Showing posts with label தேர்வு. Show all posts
Showing posts with label தேர்வு. Show all posts

Wednesday, March 01, 2017

ப்ளஸ் டூ தேர்வெழுதுவதில் இத்தனை விசயம் இருக்கா?!

தேர்வுக்கு செல்லும்  மாணவர்கள் கவனத்திற்கு:
1.தேர்வு நடைப்பெறும் இடத்திற்கு தேர்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்றுவிடுங்கள்.. இது தேவையற்ற பதட்டத்தை தடுக்கும். 

2.  தேர்வுக்கு முதல் நாளிலேயே தேர்வுக்கு கொண்டு செல்ல வேண்டிய பேனா, பென்சில், ரப்பர், ஜியாமிண்ட்ரி பாக்ஸ் , ஹால் டிக்கட் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
3. வீட்டில் தேர்வுக்கால அட்டவணையை அனைவருக்கும் தெரிகிற மாதிரியான இடத்தில் ஒட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் எந்த தேதியில் எந்த தேர்வு என்பது குறித்து சந்தேகம் ஏற்படாது. 

4. தேர்வு மையத்திற்கு முன்னதாகச் சென்றுவிட்டாலும் தேர்வு மையத்தில் யாருடனும் தேவையில்லாமல் அரட்டை அடிப்பதும் பாடம் சம்பந்தமானதையும்கூட விவாதம் செய்யாதீங்க.  இதை படிச்சியா?!  அந்த கேள்வி கண்டிப்பா வரும்ன்னு வீண் குழப்பங்களை அது உருவாக்கும்.
5. தேர்வு மையத்திற்கு சென்றபின் நேரமிருந்தால் முக்கிய குறிப்புகளை பார்க்கலாம். புதிதாய் எதையும் படிக்காதீங்க. 

6. தேர்வு அறைக்குள் செல்லும்முன் உங்களிடம் எழுதப்பட்ட தாள்களோ அல்லது ஜெராக்ஸ் பிரதிகளோ இருக்கிறதா என பார்த்து அதை  வெளியிலேயே போட்டு விடுங்கள். கவனக்குறைவாய்  தேர்வெழுதும்போது  எதாவது தாள் இருந்து அறை கண்கானிப்பவரிடமோ பறக்கும் படையிடமோ மாட்டிக்கொண்டால் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு தேர்வெழுத முடியாது.

7. அறைக்குள் நுழைந்ததும் தங்களுக்குரிய இடத்தை கண்டுப்பிடித்து அமர வேண்டும். அங்கு சிறிது நேரம் மூச்சு பயிற்சி செய்தால் நலம். இதனால் மன அழுத்தம் குறையும்.

8.  கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் பதட்டப்படாமல் படித்துப் பார்த்து கடினமான, தெரியாத கேள்விகள் வந்திருந்தாலும் அதை பார்த்து பதட்டப்படக்கூடாது. தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதவும். இப்படிச் செய்தால் தன்னம்பிக்கை பிறக்கும். மற்ற கேள்விக்களுக்கான பதில்களும் எளிதில் ஞாபகத்தில் வரும். 
9. தேர்வு எழுதும்போது கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

10.  தேர்வு அறையில் அருகில் இருக்கும் மாணவர்களிடமிருந்து பேனா, பென்சில் போன்ற பொருட்களை வாங்கக்கூடாது. தேர்வின் போது தேவையில்லாமல் திரும்பி பார்த்தல், சைகை மொழியில் பேசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேர்வு அறையில் ரிலாக்சாக அமருங்கள். தேர்வு நேரத்தில் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை  பார்க்காமல், தேர்வு எழுதுவதிலேயே முழுக்கவனம் செலுத்துங்கள். 

