஃபி, நிறைய கதைன்னு இந்த மாலைப்பொழுதை கழிக்கலாம்!!

நன்றியுடன்,
ராஜி

7 comments:

  1. //சமையலில் புலி இல்லதான்//
    சரி அதுக்கென்னெ புளி யை சேத்துக்கோங்க

    ReplyDelete
  2. அழகாக செய்துள்ளீர்கள் சகோதரி...

    ReplyDelete
  3. சுவையான நொறுக்ஸ்... எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  4. தட்டை சுவை.
    நாங்கள் தட்டை வடை என்பது உளுந்து 1கப்,மைதா 2கப் ,இடித்த காய்ந்த மிளகாய். உப்பு,பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை .
    2_3 மணித்தியாலம் உடைத்த வெள்ளை உழுந்தை ஊறவைத்து மிகுதி யொருட்களை கலந்து தட்டி பொரிப்பது.

    ReplyDelete
  5. இதிலும் பூண்டு சேர்க்கிறாங்களா? அது இல்லாமயே நல்லா வருமே (ஏற்கனவே பெருங்காயம் இருக்கே)

    ReplyDelete