Saturday, April 25, 2020

இதுக்கு ஏன் பல்லி மிட்டாய்ன்னு பேர் வந்துச்சு?! - கிராமத்து வாழ்க்கை

நாம்  அனுபவித்து வாழ்ந்த வாழ்க்கையின் சிறு நினைவு மீட்டலே இந்த கிராமத்து வாழ்க்கை தொடர்...


இப்பத்திய குழந்தைகள் அழுதால் மொபைல் கொடுத்துடுறோம். இல்லன்னா டிவியில் பொம்மை படம் போட்டுவிடுறோம். ஆனா, அப்பலாம் குழந்தைகளை தாஜா பண்ணுறது அம்புட்டு கஷ்டம். கதை சொல்லனும் . நிலா காட்டனும், தூக்கிட்டு சுத்தனும், தாலாட்டு பாடனும். ஒரு வயசு குழந்தைகளுக்கு  பிடிச்ச விளையாட்டு இது.ஒவ்வொரு விரலுக்கும் சோறு, குழம்பு,  பொரியல், அப்பளம், கூட்டுன்னு சொல்லி குழந்தையின் உள்ளங்கையில்  எல்லாத்தையும் போடுறதா பாவலா செஞ்சு கைமுட்டியால் பப்பு கடைன்னு சொல்லி குழந்தைக்கு ஊட்டி, அம்மா, அப்பா, பக்கத்துல இல்லாத உறவுக்காரங்க பேருலாம் சொல்லி ஊட்டி மிச்சத்தை காக்கா, பூனை, நாய், நரின்னு கொடுக்க சொல்வோம். வெறும் பொழுதுபோக்குதான். அதில் பகிர்ந்துண்ணனும்ன்னு சொல்லி கொடுப்போம்.  இப்பத்திய குழந்தைகள்கிட்ட ஒரு பொருளை வாங்கிடுங்க பார்க்கலாம் :-(

ஒரே உயரத்தில் பருமனில் வெட்டிய தென்னங்குச்சியை ஒரு வட்டத்தில் போட்டு, அடுத்த குச்சிமேல் படாம எடுக்கனும். இதான் இந்த விளையாட்டின் விதி. முதல் குச்சியை எடுத்தப்பிறகு அதே குச்சியை வச்சும் எடுக்கலாம் நம்ம விருப்பம்தான். வட்டத்துக்கு வெளிய வரக்கூடாது. மற்ற குச்சிகளில் நாம் எடுக்கும் குச்சி படக்கூடாது. இதுக்கு பேரு நூறாங்குச்சின்னு இன்னிக்குதான் தெரியும்.

சீரக மிட்டாய்ன்னு எங்க ஊரில் பேரு. ஆனா, பல்லி மிட்டாய்ன்னும் சொல்றாங்க. சீரகம் எனக்கு பிடிக்கும் அதனால் மென்னு தின்னுடுவேன். பெரும்பான்மையான பசங்க சீரகத்தை துப்பிடுவாங்க. இந்த சீரக மிட்டாய் இப்பவும் கிடைக்குறது ஒரு ஆறுதல். ஆமா, இதுக்கு ஏன் பல்லி மிட்டாய்ன்னு பேர் வந்துச்சு. பல்லி முட்டைகூட உருண்டையாதானே இருக்கும்?!
70, 80களில் பிறந்தவங்களுக்கு எல்லாமே விளையாட்டு பொருட்கள்தான்.  நான் படிச்ச ஸ்கூல்ல ஒரு மரம் இருக்கும். அதோட ஒரு கிளை தாழ்ந்து தரைக்கு அருகில் இருக்கும். வீடியோவில் இருக்குற மாதிரிதான் தொங்கிட்டு விளையாடி விழுப்புண் வாங்கிய கதையெல்லாம் உண்டு.


இந்த சிகரெட் அட்டையை சைடுல கிழிச்சா H இல்லனா M இல்லனா T னு எதாவது ஒரு எழுத்து இருக்கும். HMT மூனு எழுத்தும் இருக்கும் அட்டைகளை சேமிச்சு HMTவாட்ச் கடையில் கொடுத்தா HMT வாட்ச் குடுப்பாங்கனு ஒரு பரதேசி சொன்னத நம்பி சிகரெட் அட்டையெல்லாம் சேமிச்சிருக்கேன். இதேமாதிரிதான் 1 ரூபாயிலும் கதை சொன்னாங்க. ஆனா, அதில் Hன்ற எழுத்து இருக்குறதை பார்த்திருக்கேன், மற்ற எழுத்துக்களை பார்க்கலை. சேமிச்சு வாட்சும் வாங்கினதில்லை. நீங்க?!

