Wednesday, December 14, 2011

அன்பாலே அழகாகும் வீடு.........

                                                    
சிறு வீடுகளில் வாழ்வதென்பது சிக்கலான விஷயமே அல்ல. ஏனெனில் அவற்றைப் பராமரிக்கும் செலவும்,நேரமும் குறைவு. ஆனால் வித விதமான அலங்காரப் பொருட்களையும், இடத்தை அடைக்கும் ஃபர்னிச்சர்களையும் போட்டு அலங்கரிப்பதென்பது இயலாத ஒன்று.

மேலும் இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில் வீட்டை அழகாக்க ஒவ்வொரு முறையும் தனி நேரம் ஒதுக்குதல் என்பதும் முடியாத விஷயம். குறைந்த நேரத்தில், எளிய முறையில், குறைந்த பொருட்செலவில் உங்கள் சிறிய வீட்டை அழகாக்குவோம் வாருங்கள்.
வழியை அடைக்காதீர்கள்
 வீட்டில் நுழைந்தவுடன் உங்கள் சோஃபா மற்றும் பிற ஃபர்னிச்சர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நுழைந்ததும் ஆடம்பர, விலையுயர்ந்த பொருட்கள் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தாலும் அவை உங்கள் வழியை அடைக்காமலும், தேவையான நடக்கும் வழிக்கு இடையூறு இல்லாமலும் இருக்கட்டும். அமருவதற்கெனவும் பேசுவதற்கெனவும் தனி அறைகள் உள்ள பட்சத்தில் சோஃபா அங்கிருத்தல் நலம். வரவேற்பறைகளில் பொருட்களைக் குறைப்பது அதன் இடத்தை விசாலமாகக் காட்ட உதவும்.

அலங்காரப் படங்களைக் குறையுங்கள்

                                             

பெரிய வீடுகளில் அல்லது விசாலமான இடங்களில் இருக்கும் அலங்காரப் பொருட்கள், படங்களை வாங்கி வந்து வீட்டை நிரப்பாதீர்கள். இந்தப் படங்களால் உங்கள் வீட்டு சுவர் முழுவதும் அடைக்கப்படும் போது உங்கள் இருப்பிடம் இன்னும் சிறியதாகத் தெரியும். தெய்வங்களின் படங்கள் பூஜையறையில் மட்டும் இருக்கட்டும். பல படங்களையும், அலங்காரப் பொருட்களையும் மாட்டும் போது வீடு அடைந்து போய் சுத்தமில்லாதது போன்றும், வீட்டில் இடமில்லாததை எடுத்துக் காட்டும் விதமாகவும் அமைந்து விடும்.

தகுந்த ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள்  
                                          
அழகான, சிறிய, உபயோகமான ஸ்மார்ட் ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள். இதனால் அதை வைக்கும் இடம் குறைக்கப்படுவதுடன் பயனும் இரட்டிப்பாகும். உதாரணமாக டேபிளில் ட்ராயர் மற்றும் அடுக்குகள் உள்ள மாதிரி வாங்குங்கள். செண்டர் டேபிளில் கீழும் அடுக்குகள் இருக்குமாறு தேர்ந்தெடுத்தீர்களானால் உங்கள் தினசரிகள் அதில் வரும். மல்ட்டி ஸ்டோரேஜ் வசதி (multi storage facility) கொண்ட ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள். மேலும் உபயோகமில்லாத நேரங்களில் மடித்து வைக்கக்கூடிய ஃபர்னிச்சர்களை உபயோகிப்பதால் இடம் அடையாமல் இருக்கும்.