11. தேர்வு நேரமான மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு அறையை விட்டு வெளியே வர வேண்டாம். தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக விடைகளை எழுதி முடித்துவிட்டு, மிச்ச நேரத்தை எழுதிய விடைகள் சரியாக இருக்கிறதா, விடைத்தாளில் தேர்வு எண் சரியாக இருக்கிறதா? விடைத்தாளில் கேள்விக்கான  எண் சரியாக இருக்கிறதா என்பதையும் சரி பார்க்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். விடைத்தாளை உங்களது மேஜையிலேயே வைக்காமல் கண்கணிப்பாளர் வசம் ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள்.
இனி மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு..

உங்கள் குழந்தைக்கு தேர்வு பயம் வந்தால்.., நீங்கள்  கவலை கொள்ளாமல் உங்கள் குழந்தைக்கு தைரியமூட்டுங்கள். தேர்வில் வெற்றி பெற பக்கபலமாக இருங்கள்.....

பெரும்பாலும் நன்றாக படிக்கும் குழந்தைகள் கூட தேர்வு என்றாலே காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுவது சகஜம். ஏதோ ஒருவித படப்படப்பு வயிற்றில் பட்டாம்பூச்சி ஓடுவது போல தோன்றும். அந்த சமயத்தில் பெற்றோர்களான நீங்கள் தான் உதவ வேண்டும்.

பொதுவாக இந்த பிரச்சனை எல்லா மாணவர்களுக்கும் வருவது தான். சில மாணவர்கள் தேர்வு எழுதுவதை பற்றியே எந்நேரமும் சிந்தித்து கொண்டு இருப்பார்கள். சரியாக சாப்பிடாமல், இரவில் சரியாக உறங்காமல் ஒருவித பயத்துடனே காணப்படுவார்கள் அது மிகவும் தவறான விஷயமாகும். தேர்வுக்கு செல்லும் முன் சில விஷயங்களை கடைப்பிடிப்பது நல்லது.
தேர்வுக்கு செல்லும் முன் முதலில் என்ன தேர்வு எழுத போகிறோம் என்று தெளிவாக இருக்க வேண்டும். மனதில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்வு நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள்வது நல்லது. சத்தான உணவு, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் மூளைக்கு சுறு சுறுப்பு ஏற்படும்.

சரியாக படிக்காத குழந்தையாக இருந்தாலும், முக்கியக் கேள்விகள், மிகவும் எளிதான கேள்விகளை நன்கு படித்துக் கொண்டால் போதுமான கேள்விகளுக்கு பதிலளித்து தேர்வில் தேர்ச்சி பெறலாம் எளிதாக.
தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எந்த வித மன குழப்பமும் ஏற்படாதவாறு பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் ஏற்படும் எந்த பிரச்சனையும் பிள்ளைகள் மனதை பாதிக்காத வகையில் பார்த்து கொள்வது பெற்றோர்கள் கடமையாகும்.

தேர்வு எழுதி வந்தவுடன், எந்தெந்த கேள்விகளுக்கு பதில் எழுதினே, இந்த கேள்வியை ஏன் விட்டு வந்தே, நூறு மார்க்குக்கு மட்டும்தானா எழுதினேன்னு கேள்விகளை கேட்டு டார்ச்சர் செய்யாதீர்கள். அது அவர்களை பதட்டப்படுத்தி அடுத்து வரும் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது பதட்ட பட வைக்கும்.

தேர்வெழுதி வந்தவுடன் சிறிது நேரம் தூங்கவோ, இல்லை மெல்லிய இசையையோ ரசிக்க விட்டு பிறகு படிக்க விடுங்கள். அது புத்துணர்ச்சியுடன் அவர்களை படிக்க வைக்கும்.
ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்தாலும் அதை ஏற்று கொள்ளும் பக்குவம் உங்களுக்கிருப்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். அது, அவர்களை தவறான முடிவுகளை எடுக்க வைக்காதிருக்கும்.

