Monday, March 05, 2012

ஐஞ்சுவை அவியல்...,

                            

நலன் - நீலன்:
பகவான் ஸ்ரீராமசந்திரமூர்த்தி இலங்கை செல்ல சுக்ரீவன் தலமைல,  வானர படைகளின் உதவியோடு கடலில் பாலம் கட்டிக்கிட்டிருக்கார். 

வானர படைகள் கல், பாறை, மரம், மலை என்று கைக்கு கிடைத்தவற்றையெல்லாம், பெயர்த்து கடலில் போடுகின்றனர்.  ஆனால் எத்தனை போட்டாலும், கடலின் ஆழத்தால்  அது அத்தனையும் முழ்கி விடுகிறது. 
துவண்டு போன சுக்ரீவன் பகவானிடம் வந்து......கடலின் ஆழம் மிகவும் அதிகமாக உள்ளது.  பாலம் கட்டி முடிக்க எங்கள் சக்த்தியால் முடியாது போலிருக்கிறது..... என்ன செய்வது என்று வணங்கி கேட்டார்.  
அதற்கு ஸ்ரீராமசந்திர மூர்த்தி... அங்கு விளையாடி கொண்டிருந்த நலன் நீலன் என்ற இரண்டு குட்டி குரங்குகளை காட்டி,  கடலில் போடும் ஒவ்வொன்றையும்  அவர்களை தொட செய்து போடுங்கள் என்று கூற,  அப்படியே சுக்ரீவன் செய்தான். 
என்ன ஆச்சர்யம்...  இப்போது கடலில் போட்ட பாறைகளும், மலைகளும் மிதக்க ஆரம்பித்தன. அனுமனுக்கு ஒரே ஆச்சர்யம்.  அவர் பகவான் ஸ்ரீராமசந்திர மூர்த்தியை வணங்கி,  அந்த சிறுவர்கள் தொட்டு கொடுத்தால் மட்டும் எப்படி எல்லாம் மிதக்கிறது?  என்ன காரணம் என்று கேட்டார்.

அனுமா... ஒரு முனிவர் அத்தி மரத்தின் அடியில் கடும் தவம் செய்து கொண்டிருந்தார்.  அந்த பக்கம் விளையாடி கொண்டிருந்த நலன் நீலன் இருவரும்  அந்த மரத்தில் இருந்த அத்தி பழங்களை பறித்து விளையாடி கொண்டிருந்தன. 
அந்த பழங்கள் முனிவர் மீது விழுந்தது.  கோபத்தில் கண் விழித்த முனிவர்.... தன் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து, கைகளை ஓங்கியபடி மரத்தை அண்ணாந்து பார்த்தார்.
அங்கே... இரண்டு இளம் குரங்கு குட்டிகள் விளையாடி கொண்டிருப்பதை பார்த்து,  முனிவர் மனம் இளகுகிறது.   ஆனால் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்தாகி விட்டதே.... எனவே, தன் சாபத்தை மாற்றி அவர்கள் எறியும் எதுவும் பஞ்சுபோல் மிதக்கட்டும் என்று கூறிவிடுகிறார். 
அதனால் தான் இவர்கள் தொட்டு கொடுக்கும் பாறைகள் கடலில் மூழ்காமல் மிதக்கின்றன என்று ராமசந்திர மூர்த்தி கூறினார்.
**********************************************************
 அட, சிரிங்கப்பா...,
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன்மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப் பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..
"மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!
*********************************************************** 
பல்ப் எனக்கா? இல்லை தமிழ்வாசி பிரகாசுக்கா?
என் பையனுக்கு எதுக்கெடுத்தாலும்  கோவம் வரும். எவ்வளவோ சொல்லியும் அவன், கோவத்தை குறைச்சபாடில்லை. தமிழ்வாசி பிரகாஷ் பிளாக்ல ஒரு ”கதை” படிச்சேன். நாம சொல்லிதான் பையன் கேக்கலியேன்னு, அந்த கதையில வரமாதிரி, கோவம் வரும்போது சுவத்துல ஆணி அடிக்க சொன்னேன், கோவம் தனிஞ்ச பின்,  சுவத்துல இருந்து  அந்த ஆணியை புடுங்க சொன்னேன். பாருப்பா, ஆணி புடுங்கினாலும் சுவத்துல தழும்பு அப்படியே தெரியுது பாரு. அதே போலதான் நீ கோவப்படும்போது பேசிய வார்த்தைகளால் உண்டான மனக்காயம் அப்படியே இருக்கும். இதுலிருந்து என்ன தெரியுது அப்புன்னு கேட்டேன். “ம்ம்ம் உனக்கு மட்டுமில்ல, பிளாக்கர்ஸ் எல்லாருக்குமே சொல்ல வந்ததை சுருக்கமா சொல்ல தெரியாது போல. கோவப்படாத கண்ணான்னு சொன்னா கேட்டுக்குறேன். இப்ப பாரு சுவர் ஃபுல்லா ஆணி அடிச்சு குழியாக்கி வச்சிருக்கே. அப்பா வரட்டும் உனக்கிருக்கு கச்சேரி....ன்னு சொன்னான்.
**********************************************************
கண்டுபிடிங்க....,
 