கண்ணாடியின் மூலம் இடத்தை விரிவுபடுத்தலாம்.
                                             

வித்தியாசமான ஐடியாவாகத் தெரியலாம். ஆனால், உங்கள் வீட்டின் அளவை இது அதிகப்படுத்திக் காட்டுவது கண்டு மகிழ்வீர்கள். வரவேற்பறையின் இரு எதிரெதிர்ப் பக்கங்களில் கண்ணாடிகள் வையுங்கள். இந்தக் கண்ணாடிகள் அளவில் பெரிதாக இருத்தல் நல்லது. சுவர் சிறிதாக இருக்கும் பட்சத்தில் முழு சுவரையும் மறைக்கும் வகையில் கண்ணாடியால் அலங்கரிக்கலாம். இந்தக் கண்ணாடிகள் தரையிலிருந்து நான்கடி உயரத்திற்கும் மொத்த அகலம் இரண்டடி கொண்டதாகவும் நீளவாக்கில் தொடர்ந்து சுவர் முழுக்க இருக்கும்படியும் அமைக்கலாம். இதனால் உங்கள் வீடு பெரிதாகக் காட்டப்படுவது கண்டு நிச்சயம் மகிழ்வீர்கள்.

வண்ணங்களில் விளையாடுங்கள் 
                                         
உங்கள் சுவர்களுக்கு பளிச்சென்ற, கண் கவரும் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். அத்துடன் சுவரின் நிறம் உங்கள் ஃபர்னிச்சர், கர்ட்டைன், தரை விரிப்பு மற்றும் கால் மிதியடிகள் இவற்றுடன் ஒத்துப் போகும் வகையில் இருப்பது உங்கள் வீட்டை சிறியதாகக் காட்டாதிருக்கும். அதற்காக அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால், ஒரே குடும்ப நிறத்தில் இருந்தால் நல்லது. அதற்காக அதிகமான கலர் கொடுத்து over buildup ஆக்க வேண்டாம். இந்த ஒரு வண்ணக் குறைபாட்டை சுவர்க் கடிகாரம், மலர் ஜாடி, டேபிள் மேட்டுகள் போன்ற சிறு பொருட்களில் நிற வித்தியாசத்தைக் கொடுத்து மாற்றலாம். நினைவில் கொள்ளுங்கள், வண்ணங்களுக்கு உங்கள் மனநிலையை மாற்றும் சக்தி உண்டு.

லைட்டிங்கில் அடுத்த கவனம்
வீடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் ஆங்காங்கே இடைவெளிகளில் சிறிய லைட்டுகளை வடிவமைப்பதன் மூலம் வித்தியாச வெளிச்சம் கொடுத்து அழகாக்கலாம். பெரும்பாலும்  படிக்கும் அறையைத் தவிர மற்ற அறைகளில் டியூப் லைட்டுகளை உபயோகிப்பதைத் தவிர்க்கலாம். இது உங்களின் அலர்ட்னஸைக் குறைத்து, உங்களை ரிலாக்ஸாக வைத்திருக்கும். வண்ண விளக்குகள், வீட்டில் மேலும் கீழுமாக வடிவமைக்கப்பட்ட விளக்குகள் இவற்றின் மூலம் உங்கள் வீடு நிச்சயம் மாறுபட்ட, சற்றே அகலமான தோற்றத்தைத் தரும்.
இரவு நேரத்திற்கு ஹாலில் ஒரு சிறிய மின் விளக்குடன், அரோமா மெழுகுவர்த்தியை உபயோகிக்கலாம். இது நண்பர்கள், உறவினர்களுடன் பேச நல்ல, ரம்மியமான சூழ்நிலையைக் கொடுப்பதுடன் உங்கள் மின்சாரத்தையும் சிக்கனப்படுத்தும். ஆனால், இந்த மெழுகுவர்த்தி நாளிதழ், கர்ட்டன்கள், சோஃபா ஆகியவற்றின் பக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். லைட்டுகள், மெழுகுவர்த்திக்குப் பதிலாக லேம்ப்களையும் பயன்படுத்தலாம்.

