Wednesday, March 21, 2012

பழத்தை சொல்லுங்க..உங்களை பத்தி ஒண்ணு சொல்றேன்...புதுவித ஜோதிடம்


            நீங்க எத்தினியோ டெஸ்ட்லாம் பாத்து இருப்பீங்க. ஆனா இது, அது போலலாம் இல்லாம வேற மாதிரி டெஸ்ட்.  நான் சொல்லும் பழங்களிலிருந்து ஒண்ணு சொல்லுங்க நான் உங்களை பத்தி ஒண்ணு சொல்றேன். இதுல கண்கட்டு வித்தைலாம் ஏதுமில்லை. 100% கரெக்ட்டா இருக்கும். சொன்னா நம்ப மாட்டீங்க, முழுசா படிங்க. கடைசில இந்த ஜோதிடம் உண்மைதான்னு நீங்களே ஒத்துக்குவீங்க.


    இப்போ நீங்க ஒரு காட்டு வழியா நடந்து போய்க்கிட்டு  இருக்கீங்க. அப்டி போகும்போது  ஒரு ஆறு (six இல்ல ... நதி அல்லது ரிவர்). அந்த ஆத்தங்கரையில் ஒரு குடிசை இருக்கு. அந்த குடிசைக்குள்ள நீங்க போறீங்க. இடது பக்கம் ஒரு அழகான கட்டில் இருக்கு. வலது பக்கம் ஒரு டேபிள், அதை சுத்தி ஆறு சேர் போட்டிருக்கு. அந்த டேபிள் மேல ஒரு தட்டுல இதெல்லாம் இருக்கு.

 1) வாழைப்பழம்
2) பலாப்பழம்
3) மாம்பழம்
4) கொய்யாப் பழம்
5) அன்னாசிப் பழம்

இப்போ மேட்டர் இன்னானா இந்த அஞ்சு பழத்துல நீங்க எந்த பழத்தை எடுத்துப்பீங்க? நீங்க சொல்ற பதில்லேர்ந்து உங்களப் பத்தின ஒரு முக்கியமான விஷயம் இப்ப தெரிஞ்சுடும்! அதனால ரொம்ப யோசிச்சு கவனமா பழத்தை தேர்ந்தெடுங்க.


எந்த பழம்? முடிவு பண்ணிட்டீங்களா?

மொதல்லயே சொல்லிகிறேன் இது 100% சரியா வொர்க் பண்ணும், ஜாக்கிரதையா, நல்லா யோசிச்சு  முடிவு பண்ணுங்க...ஓக்கே? யோசிங்க......முடிவு பணணிட்டீங்களா?அப்புறம் மாத்தக் கூடாது, சொல்லிட்டேன்...!உங்களப் பத்தி ஒரு விஷயம் தெரிஞ்சுடும், நியாபகம் இருக்குல்ல?


எவ்ளோ நேரம்? ட்க்குனு முடிவு பண்ணுங்க (வேணுன்னா லிஸ்ட ஒரு தபா பாத்துக்கங்க).


ஆச்சா?


இப்போ...டெஸ்ட் ரிஸ்ல்ட்ட பாக்கலாமா?


...


...


...விடைகள்:


1) நீங்க வாழைப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு வாழைப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.

2) நீங்க பலாப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு பலாப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.

3) நீங்க மாம்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு மாம்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.

4) நீங்க கொய்யாப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு கொய்யாப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.

5) நீங்க அன்னாசிப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு அன்னாசிப்ப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.


இன்னா 100% கரீட்டா இருந்திச்சா? அதான் நான் மொதல்லயே சொன்னேன்... நம்ப மாட்டேன்னுடீங்க.
டிஸ்கி: போன பதிவில் கேட்க்கப்பட்ட
 யார் அந்த சீமாட்டி?
பட்டையை பட்டையை நீக்கி...,
 பதினாறு பட்டையை நீக்கி...,
முத்துப்பட்டையை நீக்கி...,
முன்னால் வருவாள் சீமாட்டி...,
அவள் யார்? புதிருக்கான விடை: தாழம்பூ.
நன்றி: ஜோஸ்யம் சொல்றேன்னு மெயில் அனுப்பி கலாய்த்த தோழிக்கு....

36 comments:

 1. எலேய்ய்.... இது ரொம்ம்ம்ப்ப ஓவரு...

  ReplyDelete
 2. அது சரி... அந்த சீமாட்டி யாருன்னு இன்னும் விடைய சொல்லலியே தங்கையே...

  ReplyDelete
 3. அக்காங்கறதுனால அடிக்காம விடறேன்...:)

  ReplyDelete
 4. கணேஷ் கூறியது...

  அது சரி... அந்த சீமாட்டி யாருன்னு இன்னும் விடைய சொல்லலியே தங்கையே.
  >>>
  சாரிண்ணா, மறந்துட்டேன். தாழம்பூதான் அந்த சீமாட்டி.

  ReplyDelete
 5. புதுவித "பழவித ஜோதிடம்...

  ReplyDelete
 6. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

  மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,115,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

  மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 7. நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி
  என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக்கொண்டே இருக்கிறீர்கள்..!

  முடியலடா சாமி...!

  ReplyDelete
 8. ஸ்...யம்மாடியோவ்....முடியல

  ஏன் இப்புடீ......என்னா ஒரு கொலவெறி...

  ReplyDelete
 9. யோசியம் நல்லா இருக்கு கொஞசம் எனக்கும் பாத்து சொல்லுங்களேன் ராஜி அக்கா

  ReplyDelete
 10. ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லைங்க இப்படி சொல்லி தப்பிக்க வேண்டியது தான் .

