Sunday, June 11, 2017

இவரா நடித்தார்ன்னு ஆச்சர்யப்பட வைத்த பாடல்கள்

சில பாடல்களை நாம விரும்பி கேப்போம். அது யார் நடிச்சது?! என்ன படம்?! எப்படி படமாக்கியிருக்காங்க?! யார் பாடினது?! இசை, எழுதினதுன்னு ஒரு தகவலும் தெரியாது. அடிக்கடி மனசுக்குள் கேக்கும்போது பாட்டு பத்திய கற்பனை பறக்கும். இவர் நடிச்சிருப்பாரா?! பாட்டு அப்படி இருக்குமான்னு.. என்னிக்காவது திடீர்ன்னு இந்த பாடலை பார்க்க நேரும்போது அட, இவரா நடிச்சிருக்காரு?!ன்னு ஆச்சர்யப்படுவோம். அப்படி ஆச்சர்யப்பட வைத்த பாடல்களின் லிங்க் சிலது.....


இந்த லிங்க்ல இருக்கும் பாட்டு செமயா இருக்கும். இரவு பயணங்களை அழகாக்குவதில் இந்த பாடலுக்கும் இடமுண்டு.. இப்பத்திய சூரியன் எஃப்.எம், ரேடியோ மிர்ச்சி, ஹலோ எஃப். எம்லலாம் இந்த பாட்டு அடிக்கடி ஒலிக்கும். ஆனா, யார் நடிச்சதுன்னு தெரியாது.  ரொம்ப நாள் வரை இந்த பாடல்ல மோகன் இல்லன்னா கார்த்திக்தான் நடிச்சிருப்பாங்கன்னு நினைச்சிருந்தேன்.  ஒரு வலைப்பூவில்தான் இந்த பாட்டுல விஜயகாந்த் நடிச்சிருக்கார்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன்...
இதே விஜயகாந்த் நடிச்ச தூரத்து இடிமுழக்கம் படத்துல வரும் பாடலும் அப்படிதான். பாட்டு மனசை துள்ள செய்யும். கேக்கும்போதே மனசு குஷியாகும். அதே பாட்டு சோகமாவும் வரும்... அந்த பாட்டை படமா பார்த்தபின் இதுல விஜயகாந்தா நடிச்சிருக்கார்ன்னு ஆச்சர்யப்பட்டு நிக்கும்போதே அதே பாட்டோட சோக வர்ஷன்ல குணச்சித்திர நடிகர் பீலி சிவம் நடிச்சிருப்பார்...’

இது விஜயகாந்த் நடிச்சதோட லிங்க்
இது பீலி சிவம் நடிச்ச பாட்டோட லிங்க்
மீண்டும் ஒரு காதல் கதைன்னு பிரதாப் போத்தனும், ராதிகாவும் நடிச்ச படம். பார்க்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பொறுமை அவசியம். அந்த படத்துல அட்டகாசமான பாட்டு... இவரை போட்டு சொதப்பிட்டாங்களேன்னு வருத்தப்பட வச்ச பாட்டு.. அதிகாலை நேரமே...
வில்லன் நடிகர்  சரண்ராஜ்  நடிச்ச நான் சொல்வதே சட்டம் படத்துலயும் அட்டகாசமான பாட்டு... அதிகாலை கனவில் உன்னை பார்த்தேன்... பாட்டோட லிங்க்
கிராமத்து அத்தியாயம் படத்துல ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குதுன்னு மனசை துள்ளாட்டம் போட வைக்கும் பாட்டு. பாட்டை எப்ப கேட்டாலும் புது குஷி பிறக்கும். பாட்டும் இசையும்  செமயா இருக்கும். ஆனா யார் நடிச்சதுன்னு தெரியாது..  
எச்சில் இரவுகள்ன்ற படத்துல பூமீது வீசும் பூங்காற்றே.. என்மேல் வீசக்கூடாதா?! பாட்டும் ஹிட்டடிச்சிருக்க வேண்டிய பாட்டு..  ஏனோ ஹிட்டடிக்கல...
இனி சினிமா பதிவுகளும் தொடரும்...

நன்றியுடன்,
ராஜி.

Saturday, June 10, 2017

விஜய் டிவிக்காரங்க சரியான பெருமை அடிச்சுக்குறவங்க போல- கேபிள் கலாட்டா.