சமையலறை செட்டிங்

                                        
                     
இப்போது அதிகமான வீடுகளில் திறந்த சமயலறைகளே உபயோகப்படுத்தப்படுகின்றன. இதனால் உங்கள் வரவேற்பறையில் அமர்ந்திருப்பவருக்கு சமையல் வாசனையிலிருந்து கமறல் வரை போகும். எனவே அவசியம் எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன்களை உபயோகியுங்கள். சமையலறையில் பொருட்கள் வெளியில் இறைந்திருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொருட்களுக்கு ஏற்ற வகையில் நல்ல ஸ்டோரேஜ்களை உபயோகியுங்கள்.

சிறிய வீடுகளில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்


               


* விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக அழகு சாதனப் பொருட்களால் வீட்டை நிரப்பாதீர்கள்.
* பெரிய படங்கள் மாட்டுவதைத் தவிருங்கள். சிறு பொருட்களைக் கொண்டும் அழகாக்கலாம்.
* ஒரு அறையின் மணம் மறு அறையில் பரவாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
* பளிச்சென்ற நிறத்தில் சுவர் வண்ணங்கள் இருக்கட்டும். ஆனால் கண்களைப் பறிக்கும் நிறத்திலல்ல.
* பொருட்களின் தேவையையும், வீட்டின் இடத்தையும் கருத்தில் கொண்டு பொருட்களின் இடத்தைத் தீர்மானியுங்கள்.
* மாதமொரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சிறிய அளவில் வீட்டில் மாற்றங்கள் செய்யுங்கள். உங்கள் சோஃபாக்களின் திசையை மாற்றியோ டி.வியின் இடத்தை மாற்றியோ முயற்சியுங்கள். இது உங்கள் வீட்டிற்குப் புது தோற்றத்தைத் தரும்.
* இயற்கை ஒளி அதிகம் உள்ளே வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் திரைகளையும் நெட் துணிகளில் வடிவமைக்கலாம்.
* ஜன்னல், டி.வி ஸ்டாண்ட், டெலிஃபோன் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் வேண்டாத பொருட்களை வைத்து அலங்கோலமாக்காதீர்கள்.
               
* குழந்தைகளின் பாடப் புத்தகங்களை மற்றும் விளையாட்டுப் பொருட்களை அந்தந்த இடங்களில் வைக்கக் கற்றுக் கொடுங்கள்.
* ஒவ்வொரு பொருளுக்குமான இடத்தை முடிவு செய்து விட்டால் எதுவும் வெளியில் இல்லாமல் வீடு சுத்தமாகத் தெரியும். சுத்தமான வீடு நிச்சயம் பெரிதாகத் தெரியும்.
* வீட்டில் நேரமிருந்தால் உங்கள் கையினாலே பொருட்கள் செய்து வீட்டை அழகாக்குங்கள். நாம் செய்யும் பொருளெனும் போது அது அழகாகவும், அது வைக்கும் இடம் சுத்தமாகவும் இருக்க வேண்டுமெனும் எண்ணம் அவசியம் வரும்.

 டிஸ்கி: என்னதான்  லட்சக்கணக்கில் போட்டு வீட்டை கட்டி, ஆளுக்கொரு திசையில் முகத்தை திருப்பிக்கிட்டு அவங்கவங்க ரூமில அடைஞ்சு  இருந்தால் வீடு கட்டியதன் பலனே இல்லாமல் போகும். அதனால், அன்பென்னும் நூலில் கணவன், மனைவி,பிள்ளைகள், பேரன் பேத்திகள், மருமகள், போன்ற முத்தான உறவுகளை கோர்த்து முத்துசரம் போல் குடும்பம் இருக்கனும்.

உங்கள் வீட்டை ஜொலிக்க வைக்கும் நட்சத்திரமாக நீங்கள் மின்ன வாழ்த்துகள்.
(இதெல்லாம் நம்ம சொந்த சரக்குன்னு நினைச்சுடாதீங்க. நமக்குலாம் அம்புட்டு அறிவு இல்லீங்கோ.  இங்க இருந்து சுட்டதுதான்.)
 
       
                                                                 
     

18 comments:

  1. ஆம் சகோ.. உறவுகள் உன்னதமானவை..

