பிள்ளைகள் வீட்டில் இருந்தும் போன வாரம் முழுக்க மனசே சரியில்லை. மனசுல பெருசா பாரம் ஏதோ ஏறின மாதிரி இருக்கு. லாக் டவுன் எஃபெக்டோ என்னமோ தெரில.
Thursday, April 30, 2020
Wednesday, April 29, 2020
தேசிங்கு ராஜாவிற்கு சமாதி எழுப்பிய சதயத் உல்லாகானின் சமாதி(பச்சைக்கல் மசூதி) - மௌன சாட்சிகள்
நினைவு சின்னம் என்பது, சம்பந்தப்பட்ட மனிதர், பின்னாளில் அன்று நடந்த நிகழ்வுகளை நேரடியா நினைவுக்கூர்வதற்கான உண்டான அமைப்பாகும். நம் இந்திய திருநாடு நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கட்டிடங்களும்,கோயில்களும் இந்தியா முழுக்க நிறைந்திருக்கின்றது. இந்த நினைவு சின்னங்கள், எந்த சூழ்நிலையில் உருவாக்கப்பட்டது, அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, மன்னனின் குணநலன்கள், வீரம், கொடைத்தன்மை, இறைநம்பிக்கை ஆகியற்றை எடுத்து சொல்லும் மௌன சாட்சிகளாகும்.
Tuesday, April 28, 2020
குட்டி குட்டி உருளைக்கிழங்கு வறுவல் - கிச்சன் கார்னர்
உருளைக்கிழங்கு.... இது எல்லாருக்கும் பிடித்தமானது. இந்த உருளையை பிடிக்காதுன்னு யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. உடலுக்கு ஆகாது ஆனாலும், கொஞ்சமா வைன்னு சொல்றவங்களைதான் பார்த்திருக்கேன். உருளைக்கிழங்கில் வறுவல், பொரியல், சிப்ஸ், பொடிமாஸ்,குருமான்னு சமைச்சு அசத்தலாம்.
Sunday, April 26, 2020
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று.. - பாட்டு புத்தகம்
சோகத்துல ஓஓஓன்னு கத்தி அழுது அரற்றுவதும், மகிழ்ச்சியின்போது தலைகால் தெரியாம துள்ளி குதிப்பதும் மனித இயல்பு. அடிமேல் அடி விழுகும்போது உடல் மரத்துப்போகும். அதுமாதிரிதான், வாழ்க்கையில் தொடர்தோல்விகளை சந்திக்கும்போது மனசும் மரத்துப்போகும். அப்ப, எதுவும் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும்ன்னு புரிதல் உண்டாகும். அந்த புரிதல் வந்தபின் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கவும் மாட்டோம். துன்பத்தில் துவளவும் மாட்டோம். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. பம்மல்.கே.சம்பந்தம் படத்துல கமல் சொல்றது மாதிரி எல்லாமே passing cloudsன்னு உணர்ந்தால் கிட்னி சேதாரமில்லாம தப்பிக்கும்.
அவன்தான் மனிதன்னு சிவாஜி படம். முத்துராமன், ஜெயலலிதா நடிச்சது. எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது. அதனால் ஜெயலலிதாவையும் பிடிக்காது. ஆனா, ஜெயலலிதாவின் இந்த படம் பார்ப்பேன். இன்னொரு படம் ஜெயலலிதா இரட்டைவேடத்தில் நடிச்சிருப்பாங்க. ஜெயசங்கர் , சோ என ஜோடி சேர்ந்திருப்பாங்க. அதுவும் பிடிக்கும்.
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!!
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!!
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!!
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!
தந்தை தவறு செய்தார்... தாயும் இடம் கொடுத்தாள்...
தந்தை தவறு செய்தார்... தாயும் இடம் கொடுத்தாள்...
வந்து பிறந்து விட்டோம்! வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்!!
மனது துடிக்கின்றது... மயக்கம் வருகின்றது...
அழுது லாபம் என்ன?! அவன் ஆட்சி நடக்கின்றது..
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்...
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்..
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்..
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்..
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்..
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று..
விதியின் ரதங்களிலே, நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா, சிறு மனமும் கலங்குதடா!!
கொடுக்க எதுவுமில்லை.. என் குழப்பம் முடிந்ததடா!!
கணக்கை முடித்து விட்டேன். ஒரு கவலை முடிந்ததடா!!
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!!
திரைப்படம்: அவன்தான் மனிதன்,
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
நடிகர்கள்: சிவாஜி கணேசன்.
பாட்டு புடிச்சிருக்கா சகோ’ஸ்
நன்றியுடன்,
ராஜி
Saturday, April 25, 2020
இதுக்கு ஏன் பல்லி மிட்டாய்ன்னு பேர் வந்துச்சு?! - கிராமத்து வாழ்க்கை
நாம் அனுபவித்து வாழ்ந்த வாழ்க்கையின் சிறு நினைவு மீட்டலே இந்த கிராமத்து வாழ்க்கை தொடர்...
Subscribe to:
Posts (Atom)