பகிர்ந்து.., கட்டி காப்பாத்திய விருந்தோம்பல்!!
சட்டை நுனியில் வைத்து காக்காய் கடி
கடித்த கமர்கட்டில் பகை தீர்த்த சாமர்த்தியம்!!
காவல்காரனுக்கு தெரியாம பறித்த கொய்யா,
சளியாய் உருமாறி அப்பாக்கு காட்டிக்கொடுக்கும்!!
ஓடும் ரயில் பின்னே, நண்பர்கள் பின் பிடித்து
ஓடிய ரயில் கூவல்கள்..
சிக்கு முடிக்கும், பழைய இரும்புக்கும்
வாங்கிய சேமியா ஐசும், சோன் பப்டியும் ருசிக்கும்...,
அம்மாக்கு தெரியாம அவள் புடவையை திருடி
போட்ட திண்ணை நாடகம் தெரிந்து விழுந்த அடி!!
பாடம் படிக்கும் போது விழுந்த கொட்டுக்களுக்கும்,
உடைத்த பல்ப குச்சிக்கும் ஆசிரியர் இல்லாத போது
கட்டி புரண்டு போட்ட சண்டையும்,
மூக்குடைப்பட்ட நண்பனும்...,
ஒரு போதும் நெஞ்சில் வஞ்சம் வைத்ததில்லை!!
சமாதானப்படுத்த வருவதாக வரும் சகுனிகளைப்
பார்த்து, நானும், அவனும்
ஒன்று சேர்ந்து சிரிக்க தவறியதில்லை!!
கோடி பொன்னும், ஆயிரம் நேர்த்திகடனும்
செய்து கேட்கிறேன். இறைவா!
மீண்டும் வேண்டும் என் பால் மனம்!!
மீண்டும் வேண்டும் அந்த பால்யம்!!
மீண்டும் வேண்டும் அந்த பால்யம்!!
பனை ஓலை மட்டையில் நண்பனி வைத்து இழுப்பதும் தனி சந்தோசம்..ம், அது ஒரு கனாக்காலம்!
ReplyDeleteநிஜம்தான் செங்கோவி!! பாஸ்போர்ட், விசா, டிக்கட் இல்லாம அமெரிக்கா, லண்டன்னு போய்கிட்டே இருப்போம்!!
Deleteஇரண்டு நொங்கு ஒன்றிணைத்து ஓடிய ஓட்டம் அதுவும் ஒரு கனாக்காலம்....!
ReplyDeleteநிஜம்தான் அண்ணா!
Deleteஅனைவருள்ளும் உள்ள ஏக்கத்தை
ReplyDeleteமிக மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
மனம் கவர்ந்த அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!
Deletetha.ma 2
ReplyDeleteஎல்லோருக்கும் இதுதான் ஆசையாக இருக்கும்..! காலம் திரும்ப வருவதில்லை... குழந்தைகளின் விளையாட்டை ரசிக்கும் போது இந்த ஏக்கங்கள் தீரலாம்.
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை எல்லா பருவங்களும் ரசிக்கவே... ஒரு மனுஷியாய் என்னை நான் ரொம்ப காதலித்து கொண்டிருக்கிறேன்... !
எல்லாப்பருவமும் ரசிக்கத்தான். அதில் மறுப்பேதுமில்ல. ஆனா, குழந்தைப்பரும்வம் உலகை உணராமல், பொறுப்பில்லாம, மனசுல கள்ளம், கபடு, பொய், காமம் கலக்காம இருந்தோமே! அதான் அதை நினைச்சு ஏக்கப்பட வைக்குது!!
Deleteஇனிய நினைவுகள் ஞாபகம் வந்தது... ம்...
ReplyDeleteமலரும் நினைவுகளாண்ணா!?
DeleteSuper.,
ReplyDeleteநன்றி கருண்
Deleteஅருமையான வரிகள். மீண்டும் சிறுவயதுக்கு அழைத்துச் சென்றன நினைவுகள்...