தேர்வெழுதும் அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் என் வாழ்த்துகள். எல்லாரும் தேர்வில் வெற்றி பெறனும்ன்னு இறைவனை வேண்டிக்குறேன். அப்படியே என் மகன் ராம்ஜியும் இந்த வருசம் பரிட்சை எழுதப்போறான். அவனுக்காக நீங்க வேண்டிக்கோங்க.
தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கபடுத்துங்கள் தேர்வில் வெற்றி பெற துணையாய் இருங்கள்.  

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்.....
நன்றியுடன்,
ராஜி.


Friday, June 21, 2013

சித்தர்கள் சமாதி - புண்ணியம் தேடி ஒரு பயணம்..,

புண்ணியம் தேடி போகும் பயணத்தில் இன்னிக்கு நாம பார்க்க படிக்க போறது.., பன்ருட்டியிலிருந்து ஒண்றரை கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற "சிவப்பிரகாச ஜீவ சமாதியை”.., என்னடா! வெள்ளிக்கிழமை அதுமா ராஜி சமாதிக்குலாம் கூட்டிப்போறாளேன்னு ஜெர்க் ஆக வேணாம்.., என்ன விசேசம்ன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க சகோ’ஸ்...,
                                                                



சிவப்பிரகாச சுவாமிகள் காஞ்சிப்புரத்தில் பிறந்தவராம். அவருடைய காலம் 17ம் நூற்றாண்டை சேர்ந்ததாம்.., அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகள் மட்டுமே.., ஆனா, அந்த முப்பத்திரண்டு வயத்துக்குள்ள முப்பத்திரண்டு தெய்வீகத் தத்துவங்களை செந்தமிழில் எழுதினாராம்..., அதனாலயே இந்த சிறப்பு.., சின்ன வயசிலேயே அப்பாவை இழந்துட்ட சிவப்பிரகாச சுவாமிகள் தனது தம்பி தங்கையுடன் “திருவண்ணாமலைக்கு வந்துவிட்டாராம், பிறகு அவரது தந்தையின் குருவான “குருதேவை” சந்தித்து அவருடன் தங்கி, கல்வி கற்றாராம்..,

திருவண்ணாமலை கிரிவலத்தி பெருமையை தன் உள்ளுணர்வால் உணர்ந்து புறப்பட்டாராம். ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் அருனாச்சலேஸ்வரர் மேல் பாடல் பாடி அன்றைய தினமே 100 பாடல்கள் இயற்றினாராம் ...,
                                

அதற்கு ”சோண சைலமாலை”ன்னு பெயரிட்டாராம். சுவாமிகள் மேலும் ஆழ்ந்த கல்வி பயில வேண்டும் என்ற ஆசையினால், தமது சகோதர்களுடன் தென்னகம் நோக்கி சென்று.., திருச்சிக்கருகில் உள்ள “பெரம்பலூரில்” இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து திருநெல்வேலி வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிந்துபூத்துறைக்கு வந்து சேர்ந்தாராம்,,ம்

குருநாதரிடம்  சொல்லி விடை பெற்று தமது சகோதரர்களுடன் “துறைமங்கலம்” வந்து, பின்னர் அங்கிருந்து, “வாலி காண்டபுர”த்தின்  வடமேற்கு திசையிலுள்ள திருவெங்கையிலே சில காலம் தங்கி சிவபூஜை செய்து வந்தாராம்.  வள்ளல் அண்ணாமலை ரெட்டியார் கட்டி தந்த மடத்தில் தங்கியிருந்தவாறே “திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலபகம், திருவெங்கையுலா, திருவெங்க அலங்காரம் என்னும் நான்கு நூல்களை எழுதினாராம். பின்னர் தமது சகோதரர்களுக்கு திருமணம் செய்து வைத்து அண்ணாமலை ரெட்டியாருடன் தனது புனித பயணத்தை தொடங்கினாராம்...,

சிதம்பரத்திற்கு திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து சிவப்பெருமானை தரிசனம் செய்து சில காலம் தங்கியிருந்துட்டு பிறகு காஞ்சிப்புரம் புறப்பட்டு போனாரம். பின்னர் புதுவை வந்து அங்கிருந்து பிரம்மபுரம் வந்து சேர்ந்தாராம்.. காலம் வேகமாக சென்றது.. 