தினமும் காலை 9 மணிக்கு கிச்சன் கேபினெட்ன்னு ஒரு நிகழ்ச்சி. இதுல அரசியல், சினிமா, நாட்டு நடப்புன்னு எல்லாத்தையும் நக்கல், நையாண்டியுடன் அழகா எடுத்து சொல்றாங்க. எப்ப பாரு நியூஸ், கருத்தரங்கம்ன்னு பார்த்து பார்த்து போரடிச்சு போய் இருக்கவுங்களுங்கு ஒரு மாறுதலான நிகழ்ச்சி இது. இது ஒளிப்பரப்பாகுற டிவி புதிய தலைமுறைல...
Image result for puthiya thalaimurai kitchen cabinet
நியூஸ் 7 தமிழ்ல ஞாயித்துக்கிழமை மதியம் 12.30க்கு சுற்றலாம் சுவைக்கலாம்ன்ற நிகழ்ச்சி,  இதுல பாரம்பரிய உணவு முதற்கொண்டு வட்டார உணவு வரை அந்தந்த ஊருக்கே போய் அந்த ஊர் ஆளுங்களை கொண்டே  சமைச்சு காட்டுறாங்க,  ரோட்சைட்ல இருக்கும் சர்பத் கடை முதற்கொண்டு நட்சத்திர ஹோட்டல் வரை  அதன் ருசியை எடுத்து சொல்றாங்க. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செம ஜாலியா எடுத்துட்டு போறார் இந்நிகழ்ச்சியை...  மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சென்னை, கொடைக்கானல்ன்னு ஆல்ரெடி ஐயா சுத்தி வந்து நிகழ்ச்சியை கலக்கி இருக்கார். 
புதிய தலைமுறையில் நீயின்றி அமையாது உலகுன்னு ஒரு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒளிப்பரப்பாகுது.  நீரின்றி அமையாதுன்னு வள்ளுவரின் வாக்கு. நீரைப்போலவே நாமும் மிக முக்கியம். நாம இல்லன்னாலும் இச்சமூகம் வீண்.  நம்ம செயல்பாடுகள் இல்லாமல் இந்த உலகம் சுமூகமாய் இயங்காது. அதனால நம்ம செயல்பாடுகள் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்ங்குறதை இந்நிகழ்ச்சி உணர்த்துது.  இச்சமூகம் என்ற சக்கரம் சுழல பல்வேறு துறை சார்ந்தவர்கள் ஓயாது உழைக்கின்றனர். மருத்துவர்கள், ஓட்டுனர்கள், விவசாயிகள், வாகன பழுது நீக்குறவங்கன்னு எல்லா துறையிலிருந்து இந்த நிகழ்ச்சில கலந்துக்கிட்டு தங்கள் கருத்துகளை எடுத்து சொல்றாங்க.  
வேந்தர் டிவில திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு மூன்றாவது கண்ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. சிலருக்கு அமானுஷ்யங்களின் மீது அலாதி ஈடுபாடு உண்டு.  அந்த ஈடுபாட்டின் தேடல்தான் இந்நிகழ்ச்சி...  அமானுஷ்ய உலகில் இதுவரை மறைந்திருந்த பல பயங்கர சடங்குகளையும் நம்பவே முடியாத ஆச்சரியங்களையும், இறைவன் கருணையால் நடக்கும் அற்புத நிகழ்வுகளும், சித்தர்கள் பற்றிய தேடல்கள் மற்றும் இயற்கைக்கு முரணான நிகழ்வுகளும் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகுது. 
புதுயுகம் சேனல்ல வினா விடை வேட்டைன்ற நிகழ்ச்சி மாணவர்களுக்காக ஒளிப்பரப்பாகுது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆதிராஜ் அழகா பசங்கக்கிட்ட இருந்து விடைகளை வாங்குறதுலயும், நிகழ்ச்சியையை கொண்டு செல்வதிலும் அக்கறையோடு செயல்படுறார். சீரியல், பாடல், காமெடின்றதை தாண்டி பொது அறிவை வளர்க்கு இந்நிகழ்ச்சி பயனுள்ளதாகும். இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு ஒளிப்பரப்பாகுது.
கறுப்பு பணம் எப்படி உருவாகுதுன்னு கறுப்பு பணத்தோட நதிமூலம் ரிஷி மூலத்தை நமக்கு இன்னிக்கு மதியம் 12 மணிக்கு சொல்ல போறாங்களாம் . முடிஞ்சா பாருங்க..... 
கவுண்டமணி, செந்தில்கிட்ட ஒரு படத்துல சொல்வார். இந்த சினிமாக்காரங்களுக்குதான் வேலை இல்லை. இவனுங்கதான் பூமில பொறந்தமாதிரி அவனுங்களே அவனுங்களுக்கு பொறந்தநாள்ன்னு சொல்லி விழா எடுத்து கொண்டாடிக்குறானுங்கன்னு. அதுமாதிரி இந்த விஜய் டிவிக்காரனுங்களுக்கும் வேற வேலை இல்ல போல... அவனுங்களே விழா எடுத்துக்கிட்டு அவனுங்களே அவனுங்களே அவனுங்களுக்கு விருது கொடுத்துக்கிறாங்க. எல்லா கேட்டகிரிலயும் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், நடிகர், பின்னணி குரல் கொடுப்பவர்கள்ன்னு எல்லாருக்கும் விருது கொடுத்துக்குறாங்க... சரியான பெருமைக்காரங்களா இப்பாய்ங்க போல!!
Image result for watching tv
நன்றியுடன்,
ராஜி.