ReplyDeleteஇன்னும் இதுப்போன்று நிறைய சேட்டைகள் இருக்கு.
Delete
Deleteரொம்ப சேட்டைக்கார பொண்ணு போல......பாவம் இந்த பொண்ணை கட்டிக்கிட்டு அந்த அப்பாவி ஆண் என்ன பாடுபடுகிறாறோ என்று நினைக்கும் போது மனது வலிக்கிறது. ஒரு அப்பாவி ஆணுக்குதான் இன்னொரு அப்பாவி ஆணைப் பற்றி தெரியும்
நீங்க ரொம்ப அப்பாவின்னு மதுரை முழுக்க சொல்லுறங்க.
Deleteஒரு போதும் நெஞ்சில் வஞ்சம் வைத்ததில்லை!!
ReplyDeleteசமாதானப்படுத்த வருவதாக வரும் சகுனிகளைப்
பார்த்து, நானும், அவனும் ஒன்று சேர்ந்து சிரிக்க தவறியதில்லை!!
/மிகவும் இரசித்தேன்! நல்லதொரு பகிர்விற்கு நன்றி!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteஹையோ... மனது நிரம்பி நிரப்பிப் போன பால்யம்...
ReplyDeleteநினைத்தாலே இப்பொழுதும் இனிக்கிறது தோழி!
அருமையான கனாக்காலம் அல்லவோ அது...
அழகிய வரிகள்! அற்புத சிந்தனை!
ரசித்தேன். வாழ்த்துக்கள்!
ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி தோழி
Deleteசட்டை நுனியில் வைத்து காக்காய் கடி
ReplyDeleteகடித்த கமர்கட்டில் பகை தீர்த்த சாமர்த்தியம்///
சூப்பர்க்கா...
ஆனா இந்த மாதிரியான இனிமையான அனுபவங்கள் எல்லாம் நம்ம எதிர்கால சந்ததிக்கு கிடைக்காதேன்ற ஏக்கம் பலமுறை என்னை பலமாக சிந்திக்க வைத்திருக்கிறது.
அருமையான அனுபவக்கவிதை...
///மீண்டும் வேண்டும் என் பால் மனம்!!
ReplyDeleteமீண்டும் வேண்டும் அந்த பால்யம்!! ///
இது அனைவரின் ஏக்கம் >>>. அருமை .
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பால்யம் இனிமையானது! மறக்க முடியாதது! ஆனால் மீண்டும் திரும்பாதது! அருமையான படைப்பு! நன்றி!
ReplyDeleteஇனிய நினைவுகள் ராஜி....
ReplyDeleteஅழகான வரிகள் அக்கா
ReplyDeleteசமீரா கல்யாண ரிசப்ஷன் போனப்ப அங்க துள்ளி விளையாடிட்டிருந்த ஒரு சுட்டிப் பொண்ணைப் பார்த்துட்டு இந்தக் கவிதையின் வார்த்தைகளை நான் உரைநடையாச் சொன்னேன். மனசு பால்யத்துக்குப் போகணும்னு இப்ப ஏனோ மிக விரும்புது. இந்தக் கவிதையும் என்னோட மனப்பிரதிபலிப்பா அமைஞ்சதைப் பாக்கையில ரெட்டிப்பு சந்தோஷம்மா...!
ReplyDeleteஅருமை வாழ்த்துகள்
ReplyDeleteஏக்க நினைவுகள்
ReplyDeleteஎல்லார் மனத்திலும்!
எண்ண அலைகளிலேதான்
ReplyDeleteமீண்டும் பயணிக்க வேண்டும்
நினைவுகள் சுகமானவை
அழகான நினைவுகள்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteCorporate English classes in Chennai
Communicative English training center
English training for corporates
Spoken English training
Workplace Business English training institute
Workplace English training for corporates
Workplace soft skills training institutes
Corporate language classes
Business English training for Workplace