Sunday, April 26, 2020

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று.. - பாட்டு புத்தகம்

சோகத்துல ஓஓஓன்னு கத்தி அழுது அரற்றுவதும், மகிழ்ச்சியின்போது தலைகால் தெரியாம துள்ளி குதிப்பதும் மனித இயல்பு. அடிமேல் அடி விழுகும்போது உடல் மரத்துப்போகும். அதுமாதிரிதான், வாழ்க்கையில் தொடர்தோல்விகளை சந்திக்கும்போது மனசும் மரத்துப்போகும்.  அப்ப, எதுவும் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும்ன்னு புரிதல் உண்டாகும். அந்த புரிதல் வந்தபின் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கவும் மாட்டோம். துன்பத்தில் துவளவும் மாட்டோம். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. பம்மல்.கே.சம்பந்தம் படத்துல கமல் சொல்றது மாதிரி எல்லாமே  passing cloudsன்னு உணர்ந்தால்  கிட்னி சேதாரமில்லாம தப்பிக்கும். 

அவன்தான் மனிதன்னு சிவாஜி படம். முத்துராமன், ஜெயலலிதா நடிச்சது. எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது. அதனால் ஜெயலலிதாவையும் பிடிக்காது. ஆனா, ஜெயலலிதாவின் இந்த படம் பார்ப்பேன். இன்னொரு படம் ஜெயலலிதா இரட்டைவேடத்தில் நடிச்சிருப்பாங்க. ஜெயசங்கர் , சோ என ஜோடி சேர்ந்திருப்பாங்க. அதுவும் பிடிக்கும். 




மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!!

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!!
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!!
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!


தந்தை தவறு செய்தார்... தாயும் இடம் கொடுத்தாள்...

தந்தை தவறு செய்தார்... தாயும் இடம் கொடுத்தாள்...

வந்து பிறந்து விட்டோம்! வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்!!
மனது துடிக்கின்றது... மயக்கம் வருகின்றது...
அழுது லாபம் என்ன?! அவன் ஆட்சி நடக்கின்றது..


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...


காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்...

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்..

கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்..
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்..
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்..


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று..


விதியின் ரதங்களிலே, நாம் விரைந்து பயணம் செய்தால்

மதியும் மயங்குதடா, சிறு மனமும் கலங்குதடா!!

கொடுக்க எதுவுமில்லை.. என் குழப்பம் முடிந்ததடா!!
கணக்கை முடித்து விட்டேன். ஒரு கவலை முடிந்ததடா!!


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!!



திரைப்படம்:  அவன்தான் மனிதன்,
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
நடிகர்கள்: சிவாஜி கணேசன்.

பாட்டு புடிச்சிருக்கா சகோ’ஸ்

நன்றியுடன்,
ராஜி

15 comments:

  1. வரும் பதிவில் இந்தப் பாடலின் சில வரிகள் உண்டு... அது எங்கு வரும் என்பது மட்டும் சஸ்பென்ஸ்...

    ReplyDelete
    Replies
    1. நானா வந்து சிக்கிட்டேனா?!

      Delete
    2. கடவுள் பற்றிய சிறு விளக்கத்தை கேட்டவர்கள் அதைப்பற்றியும் கருத்துரையில் கூறவும்...
      https://dindiguldhanabalan.blogspot.com/2020/05/FATE-Songs-Part-2.html

      Delete
  2. அக்காலத்தில் பாடல்கள் மிகுந்த உயரத்தில் இருந்தனை
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. செல பாட்டு. இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையுமே தேன்.

    ReplyDelete
    Replies
    1. செம பாட்டு என்று படிக்கவும்!!!

      Delete
  4. ஜெயலலிதா இரட்டைவேடப் படம் வந்தாளே மகராசி?

    ReplyDelete
  5. நல்ல பாட்டு. அர்த்தமுள்ள வரிகள். இங்கே படிக்க/பார்க்கத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. தங்களின் பாடலான மனிதன் நினைப்பதுண்டு (அவன்தான் மனிதன் படப் பாடல்) பாடலில் ‘நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்’ என்ற வரியில் ‘நாலு விலங்குகள்’ என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று விளக்கம் அறிய உங்களுக்கு வானொலியில் வேண்டுகோள் விடுத்தார்கள். விளக்கத்தை நாங்களும் அறிய ‘கண்ணதாசன்’ இதழில் பதில் தருமாறு வேண்டுகிறேன்.
    ப: ‘நாலும் தெரிந்தவன்’ என்கிறார்களே. அதற்குப் பொருள் என்ன? ‘நாலு பேருக்கு நல்லவன்’ என்கிறார்களே அதற்குப் பொருள் என்ன? நான் குறிப்பிடும் நான்கும் நான்கு திசைகள். எந்த திசையிலும் போக முடியாமல் விலங்குகளை மாட்டிக் கொண்டு தவிக்கிறோம் என்பதே அதன் பொருள்.

    ReplyDelete
    Replies
    1. பொருள் அறிந்தேன் அண்ணா!

      Delete
  7. நான் ரசித்த படங்களில் முக்கியமானது. அதிகம் ரசித்த காட்சி : சிவாஜிகணேசன் தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஜெயலலிதாவிடம் தருவதற்காக ஒரு கடிதத்தை வேலைக்காரர் பாத்திரத்தில் வரும் சுந்தரராஜனிடம் தந்திருப்பார். அதை சுந்தரராஜன் அவரிடம் தர தாமதமாகிவிடும். எதிர்பார்க்கின்ற சமயத்தில் ஜெயலலிதா தன்னுடைய வேறு முடிவைத் தெரிவிப்பார். அப்போது அந்தக் கடிதத்தைத் தர சுந்தராஜன் ஜெயலலிதாவை நெருங்க சிவாஜிகணேசன் "இது ஒரு காலாவதியான பத்திரம்" என்று கூறி தடுத்துவிடுவார். சில சொற்கள் நம் வாழ்வினூடே பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இந்த காட்சி என்றும் என் மனதில் நிற்கும்.

    ReplyDelete
    Replies
    1. அந்த காட்சி எனக்கும் நினைவில் இருக்குப்பா

      Delete
  8. நல்ல பாடல். இந்தப் படமும் பார்த்திருக்கிறேன்.

    துளசிதரன்

    இந்தப் பாடல் பலமுறை கேட்டிருக்கிறேன் மிகவும் பிடித்த பாடல் ஆனால் படம் இதுதான் என்பது இப்பத்தான் தெரியும்..முதல் இருவரிகளே தத்துவம்...

    கீதா

    ReplyDelete