Friday, June 09, 2017

பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தால் இப்படியா நடக்கும்?! - நாயன்மார்கள் கதைகள்


சதா சர்வ காலமும்  வேதப்பாராயணம் நடக்கும் சோழநாட்டின் திருத்தலையூர் தலத்தில் அவதரித்தார் உருத்திர பசுபதி நாயனார் என்பவர். அவரின் இயற்பெயர் பசுபதி என்பதாகும்.  இவர் வேதியர் குலத்தில் தோன்றியவர். சிவப்பெருமான் மீது தீராத காதல் கொண்டவர்.  இவர் பிறந்த குலத்திற்கேற்ப வேத சாஸ்திர, இதிகாச புராணங்களில் சிறந்த புலமை பெற்றிருந்தார்



ருத்திரன் என்றால் துன்பங்களிலிருந்து விடுவிப்பவன் என்று பொருள். ருத்திரம் சிவனின் கண்ணாகவும், பஞ்சாட்சரம் கண்ணின் மணியாகவும் விளங்குது. எம்பெருமானுடைய பெருமையை சொல்லும் இம்மந்திரமே வேதத்தின் மெய்ப்பொருளாகும்.  ரிக், யஜூர்ம் சாம, அதர்வண என நான்கு வேதங்களில்  யஜூர் வேதத்தின் ஏழு காண்டங்களுக்கிடையில் இருப்பது வேதத்தின் கண் போன்ற திரு உத்திரம் ஆகும்.  'வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே' என்பார் சம்பந்தர். இத்தகு சீர்மை பொருந்திய உருத்திர மந்திரத்தை நியமத்துடன் ஓதி சிவமுக்தி பெற்ற அடியவர் உருத்திர பசுபதி நாயனார்.

பஞ்சாட்சரத்தையே தம் மூச்சாக கொண்டு சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தார் பசுபதியார்.  தினமும் தாமரை மலர்கள் சூழ் தடாகத்தில் நீராடி கழுத்தளவு நீரில் நின்றபடி பஞ்சாட்சரத்தை உச்சரிப்பார். இரவு, பகல் பேதமின்றி பாராயணம் செய்வதிலேயே தன் பொழுதை கழித்து வந்தார்.



நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். 

பஞ்சாட்சரமென்பது நமசிவய என்பதாகும்... இதில்  ந- நிலத்தை குறிக்கிறது, ம- நீரைக் குறிக்கிறது, சி- நெருப்பை குறிக்கிறது. வ- காற்றை குறிக்கிறது. ய- ஆகாயத்தை குறிக்கின்றது. பஞ்சபூதங்களை அடக்கி ஆளும் சக்தி இம்மந்திரத்திற்குண்டு.  ’சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவப்பெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.



சதா சர்வக்காலமும் சிவனை தியானித்து மனது ஒருமுகப்படுத்தப்பட்டபின், அன்னம் ஆகாரமின்றி கைகளை தலைக்கு மேல் தூக்கி  நாட்கணக்கில் நின்றவாறு பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்தார். அவரின் பக்தியை மெச்சிய சிவப்பெருமான் இவரை தான் இருக்கும் கயிலாயத்திற்கு அழைத்து சிவப்பதம் அளித்ததோடு உருத்திர பசுபதி நாயனார் என பெயரும் அளித்தார்.

