தினமும் காலை 9 மணிக்கு கிச்சன் கேபினெட்ன்னு ஒரு நிகழ்ச்சி. இதுல அரசியல், சினிமா, நாட்டு நடப்புன்னு எல்லாத்தையும் நக்கல், நையாண்டியுடன் அழகா எடுத்து சொல்றாங்க. எப்ப பாரு நியூஸ், கருத்தரங்கம்ன்னு பார்த்து பார்த்து போரடிச்சு போய் இருக்கவுங்களுங்கு ஒரு மாறுதலான நிகழ்ச்சி இது. இது ஒளிப்பரப்பாகுற டிவி புதிய தலைமுறைல...
நியூஸ் 7 தமிழ்ல ஞாயித்துக்கிழமை மதியம் 12.30க்கு சுற்றலாம் சுவைக்கலாம்ன்ற நிகழ்ச்சி, இதுல பாரம்பரிய உணவு முதற்கொண்டு வட்டார உணவு வரை அந்தந்த ஊருக்கே போய் அந்த ஊர் ஆளுங்களை கொண்டே சமைச்சு காட்டுறாங்க, ரோட்சைட்ல இருக்கும் சர்பத் கடை முதற்கொண்டு நட்சத்திர ஹோட்டல் வரை அதன் ருசியை எடுத்து சொல்றாங்க. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செம ஜாலியா எடுத்துட்டு போறார் இந்நிகழ்ச்சியை... மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சென்னை, கொடைக்கானல்ன்னு ஆல்ரெடி ஐயா சுத்தி வந்து நிகழ்ச்சியை கலக்கி இருக்கார்.
புதிய தலைமுறையில் நீயின்றி அமையாது உலகுன்னு ஒரு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. நீரின்றி அமையாதுன்னு வள்ளுவரின் வாக்கு. நீரைப்போலவே நாமும் மிக முக்கியம். நாம இல்லன்னாலும் இச்சமூகம் வீண். நம்ம செயல்பாடுகள் இல்லாமல் இந்த உலகம் சுமூகமாய் இயங்காது. அதனால நம்ம செயல்பாடுகள் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்ங்குறதை இந்நிகழ்ச்சி உணர்த்துது. இச்சமூகம் என்ற சக்கரம் சுழல பல்வேறு துறை சார்ந்தவர்கள் ஓயாது உழைக்கின்றனர். மருத்துவர்கள், ஓட்டுனர்கள், விவசாயிகள், வாகன பழுது நீக்குறவங்கன்னு எல்லா துறையிலிருந்து இந்த நிகழ்ச்சில கலந்துக்கிட்டு தங்கள் கருத்துகளை எடுத்து சொல்றாங்க.
வேந்தர் டிவில திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு மூன்றாவது கண்ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. சிலருக்கு அமானுஷ்யங்களின் மீது அலாதி ஈடுபாடு உண்டு. அந்த ஈடுபாட்டின் தேடல்தான் இந்நிகழ்ச்சி... அமானுஷ்ய உலகில் இதுவரை மறைந்திருந்த பல பயங்கர சடங்குகளையும் நம்பவே முடியாத ஆச்சரியங்களையும், இறைவன் கருணையால் நடக்கும் அற்புத நிகழ்வுகளும், சித்தர்கள் பற்றிய தேடல்கள் மற்றும் இயற்கைக்கு முரணான நிகழ்வுகளும் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகுது.
புதுயுகம் சேனல்ல வினா விடை வேட்டைன்ற நிகழ்ச்சி மாணவர்களுக்காக ஒளிப்பரப்பாகுது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆதிராஜ் அழகா பசங்கக்கிட்ட இருந்து விடைகளை வாங்குறதுலயும், நிகழ்ச்சியையை கொண்டு செல்வதிலும் அக்கறையோடு செயல்படுறார். சீரியல், பாடல், காமெடின்றதை தாண்டி பொது அறிவை வளர்க்கு இந்நிகழ்ச்சி பயனுள்ளதாகும். இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு ஒளிப்பரப்பாகுது.
கறுப்பு பணம் எப்படி உருவாகுதுன்னு கறுப்பு பணத்தோட நதிமூலம் ரிஷி மூலத்தை நமக்கு இன்னிக்கு மதியம் 12 மணிக்கு சொல்ல போறாங்களாம் . முடிஞ்சா பாருங்க.....
கவுண்டமணி, செந்தில்கிட்ட ஒரு படத்துல சொல்வார். இந்த சினிமாக்காரங்களுக்குதான் வேலை இல்லை. இவனுங்கதான் பூமில பொறந்தமாதிரி அவனுங்களே அவனுங்களுக்கு பொறந்தநாள்ன்னு சொல்லி விழா எடுத்து கொண்டாடிக்குறானுங்கன்னு. அதுமாதிரி இந்த விஜய் டிவிக்காரனுங்களுக்கும் வேற வேலை இல்ல போல... அவனுங்களே விழா எடுத்துக்கிட்டு அவனுங்களே அவனுங்களே அவனுங்களுக்கு விருது கொடுத்துக்கிறாங்க. எல்லா கேட்டகிரிலயும் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், நடிகர், பின்னணி குரல் கொடுப்பவர்கள்ன்னு எல்லாருக்கும் விருது கொடுத்துக்குறாங்க... சரியான பெருமைக்காரங்களா இப்பாய்ங்க போல!!
நன்றியுடன்,
ராஜி.
ராஜி.
ம்ம்ம்...
ReplyDeleteதம +1
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் உள்ளது என்பதை அறிந்தேன் சகோதரி.... நன்றி....
ReplyDeleteபிறந்தநாள் கொண்டாடுறவங்களைப்பற்றி நிச்சயம் பதிவு எழுதணும்
ReplyDeleteத.ம.4
நீங்களும் பி.ஆர்.ஒ-வாஅகிட்டுங்க
ReplyDeleteநல்ல நிகழ்ச்சிகளின் தொகுப்பு - பயனுள்ள தகவல் - வாழ்த்துக்கள் !
ReplyDeleteநல்ல தொகுப்பு
ReplyDeleteஅருமையான கண்ணோட்டம்
ReplyDeleteயப்பா இவ்வளவு இருக்கா...
ReplyDeleteகீதா