  ReplyDelete
 11. எனக்கு ஞானப்பழம் பிடிக்கும்.. அப்போ எனக்கு என்ன பலன்?ஹி ஹி

  ReplyDelete
 12. பழ ஜோசியம்... பலே ஜோசியம்.... என்ன கொடுமை சரவணா இது?

  நட்புடன்
  கவிதை காதலன்

  ReplyDelete
 13. ஆஹா அந்த அருவாளை எங்கே வச்சேன்.....?

  ReplyDelete
 14. எட்றா சண்முகபாண்டி அந்த அருவாளை விடுடா வண்டியை ஏதாவது ஒரு மலைக்கு....

  ReplyDelete
 15. அடடா இதை அம்மா அவர்களுக்கு அனுப்பினால் நாட்டை விட்டே ஓடிருவாயிங்க நமக்கு ஜாலி ஜாலி ஆகிரும் போங்க....

  ReplyDelete
 16. ஏய்ய்ய் ... நானும் அஞ்சு நிமிஷம் டைம் எடுத்து யோசித்து செலக்ட் பண்ணினா ... வாட் இஸ் தீஸ்?

  ReplyDelete
 17. மீண்டும் பதிவுலகில் வன்முறை வெடிக்க போகிறது...

  அக்கா அதுக்கு நீங்க தான் காரணம்...

  ReplyDelete
 18. இத்தனை 100 க்கு 100 சரியான ஜோதிடத்தை
  இது நாள் வரையில் பார்த்ததே இல்லை
  மிகச் சரியாக இருந்தது
  பழத்தை மாற்றி மாற்றிப் பார்த்தாலும்
  மிகச் சரியாகவே இருந்தது ஆச்சரியமாக இருந்தது
  மனம் கவர்ந்த பதிவு

  ReplyDelete
 19. அட நல்ல ஜோசியம் தான்.... :)) நாஞ்சில் மனோ லாரி நிறைய அருவாளோட வராராம்.... :)))

  ReplyDelete
 20. எதுக்கும் கிளி ஜோசியம் பார்த்துடுங்க.
  ஏதும் ‘கண்டம்’ இருக்கப் போகுது.[எல்லாரும் அரிவாளோட வர்றாங்கல்ல!]

  ReplyDelete
 21. karrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrr ..இது என்ன சின்னப் புள்ளை தனம் ,,,எங்ககிட்டயே வா ...

  karrrrrrrrrrrrrrrrrrr ....மீ ப்ரில்லின்ட் நான் எதையுமே சூசே பண்ணலையே ஹ ஹா ஹா ..எப்புடி

  ReplyDelete
 22. ராஜி...உங்களை நம்பித்தானே வரோம் உங்க பக்கத்துக்கு !

  ReplyDelete
 23. பதிவ விட இந்தக் கமெண்ட் சூப்பர்

  //Ramani சொன்னது…
  இத்தனை 100 க்கு 100 சரியான ஜோதிடத்தை
  இது நாள் வரையில் பார்த்ததே இல்லை
  மிகச் சரியாக இருந்தது
  பழத்தை மாற்றி மாற்றிப் பார்த்தாலும்
  மிகச் சரியாகவே இருந்தது ஆச்சரியமாக இருந்தது
  மனம் கவர்ந்த பதிவு
  3/21/2012 7:52 PM//

  ReplyDelete
 24. சகோதரி உங்களின் இந்த திறமைக்கு நீங்கள் ஜெயலலிதாவுக்கு சசிகலாவுக்கு பதிலாக நீங்கள் தோழியாக போகலாம். வேகன்ஸி அங்கே காலியாக உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்து இருப்பதாக எனக்கு உளவுத்துறை மூலம் எனக்கு செய்தி வந்துள்ளது.

  ReplyDelete
 25. எனக்கு இந்த ஐந்து பழங்களும் புடிக்கும் கடைசியில் கஷ்டப்பட்டு ஒரு வழியாக ஒரு பழத்தை மனதில் நினைத்து விடையை பார்க்க வந்தால் கடைசியில் எனக்கு கிடைத்தது வடைதான். ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்


  மனோ சார் அருவாளை தீட்டிகிற மாதிரி நான் இப்போது கத்தியை தீட்ட ஆரம்பித்துவீட்டேன்... ஜாக்கிரதை சகோதரி ஜாக்கிரதை...
  அப்புட்டுதான் சொல்லுவேன்

  ReplyDelete
 26. டீ இன்னும் வரல... என்ன கொடுமை தங்கச்சி.

  ReplyDelete
 27. ஐயோ ஐயோ நல்லா காமடிங்க

  ReplyDelete
 28. என்ன விட்டிருங்க....

  ReplyDelete
 29. இன்றுதான் ஒர் உண்மையான
  சோதிடரைக் கண்டேன்!
  பலன் மிகவும் சரியாக இருத்தது!
  நன்றி
  முன்பே பலமுறை வந்தும் கருத்துப்
  பட்டை காணவில்லை வாக்கு மட்டும்
  போட்டேன் ஓ 8

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 30. ஜோதிட சாகரம்,ஜோதிட இமயம் ராஜிக்குப் பாராட்டுகள்!

  ReplyDelete
 31. எனக்கு பிடித்த பழம் நிமிட்டாம்பழம்! அது என்ன என்று தெரிய வேண்டுமென்றால் எங்க அம்மாவைக் கேட்கலாம் அல்லது இங்கு சென்று படிக்கலாம்...
  tamil.doctorsiva.net/taproot

  ReplyDelete
 32. இப்படி ஒரு ஜோசியமா ?

  என்ன கொடுமை சரவணன் இது


  நான் என்னை சொன்னேன்

  ReplyDelete