பிரம்மபுரத்திலிருந்து புறப்பட்டு புதுவை வந்து சிவதலங்களை வணங்கி விட்டு, நல்லாத்தூர் வந்து சேர்ந்தார். அது ஒரு சிற்றூர். எங்கு பார்த்தாலும் நுணா மரங்களும் கள்ளிக்காடுகளுமாக இருந்தது. அவ்வூரில் ஒரு சிவன் கோவிலும் இருந்தது.., அக்கோவிலின் முன்னே உள்ள நுணா மரத்தின் கீழே அமர்ந்து தன் தவத்தை மேற்கொண்டாராம்.

பல ஆண்டுகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுப்பட்டிருந்தார். தவம் முடிந்து தவசித்தி பெற்றாற். சுவாமிகளின் பூஜைகள் பலிக்கத் தொடங்கின. அவருக்கு முப்பத்திரண்டு வயது வந்தது.., தாம் சிவமாகும் காலம் நெருங்குவதை உணர்ந்து “புரட்டாசி மாதம் - பௌர்ணமி திதியில் ஐக்கியமானார் என்கின்றனர்..,


எங்கு சுவாமிகள் சித்தி அடைந்தாரோ அங்கேயே சுவாமிகளை சமாதி வைப்பதற்காக அங்குள்ள  நுணா மரம் வெட்டப்பட்டது.., அந்த நுணா மரத்தின் கீழ்தான் சுவாமிகள் தவம் செய்வது வழக்கம். வெட்டப்பட்ட நுணா மரத்தை அங்குள்ள ஒரு வீட்டில் கொண்டு போய் போட்டார்கள். அப்படி போட்ட மறுகணமே பச்சை நுணா மரம் எரிந்து சாம்பலாகியது.., அதுமட்டுமில்லாமல் அவ்வீட்டில் இருந்த மற்ற பொருட்களுக்கு தீ பரவவுமில்லை.., அதனால் எந்த விபத்தும் நடக்கவும் இல்லை.

மேலும், இதை மூவர் சமாதி என்றும் சொல்வர்.., 3 சித்தர்கள் ஜிவ சமாதியான் இடம் இது..,

 இவர் ”சீர்மன்   குமாரசுவாமி தம்புரான்”. சிவப்பிரகாச சுவாமிகளுடைய சிஷயர்” என்று சொல்கிறார்கள்..,

இவர் ”சடை சுவாமிகள்” ன்னு சொல்லப்பட்டாராம்.., இவருடைய சமாதியும் இங்க இருக்கு..,

இவர் ஸ்ரீகுண்டலி பரதேசி சுவாமிகள்.., இவர் ”சீர்மன்னு குமாரசுவாமி” தம்பிரானுடைய சிஷ்யன் என்று சொல்றாங்க...,

மேலும் ஆலயத்துக்குள்ள நிறைய மகான்களின் சிலைகள் இருக்கு...,

ஸ்ரீசுக பிரம்ம ரிஷி..,

ஸ்ரீகாகபுஜண்டர் தன் பத்தினியுடன்..,

  திலகவதி அம்மையாரும்.., அவர் அருகில் திருநாவுக்கரசருக்கும்..,

மேலும் நாங்க போகும்போது நிறைய பேர் படிச்சுக்கிட்டு இருந்தாங்க..., அவங்களை கேட்டபோது TNPCCதேர்வுகளில் நிறைய பேர் இங்க வந்து உக்காந்து படிச்சுட்டு போய் பரிட்சை எழுதி அரசு உயர் பதவிகளில் இருக்காங்களாம்.., அதனால.., இங்கு படிச்சா வெற்றி நிச்சயம்ன்னு படிக்கிறாங்களாம்..,
                                                           
மாணவர்களும், சிலர் படிப்பதை பார்த்தோம்.., பகல் நேரங்களில் வயதானவர்களும் வெட்டியாய் கொஞ்ச நேரம் படுத்டிருக்காங்க.., இந்த கோவில வழிப்பட உகந்த நேரம் மாலை நேரமே!!

