பகிர்ந்து.., கட்டி காப்பாத்திய விருந்தோம்பல்!!
சட்டை நுனியில் வைத்து காக்காய் கடி
கடித்த கமர்கட்டில் பகை தீர்த்த சாமர்த்தியம்!!
காவல்காரனுக்கு தெரியாம பறித்த கொய்யா,
சளியாய் உருமாறி அப்பாக்கு காட்டிக்கொடுக்கும்!!
ஓடும் ரயில் பின்னே, நண்பர்கள் பின் பிடித்து
ஓடிய ரயில் கூவல்கள்..
சிக்கு முடிக்கும், பழைய இரும்புக்கும்
வாங்கிய சேமியா ஐசும், சோன் பப்டியும் ருசிக்கும்...,
அம்மாக்கு தெரியாம அவள் புடவையை திருடி
போட்ட திண்ணை நாடகம் தெரிந்து விழுந்த அடி!!
பாடம் படிக்கும் போது விழுந்த கொட்டுக்களுக்கும்,
உடைத்த பல்ப குச்சிக்கும் ஆசிரியர் இல்லாத போது
கட்டி புரண்டு போட்ட சண்டையும்,
மூக்குடைப்பட்ட நண்பனும்...,
ஒரு போதும் நெஞ்சில் வஞ்சம் வைத்ததில்லை!!
சமாதானப்படுத்த வருவதாக வரும் சகுனிகளைப்
பார்த்து, நானும், அவனும்
ஒன்று சேர்ந்து சிரிக்க தவறியதில்லை!!
கோடி பொன்னும், ஆயிரம் நேர்த்திகடனும்
செய்து கேட்கிறேன். இறைவா!
மீண்டும் வேண்டும் என் பால் மனம்!!
மீண்டும் வேண்டும் அந்த பால்யம்!!
மீண்டும் வேண்டும் அந்த பால்யம்!!