இவர்தம் குருபூஜை புரட்டாசி மாதம் அஸ்வினி நட்சத்திரமாகும்....

ஓம் நமச்சிவாய நம!

தமிழ்மணம் ஓட்டு பட்டைக்கு போகும் வழி..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462730

நன்றியுடன்,
ராஜி. 




.

Thursday, June 08, 2017

காதோரம் லோலாக்கு, கதை சொல்லுதடி - கைவண்ணம்










என் பசங்களுக்கு கருப்பு கலர்ன்னா ரொம்ப இஷ்டம்... அதுல ஜிமிக்கி செஞ்சு தரச்சொன்னாங்க. கைவண்ணம் பகுதில பதிவிட ஒன்னும் செய்யலியேன்னு இருக்கும் நேரத்துல கேட்டதால சுடச்சுட செஞ்சு பதிவு போட்டாச்சு. 

கம்மல் செய்யுறது எப்படின்னு அடுத்த பதிவில் விரிவாய்...

தமிழ்மணத்துல மொய் வைக்க....

நன்றியுடன்
ராஜி. 



Wednesday, June 07, 2017

பெண் சம்பந்தமில்லாமல் குழந்தை பிறப்பா?! வைகாசி விசாகம் ஸ்பெஷல்

வைகாசி விசாகம் எனப்படும் நன்னாளான இன்றுதான் முருகப்பெருமான் அவதரித்த தினம்.  வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில்தான் முருகன் அவதாரம் நடந்தது.  விசாகம் நட்சத்திரமென்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டாகும். 

மக்களுக்கு பெரும் இன்னலை கொடுத்துக்கொண்டிருந்த சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசூரன் மற்றும் அசமுகியை வதம் செய்யும் நோக்கோடு முருகப்பெருமான் படைக்கப்பட்டார். தாவரங்கள், பிராணிகள், மனிதர்கள் என்ற ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் இறைவன் எனும் ஒருவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் பொருட்டும் முருகப்பெருமான் தோற்றம் உண்டாக்கப்பட்டது.
வைகாசி மாதம் சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலாயே இம்மாதத்தை வைசாகம் என்றழைக்கப்பட்டு வைகாசி என்றழைக்கப்படுது.  வைகாசி மாத பௌர்ணமி தினத்தைதான் நாம் வைகாசி விசாகம் என்று கொண்டாடப்படுது.  “வி”ன்னா பட்சி, ”சாகன்”என்றால் சஞ்சரிப்பவன் என்று பொருள். மயில்மீது வலம் வருவதால் முருகனுக்கும் விசாகன் என்றும் ஒரு பேருண்டு.  பகைவனுக்கும் அருளும் தன்மைக்கொண்ட முருகனுக்கு இந்நாளில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் போன்ற தலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுது. இந்நாளில் மக்கள் பால்குடம் ஏந்தி வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்துவிக்கப்படும்.  இன்றைய தினம் விரதமிருந்து முருகனை வேண்டிக்கொண்டால் நினைத்தது ஈடேறும். குழந்தை இல்லாதவர்கள் விசாகத்தன்று பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக்கொண்டால் அடுத்த விசாகத்திற்குள் குழந்தை வரம் கிடைக்குமென்பது கண்கண்ட உண்மை. திருமணமாகாதவர்களும் இவ்விரதம் கடைப்பிடிக்கலாம். ஆண்களும் இவ்விரதத்தை கடைப்பிடிக்கலாம். பால்காவடிகள் எடுத்து இறைவனை தியானித்தால் சகல சௌபாக்கியமும் கிடக்கும்.
Sri Karthikeya and Shivalingam:
ராம அவதாரத்திற்கு முன்பே கந்தர் அவதாரம் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது.  முனிவர்களி யாகத்திற்கு தடையாக இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய ராம, லட்சுமணனை விஸ்வாமித்திரன் அழைத்து செல்கிறார்.  அவ்வாறு செல்லும்போது கந்தப்பெருமானின் பிறப்பு, பத்மாசூரனை அழித்த கதையை சொல்லி சென்றதாக வால்மீகி தன் ராமாயாணத்தில் ‘குமார சம்பவம்’ என வர்ணித்துள்ளார். பின்னாளில் இந்த வாசகமே காளிதாசருக்கு தலைப்பாய் அமைந்துவிட்டது. 

