வெள்ளி, மார்ச் 30, 2012

வாழ்ந்து காட்டடி வண்ண மயிலே...,


 
பொன்னை விரும்பும் பூமியிலே...,
பெண்ணை விரும்பினான்!?

பெண்ணை விரும்பியவன்...,
இன்னும் பிற பின்னர் விரும்பினான்!?

பெண்ணை மட்டும் விரும்பியவன்...,
பிறவற்றை மறைத்தானா? மறந்தானா?

இன்ன பிறவற்றையும் விரும்பியவன்..,
இதயம் கொண்டவளை கொன்றுவிட்டானே,

இன்ன பிற நிறைந்த மனத்தவனை...,
மறைத்தவனை மனம்கொண்டு மரிப்பதைக் காட்டிலும்,...

தன்னிதயம் தகர்த்த, நெறிகெட்ட மானிடனை..,
களையெடுத்து கன்னி அவள் மீண்டு...,

மீண்டும் வசந்தம் வர,
காத்திருப்பதே...,

பொன்னான, கண்ணான கன்னியவளுக்கு நன்றென புரியும் - 
காலம் பதில் சொல்லும் காத்திரம்மா,
அன்பெனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தவனே வாத்தாவான்,  
வாத்து மடயனாவான்,  
பார்ப்பாயடி, வாழ்ந்து காட்டடி.22 கருத்துகள்:

 1. அழகான வரிகளில் கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. தன்னம்பிக்கை ஊட்டிய நற்கவிதை. வரிகள் வீரியமாக விழுந்திருக்கின்றன. அருமை.

  பதிலளிநீக்கு
 3. யாருக்கோ நியூஸ் சொல்லி இருக்கீங்க.. அவர் நெட் பார்க்கற பழக்கமே இல்லாதவரா இருந்தா? ஹி ஹி

  பதிலளிநீக்கு
 4. எலேய் எவம்லேய் ராஸ்கல் அந்த வாத்து மடையன் சொல்லுங்கலேய், தங்கச்சி அருவாளை கையில் எடுப்பதற்கு முன்பே சொல்லிருங்க ஆமா...அப்புறம் நானும் வீச்சருவாளை தூக்கிருவேன்....

  பதிலளிநீக்கு
 5. வாழ்ந்து காட்டடி வண்ண மயிலே.. தலைப்பும் வரிகளும் அருமை.

  பதிலளிநீக்கு
 6. புதுமைப்பெண்ணாய்ப்புறப்படத் தூண்டும் கவிதை.

  பதிலளிநீக்கு
 7. அழகான உணர்வுள்ள படம்.கவிதையும்தான் ராஜி !

  பதிலளிநீக்கு
 8. அழகு

  ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
  ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

  பதிலளிநீக்கு
 9. அழகு

  ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
  ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

  பதிலளிநீக்கு
 10. கவிதை அருமை....

  //பெண்ணை மட்டும் விரும்பியவன்...///

  ஆண்கள் பெண்ணை(One) அல்ல பெண்களை(Lots) மட்டும்தான் விரும்புவார்கள்

  //பிறவற்றை மறைத்தானா? மறந்தானா///
  பிறவற்றை மறைக்க அவனுக்கு நேரமில்லை காரணம் ஒரு பெண்ணை விரும்புவதை மற்ற பெண்களிடம் மறைப்பதேற்கே அவனுக்கு நேரமிருக்காது.

  அதையும் அவன் மறைக்க வேண்டிய அவசியம் இருக்காது பெண்களிடம் பொறாமை குணம் இல்லாது இருந்தால்...

  பதிலளிநீக்கு
 11. வாள்வீச்சு வார்த்தைகள்..
  வளரும்போதே கொண்ட கொள்கைகளில்
  திறம் காட்டு என உபதேசிக்கும் உணர்ச்சிக்கவிதை.

  பதிலளிநீக்கு
 12. தன் நம்பிக்கை உணர்ச்சி மிக்க வரிகள் ராஜி அக்கா வாழ்ந்து காட்டி மயில் பெண்களுக்கோர் எடுத்து காட்டு அக்கா.......

  பதிலளிநீக்கு
 13. தங்கள் படைப்பே எனது மற்றுமொரு படைப்புக்கு
  விதையாகியது.மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. காலம் பதில் சொல்லும் காத்திரம்மா,

  பதிலளிநீக்கு
 15. "வாழ்ந்து காட்டடி வண்ணமயிலே...
  அருமையான கவிதை.

  பதிலளிநீக்கு
 16. உணர்ச்சி பொங்கும் கவிதை!
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு