Sunday, June 11, 2017

இவரா நடித்தார்ன்னு ஆச்சர்யப்பட வைத்த பாடல்கள்

சில பாடல்களை நாம விரும்பி கேப்போம். அது யார் நடிச்சது?! என்ன படம்?! எப்படி படமாக்கியிருக்காங்க?! யார் பாடினது?! இசை, எழுதினதுன்னு ஒரு தகவலும் தெரியாது. அடிக்கடி மனசுக்குள் கேக்கும்போது பாட்டு பத்திய கற்பனை பறக்கும். இவர் நடிச்சிருப்பாரா?! பாட்டு அப்படி இருக்குமான்னு.. என்னிக்காவது திடீர்ன்னு இந்த பாடலை பார்க்க நேரும்போது அட, இவரா நடிச்சிருக்காரு?!ன்னு ஆச்சர்யப்படுவோம். அப்படி ஆச்சர்யப்பட வைத்த பாடல்களின் லிங்க் சிலது.....


இந்த லிங்க்ல இருக்கும் பாட்டு செமயா இருக்கும். இரவு பயணங்களை அழகாக்குவதில் இந்த பாடலுக்கும் இடமுண்டு.. இப்பத்திய சூரியன் எஃப்.எம், ரேடியோ மிர்ச்சி, ஹலோ எஃப். எம்லலாம் இந்த பாட்டு அடிக்கடி ஒலிக்கும். ஆனா, யார் நடிச்சதுன்னு தெரியாது.  ரொம்ப நாள் வரை இந்த பாடல்ல மோகன் இல்லன்னா கார்த்திக்தான் நடிச்சிருப்பாங்கன்னு நினைச்சிருந்தேன்.  ஒரு வலைப்பூவில்தான் இந்த பாட்டுல விஜயகாந்த் நடிச்சிருக்கார்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன்...
இதே விஜயகாந்த் நடிச்ச தூரத்து இடிமுழக்கம் படத்துல வரும் பாடலும் அப்படிதான். பாட்டு மனசை துள்ள செய்யும். கேக்கும்போதே மனசு குஷியாகும். அதே பாட்டு சோகமாவும் வரும்... அந்த பாட்டை படமா பார்த்தபின் இதுல விஜயகாந்தா நடிச்சிருக்கார்ன்னு ஆச்சர்யப்பட்டு நிக்கும்போதே அதே பாட்டோட சோக வர்ஷன்ல குணச்சித்திர நடிகர் பீலி சிவம் நடிச்சிருப்பார்...’

இது விஜயகாந்த் நடிச்சதோட லிங்க்
இது பீலி சிவம் நடிச்ச பாட்டோட லிங்க்
மீண்டும் ஒரு காதல் கதைன்னு பிரதாப் போத்தனும், ராதிகாவும் நடிச்ச படம். பார்க்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பொறுமை அவசியம். அந்த படத்துல அட்டகாசமான பாட்டு... இவரை போட்டு சொதப்பிட்டாங்களேன்னு வருத்தப்பட வச்ச பாட்டு.. அதிகாலை நேரமே...
வில்லன் நடிகர்  சரண்ராஜ்  நடிச்ச நான் சொல்வதே சட்டம் படத்துலயும் அட்டகாசமான பாட்டு... அதிகாலை கனவில் உன்னை பார்த்தேன்... பாட்டோட லிங்க்
கிராமத்து அத்தியாயம் படத்துல ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குதுன்னு மனசை துள்ளாட்டம் போட வைக்கும் பாட்டு. பாட்டை எப்ப கேட்டாலும் புது குஷி பிறக்கும். பாட்டும் இசையும்  செமயா இருக்கும். ஆனா யார் நடிச்சதுன்னு தெரியாது..  
எச்சில் இரவுகள்ன்ற படத்துல பூமீது வீசும் பூங்காற்றே.. என்மேல் வீசக்கூடாதா?! பாட்டும் ஹிட்டடிச்சிருக்க வேண்டிய பாட்டு..  ஏனோ ஹிட்டடிக்கல...
இனி சினிமா பதிவுகளும் தொடரும்...

நன்றியுடன்,
ராஜி.

20 comments:

 1. குழந்தை நடனம் அருமை
  சிறந்த கண்ணோட்டம்

  ReplyDelete
  Replies
  1. குழந்தையை ரசித்ததற்கு நன்றி சகோ

   Delete
 2. எல்லாப் பாடல்களையும் கேட்க வேண்டும். நாம் எதிர்பார்க்காத பல பாடல்களில் விஜயகாந்த் நடித்திருப்பார். அவருடைய 'செங்குருவி செங்குருவி' எனக்கு ரொம்பப் பிடிக்கும்

  ReplyDelete
  Replies
  1. எனக்கு அந்த பாட்டு பிடிக்கவே பிடிக்காது சகோ. என்ன காரணம்ன்னு தெரில. அந்த பாட்டு வந்தா ஸ்கிப் பண்ணிடுவேன்

   Delete
 3. அத்தனை டி,வி.க்களையும் பார்க்கிறீங்க. எத்தனை எத்தனையோ[இங்கே லிங்க் கொடுத்தது மட்டுமல்லாமல்] பாட்டுகள் கேட்கிறீங்க. சமையல், அழகுக் குறிப்பு, அணிகலன்கள் பற்றியெல்லாம் பதிவுகள் வேறு போடுறீங்க. தூங்க நேரம் ஏது? உங்க ஆத்மா மட்டுமே தூங்குமா?!