 
 
இந்த சமாதி.., இங்கிருந்து படித்து அரசின் உயர் பதவிக்கு சென்றவர்களின் நிதி உதவியுடன் இப்போ ரொம்ப அழகா பராமரிக்கப்பட்டு வருது..,
  


கோவிலின் வெளிப்புறம் ஒரு சின்ன கோவிலும், குதிரை சிலையும் இருக்கு. வெளியூர் போறவங்க தான் நினைச்ச காரியம் ஈடேற கற்பூரம் ஏற்றி கும்பிட்டு போறதை பார்க்க முடிஞ்சுது..,

அடுத்த வாரம் வேறொரு கோவில் பற்றி பேசலாம்.., இப்போ வர்ட்ட்ட்ட்ட்ட்டா?!

Friday, June 07, 2013

கல்வி வரம் அளிக்கும் ”ஹயகீரீஸ்வர்” -ஸ்கூல் ரி ஓப்பன் ஸ்பெஷல்

 
                       
பசங்களுக்குலாம் ஸ்கூல் திறக்குற நாள் கிட்ட வந்துடுச்சு. அவங்க நல்லா படிக்கனும்ன்னு செங்கல்பட்டு மாவட்டத்துல இருக்குற  செட்டிப்புண்ணியம் தேவநாதசுவாமி கோயில் ஹயக்ரீஸ்வரர் கோவிலுக்கு போய் வந்தோம். 

ஒருமுறை உலகம் அழிய இருந்த சமயத்துல, இந்த உலகத்தையும், மக்களையும் தன்னுள்ளே அடக்கி, ஆலிலை மேல் குழந்தை வடிவத்தில் சயனித்தாராம் மகாவிஷ்ணு. பிறகு, புதிய உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து (தொப்புள்) பிரம்மனை படைத்து, நான்கு வேதங்களையும் அவருக்கு உபதேசித்தாராம். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தாராம்.
இதன்பின், மது, கைடபன் என்ற அசுரர்கள் பெருமாளின் உடலில் இருந்த தண்ணீர் திவலைகளில் இருந்து பிறந்தனராம். விஷ்ணுவின் பிள்ளைகள் என்ற தைரியத்தில், பிரம்மாவிடம் இருந்த வேதங்களை அபகரித்தனராம்... தங்களுக்கும் படைப்புத்தொழில் செய்ய உரிமை உண்டு என வாதிட்டு, பின், குதிரை முகம் கொண்டு பாதாளத்திற்கு சென்று வேதங்களை ஒளித்து வைத்தனராம்...,

இதனால்  படைப்புத்தொழில் நின்று போனது. மது, கைடபரால் உலகில் அசுரர்கள் அதிகரிப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டது. பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தராம்.., பெருமாள் பாதாள உலகம் வந்த போது, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டு,  உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார்.

அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்ததாக இந்த புண்ணிய தளத்தோட வரலாறு.