.
இனி முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்வினை பார்ப்போம்...

பத்மாசுரன் என்பவன் கடும் தவமிருந்து சிவனுக்கு இணையான ஒருவரால் தவிர வேறு யாராலும் தன்னை அழிக்கக்கூடாது. அவ்வாறு வரும் ஒருவனும் பெண்ணால் வந்தவனாக இருக்கக்கூடாதெனவும் வரம் வேண்டுமென ஈசனிடமே வரம் கேட்டு, அவ்வாறே வரமும் வாங்கிக்கொண்டான்.  பிறகென்ன?! பெண் சம்பந்தமில்லாம எப்படி குழந்தை பிறக்கும்?! அதும் ஈசன் மூலமாய்...  இப்படி ஒரு பிறப்பு நிகழாதென ஆணவம் கொண்டு தேவர்களை துன்புறுத்தினர்.  தேவர்கள்  சிவனிடம் சென்று முறையிட சென்றனர். தட்சிணாமூர்த்தி தோற்றத்தில் சிவன் தவம் புரிய, அவருக்கு பணிவிடை செய்ய வந்த அம்பாளும் தவம் புரிந்துக்கொண்டிருந்தாள். இந்நேரத்தில் எதுக்கேட்டாலும் கிடைக்கும் என்று உணர்ந்திருந்த தேவர்கள் சிவனிடம், அசுரர்களை அழிக்க ஒரு அம்சம் தங்களால் ஒரு அம்சம் வேண்டுமென வேண்டி நின்றனர்.
பத்மாசூரனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உருவாக்கி கங்கை நதியில் விட்டார். வாயுதேவனும், வருணபகவானும் அந்த குழந்தையை சரவண பொய்கையில் கொண்டு சேர்த்தனர்.  அந்த ஆறு குழந்தைகளை கார்த்திகை பெண்கள்  வளர்த்து வந்தனர். குழந்தையை காண வந்த பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் அள்ளி அணைத்தபோது ஆறு குழந்தைகளும் ஒரு குழந்தையாகியது. இக்குழந்தைக்கு ஆறு முகம், பனிரெண்டு கைகளென திகழ்ந்தது.

முருகனுக்கு சுப்ரமணியன் என்றும் பெயர் உண்டு. ஸுப்ரஹ்மண்யன் என்ற பெயரே இவ்வாறு சொல்லப்படுகிறது. இந்த பெயருக்கு பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவப்பெருமானே பரமாத்மா. அவரின் பிள்ளை பரமாத்மாவின் அம்சம் என்று பொருள்படும்படி இப்பெயர் வந்தது.
Sri Murugan:
முருகப்பெருமான் தன்னுடைய ஆறு வயது வரை மட்டுமே குழந்தைப்பருவ லீலைகளை புரிந்தார். பிரம்மாவும்க்கு ’ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தது, அப்பனுக்கே பாடம் சொன்னது, அவ்வையின் தலைக்கனத்தை அழித்தது, ஞானப்பழத்துக்காக சண்டையிட்டு பழனி மலையில் நின்றது என பல லீலைகள் புரிந்தார்.  ஆனாலும், அவரின் அவதார நோக்கமாகிய பத்மாசூரன் வதத்திற்குள் இத்தனையும் லீலை புரிந்தார்.

பத்மாசூரனை வெல்ல தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி தேவசேனாதிபதியென பெயர் பெற்றார். தேவசேனா என்பது தெய்வானையின் ஒரு பெயராகும். அவளை மணந்து தேவர்களின் பரிசினை ஏற்றார். குறவர்குல மகளான வள்ளியை மணந்து இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பேதமில்லை என உலகுக்கு உணர்த்தினார்.
Skanda Murugan:
பணிரெண்டு கரங்களின் வேலைகள்...

