Tuesday, October 15, 2013

சமையல் குறிப்புகள் - கிச்சன் கார்னர்
மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்தோடு பாவக்காயை ஸ்லைஸ் பண்ணி போட்டு ஊறவச்சா, மிளகாயின் காறம் பாவக்காயிலும், பாவக்காயின் கசப்பு மிளகாயிலும் கொஞ்சம் சேர்ந்து, சாப்பிடும்போது புது ருசியை கொடுக்கும்.


காய்கறிகள் நறுக்கி கை கழுவி பார்த்தால் கத்திரிக்காய், வாழைக்காய்லாம் விரலுக்கு கருப்பையும், பீட்ரூட் சிவப்பையும் கொடுக்கும். என்னதான் கையை கழுவினாலௌம் அதுலாம் மறைய நேரம் பிடிக்கும். அதனால, காய்கறி வெட்டும் முன் கொஞ்சம் சமையல் எண்ணெயை கைகளில் தேச்சுக்கிட்டு , காய்கறி வெட்டிய பின் கைகளை சீயக்காய்ல கை கழுவினால் கைலாம் பளிச்சுன்னு இருக்கும்.மட்டன், சிக்கன்ன்னு எந்த கிரேவி செய்தாலும் வேர்கடலை கொஞ்சமூண்டு எடுத்து ஊற வச்சு அரைச்சு சேர்த்தால், கெட்டியாவும் செம டேஸ்டாவும் இருக்கும்.


வத்தல் செய்ய ஜாவரிசி வேக வைக்கும் போது கொஞ்சம் கசகசாவை  அரைத்து சேர்த்தால் வத்தல் நல்ல வாசமாவும், மொறு மொறுன்னும் இருக்கும்

வடைக்கு உளுத்த மாவை அரைக்கும்போது த்ண்ணியாகிட்டுதா!? கவலைப்படாம வறுக்காத அப்பளத்தை தண்ணில ஊற வச்சு அரைச்சு சேர்த்தா மாவு கெட்டிப்படும்.


முழு முந்திரிப்பருப்பை வாங்கி வீட்டில் வைக்கும்போது சில சமயம் பூச்சியரிக்க ஆரம்பிக்கும். அதனால, முந்திரி டப்பாவுல பச்சை கற்பூரத்தை கொஞ்சம் போட்டு வச்சா பூச்சி அரிக்காது.

முட்டை வேக வைக்கும்போது சில சமயம் உடைஞ்சு உள்ளிருப்பதெல்லாம் வெள் வந்து பார்க்கவே போர்க்களம் மாதிரி இருக்கும். அதனால முட்டை வேக வைக்கும் தண்ணீரில் சில சொட்டு வினிகர் விட்டால் முட்டை உடைந்தாலும் உள்ள இருக்கும் கருலாம் வெளி வராது.

குளோப் ஜாமூன் செய்யும் போது ஆறிய சர்க்கரை பாகில் பொரிச்ச ஜாமூன்களை போட்டால் உடையாது.

சேப்பங்கிழங்கு வதக்கும்போது பிசுபிசுன்னு கடாயில ஒட்டி வரும். அதனால, கொஞ்சம் கடலை மாவை தூவி பொறியலுக்கு வதக்கினா மொறு மொறுன்னு கடாயில ஒட்டாம வரும்.

பச்சை மிளகாய், தேங்காயை ஃப்ரீசர் பாக்சுல வச்சா 2 மாசம் வரை வரும். சமைக்கும் முன் ஒரு 5 நிமிசம் தண்ணில போட்டால் பழைபடிக்கு வந்துடும்.

வெங்காயம் நறுக்கும்போது கண் எரிச்சலை தடுக்க ஒரு மெழுகு வர்த்தியை கொளுத்தி பக்கத்துல வச்சுக்கிட்டா கண் எரிச்சலை தடுக்கும்.

டிஸ்கி: யார் கண் பட்டுதோ!? எத்தனை பேர் திட்டி சாபம் விட்டீங்களோ!?பதிவர் சந்திப்புக்கு வரும்போது டாக்சிலேயே கேமராவை மிஸ் பண்ணிட்டேன். அதனால, சமைக்குறதை படமெடுக்க முடியாம சமையல் ரெசிபியை போட முடியாம போச்சு. சமைக்குறது மட்டும்தான் கிச்சன்ல நடக்குதா!? க்ளீனிங், காய் வெட்டுறது, அடுக்குறதுன்னு எத்தனை வேலை அங்க நடக்குது!? அதையும் ஒரு பதிவா கிச்சன் கார்னர்ல போடுன்னு பதிவு தேத்த ஐடியா தந்த மகனுக்கு நன்றி. கூடிய சீக்கிரம் கேமரா வாங்கி பதிவர் கடமையை நிறவேத்தனும் அதுக்கு பாதாள பைரவிதான் அருள் புரியனும்.

13 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. சின்ன சின்ன டிப்ஸ்கள் மிகவும் பயனுள்ளவை...

   கேமரா தொலைந்து போனது வருத்தமாக உள்ளது சகோதரி...

   (html மாற்றும் போது இன்னொரு நண்பரின் முகவரியில் கருத்திட்டு விட்டேன்...)

   Delete
  2. பதிவர் சந்திப்பு மண்டபம் வந்ததும் ஆர்வக் கோளாறினால் சரியா செக் பண்ணிக்காம வண்டியை விட்டு இறங்கிட்டேன். அதனால் வந்த வினை. சரி விடுங்க நடப்பவை யாவும் நன்மைக்கே! தீபாவளி பண்டிகை ஆஃபர்ல வாங்கிடலாம்.

   Delete
 2. பயனுள்ள பகிர்வு.

  ReplyDelete
 3. டிப்ஸ் அபாரம்!

  ReplyDelete
 4. டிப்ஸ்களுக்கு நன்றி,விரைவில் புது கேமரா வாங்க வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 5. சமையல் அறைக்குறிப்புகள் அனைத்தும் பயனுள்ளவை, நினைவில் வைத்து பயன்படுத்த வேண்டியவை. குறிப்புகளுக்கு நன்றி. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடுமாம். ராஜியின் மகனுக்கும் பதிவு தேத்த ஐடியா தெரியுது பாருங்க.

  ReplyDelete
 6. பச்சை மிளகாய் / தேங்காய் - நேத்துதான் Fridge வாங்குனோம் . வச்சு பாக்குறேன் ....!

  வெறும் கைல காய் நறுக்கும்போதே வெரலும் சேர்ந்து அறுபடுது , இதுல ஆயில் வேற தேக்க சொல்றீங்க .... என்னமோ போங்கோ ....!

  ReplyDelete
 7. பாதாள பைரவி உங்க குலதெய்வமுங்களாங்கோ..

  ReplyDelete
 8. அம்புட்டும் சூப்பர்....

  நல்லது கலக்குங்க...

  ReplyDelete
 9. பால் போண்டா பற்றி ஒரு இடுகை நீங்கள் போட்டீர்கள்; நானும் பால் போண்டா பற்றி ஒன்று இடுகை போடலாமா?

  ReplyDelete
 10. அருமை
  கேமரா தொலைந்தது வருத்தமாய் உள்ளது

  ReplyDelete
 11. அத்தனை டிப்ஸும் பயனுள்ளவைப்பா ராஜி.

  கிடைச்சுதா இல்லையா கேமரா?

  ReplyDelete