கடலூருக்கு பக்கத்திலிருந்து “திருவஹீந்திரபுரம் தேவநாதன்” கோயிலில் இருந்து, அழகான பெருமாள் விக்ரகம் மற்றும் யோக ஹயக்ரீவர் ஒன்றை செட்டிப்புண்ணியத்துக்கு எடுத்து வந்து,  அவற்றை வைகாசி,  மகம் நட்சத்திரத்தில் செட்டிப்புண்ணியத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிறகு தாயார் ஹேமாப்ஜவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள், ஆண்டாள், ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  மூலவரை வரதராஜர் என்றும், உற்சவரை தேவநாத சுவாமி என்றும் அழைக்கின்றனர்.
இங்கு ”வித்யாதோஷ நிவர்த்தி”  ”சங்கல்ப ஆராதனை” என்னும் கல்வி பூஜை நடத்தப்படுகிறது.  இந்த சிறப்பு பூஜை தேர்வு வேளையில் செய்யப்படுகிறது. கல்வியாண்டு துவங்கும் வேளையிலும்,  மாணவர்களின் புத்தகம் மற்றும் எழுதுபொருட்களை எடுத்துச்சென்று பூஜை செய்தும் வரலாம். திக்குவாய் உள்ளவர்கள், பேச முடியாதவர்களுக்கு நாக்கில் தேன் தடவப்படுகிறது. இதன்மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள்.

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் வழியிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில் மகேந்திராசிட்டி ஸ்டாப்பில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் செட்டிப்புண்ணியம்ன்ற இத்திருத்தலம் இருக்கு.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 12 வரை, மாலை 4.30 முதல் இரவு8 வரை. நங்க நட்ட நடு மத்தியானத்துலதான் போனோம். வெயில் கொளுத்தி படுத்தி எடுத்திட்டுது.

இன்னொரு மனதை நெருடலான ஒரு விசயம்.., வண்டியை விட்டு இறங்கியதும் பத்து வயது  கூட நிரம்பாத குழந்தைகள் துளசி மாலையும்.., கற்பூரத்தையும் விற்க ஓடி வந்து போட்டி போடுதுங்க. உலகத்தாருக்குலாம் கல்வி வரம் அளிக்கும் அந்த ”ஹயகீரீஸ்வர்” கண்ணுக்கு இக்குழந்தைகள் புலப்படவே இல்லியோ!?

 படம் கூகுள் ல இருந்து சுட்டது...,

Saturday, October 27, 2012

உன்னை அறிந்தால்.....,


                                                      
கண்ணில் காண்பதெல்லாம்!!
கனவென்று நம்பாதே...,
காணாத கனவுகளும்!!
நனவாகிப் போகலாம்...,



நிகழ்கால நிழலில்,
 மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...,
எதிர்கால மர நிழலில்,
 மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...,
இறந்தக் கால தென்றல் காற்றின்...,
இதமான அரவணைப்பில் ஓய்வெடு....,



கண்களை மூடித் திறக்குமுன்..,
உன் கற்பனைகளை திறந்து விடு...,
பூக்களின் வாசனையை நுகர்வது தப்பில்லை..., 
அதிலுள்ள முட்களின் வேதனையை புரிந்துக் கொள்...,


புன்னைகையே மட்டுமே 
வாழ்க்கையல்ல...,
பூகம்பமும் வரும்..,
 எதிர் கொள்ள தயராகு!!


நீ விதைத்ததை...,
 நீயே அறுவடை செய்துக் கொள்ள்ள வேண்டும்...,
அன்று கொல்லாவிடினும்..., 
நின்றாவது கொல்லும்..., 
மாற்றான் துயரம் மட்டுமல்ல!!??
மதுவும், மாதுவும் கூடத்தான்.....,


மற்றவர் கண்களில் தெரிவது,
 கண்ணீரென்று மட்டும் எண்ணாதே...,
விஷமாவும், கேலியாகவும், 
விஷமமாகவும்..., ஏன்? உனக்கென
தோண்டப்பட்ட புதை குழியாவும் கூட இருக்கலாம்...,

உனக்கென ஒரு பாதை.....,
 உனக்கென ஒரு பயணம் .....,
உன்னோடு சில பயணிகள்....,
தேர்வு உன் கையில்!!??


