சதா சர்வ காலமும் வேதப்பாராயணம் நடக்கும் சோழநாட்டின் திருத்தலையூர் தலத்தில் அவதரித்தார் உருத்திர பசுபதி நாயனார் என்பவர். அவரின் இயற்பெயர் பசுபதி என்பதாகும். இவர் வேதியர் குலத்தில் தோன்றியவர். சிவப்பெருமான் மீது தீராத காதல் கொண்டவர். இவர் பிறந்த குலத்திற்கேற்ப வேத சாஸ்திர, இதிகாச புராணங்களில் சிறந்த புலமை பெற்றிருந்தார்
ருத்திரன் என்றால் துன்பங்களிலிருந்து விடுவிப்பவன் என்று பொருள். ருத்திரம் சிவனின் கண்ணாகவும், பஞ்சாட்சரம் கண்ணின் மணியாகவும் விளங்குது. எம்பெருமானுடைய பெருமையை சொல்லும் இம்மந்திரமே வேதத்தின் மெய்ப்பொருளாகும். ரிக், யஜூர்ம் சாம, அதர்வண என நான்கு வேதங்களில் யஜூர் வேதத்தின் ஏழு காண்டங்களுக்கிடையில் இருப்பது வேதத்தின் கண் போன்ற திரு உத்திரம் ஆகும். 'வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே' என்பார் சம்பந்தர். இத்தகு சீர்மை பொருந்திய உருத்திர மந்திரத்தை நியமத்துடன் ஓதி சிவமுக்தி பெற்ற அடியவர் உருத்திர பசுபதி நாயனார்.
பஞ்சாட்சரத்தையே தம் மூச்சாக கொண்டு சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தார் பசுபதியார். தினமும் தாமரை மலர்கள் சூழ் தடாகத்தில் நீராடி கழுத்தளவு நீரில் நின்றபடி பஞ்சாட்சரத்தை உச்சரிப்பார். இரவு, பகல் பேதமின்றி பாராயணம் செய்வதிலேயே தன் பொழுதை கழித்து வந்தார்.
நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும்.
பஞ்சாட்சரமென்பது நமசிவய என்பதாகும்... இதில் ந- நிலத்தை குறிக்கிறது, ம- நீரைக் குறிக்கிறது, சி- நெருப்பை குறிக்கிறது. வ- காற்றை குறிக்கிறது. ய- ஆகாயத்தை குறிக்கின்றது. பஞ்சபூதங்களை அடக்கி ஆளும் சக்தி இம்மந்திரத்திற்குண்டு. ’சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவப்பெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.
சதா சர்வக்காலமும் சிவனை தியானித்து மனது ஒருமுகப்படுத்தப்பட்டபின், அன்னம் ஆகாரமின்றி கைகளை தலைக்கு மேல் தூக்கி நாட்கணக்கில் நின்றவாறு பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்தார். அவரின் பக்தியை மெச்சிய சிவப்பெருமான் இவரை தான் இருக்கும் கயிலாயத்திற்கு அழைத்து சிவப்பதம் அளித்ததோடு உருத்திர பசுபதி நாயனார் என பெயரும் அளித்தார்.
இவர்தம் குருபூஜை புரட்டாசி மாதம் அஸ்வினி நட்சத்திரமாகும்....
ஓம் நமச்சிவாய நம!
தமிழ்மணம் ஓட்டு பட்டைக்கு போகும் வழி..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462730
நன்றியுடன்,
ராஜி.
நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும்.
பஞ்சாட்சரமென்பது நமசிவய என்பதாகும்... இதில் ந- நிலத்தை குறிக்கிறது, ம- நீரைக் குறிக்கிறது, சி- நெருப்பை குறிக்கிறது. வ- காற்றை குறிக்கிறது. ய- ஆகாயத்தை குறிக்கின்றது. பஞ்சபூதங்களை அடக்கி ஆளும் சக்தி இம்மந்திரத்திற்குண்டு. ’சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவப்பெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.
இவர்தம் குருபூஜை புரட்டாசி மாதம் அஸ்வினி நட்சத்திரமாகும்....
ஓம் நமச்சிவாய நம!
தமிழ்மணம் ஓட்டு பட்டைக்கு போகும் வழி..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462730
நன்றியுடன்,
ராஜி.
.
சிவபெருமானா? சிவப்பெருமானா?!!
ReplyDeleteஅறிந்து கொண்டேன். தம +1
ஓம் நமச்சிவாய நம...
ReplyDeleteஆம் பஞ்சாட்சர மந்திரத்தின் சக்தி பற்றி அறிந்திருந்தாலும் உங்களது விளக்கத்தையும் தெரிந்துகொண்டோம்.
ReplyDeleteதுளசி, கீதா
#பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தால் இப்படியா நடக்கும்?#
ReplyDeleteவேறு எப்படி நடக்கணும் :)