Monday, March 12, 2012

எட்டு வகையான சொர்க்கம்- ஐஞ்சுவை அவியல்


                               
                          
நமக்கு தெரிஞ்சவங்க வீட்டு விசேஷம் வருது. நாம என்ன பண்ணுவோம்..., அவங்களோட தராதரத்துக்கு ஏத்தவாறு, நம்மோட வசதிக்கு தகுந்தவாறு எளிமையாவோ இல்ல ஆடம்பரமாவோ பரிசளிப்போம். சாதாரணப்பட்ட நம்மளே இவ்வளவு யோசிக்கும்போது! நமது தகுதிக்கேற்ப  எல்லாம்வல்ல இறைவன் கொடுக்கும்  வெகுமதி எவ்வளவு உயர்ந்ததாய் இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.... அத்தகைய  இறைவன் தனது நல்லடியார்களுக்கு தரும் வெகுமதிதான், “சொர்க்கம்” இறைவன் தன் திருமறையில் கூறி இருக்கிறான்: அவர்கள் செய்த நற்காரியங்களுக்கு கூலியாக, மறைத்து வைக்கப்பட்டிருக்கும், கண்கள் குளிரக்கூடிய சன்மானத்தை எவரும் அறிந்து கொள்ள முடியாது’(திருக்குர் ஆன் 32:17)

மனிதனாகப் பிறந்தவனுக்கு ஆசைகள் பலவிதம் உண்டு, எல்லா ஆசைகளையும், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற வட்டத்துக்குள் அடைத்துவிடலாம். இந்த ஆசைகளை அனுபவிக்க இந்த பூமி சரியான இடமல்ல . மறுமையில் இந்த ஆசைகளை ஒருவன் பூரணமாக அனுபவிக்க முடியும் என்கிறார்.
அந்த எட்டு விதமான சொர்க்கத்தை ஒருவன் அடைய வேண்டுமென்றால் அவனிடம் ஐந்து விதமான தன்மைகள் இருக்க வேண்டுமாம். அவை...,
1. உலக வாழ்க்கையின் போது அனைத்து வகையான தீமையான காரியங்களில் இருந்தும் தன்னை தடுத்து கொள்ள வேண்டும்.
2. தனது வருமானம் குறைவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அதற்குள் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் தீய வழிகளில் பொருளீட்டக் கூடாது.
 3. இறைவனை வணங்கி வழிபாடு செய்வதில் பேராசை கொள்ள வேண்டுமே தவிர பிற பொருட்கள் மீதல்ல. ஒருவேளை அப்படி ஆசைப்பட நேர்ந்தால் இறைவனிடம் பாவ மன்னிப்பு பெறவும், இறைவனின் அன்பை பெறவும் முயற்சிக்கவும் வேண்டும்..,
4. நல்லவர்களுடன் தோழமையை அதிகரிக்க வேண்டும். அவர்களுடன் சேர்ந்து நல்லவற்றையே செய்ய வேண்டும். 
5. மரணம் என்பது வலி வேதனை இன்றி அமைதியானதாக இருக்க வேண்டும். யாருக்கும் பாரமாக தொந்தரவாக நமது மரணம் அமைய கூடாது. அத்தகைய மரணத்தை தருமாறு இறைவனை கேட்க வேண்டும். அதோடு நமது பாவங்களை எல்லாம் மன்னித்து சொர்க்கத்தை தருமாறு இறைவனை மன்றாடிக் கேட்டுக்கொள்ளவேண்டும். இவற்றை பின்பற்றினால் கீழ்க்காணும் எட்டுவிதமான சொர்க்கம் நமக்கு கிட்டும் என திருக்குர் ஆன் சொல்கிறது.