இது நீ ”பிறந்த நாள்” அல்ல..,
உன்னை நீ நன்கு உணர்ந்த நாள்”,  ஆயின்...,
உன்னை எண்ணி பூரிப்பதில் 
தோழி நானும் ஒருத்தி உண்டு...,
  
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்களுடன்...,  


Wednesday, March 07, 2012

பரிட்சைக்கு நேரமாச்சு...,


தேர்வுக்கு செல்லும்  மாணவர்கள் கவனத்திற்கு:

தேர்வு நடைப்பெறும் இடத்திற்கு தேர்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்றுவிடுவது நல்லது. இதனால் தேர்வு மையத்திற்கு தாமதம் ஏற்பட்டு பதட்டம் ஏற்படுவதைத் தடுக்க முடியும். தேர்வுக்கு முதல் நாளிலேயே தேர்வுக்கு கொண்டு செல்ல வேண்டிய பேனா, பென்சில், ரப்பர், ஜியாமிண்ட்ரி பாக்ஸ் , ஹால் டிக்கட் போன்றவற்றை தயாராக எடுத்து வ்வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தேர்வுக்கால அட்டவணையை அனைவருக்கும் தெரிகிற மாதிரியான இடத்தில் ஒட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் எந்த தேதியில் எந்த தேர்வு என்பது குறித்து சந்தேகம் ஏற்படாது. 

தேர்வு மையத்திற்கு முன்னதாகச் சென்றுவிட்டாலும் தேர்வு மையத்தில் யாருடனும் தேவையில்லாமல் அரட்டை அடித்துக் கொண்டு இருக்காதீர்கள். இந்த பாடத்தில் இந்த கேள்விகள் கேட்கப்படலாம் என்று சக மாணவர்கள் கூறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இதனால், உங்களது கவனம் திசை திரும்பும். தேர்வு மையத்திற்கு வந்த பிறகு, சிறிது நேரம் முக்கிய குறிப்புகளை ஒரு முறை திருப்பி பார்த்தப் பிறகு, தேர்வை எதிர்கொள்ள அமைதியாக இருக்க வேண்டும். தேர்வுக் கூடத்தில் உங்களிடம் எழுதப்பட்ட காகிதங்களோ இல்லை புத்தகங்களோ  இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டால் நீங்கள் அந்த தேர்வை தொடர்ந்து எழுத அனுமதிக்கபடமாட்டீர்கள் என்பதுடன் ஐந்து வருடங்களுக்கு தேர்வெழுத அனுமதியில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தேர்வு அறைக்குள் நுழைந்து மாணவர்கள் தங்களுக்குரிய இடத்தை கண்டுபிடித்து அமர வேண்டும். அங்கு சிறிது நேரம் மூச்சு பயிற்சி செய்தால் நல்லது. இதனால், மன அழுத்தம் குறையும்.

தேர்வு அறையில் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் பதட்டப்படாமல் படித்துப் பார்க்க வேண்டும். கடினமான, தெரியாத கேள்விகள் வந்திருந்தாலும் அதை பார்த்து பதட்டப்படக்கூடாது. தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதவும். இப்படிச் செய்தால் தன்னம்பிக்கை பிறக்கும். மற்ற கேள்விக்களுக்கான பதில்களும் எளிதில் ஞாபகத்தில் வரும். தேர்வு எழுதும்போது கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

தேர்வு அறையில் அருகில் இருக்கும் மாணவர்களிடமிருந்து பேனா, பென்சில் போன்ற பொருட்களை வாங்கக்கூடாது. தேர்வின் போது தேவையில்லாமல் திரும்பி பார்த்தல், சைகை மொழியில் பேசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேர்வு அறையில் ரிலாக்சாக அமருங்கள். தேர்வு நேரத்தில் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை  பார்க்காமல், தேர்வு எழுதுவதிலேயே முழுக்கவனம் செலுத்துங்கள். 

தேர்வு நேரமான மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு அறையை விட்டு வெளியே வர வேண்டாம். தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக விடைகளை எழுதி முடித்துவிட்டு, மிச்ச நேரத்தை எழுதிய விடைகள் சரியாக இருக்கிறதா, விடைத்தாளில் தேர்வு எண் சரியாக இருக்கிறதா? விடைத்தாளில் கேள்விக்கான  எண் சரியாக இருக்கிறதா என்பதையும் சரி பார்க்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். விடைத்தாளை உங்களது மேஜையிலேயே வைக்காமல் கண்கணிப்பாளர் வசம் ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள்.