                                           
அதை”த் தயாரிப்பவனுக்கு ”அது” இப்போது தேவைப்படாது. ”அதை” வாங்குபவன் ”அதை”த் தனக்காக உபயோகிகப்போவதில்லை. ”அதை” உபயோகிக்கப் போகிறவனுக்கு ”அதை”ப் பற்றித் தெரியாது. ”அது” என்ன?
விடை வழக்கம்போல் அடுத்த பதிவில்.....
********************************************************************
நானும் சொல்வேனுங்க சமையல் குறிப்பு: 
 பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.  தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.  குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும்.

18 comments:

  1. மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..
    "மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

    :-)

    ReplyDelete
  2. பதிவர்களுக்கு பணம் தரும் தளம் !

    Visit Here For More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/profit-sharing-phenomenon.html

    ReplyDelete
  3. //அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும்.//

    சோத்துலேயும் உப்பு இருந்துச்சின்னா?? டவுட்டு

    ReplyDelete
  4. //அட, சிரிங்கப்பா...,//

    சிரிச்சாசிங்க

    ReplyDelete
  5. //பல்ப் எனக்கா? இல்லை தமிழ்வாசி பிரகாசுக்கா?//

    ஆகா....தமிழ்வாசி பேச்சை எல்லாமா கேட்டீங்க..

    ReplyDelete
  6. //”அதை”த் தயாரிப்பவனுக்கு ”அது” இப்போது//

    இந்த விளையாட்டுக்கு....உடு ஜூட்

    ReplyDelete
  7. கதம்பக பதிவு அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  8. தங்கச்சி.... உன்கிட்ட சொன்னபடி நான் முதல்ல விடை சொல்லிடறேன். அது = சவப்பெட்டி!

    சரியா? நளன், நீலன் என்கிற வானரங்கள் முனிவரின் சாளக்கிராமங்களை ஆற்றில் எறிந்து துன்புறுத்தியதால அவைகள் தண்ணீரில் போடும் எதுவும் மிதக்கட்டும்னு சாபம் குடுத்தாருன்னு படிச்சிருக்கேன். மத்தபடி இந்த முறை அவியல் சூப்பர்!

    ReplyDelete
  9. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  10. haa haa ஹா ஹா அவியல் பொரியல் எல்லாம் ஓக்கே அவ்வ்வ்வ்

    ReplyDelete
  11. அவியல் சுவையோ சுவை.... :)))

    ReplyDelete
  12. பையன் ரொம்ப அறிவாளிங்க.....

    ReplyDelete
  13. சமையல் குறிப்பு பிரயோசனமாய் இருக்கு ராஜி !

    ReplyDelete
  14. மிக்க நல்ல சுவையாக இருந்தது... அட சிரிங்கப்பா சூப்பர்...........

    ReplyDelete
  15. எல்லாமே சூப்பர் ! அது - கணேஷ் சார் சொல்லிட்டாரே ! வாழ்த்துக்கள் சகோதரி !

    ReplyDelete
  16. நான் சொல்வதற்கு முன்னாள் கணேஷ் சார் முந்திக் கொண்டார் . கணேஷ் சார் உங்களுக்கு தெரிஞ்சா பதில் சொல்லக்கூடாது. அத்ற்கு பதிலா கையை தூக்கி காண்பிக்கனும் சகோதரி வந்து பார்த்து யார் எல்லாம் கையை தூக்கி இருக்கிறார்களோ அவர்களில் ஒருவரை சொல்ல சொல்வார். அப்பதான் பதில் சொல்லனும் பதில் தவறா சொன்னா சரியா சொன்னவங்ககிட்ட ஒரு கொட்டு வாங்கனும் அப்படிதான் எங்க டீச்சர் சொல்லி தந்தாங்க.......

    ReplyDelete
  17. எனக்கு ஒரு புது கார் அன்பு பரிசாக வேண்டுமே... எங்க மாமனார்கிட்ட கேட்டு பார்க்கணும்

    ReplyDelete
  18. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    Hotels in Nungambakkam | Hotels near Chetpet | Hotels near Egmore

    ReplyDelete