அந்த எட்டு விதமான சொர்க்கம்:
தாருல் ஜலால்: வெண்முத்து, பவளம் ஆகியவற்றால் கட்டப்பட்ட மாளிகை...,
 தாருஸ் ஸலாம்: சிகப்பு மரகத கற்களால் கட்டப்பட்ட மாளிகை....,
ஜன்னத்துல் மஃவா: பச்சை நிற மரகத கற்களால் கட்டப்பட்ட மாளிகை...,
ஜன்னத்துல் குல்த்:  மஞ்சள் நிற மரகத கற்களால் கட்டப்பட்ட மாளிகை...,
 ஜன்னத்துல் நயீம்: பளபளக்கும் வெள்ளியால கட்டப்பட்ட மாளிகை...,
தாருல் கரார்: சிவந்த நிறமுடைய தங்கத்தால் கட்டப்பட்ட மாளிகை...,
ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்: எல்லா விதமான விலை உயர்ந்த கற்களல் கட்டப்பட்ட மாளிகை, இதனுள் கஸ்தூரி வாசம் நிரம்பி வழியும்
ஜன்னத்துல் அத்ன்: தங்கம் வெள்ளி ஆகியவற்றால் கட்டப்பட்ட மாளிகை

நன்றி: தினத்தந்தி, ஆன்மீக மலர்...., 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சிரிப்பு வருது...,

                               
 மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சமாளிஃபிகேஷன்:
என் சின்ன பொண்ணு இனியாக்கு அப்போ வயசு 3.ஸ்கூலுக்கு போக ஆரம்பிக்கலை.  என் பெரிய மகளுக்கும் சின்ன மகளுக்கும் 4 வயசு வித்தியாசம்.  பெரியவளின் நோட், புக், அசைன்மெண்ட் எல்லாத்தையும் எழுதுறேன்னு எடுத்து பிரித்துப் பிச்சிடுவா. அன்னிக்கும் அதேப்போல..., “ அம்மா என் அசைண்ட்மெண்ட்ல பாப்பா தண்ணியை கொட்டிட்டான்னு பெரியவ, தூயா அழுதுக்கிட்டே வந்தா. சின்னது இனியாவை கூப்பிட்டு “ஏன், எப்ப பார்த்தாலும் அக்காவை வம்புக்கு இழுக்குற? இனி அக்காக்கிட்ட இருந்து உன்னை பத்தி கம்ப்ளெயிண்ட் வரக்கூடாது” வந்தால் அடிச்சுடுவேன்னு கோவமா சொன்னேன். 
உடனே அவள்., அக்கா நல்லா கேட்டுக்கோ, நீ என்னை கம்பெளெயிண்ட் பண்றது அம்மாக்கு பிடிக்கலை. இனிமே அம்மாக்கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணாத, ஓக்கே?!வான்னு அப்பாவியாச் சொல்ல கோவம் மறந்து சிரிச்சுட்டேன்.  
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

யோசிங்க....,                                    
                                    

1. ஒரு கூடையில 6 முட்டைகள் இருக்கு.. 6 பேர் 6 முட்டைகளை எடுத்துக்கறாங்க.. ஆனால் ஒரு முட்டை மட்டும் கூடையிலயே இருக்கு அது எப்படி?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒழுங்கா சமைக்க...,
டீ போடும் போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடாதீர்கள் டீயின் சுவை குறைந்து விடும்.  கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது
அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய கீரை தனி சுவையுடன் இருக்கும். ரசம் இறக்கி வைத்ததும், ஒரு துளி நெய் சேர்த்து பச்சை கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிப் போடுங்கள் மணமும் ருசியும் எடுப்பாய் இருக்கும்.

23 comments:

  1. ஒருத்தர் ஒரு முட்டைய கூடையோட எடுத்துக்குறாரு...

    #நானும் அறிவாளி!!

    ReplyDelete
  2. குர் ஆன் சொன்ன கருத்துக்கள் அருமை. குழந்தைகள் வெகுளியாகப் பேசும் அழகை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனியாவின் அறியாமை மழலையும் அழகுதான். அவியல் இம்முறையும் வெகு சுவை. (ஹூம்... புதிருக்கு முந்திட்டு விடை சொல்லலாம்னு பாத்தா... வௌங்காதவன் முந்திட்டாரே...)

    ReplyDelete
  3. கூடையில முட்டை இருந்தா வேற எங்கேயும் போகாதே....???

    ஐயோ ஐயையோ...

    ReplyDelete
  4. >>ஒரு கூடையில 6 முட்டைகள் இருக்கு.. 6 பேர் 6 முட்டைகளை எடுத்துக்கறாங்க.. ஆனால் ஒரு முட்டை மட்டும் கூடையிலயே இருக்கு அது எப்படி?

