ஒவ்வொரு முறையும் புது வருசம் பொறக்கும் போதும்.., அதை செய்யனும் இதை செய்யனும்னு ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும்,இந்தவருஷமாவது 'இதைச் செய்யனும்',
'இதைமுடிக்கனும்','இதை செய்யக்கூடாது' ன்னு புதுசு, புதுசாஏதாவது ஒண்ணை சபதமா எடுத்துக்குறது, நினைவு தெரிஞ்சு பழக்கம்..ஏதோ "புதுப் பொண்டாட்டி" கதையா ஆரம்பத்துல சபதத்தை
கடைபிடிச்சுட்டு, ரொம்பப் பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லிகிட்டுத்
திரிவேன். . கொஞ்சநாள் போன பின்னாலே "பழையக்குருடி கதவத்திறடி"ன்னு புத்தாண்டு சபதத்தை காத்துல விட்டுடுவேன். மத்தவங்க கேக்க மாட்டாங்க. அப்படியே கேட்டாலும் நமக்கா சமாளிக்க தெரியாது. கேட்டா அதுக்கு ஏதாவது காரணத்த
உண்டாக்கி சொல்லிடுவேன்.
அதனால, இந்த புது வருஷத்துக்கு எந்த சபதமும் எடுக்கக் கூடாதுன்னு சபதம் எடுத்திருக்கிட்டேன்.இருந்தாலும்
மனசுக் கேக்கல ஏதாவது புதுசா செய்யனும்னு உறுத்திகிட்டே இருந்திச்சு. சரி உடம்பு வெயி குறைக்கலாம்ன்னு பார்த்தேன். அதுவும் முன்ன சொன்ன மாதிரி 'சுறு சுறுப்பா'
ஆரப்பிச்சு 'கடுகடுப்பா' முடிஞ்சுடும். என்ன பண்ணலாம்னு ரொம்ப நேரம் யோசிச்ச பின்.., யோசிச்ச பின்..., யோசிச்ச பின்னும் ஒண்ணும் தோணலை.:-(
சமைக்குற, கூட்டுற, துவைக்குற வேலைன்னு எது எஞ்சாலும் நல்லா இல்லைன்னு பேர் வாங்குற நாம.., கிடைக்குற வார்த்தைகளை உடைச்சு போட்டு கமா, ஆச்சர்ய குறி லாம் போடு எழுதுறதையும்.., சகோதரி மனசு கஷ்டப்பட கூடாதுன்னு நல்ல இருக்குன்னு சொல்ற மாதிரி ஏதொ கொஞ்ச நல்ல பேர் வாங்கி வெச்சிருக்கேன்.அதனால.., இந்த நல்ல பேரை தக்க வெச்சுக்கிட்டா போதும்ன்னு புது வருசத்துல சபதம் எடுத்துக்கிட்டு.., கவிதைன்ற பேருல எதோ எழுதி பதிவை போட்டுட்டேன். இந்த புது வருசத்துலயும் இந்த சகோதரி மனசு கஷ்டப்படாம பார்த்துப்பீங்கன்னு நம்புறேன்.
போதும் பில்ட் அப் முதல்ல கவிதையை போடு. சகோதரியாகிட்டதால நல்லா இருந்தா பாராட்டுவோம். இல்லாட்ட்டி ஓங்கி நடு மண்டைல கொட்டுவொம்ன்னு சொல்ற உங்க மைண்ட் வாய்ஸை நான் புரிஞ்சுக்கிட்டேன்.... படிச்சு பார்த்து நல்ல முடிவை எடுங்க...,
புத்தாண்டு வாழ்த்துமே நீ உன்னை உண்மை அறிந்தால்..,
கடற்கரையில் கொண்டாட்ட கேளிக்கை:
காண நூறு பேர் வாடிக்கை
பன்னிரண்டு மணிக்கு பட்டென்று
வெடிக்கிறது வானவேடிக்கை
புத்தாண்டு ஆரம்பம்??!!!
காது கிழிக்கும் பேரிரைச்சல்,
மங்கிய விளக்கொளி:
நட்சத்திர ஓட்டலில் நடனம்..,
ஆடவர்/பெண்டிர் பேதம் இல்லாமல்..,
சமஉரிமை இங்கே சமனாக்கப் படுகிறது??!!