கொசுவர்த்தி மீண்டும் ஏற்றப்படும்...

நன்றியுடன்,
ராஜி
Face with tears of joy

11 comments:

 1. சீரக மிட்டாய் மிகவும் பிடிக்கும்...

  HMT அட்டையை கையில் இருந்தாலே மொத்து தான்...

  ReplyDelete
 2. ஐந்து பைசா கொடுத்தால், ஒரு கை நிறைய சீரக மிட்டார் அள்ளிக் கொடுப்பார்கள்.
  அது அந்தக் காலம். இக்கால பிள்ளைகள் ஐந்து பைசாவையே பார்த்திருக்க மாட்டாரகள்

  ReplyDelete
 3. வில்ஸ் மற்றும் கோல்டு ஃப்ளேக் அட்டை படம் பார்த்தது அப்பாவின் நினைவு வந்தது. அவர் ஒரு செயின் ஸ்மோக்கார் அவரின் கையில் சிகரெட்ட் இருக்கும் இல்லை என்றால் டீ இருக்கும் அந்த இரண்டும் இல்லையென்றால் தூங்கி கொண்டிருப்பார்

  ReplyDelete
 4. குழந்தை கையில் சாப்பாடு முடிந்ததும் செய்யும் "தேளு, பாம்பு,நண்டு வருது..்். வருது..்் வருது.." என்று கிசுகிசு காட்டுவதை விட்டு விட்டீர்களே... பல்லி மிட்டாய் இப்பவும் உண்டுதான்!

  ReplyDelete
 5. சிகரெட் அட்டை வாட்ச் கதையை நானும் நம்பி இருக்கிறேன். என்னிடத்தில் எல்லா சிகரெட் அட்டையும் நிறைய இருக்கும். ரோடில் சிகரெட் அட்டையைக் கண்டால் எடுக்க நண்பர்களுக்குள் போட்டி நடக்கும். ஒவ்வொரு அட்டைக்கும் ஒரு மதிப்பு உண்டு. சார்மினார் 199, ஸிஸர்ஸ் இருநூறு, வில்ஸ் ஐநூறு, கோல்ட் ப்ளேக் 1000. இப்படி. கோலி குண்டு ஒன்பது குழி விளையாட்டில் அதுதான் பணம்!

  ReplyDelete
 6. ஸாரி, சார்மினார் 100... டைப்போ!

  ReplyDelete
 7. இனிய நினைவலைகள். சிகரெட் அட்டை மாதிரி தீப்பெட்டிகளும் சேமிப்பில் உண்டு. சிகரெட் அட்டை கிழித்து சீட்டுக்கட்டு செய்து விளையாடியதுண்டு.

  இப்போதும் சீரக/பல்லி மிட்டாய் கிடைக்கிறது! சில சமயங்களில் வாங்கி சுவைப்பதுண்டு1 :))))

  ReplyDelete
 8. நல்ல சிறுவயது நினைவலைகள். என் சிறுவயது தேனிக்காருகில் ராசிங்கபுரம் கிராமத்தில் என்பதால் இப்படியான விளையாட்டுகள் விளையாடியதுண்டு. ஈர்க்குச்சி விளையாட்டு விளையாடியதில்லை.

  துளசிதரன்

  ReplyDelete
 9. ஆஹா ஈர்க்குச்சி விளையாட்டைப் பார்த்ததும் எவ்வளவு விளையாடியிருக்கோம்னு நினைத்துக் கொண்டேன். சிகரெட் கார்ட் அது ஏமாந்ததுண்டு ஆனால் வீட்டிற்குத் தெரியாமல் கலெக்ஷன். வீட்டுக்குத் தெரிஞ்சுச்சு டன்டனக்காதான்..அதுவும் மிலிட்டரி ஆட்சி!! ஹா ஹா ஹா

  இந்த மிட்டாய் பல்லி மிட்டாய்னும் சொல்லுவதுண்டு..ஜீரகமிட்டாய் அரிசி மிட்டாய்னும்..

  கீதா

  ReplyDelete
 10. பதிவு உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறதா?

  ReplyDelete
 11. சீரகமிட்டாய் சுவைத்ததுண்டு.
  ஈயகடுதாசியை பென்சில் இல் வைத்து சுற்றி சைக்கிள் பால்ஸ் உள்ளே வைத்து மூடி சாய்பலகையில் ரேஸ் ஓடவைத்து யாருடையது வென்றது என விளையாடுவோம்.:)

  ReplyDelete