    இதுக்கு பதில் சொல்லலைன்னா சரியான கூமுட்டைன்னு சொல்லிடுவீங்களோ?

    ReplyDelete
  5. ஒரு கூடையில 6 முட்டைகள் இருக்கு.. 6 பேர் 6 முட்டைகளை எடுத்துக்கறாங்க.. ஆனால் ஒரு முட்டை மட்டும் கூடையிலயே இருக்கு அது எப்படி?//

    தங்கச்சி அது பொய்யின்னு உங்க அண்ணி சொல்றாங்க, சத்தியமா எனக்கு தெரியாது....

    ReplyDelete
  6. டீ அன்ட் கீரை அன்ட் ரசம் குறிப்புகள் அண்ணிக்கு புதுசாம் தங்கச்சி, நன்றி...!!!

    ReplyDelete
  7. பல தகவல்களை அறிந்து கொண்டேன்

    முட்டை கணக்கும் தெரியவில்லை ஒருவேளை வெளங்காதவன் சொன்ன பதில் போல இருக்குமோ

    ReplyDelete
  8. எப்பிடி அக்கா இப்பிடி எல்லாம் அவிக்கிறிங்க முட்ட விடயம் நல்ல அவியல்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. //கூடையில முட்டை//

    வெளங்காதவன் கூற்று தான்

    ReplyDelete
  11. ஐந்சுவை அவியல் பிரமாதம்

    ReplyDelete
  12. வாழ்வியல் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் ஆழமாக சிந்திக்க வைக்கிறது.குழந்தைகளின் குறும்பை எப்போதும் ரசிக்கலாம்.சமையல் குறிப்பும் அசத்தல் ராஜி !

    ReplyDelete
  13. குழந்தைகளின் குறும்பை ரசித்தேன்

    ReplyDelete
  14. செர்க்கம் கண்டேன் அவியல் உண்
    டேன்
    சுவை நன்றே!
    வலைவழி வந்து வாழ்த்தினீர்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. நல்ல கருத்துகள்.... நல்ல பகிர்வு....

    ReplyDelete
  16. அவியல் பிரமாதம்..
    குர்ஆன் கருத்துக்கள் அருமை..தொடருங்கள் ...

    ReplyDelete
  17. "எட்டு வகையான சொர்க்கம்- ஐஞ்சுவை அவியல்"

    சுவையான சிந்திக்கவைக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  18. எனக்கு இறுதி சமையல் டிப்ஸ் நன்றாகப் பிடித்தது. அடேங்கப்பா அந்த சொர்க்கம்...ம்...ம்.. நல்லாயிருக்கே....நன்றி வாழ்த்துகள்...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. என்ன சகோ சொர்க்கத்துக்கு போக வழி சொல்லிய உடனே சிரிப்புவதுன்னு சொல்லி சமாளிஃபிகேஷன் பண்ணி யோசிக்க சொல்லி இறுதியாக சமைக்க அட்வைஸ் பண்ணி இருக்கிறீங்க இந்த அட்வைஸை கேட்டு சமைச்சதை சாப்பிட்ட சாப்பிட்டவங்க சொர்க்கத்துக்கு போவாங்களா இல்லை வேற எங்காவது போவாங்களா என்பதை அடுத்த பதிவாக போடுங்கள். ஹீ.ஹீ

    ReplyDelete
  20. கலக்கல் பதிவு. அருமையாக இருந்தது.

    ReplyDelete
  21. ஒழுங்கா சமைக்க..., நீங்க அட்வைஸ் பண்ணியிருந்தீங்க நான் ஒழுங்கா சமைக்காதவங்களுக்கு என் அட்வைஸ் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல பசி எடுக்கும் வரை சாப்பாடு போடாதீர்கள் சிறு குடலை பெரும் குடல் சாப்பிட ஆரம்பிக்கும் போது போடுங்கள் அப்புறம் உங்கள் சாப்பாட்டின் அருமையை சொல்லுவார்கள்

    ReplyDelete
  22. கலக்கல் பதிவு சகோதரி !

    ReplyDelete