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவு....

    உண்மையில் தற்போதை வீடுகளை அன்பை காட்டிலும் ஆடம்பரமே ஆட்கொள்கிறது...

    சிரித்து உணவு பறிமார ஆட்கள் இல்லை...

    கூடி பேச நேரம் இல்லை...

    நலம் விசாரிக்க தயக்கம்...

    இன்னும் நிறைய...

    வீடுகள் அன்பால் மட்டுமே நிறைந்து காணப்பட வேண்டும்..

    அதன் பிறகுதான் தாங்கள் குறிப்பிட்டதெல்லாம்...

    ReplyDelete
  3. -இரண்டு மாதங்களுக்கொரு முறை வீட்டில் சின்னச் சின்ன மாற்றம் செய்யுங்கள்... நல்ல யோசனைதான் தங்காய்... வீட்டை அழகா வெச்சுக்கறதால நல்ல மனநிலை கிடைக்கும். அது நாம செய்யற காரியங்கள்லயும் பிரதிபலிக்கும். அருமையான விஷயங்கள் பகிர்ந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அருமையான தகவல்கள் மேடம்

    கடைசியில் நீங்க சொன்ன மாதிரி உறவுகள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் வீடு அழகு பெரும்

    ReplyDelete
  5. ஆஹா அருமையான ஆலோசனைகள் மிக்க நன்றி தங்கச்சி..!

    ReplyDelete
  6. அதனால், அன்பென்னும் நூலில் கணவன், மனைவி,பிள்ளைகள், பேரன் பேத்திகள், மருமகள், போன்ற முத்தான உறவுகளை கோர்த்து முத்துசரம் போல் குடும்பம் இருக்கனும்.

    உங்கள் வீட்டை ஜொலிக்க வைக்கும் நட்சத்திரமாக நீங்கள் மின்ன வாழ்த்துகள்.

    அன்பாலே அழகாகும் வீடு.வாழ்த்துகள்........."

    ReplyDelete
  7. அன்பும் அழகும் கொண்ட மகிழ்ச்சியான வீடு ஜொலிக்கின்றது.

    ReplyDelete
  8. //முத்தான உறவுகளை கோர்த்து முத்துசரம் போல் குடும்பம் இருக்கனும்.//

    மிக அழகாக சொல்லியிருக்கீங்க ராஜி.அழகான படங்கள்.சிறப்பான பதிவு.

    ReplyDelete
  9. //அன்பென்னும் நூலில் கணவன், மனைவி,பிள்ளைகள், பேரன் பேத்திகள், மருமகள், போன்ற முத்தான உறவுகளை கோர்த்து முத்துசரம் போல் குடும்பம் இருக்கனும்.//



    அருமையாக சொன்னீர்கள் .பயனுள்ள பகிர்வு

    ReplyDelete
  10. அருமை!வீட்டு அலங்காரம் படித்தீர்களோ?டிஸ்கி............சொல்லவே வேணாம்!

    ReplyDelete
  11. Sinna Sinna Kurippugal
    Singa Kurippugal.
    TISCII Super.

    Pakirvukku Nanri Sago.

    TM 8.

    ReplyDelete
  12. அருமையான பயனுள்ள பதிவு
    சுட்டாலும் நல்ல அனைவருக்கும் பயனுள்ள பதிவைத்
    தரவேண்டும் என்கிற உயரிய நோக்கம் இருக்கவேண்டுமே
    அது உங்களுக்கு இருக்கிறது,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அருமையான தகவல்.
    அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. கடைசியாக உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்குங்க.....

    ReplyDelete
  15. படங்கள் எல்லாம் பார்க்க புது வீடு தேவை போல இருக்கிறது. மிக நல்ல இடுகை வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. வீடு கட்ட வேண்டும் என்று சொல்லி கொண்டே இருக்கும் போது தான் இந்த படத்தில் ஒரு சில தகவல்கை அறிந்து கொள்ள முடியும் நன்றி


    ReplyDelete