தேர்வு எழுதப்போகும் பிள்ளையை பெற்றவர் கவனத்திற்கு:
உங்கள் குழந்தைக்கு தேர்வு பயம் வந்தால்.., நீங்கள்  கவலை கொள்ளாமல் ள் குழந்தைக்கு தைரிய மூட்டுங்கள். தேர்வில் வெற்றி பெற பக்கபலமாக இருங்கள்.....

பெரும்பாலும் நன்றாக படிக்கும் குழந்தைகள் கூட தேர்வு என்றாலே காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுவது சகஜம். ஏதோ ஒருவித படப்படப்பு வயிற்றில் பட்டாம்பூச்சி ஓடுவது போல தோன்றும். அந்த சமயத்தில் பெற்றோர்களான நீங்கள் தான் உதவ வேண்டும்.

பொதுவாக இந்த பிரச்சனை எல்லா மாணவர்களுக்கும் வருவது தான். சில மாணவர்கள் தேர்வு எழுதுவதை பற்றியே எந்நேரமும் சிந்தித்து கொண்டு இருப்பார்கள். சரியாக சாப்பிடாமல், இரவில் சரியாக உறங்காமல் ஒருவித பயத்துடனே காணப்படுவார்கள் அது மிகவும் தவறான விஷயமாகும். தேர்வுக்கு செல்லும் முன் சில விஷயங்களை கடைப்பிடிப்பது நல்லது.


தேர்வுக்கு செல்லும் முன் முதலில் என்ன தேர்வு எழுத போகிறோம் என்று தெளிவாக இருக்க வேண்டும். மனதில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்வு நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள்வது நல்லது. சத்தான உணவு, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் மூளைக்கு சுறு சுறுப்பு ஏற்படும்.

சரியாக படிக்காத குழந்தையாக இருந்தாலும், முக்கியக் கேள்விகள், மிகவும் எளிதான கேள்விகளை நன்கு படித்துக் கொண்டால் போதுமான கேள்விகளுக்கு பதிலளித்து தேர்வில் தேர்ச்சி பெறலாம் எளிதாக.


தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எந்த வித மன குழப்பமும் ஏற்படாதவாறு பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் ஏற்படும் எந்த பிரச்சனையும் பிள்ளைகள் மனதை பாதிக்காத வகையில் பார்த்து கொள்வது பெற்றோர்கள் கடமையாகும்.

தேர்வு எழுதி வந்தவுடன், எந்தெந்த கேள்விகளுக்கு பதில் எழுதினே, இந்த கேள்வியை ஏன் விட்டு வந்தே, நூறு மார்க்குக்கு மட்டும்தானா எழுதினேன்னு கேள்விகளை கேட்டு டார்ச்சர் செய்யாதீர்கள். அது அவர்களை பதட்டப்படுத்தி அடுத்து வரும் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது பதட்ட பட வைக்கும்.

தேர்வெழுதி வந்தவுடன் சிறிது நேரம் தூங்கவோ, இல்லை மெல்லிய இசையையோ ரசிக்க விட்டு பிறகு படிக்க விடுங்கள். அது புத்துணர்ச்சியுடன் அவர்களை படிக்க வைக்கும்.


ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்தாலும் அதை ஏற்று கொள்ளும் பக்குவம் உங்களுக்கிருப்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். அது, அவர்களை தவறான முடிவுகளை எடுக்க வைக்காதிருக்கும்.

தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கபடுத்துங்கள் தேர்வில் வெற்றி பெற துணையாய் இருங்கள்.  

தோல்வியை மனதைரியத்துடன் எதிர்கொள்ள தம்பி கருண் பதிவை பாருங்க.