  ReplyDelete
  Replies
  1. எல்லாரும் வேலை விசயமா வெளில சென்ற பிறகு டிவிதான்பா துணை. அது பாட்டுக்கு போய்க்கிட்டிருக்கும். நான் பாட்டுக்கு வேலை செஞ்சிக்கிட்ட்ருப்பேன். காலை நேரத்துல டிவி நிகழ்ச்சியை வச்சுதான் நேரத்தை தெரிஞ்சு 7 மணிக்குலாம் சின்னவளுக்கு லஞ்ச் ரெடி செய்வேன்.

   Delete
 4. அத்தனை டி,வி.க்களையும் பார்க்கிறீங்க. எத்தனை எத்தனையோ[இங்கே லிங்க் கொடுத்தது மட்டுமல்லாமல்] பாட்டுகள் கேட்கிறீங்க. சமையல், அழகுக் குறிப்பு, அணிகலன்கள் பற்றியெல்லாம் பதிவுகள் வேறு போடுறீங்க. தூங்க நேரம் ஏது? உங்க ஆத்மா மட்டுமே தூங்குமா?!

  ReplyDelete
  Replies
  1. நான் நல்லா தூங்குவேன்பா. வயசாகிட்டு வர்றதால இப்பலாம் சரியா தூக்கம் வரல.

   Delete
 5. அறிமுகம் இல்லாதவர்க்கெல்லாம் அரிய பாடல்கள் தந்து அடையாளம் காட்டிய இசைஞானிக்கு நன்றி சொல்லவேண்டும் !

  ReplyDelete
  Replies
  1. நிஜமாய்... பலரின் வாழ்க்கை துணை, வழித்துணைலாம் ராஜாதான்./ அவரில்லன்னா பலபேர் பைத்தியமாதான் சுத்திக்கிட்டிருப்பாங்க.

   Delete
 6. அத்தனை பாடல்களும் அருமை.. எக்காலத்திலும் ரசிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்பா. எப்பயுமே ஸ்கிப் பண்ண முடியாத பாட்டு இதெல்லாம்

   Delete
 7. அத்தனையும் அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 8. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ். இந்த பாடல் வீடியோவை பாருங்கள். இதில் பாடியவரும் ஒரு ஜாம்பவான். நடித்தவரும் ஒரு ஜாம்பவான்.

  https://www.youtube.com/watch?v=JgtZk34-5WM

  சந்திரபாபு பாடிய பாடலில் இசை மேதை எஸ் பாலச்சந்தர் நடித்த ஒரு மிக வித்யாசமான பாடல் இது!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா. இதுநாள் வரை சந்திரபாபு பாடி நடித்த பாடல் என்றே நினைத்திருந்தேன். வீணை பாலச்சந்தர் ந்டனத்திலும் என்னமாய் கலக்கியுள்ளார். Thanks a lot for sharing

   Delete
  2. பார்க்கிறேன் சகோ

   Delete
 9. நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்டேன், பார்த்தேன். அருமை. நன்றி

  ReplyDelete
 10. எனக்குத்தான் லிங்க் எதுவும் தெரியவில்லையா?

  சில சமயங்களில் காட்சியைப் பார்த்தால் பாடல் ரசிக்க முடியாது!

  தம +1

  ReplyDelete
 11. அனைத்துப் பாடல்களும் அருமையான பாடல்கள். இப்போது கேட்க முடிவதில்லை. கேரளத்தில் இருப்பதால் எல்லாம் அப்போது படமும் பார்த்து பாடல்களையும் ரசித்த நேரம் தமிழ்நாட்டில் இருந்தவரை...

  கீதா: இதில் எந்தப் படமும் பார்த்ததில்லை. ஆனால் பாடல்கள் கேட்டதுண்டு. அனைத்துப் பாடல்களும் அருமை....அதுவும் ஏதோ நினைவுகள் எப்போதும் எல்லா இடங்களிலும் ஒலித்த பாடல்..அப்போது....பாடல் நன்றாக இருக்கும் ஆனால் காட்சிகள் சகிக்காது. காட்சி நன்றாக இருந்தால் பாடல் சகிக்காது இரண்டும் ஒன்றாய் வருவது சில. ஏதொ நினைவுகள் கூட இப்போதுதான் காட்சியைப் பார்க்கிறேன். இதுநாள் வரை பார்த்ததில்லை. காட்சி பிடிக்கவில்லை. பாடலை மட்டும் கேட்டேன்...ராஜி சரி...நேர மேலாண்மையை உங்களிடம் கற்க வேண்டும்....!!!!

  ReplyDelete