குடும்பத்தோடு கொத்தளத்தில் கொண்டாட்ட குதூகலம்..,
தமிழ் கலாச்சாரம் இங்கே தனித்துவம் பெறுகிறது??!!
மது வாங்கி,மதி மயங்கி மகான்மியம் தேடும் நவயுக நாகரீகம்
மது விலக்கு இங்கே மௌனம் சாதிக்கிறது??!!
கண்டிப்பாய் இவை இல்லாமல்
வரமாட்டேன் என்கிறது...,
சண்டித்தனமாய் இவர்களுக்கு மட்டும்..,
சண்டித்தனமாய் இவர்களுக்கு மட்டும்..,
இன்னும் ஒரு 365??!!
கையில் பீர் பொங்கினால் தான் பொங்கும்??!!
அடங்காத காளையருக்கு..,
இன்பம் தரும் இன்னுமொரு 365.
இன்பம் தரும் இன்னுமொரு 365.
ஆடைக் குறைப்பினால்தான்??!!
நிறையும் அங்கயர்க் கன்னிகளுக்கு...,
அம்சமான இன்னுமொரு 365.
அம்சமான இன்னுமொரு 365.
வாழ்த்துஅட்டை குவித்துதான் ஆரம்பமாகும்??!!
அன்பின் தூவர்களுக்கு..,
அடுத்த ஒரு சில 365.
அடுத்த ஒரு சில 365.
நள்ளிரவு சாகசத்திற்குப் பின்தான் நகருகிறது??!!
நகரத்துஆசாமிகளுக்கு..,
நச்சென்ற புது 365.
இதோடு நின்றால் பாரம்பரியத்திற்கே இழுக்கென்று??!!
தொலைக்காட்சியில் தொல்லையாய் காட்சிகள்..,
பார்த்து தம் பாவம் தொலைக்கும் பரிதாப மக்கள்.
போர் மேகங்கள்,பொருளாதாரப் புயல்ககள்,
அரசியல் அடிதடிகள்,முதலாளித்துவ முகமூடிககள்,
கடும் விலையேற்றம்,கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டங்கள்,
பணவீக்கம்,அத்தியாவசிய பொருட்கள் முடக்கம்..,
அரசியல் அடிதடிகள்,முதலாளித்துவ முகமூடிககள்,
கடும் விலையேற்றம்,கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டங்கள்,
பணவீக்கம்,அத்தியாவசிய பொருட்கள் முடக்கம்..,
இவை எல்லாம் எப்போதுமே இங்கே உண்டு
பழைய வருடத்தில் பழையனவாய்.
புதிய வருடத்தில் மீண்டும் பழையனவாய்.
எப்பொழுதும் போல் ஆண்டு வரும்,
ஆண்டு போகும் இது இயற்கை.
மாண்டு போகும் மனிதனே
மாண்டு போகும் மனிதனே
உனக்குத் தெரிய வேண்டாமா??!!
ஆண்டு ஓடினால்..,
வயது மூப்பு தான் வரும் என்று...,
ஒரு நொடி இறந்து..,
ஒரு நொடி இறந்து..,
மறுநொடி பிறக்கும்..,
ஒரு பிறப்பு..
அந்த பிறப்பிற்கு..,
பித்து பிடித்து அலையும் நீ..,
அந்த ??!! இறப்பிற்கு துக்கம்
அந்த ??!! இறப்பிற்கு துக்கம்
அனுஷ்டிக்க வேண்டாமா???
ஓர் இரவுக்குள், புது அவதாரம் எடுத்து
புதிய விதி செய்திடுவாயோ?
பார் எங்கும் புதிய சிந்தனை கொடுத்து..,
பார் எங்கும் புதிய சிந்தனை கொடுத்து..,
புரட்சி ஒன்றைத் தந்திடுவாயோ ??!!
உன்
புத்தாண்டு கேளிக்கை கொடுக்குமா??!!
இனியும் ஒரு புதிய விதி???
புரட்சி தடைபடுமா??! இல்லை..,
புரட்சி தடைபடுமா??! இல்லை..,
புதிய சிந்தனை ஏற்படுமா???
பின்
ஏனிந்த தூக்கம்கெடுத்து..,
துக்கம் கொடுக்கும் ஒழுக்கக் கேடு???
சனவரிக்கு சனவரி மட்டும் ஏன் இந்த பரிவர்த்தனம்??!!