பனிரெண்டு கைகளின் வேலைகள் இரு கைகள் நம்மை காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தை செலுத்துகிறது, நாலாவது கை தன் தொடையில் இருக்கிறது. ஐந்தாவது மற்றும் ஆறாவது கை வேலை சுழற்றுகின்றது. ஏழாவது கை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறது. எட்டாவது கை மார்பிலிருக்கும் மாலையை சுழற்றுகிறது. ஒன்பதாவது கை கைவளையலை சுழற்றிக்கொண்டு நம் வேள்வியை ஏற்கின்றது. பத்தாவது கை அருளோசையை எழுப்புகின்றது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பனிரெண்டாவது கை மணமாலையை சூட்டுகிறது...

வைகாசி விசாகத்தின் சிறப்புகள்...

புத்த மதத்தில் இந்நாள் புத்தரின் அவதாரமு, ஞானமும் பெற்றது இந்நாளில்...

நம்மாழ்வார் பிறந்த தினம் இத்தினம்...

வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவிய நாள் இந்நாள்....

காஞ்சிப்பெரியவர் இந்நாளில்தான் அவதரித்தார். பல தெய்வங்களுக்கு வைகாசி விசாகத்தன்று விழாக்கள் எடுப்பதால் இந்த மாதத்தை ‘மாதவ மாதம்’ன்னு பேர் பெற்றது..

எமதர்மன் பிறந்த நாள் இன்றுதான். வைகாசி விசாகத்தன்று யமனுக்கு பூஜை செய்து நோய்கள் அண்டாமல் இருக்க வேண்டுமென வேண்டி கொள்வர்.

இந்நாளில் இந்திரன், சுமாமிமலை முருகனை ஆற்றல் பெற்றான். திருமழப்பாடியில் ஈசன் இந்நாளில் திருநடனம் புரிகிறார்.  மகாபாரதத்தில் அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபதா ஆயுதத்தை பெற்றது இந்நாளில்...

மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோவிலில் வசந்தோற்சபவ விழா பத்து நாட்கள் சிறப்பாக இந்நாளில் நடைபெறும். கன்னியாக்குமரி  பகவதி அம்மனுக்கு ஆராட்டு விழா இந்நாளில் சிறப்பாக நடைப்பெறும். காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலிலும், கூழமந்தல் பேசும் பெருமாள் கோவிலிலும் கருட சேவை நடைப்பெறும். காஞ்சிபுரம் சுற்றீயுள்ள 16 வகை பெருமாள்கள் ஒரே நேரத்தில் எழுந்தருளி வீதியுலா வருவது சிறப்பு..

ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் நரசிம்மரின் உக்கிரம் குறைய  வருடம் முழுதும் சந்தன காப்பில் இருப்பார். இந்த விசாக தினத்தன்று காப்பு அகற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.  ராமநாதப்புரத்தில் உத்தரகோச மங்கை அக்னி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிப்பட்டால் சகல தோசமும் நீங்கும். உச்சிக்கால வேளையில் தலையில் பச்சரிசி, அருகம்புல் வைத்து நீராடினால் பிரம்மஹத்தி தோசம் நீங்கும்.

இதுமட்டுமின்றி திருச்சேங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், மற்றும் பல திரௌபதி அம்மன் கோவில்களில் திமிதி விழாவும், அம்மன் கோவில்களில் கூழ்வார்த்தல் திருவிழாக்களும் இந்நாளில் சிறப்புற நடைப்பெறும்..
murugan:
விரதமிருக்கும் முறை...

வைகாசி விசாக விரதமிருக்க விரும்புபவர்கள் பிரம்ம மூர்த்தத்தில்  எழுந்து நீராடி, நாள் முழுவதும் விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி இரவு பால் அருந்தி விரதம் முடிக்கலாம்,.  முருகன் கோவில் அமைந்துள்ள மலையை கிரிவலம் வந்தாலும் நல்லது. இவ்விரதத்தை மேற்கொள்வோர் பானகம், மோர், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்யலாம். அன்று முழுவதும் முருகனின்  மந்திரமான ஓம் சரவணபவ,  ஓம் முருகா என்பவற்றை உச்சரித்தல் சிறந்த பலனை அளிக்கும். கந்த சஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம் புத்தகமும் படிக்கலாம்.

வைகாசி விசாக விரதமிருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த வைகாசி விசாகத்தில் நாமும் விரத முறையைப் பின்பற்றி வாழ்வின் உயர்ந்த நிலையை அடைவோம்.
Lord muruga:
நன்றியுடன்,
ராஜி.